ELIZABETH BATHORY QUEEN VAMPIRE BORN AUGUST 7,1560 / பதோரி என்ற ரத்த காட்டேரி
ELIZABETH BATHORY QUEEN VAMPIRE BORN AUGUST 7,1560 எலிசபெத் பதோரி என்ற ரத்த காட்டேரியின் சுருக்கமான வரலாறு எலிசபெத் பதோரி என்பவள் ஹங்கேரி அரசரின் மகளாய் பிறந்தவர் உலகத்தில் 650 பெண்களை கொன்று ரத்தத்தில் குளித்தவள் .. குடித்தவள் என்று கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றவள் 300 க்கும் மேற்பட்டசாட்சிகள் விசாரிக்கப்பட்டு ,எலும்பு கூடுகள் கைப்பற்றப்பட்டு ,உடந்தையாக இருந்தவர்கள் விசாரிக்கப்பட்டு குற்றம் ஊர்ஜிதம் செய்யப்பட்டது எலிசபெத் தன் 11 வயதில் Ferenc Nádasdy, என்பவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்று 15 வயதில் திருமணம் 4500 விருந்தினருடன் தட புடலாய் 1575 மே 8 இல்ந டந்தது திருமணத்திற்கு பின் மணமகன் வியன்னாவிற்கு படிக்க சென்று விட்டதால் நடாஸ்டி கோட்டையில் தனிமையில் வாழலானாள் மணமகன் மணமக்களுக்கு சீதனமாய் கோட்டையை கொடுத்தான் இந்த Csejteகோட்டை 17 கிராமங்களுக்கு நடுவில் அமைந்திருந்தது 1578 இல் துருக்கி ஓட்டமானுடன் போர் தொடங்கியதால் எலிசபெத் நிர்வாகத்தை கவனிக்கலானாள் .1593-1606 வரை தொடர்ச்சியான போர...