Tuesday 30 June 2020

ARAB COUNTRIES CRUSHING THE WOMAN FOR EMPLOYMENT -CARTOONS DRAWN BY THE WOMAN




அரபு நாடுகளில் பெண்கள் மீதான கட்டுப்பாடுகளை          கார்ட்டூன்களாக வெளிப்படுத்திய பெண்                           கார்ட்டூனிஸ்டுகள்




அரபு நாடுகளில் பெண்கள் மீதான கட்டுப்பாடுகளை கார்ட்டூன்களாக வெளிப்படுத்திய பெண் கார்ட்டூனிஸ்டுகள்

சில அரபு நாடுகளில் தற்போதும் கூட பெண்கள் பாஸ்போர்ட் பெறுவதற்கும் திருமணம் செய்து கொள்வதற்கும் அல்லது நாட்டை விட்டு செல்வதற்கும், தங்களின் ஆண் உறவினர்களிடம் அனுமதி பெற வேண்டும்."ஆண்களால் பாதுகாக்கப்படுவது" சட்ட ரீதியானதல்ல என்ற போதும் பல குடும்பங்களுக்குள் அது தினமும் பழகிப் போன ஒரு செயலாகவே உள்ளது.பிபிசியின் 100 பெண்கள் தொடரின் ஒரு அங்கமாக, வட ஆப்ரிக்காவைச் சேர்ந்த மூன்று பெண் கார்ட்டூனிஸ்டுகளை, அங்கு நிலவும் வழக்கம் எவ்வாறு பெண்களின் வாழ்க்கையை பாதிக்கிறது என்பதை கார்ட்டூனாக வரையும்படி கேட்கப்பட்டது.

எகிப்து

பணக்கார வளைகுடா ஆண்கள் ஏழ்மையான எகிப்திய கிராமப் பகுதிகளுக்குச் சென்று இளவயதுப் பெண்களை தற்காலிக திருமணம் செய்வது வழக்கமாக மாறிவிட்டது என்று தெரிவிக்கிறார் விருது பெற்ற எகிப்திய கார்ட்டூனிஸ்ட் டோவா அல் எட்.பெண்ணுறுப்பு அழித்தல் மற்றும் பாலியல் துன்புறுத்தல் போன்ற விலக்கப்பட்ட சர்ச்சைக்குரிய விஷயங்கள் குறித்து கார்ட்டூன் வரைந்து வசைக்கு ஆளாகிறார் அல் எட்.

எகிப்தில் திருமண வயதான 18 வயதை அடைந்தவுடன் பெண்களை மிகப் பணக்கார வெளிநாட்டு ஆணிற்கு திருமணம் செய்து கொடுக்கின்றனர்.ஆனால் பல சமயங்களில் இந்த திருமணங்கள் குறுகிய கால ஏற்பாடுகளாகவே இருக்கின்றன; ஏனெனில் சிறிது காலத்திற்கு பிறகு அப்பெண்களை திருமணம் செய்து கொண்ட ஆண்கள் அவர்களை நிராகரித்து விடுகின்றனர்.ஒரு வெளிநாட்டு நபர் தன்னுடைய வயதைவிட 25 வயது குறைந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்றால் அதற்கு பதிலாக அப்பெண்ணின் குடும்பத்தினருக்கு சுமார் 6000 அமெரிக்க டாலர்களை அவர் தர வேண்டும்.ஒரு பணக்கார நபருக்கு இந்த தொகை சிறியதாக இருந்தாலும் அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்கப் போராடும் ஒரு எகிப்திய குடும்பத்திற்கு இது ஒரு ஊக்கத் தொகையாகவே உள்ளது.இந்த சமுதாயத்தின் ஆண்கள் தங்களது பெண்களை விற்று வருகின்றனர் ஆனால் அரசும் அதை தட்டிக்கேட்க மறந்துவிட்டது என தன் ஆதங்கத்தை தெரிவிக்கிறார் அல் எட்.

துனிஷியா

தான் முதலில் கோட்டோவியம் (கார்ட்டூன்) வரையத் தொடங்கும்போது தன்னை அடையாளம் காட்டிக்கொள்ளாமல் வரைந்ததாகவும் எனவே தன்னை ஒரு ஆண் என்றே பலர் கருதினர் என்றும் கூறுகிறார் நடியா கிராரி.அவர்களால் ஒரு பெண் ஓவியம் தீட்ட முடியும் என்றும் நகைச்சுவையான கதாப்பாத்திரங்களை படைக்க முடியும் என்றும் நம்ப முடியவில்லை என தெரிவிக்கிறார் கிராரி.கிராரியால் வடிவமைக்கப்பட்ட "வில்லிஸ்" என்னும் பூனை கதாபாத்திரம் கொண்டு சித்தரிக்கப்பட்டுள்ள இந்த கார்ட்டூன் பாலியல் வல்லுறவுக்கு ஆளான பெண்கள் தங்கள் குடும்பங்களுக்கு வரும் இழிவை தடுப்பதற்கு தன்னை தாக்கியவர்களையே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்னும் கட்டாயம் இருப்பதை கிண்டல் செய்கிறது.

மொராக்கோ

ரிஹாம் எல்ஹவுர், மொராக்கோ நாட்டு செய்தித்தாளில் இடம் பெற்ற முதல் பெண் கார்ட்டூனிஸ்ட்.அவர் பெண்கள் தினமான மார்ச் 8ல் பிறந்ததால் தான் பிறக்கும்போதே பெண்ணியவாதியாக பிறந்ததாகக் கூறுகிறார்.மொராக்கோ நாட்டைச் சேர்ந்த பல ஆண்கள் சட்டத்தைப் பயன்படுத்தி தங்களது மனைவியை வெளிநாடுகளுக்குச் செல்ல விடாமல் தடுப்பதை கருத்தாக கொண்டு இவர் சித்திரம் தீட்டியுள்ளார்.மொரோக்கோவில் ஆண்களால் பெண்கள் பாதுகாக்கப்படும் சட்டம் 2004 ஆம் ஆண்டு மற்றும் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற சீர்திருத்தத்தில் மாற்றப்பட்டாலும் பெண்கள் தங்கள் குழந்தைகளை தங்களுடன் அழைத்துச் செல்ல ஆண்களிடம் சட்டபூர்வ அனுமதி பெற வேண்டும்.

No comments:

Post a Comment