WORLD NURSING DAY MAY 12 உலக செவிலியர் தினம்: MAY 12
WORLD NURSING DAY MAY 12 உலக செவிலியர் தினம்: MAY 12 உலக செவிலியர் தினம்: குடும்பத்தைக்கூட கவனிக்க முடியாமல் கொரோனா வைரஸ் தொற்றுடன் போராடும் போராளிகள் நடராஜன் சுந்தர் பிபிசி தமிழுக்காக 12 மே 2020 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் கோப்புப்படம்பட மூலாதாரம்,GETTY IMAGES கொரோனா நோய்த் தொற்று காலத்தில் பல்வேறு சிரமங்களுக்கு இடையே மருத்துவர்களும், செவிலியர்களும் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். குறிப்பாகப் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்காக நாள் முழுவதும் பணி செய்துவரும் செவிலியர்களின் பணியானது மகத்தான ஒன்று. உலகம் முழுவதும் உள்ள செவிலியர்களைக் கௌரவிக்கும் விதமாக இந்த ஆண்டை செவிலியர் ஆண்டாக அறிவித்தது உலக சுகாதார நிறுவனம். நோயாளிகளின் பாதிப்பு எவ்வளவு கடினமாக இருந்தாலும் அவர்களுக்குச் செய்யும் பணியை தங்களது கடமையாகக் கருதி, எந்த காலத்திலும், நோயாளிகளின் பாதிப்பு எவ்வளவு இருந்தாலும் செவிலியர்களைப் பொறுத்தவரை நோயாளிகள் அவர்களுக்கு நோயாளிகள் தான் என்று கூறுகின்றனர். அது சாதாரண நேரமாக இருந்தாலும், இதுபோன்ற கொரோனா நோய்த் தொற்று பரவக் கூடிய நெருக்கடியான காலங்களாக இருந்தாலும் அனைவரையும...