சர்வதேச முதியோர் தினம் (International Day of Older Persons)
சர்வதேச முதியோர் தினம் (International Day of Older Persons) ஐக்கிய நாடுகள் அவை அறிவித்துள்ளபடி சர்வதேச முதியோர் தினம் (International Day of Older Persons) உலகம் முழுவதும் அக்டோபர் 1 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.[1]அக்டோபர் 1, 1991 இல் இருந்து இந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.[2][3 நோக்கம்[மூலத்தைத் தொகு] உலகம் முழுவதிலும் உள்ள மூத்த குடிமக்களை மதிக்கவும், மரியாதையை செலுத்தவும், குடும்பம், சமூகம் மற்றும் நாட்டுக்கு அவர்கள் ஆற்றிய சேவைகளை நினைவு கூறும் வகையிலும், அவர்களின் அறிவு, ஆற்றல் மற்றும் சாதனைகளை பார்த்துக் கற்றுக்கொள்ளவும் மக்களுக்கு எடுத்துரைக்கும் நாளாக காணப்படுகிறது. முதியோர் நலன்[மூலத்தைத் தொகு] பொதுவாக 60 வயதை கடந்த ஆண், பெண் அனைவரும் மூத்த குடிமக்கள் அல்லது முதியோர் என்று கருதப்படுகின்றனர். அவர்கள் நலனை பாதுகாக்கவும், அவகளின் உரிமைகளை மதிக்கவும் அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. உலக அளவில்[மூலத்தைத் தொகு] 1991 ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகள் அவை அறிவுறுத்தலின் படி, (தீர்மானம்: 45/106) கீழ்க்கண்டவை முதியோர்களுக்கான அத்தியாவசிய விதிமுற...