Posts

Showing posts with the label PEACEFUL

ARMENIA ,PEACEFUL COUNTRY IN WORLD

Image
ARMENIA ,PEACEFUL  COUNTRY IN WORLD ஆர்மேனியா - நான் கண்ட சொர்க்கம் ஆர்மேனியா எங்கடா இருக்கு நு நெறையபேர் இப்பவே atlas ல தேட ஆரம்பிச்சு இருப்பீங்க.... என்னபா கடைலயே இல்லையாம் " நு atlas ல பாத்து கேக்குறது புரியுது ... atlas ல தேடி கண்டுபிடிகுறது கஷ்டம்  தான்.....அவ்வளவு சின்ன நாடு . ஆனா வரலாற்று பக்கத்துல சிறப்பான இடம் புடிச்ச நாடு. கிருத்துவ மார்கத்த முதல தழுவிய நாடும் இது தான். இப்ப இருக்க நிலப்பரப்பு ரொம்ப கம்மி தாங்க , ஆனா கிட்டதட்ட 3௦௦௦ வருசங்களுக்கு முன்னாடி இந்த நாடோட நிலப்பரப்பு ரொம்ப பெருசுங்க... பைபிள் ல சொல்லி இருக்க உறர்டு (urartu) தேசம் இது தானுங்க.  இதோட இன்னொரு பெருமை  என்னன்னா நோவா வோட கப்பல் (noah's ark) தரைத் தட்டுன இடமும் இது தானுங்க. அவரோட மகனால தான் இந்த சாம்ராஜ்யமே உருவாச்சு நு சொல்றாங்க. "டிக்ரன்" "ஆர்மேன்" போல "தி கிரேட் " நு சொல்ல படுற மன்னர்கள ஈன்று எடுத்த நாடும் இது தான். உலகத்தையே ஆளனும் நு நெனச்ச அலெக்சாண்டரோட படையுல  அர்மேனியரோட பங்கு அதிகம்.  அது சேரி ஆர்மேனியாவ எதுக்குடா நீ சொர்க்கம் நு சொன்ன நு கேக்...