S.R.SIVAGAMI ,TAMIL SUPPORTING ROLE ACTRESS
S.R.SIVAGAMI ,TAMIL SUPPORTING ROLE ACTRESS .எஸ்.ஆர்.சிவகாமி [திரைப்பட நடிகை மற்றும் நாடக நடிகை] இவர் சினிமாவில் மட்டுமல்ல; மேடை நாடகங்கள், தொலைக்காட்சி நாடகங்களிலும் பிரபலமானவர். இயக்குநர் கே.பாலசந்தர் மேடை நாடகங்கள் நடாத்திக் கொண்டிருந்தபோது அவரது நாடகக் குழுவில் எஸ்.ஆர்.சிவகாமி பிரதானமவர். நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாடகங்களிலும் நடித்த பழம்பெரும் நடிகை. ”ஏ.பி.நாகராஜன்” இயக்கிய “தாயைப் போல் பிள்ளை நூலைப் போல் பிள்ளை” என்ற படம்தான் இவருடைய முதல் படம். இவரது அம்மா ‘சாந்தா தேவி’ அந்தக்கால பிரபல நடிகை என்பது குறிப்பிடத்தக்கது. ’ஜீவ பூமி’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது பீம்சிங் இவரை படப்பிடிப்புத் தளத்தில் பார்த்துவிட்டு, ‘படிக்காத மேதை’ படத்தில் நடிக்க அழைத்தார். அதைத் தொடர்ந்து ‘நெஞ்சில் ஓர் ஆலயத்தில்’ ஸ்ரீதரால் நடிக்க வைக்கப்பட்டார். கே.பாலசந்தரின் நாடகக் குழுவில் இணைந்து, ‘எதிர் நீச்சல்’, ‘நவக்கிரஹம்’, ‘இரு கோடுகள்’ போன்ற நாடகங்களில் நடித்து வந்தார். ”நாகேஷ், மேஜர் சுந்தரராஜன்,ராஜா,,,,, பின்னாளில் ஸ்ரீகாந்த...