Wednesday, 3 June 2020

S.R.SIVAGAMI ,TAMIL SUPPORTING ROLE ACTRESS



S.R.SIVAGAMI ,TAMIL 
SUPPORTING ROLE ACTRESS 



.எஸ்.ஆர்.சிவகாமி [திரைப்பட நடிகை மற்றும் நாடக நடிகை]
இவர் சினிமாவில் மட்டுமல்ல; மேடை நாடகங்கள், தொலைக்காட்சி நாடகங்களிலும் பிரபலமானவர். இயக்குநர் கே.பாலசந்தர் மேடை நாடகங்கள் நடாத்திக் கொண்டிருந்தபோது அவரது நாடகக் குழுவில் எஸ்.ஆர்.சிவகாமி பிரதானமவர். நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாடகங்களிலும் நடித்த பழம்பெரும் நடிகை.

”ஏ.பி.நாகராஜன்” இயக்கிய “தாயைப் போல் பிள்ளை நூலைப் போல் பிள்ளை” என்ற படம்தான் இவருடைய முதல் படம். இவரது அம்மா ‘சாந்தா தேவி’ அந்தக்கால பிரபல நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.

’ஜீவ பூமி’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது பீம்சிங் இவரை படப்பிடிப்புத் தளத்தில் பார்த்துவிட்டு, ‘படிக்காத மேதை’ படத்தில் நடிக்க அழைத்தார். அதைத் தொடர்ந்து ‘நெஞ்சில் ஓர் ஆலயத்தில்’ ஸ்ரீதரால் நடிக்க வைக்கப்பட்டார்.

கே.பாலசந்தரின் நாடகக் குழுவில் இணைந்து, ‘எதிர் நீச்சல்’, ‘நவக்கிரஹம்’, ‘இரு கோடுகள்’ போன்ற நாடகங்களில் நடித்து வந்தார். ”நாகேஷ், மேஜர் சுந்தரராஜன்,ராஜா,,,,, பின்னாளில் ஸ்ரீகாந்த்” இவர்களெல்லாம் இவரது நாடக சகக் கலைஞர்கள்.



‘வியட்நாம் வீடு’, ‘எதிர் நீச்சல்’, ‘இரு கோடுகள்’, ’தங்கப்பதக்கம்’, இந்த நாடகங்கள் இவருக்கு நிறைய பெயர் வாங்கிக் கொடுத்தன.

இவர் பி.எஸ்.சி. படித்துக் கொண்டிருந்தபோதுதான் திரையுலகிற்கு வந்தார். அதனால் படிப்பு பாதியில் நின்றது. சினிமா வாழ்க்கைத் திருப்தி தராததால் திரும்பவும் படிப்பைத் தொடர முனைந்தபோது டைரக்டர் ஏ.சி.திருலோகசந்தர் இவரை ‘பத்ரகாளி’ யில் நடிக்க அழைத்தார்.



ஒய்.ஜி.மகேந்திரனின் ‘அர்த்தமுள்ள மௌனங்கள்’ நாடக விழாவில் பேசிய நடிகர் திலகம்’ சிவாஜிகணேசன் இவரை மிகவும் பாராட்டி அவருக்குப் போட்ட மாலையைக் கழற்றி இவருக்குப் போட்டார்.

கே.பாலசந்தர்தான் இவரை முதன்முறையாக அம்மா வேடத்தில் நடிக்க வைத்தார். அந்தத் தலையெழுத்து பல படங்களில் அம்மா வேடத்திலேயே நடித்தார். கே.பாலசந்தரின் ‘அக்னி சாட்சி’ யில் இவருக்குக் கிடைத்தது மிக நல்ல பாத்திரம். ஆனால் படம் எதிர்பார்த்த மாதிரி ஓடாததால் இவருக்குப் பெயர் கிடைக்காமல் போனது.

இவருக்கு தமிழ்நாடு அரசு கலைமாமணி பட்டம் கொடுத்து கௌரவித்தது.

இவர் நடித்த மேலும் சில படங்கள்:-

மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி, பத்தாம் பசலி, தாமரை நெஞ்சம், அந்த ஏழு நாட்கள், நினைவெல்லாம் நித்யா, போக்கிரி ராஜா, சிவப்புச் சூரியன், அம்மாவும் நீயே அப்பாவும் நீயே, நெருப்புக்குள் ஈரம், ஸ்பரிசம், குடும்பம் ஒரு கோயில்.

01.06.1983 ‘சினிமா எக்ஸ்பிரஸ் திரையிதழிலிருந்து விவரங்கள் திரட்டப்பட்டது.

”பத்தாம் பசலி” 1970 படத்தில் எஸ்.ஆர்.சிவகாமி






.

No comments:

Post a Comment