Saturday 13 June 2020

M.G.R. ATTEMPTED TO MURDER BY M.R.RADHA CASE,எம்.ஜி.ஆர். கொலை முயற்சி வழக்கு, 1967, JANUARY 12






 எம்.ஜி.ஆர். கொலை முயற்சி வழக்கு, 1967, JANUARY 12

.
ம.கோ.இரா. கொலை முயற்சி வழக்கு, 1967 அல்லது எம்.ஜி.ஆர். கொலை முயற்சி வழக்கு, 1967 என்பது 1967-ல் நடிகர் ம. கோ. இராமச்சந்திரனை நடிகர் எம். ஆர். இராதா துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்ய முயன்றதாகத் தொடுக்கப்பட்ட வழக்கைக் குறிக்கும். இவ்வழக்கின் இறுதியில் நடிகர் இராதாவிற்கு மூன்றரை ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது
எம்.ஜி.ஆர். வீட்டில் துப்பாக்கிச் சூடு

1967-ம் ஆண்டு ஜனவரி 12-ம் நாள் மாலை 5 மணி அளவில் எம்.ஆர். இராதாவும், திரைப்படத் தயாரிப்பாளார் வாசுவும் எம்.ஜி.ஆரின் நந்தம்பாக்கம் வீட்டிற்குச் சென்று அவரைச் சந்தித்துப் பேசியுள்ளனர்.[1] இந்த சந்திப்பின்போது எம்.ஜி.ஆர். துப்பாக்கியால் தனது இடது காதருகே சுடப்பட்டார். இராதாவின் உடலில் நெற்றிப் பொட்டிலும் தோளிலுமாக இரு குண்டுகள் பாய்ந்தன. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவரும் உயிர்பிழைத்தனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டையடுத்து இராதா எம்.ஜி.ஆரை சுட்டுக் கொல்ல முயன்றார் என்றும், அதன்பின் தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்ய முயன்றார் என்றும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

நிகழ்வின் பின்புலம்
ஜூலை 1949ல் 72 வயதான பெரியார் 26 வயதேயான மணியம்மையை திருமணம் செய்து கொண்டார். இந்தச் செயலினால் வருத்தம் கொண்ட அண்ணாதுரை, ஈ.வி.கே. சம்பத் ஆகியோர் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை தொடங்கினர். “தாத்தா கட்ட இருந்த தாலி!” என்ற தலைப்பில் அண்ணாதுரை 1940-ல் விடுதலையில் எழுதினார். பெரியாருக்கு எதிரான உண்மையான திராவிடர்கள் என்று அணி திரண்டனர். அண்ணாதுரை ஆதரவாளர்களுக்கும் பெரியாரின் ஆதரவாளர்களுக்கும் இடையே பனிப்போர் நிலவிய சமயம் அது. திராவிடக் கழகத்தின் திரையுலக முகமாக விளங்கிய ம.கோ.இரா., “பணக்காரக் குடும்பம்” என்ற படத்தில் நடித்தார். அதில் கதாநாயகனின் தந்தை தனக்கு ஒரு துணை தேடிக் கொள்ள அதை எம்.ஜி.ஆர். சாடிவிட்டுத் தன் தங்கை மணிமாலாவுடன் வீட்டை விட்டு வெளியேறுவார். இந்தப் படத்தின் மையநோக்கே பெரியார்தான் என்று பத்திரிக்கைகள் எழுதின.

துப்பாக்கிச் சூடு நடந்த பொழுது ம.கோ.இரா. தமிழ்த் திரைப்படத்துறையில் ஒரு பெரிய நடிகராக இருந்தார். அந்நேரம், அண்ணாதுரை தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் வெகுவாக வளர்ந்து கொண்டிருந்தது. சென்னை மாநில சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி பரவலான முயற்சிகள் செய்து கொண்டிருந்தது. வெற்றிபெரும் வாய்ப்பும் கூடுதலாக இருந்தது. அக்கட்சியின் வாக்குசேகரிப்புத் திட்டத்தில் எம்.ஜி.ஆரின் திரைப்படம் சார்ந்த புகழும் ஒரு முக்கிய பங்கு வகித்தது.

எம்.ஆர்.இராதாவும் அனைவரும் மதிக்கும் மேடை நாடக மற்றும் திரைப்பட நடிகராக விளங்கினார்.[2] பெரிய நடிகரான எம்.ஜி.ஆர். கூட எம்.ஆர்.இராதா நிற்கையில் அமர்ந்து பேசுவதில்லை என்று வழக்கு விசாரனையில் தெரிவித்திருந்தார். பெரியார் தலைமையிலான திராவிடர் கழகம் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்திருந்தது. இருப்பினும் அத்தேர்தலில் அக்கட்சி காங்கிரஸ் கட்சியை ஆதரித்தது. திராவிடர் கழகத்தின் முன்னணி ஆதரவாளரான[3][4] ராதா, காமராசரின் தனிப்பட்ட நண்பரும் ஆவார். இதனால், அவர் காங்கிரசுக்கு ஆதரவாகவும், தி.மு.கவிற்கு எதிராகவும் ஒரு தீவிர நிலைப்பாட்டை எடுத்திருந்தார்.

துப்பாக்கிச் சூட்டிற்குப் பிறகு வழக்கு துவங்குகையில் தேர்தல் முடிவுற்று ம.கோ.இரா. சார்ந்திருந்த தி.மு.க. அரசு அண்ணா தலைமையில்[5] அமைந்திருந்தது. மருத்துவமனையில் இருந்தபடியே போட்டியிட்ட ம.கோ.இராவும் பெரும் வாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெற்றார். அவரது செல்வாக்கு சரிந்து வந்த நிலையில் இந்நிகழ்வின்மூலம் கிடைத்த மக்கள் ஆதரவும் இவ்வெற்றியில் பங்காற்றியிருக்கக் கூடும்.[6]

வழக்கு மற்றும் தண்டனை விவரம்
முதலில் சைதாப்பேட்டை முதல் வகுப்பு நீதிபதி எஸ். குப்புசாமி முன்னிலையில் நடைபெற்ற வழக்கின் இறுதியில் அவர் இராதா குற்றவாளி என்றே தோன்றுவதாகத் தீர்ப்பளித்தார். அதன்பின் செங்கல்பட்டு அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி லட்சுமணன் முன்னிலையில் வழக்கு நடைபெற்றது. அரசு தரப்பில் வழக்கறிஞர் பி.ஆர். கோகுலகிருஷ்ணனும், இராதா தரப்பில் வழக்கறிஞர் என்.டி. வானமாமலையும் வாதாடினர்.[7] ஒன்பது மாத கால வழக்கு விவாதத்திற்குப் பின்னர் நவம்பர் 4-ம் தேதி நீதிபதி தனது 262 பக்கத் தீர்ப்பை வழங்கினார். அதில், வாசுவின் சான்றின் அடிப்படையிலும், இராதாவிற்கு எம்.ஜி.ஆர். மீது தொழில்முறை எதிர்ப்புநிலை இருந்ததன் அடிப்படையிலும் இராதா குற்றவாளியென முடிவு செய்தார். இக்குற்றத்திற்கென இந்திய தண்டனைச் சட்டம் 307, 309-ம் பிரிவுகளின் கீழும், 1959-ம் ஆண்டு ஆயுதச் சட்டம் 25(1), 27 பிரிவுகளின் கீழும் அவருக்கு ஏழு வருடக் கடுங்காவல் தண்டனை விதித்தார். இராதாவின் வயது (57) கருதியே மேலும் கடுமையான தீர்ப்பு வழங்கவில்லை என்றும் குறிப்பிட்டார். இதன்பின், வழக்கத்திற்கு மாறாக, வழக்கு விசாரணைக்கான அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாத நிலையிலேயே சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை எடுத்துக் கொண்டு 1968-ஆம் ஆண்டு ஏப்பிரல் 24-ஆம் நாளன்று தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தது.[8] இராதா மேல்முறையீடு செய்ததன் பேரில் வெறுமனே உயர்நீதிமன்ற விசாரணை சரியா என்று மட்டும் பார்க்காமல் சாட்சிகளை மீண்டும் விசாரித்த இந்திய உச்சநீதி மன்றம் அவரது தண்டனைக் காலத்தை ஏழிலிருந்து மூன்றரை ஆண்டுகளாகக் குறைத்தது.

அரசு தரப்பு வாதம்
அரசு தரப்பிலிருந்து ராதாவுக்கும் எம்.ஜி.ஆருக்கும் தொழில்முறைப் போட்டி இருந்ததையும் அரசியல் காழ்ப்புணர்வு இருந்ததையும் சுட்டினார்கள். எடுத்துக்காட்டாக, ராதாவின் நண்பரான காமராஜரை எம்.ஜி.ஆர் தாக்குவார் என்றொரு வதந்தி பரவியதையடுத்து எம்.ஜி.ஆரைக் கடுமையாக தாக்கியும் அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலும் ராதா தனது நாத்திகம் இதழில் எழுதினார். மேலும் தயாரிப்பாளர் வாசுவின் சாட்சியின்படி அன்றைய தினம் ராதா ஒரு திரைப்படத்தில் எம்.ஜி.ஆரை நடிக்க வைக்கும் பொருட்டு அவரைச் சந்திக்கப் பலமுறை கேட்டிருந்ததாகவும், எம்.ஜி.ஆர் தேர்தல் வாக்கு சேகரிப்பிற்கு சென்று திரும்பியதால் காலம் தாழ்த்தினார் என்றும், அதன் காரணமாக ராதா மிகுந்த எரிச்சலும் கோபமும் கொண்ட மனநிலையும் கொண்டிருந்தார் என்றும் நிறுவினர்.

மேலும் அந்நாட்களில் அவருக்குப் பெரிய பணமுடை இருந்ததாகவும் நிறுவப்பட்டது. தவிர, ராதா தன் கைப்பட எழுதி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும் வழியில் காவல்துறை காவலரிடம் தந்ததாகவும் சொல்லப்பட்ட ஒரு அறிக்கையில் கொள்கைக்காகவும் கட்சி நலனிற்காகவும் தற்கொலைத் தாக்குதல் நடத்தினாலும் தகும் என்று குறிப்பிட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.[1] தவிர எம்.ஜி.ஆர். தோட்டத்து வீட்டில் பணிபுரிந்த வேலையாட்கள் சாட்சியத்திலும் எம்.ஆர்.ராதா "சுட்டாச்சு, சுட்டாச்சு" என்று கூறியபடி இருந்தார் என்று கூறப்பட்டது. இறுதியாக ராதாவின் துப்பாக்கியும் தோட்டாக்களும் எப்படி நிகழ்வு நடந்த இடத்திற்கு வந்தன என்ற கேள்வியும் முன்வைக்கப்பட்டது.

எம்.ஆர். இராதா தரப்பு வாதம்
அரசு தரப்பு சாட்சிகள் அமர்வு நீதிமன்றத்திலும் முந்தைய வழக்கிலும் சில முரண்பாடான தகவல்களைத் தெரிவித்ததைச் சுட்டிக்காட்டிய வழக்கறிஞர் வானமாமலை அவை தயாரிக்கப்பட்ட சாட்சியங்கள் என்று வாதிட்டார். மேலும், எம்.ஜி.ஆருடன் தீவிர அரசியல் கருத்து வேறுபாடு ஏற்படும் அளவிற்கு எம்.ஜி.ஆருக்கு தி.மு.கவில் செல்வாக்கோ கொள்கைப் பிடிப்போ இல்லை என்று நிறுவும் முயற்சியில் வானமாமலையின் கேள்விகள் இருந்தன. இது அவரது செல்வாக்கைக் குறைக்கும் வகையிலும் அவரை இக்கட்டில் ஆழ்த்தும் வகையிலுமான முயற்சியாயிருந்திருக்கலாம். ராதாவின் துப்பாக்கி மட்டுமல்லாமல் துப்பாக்கிக்கான அனுமதிச் சான்றிதழும் எப்படி அங்கு வந்திருக்கும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். மேலும் நிகழ்வு நடந்த சில மணி நேரத்திற்குள் ராதா வீட்டு வேலைக்காரர் குடிசையில் நெருப்பு பற்றிக் கொண்டதையும் அவர் சுட்டிக் காட்டினார். இதற்கு நீதிபதி துப்பாக்கியையும் தோட்டாக்களையும் வேறு யாராவது எடுத்து வந்திருந்தாலும் ராதாவின் சட்டைப் பைக்குள் சில தோட்டாக்களை அவர் அறியாதவண்ணம் அவர்களால் வைத்திருக்க முடியாது என்று கருத்துத் தெரிவித்தார்.

எம்.ஜி.ஆரின் சட்டையில் ராதாவின் இரத்தம் படிந்திருந்ததாகவும் அதை காவல்துறையினர் வரும்முன்னர் துவைத்தது ஏன் என்ற ஒரு முக்கிய கேள்வியையும் அவர் முன்வைத்தார். இது தொடர்பில் எம்.ஜி.ஆரிடம் குறுக்கு விசாரணை செய்யும் வேளையில் அவருக்கு இரத்த வகைகளைப் பற்றி முன்னரே தெரியுமா என்று கேட்டு தெரியாது என்று கூறிய எம்.ஜி.ஆரிடம், அவர் நடித்திருந்த நாடோடி திரைப்படத்தின் திரைக்கதையில் இரத்த வகைகளைக் கொண்டு திருப்பம் கொண்டுவந்திருந்ததைச் சுட்டிக் காட்டி மடக்கிய விதம் அவரது திறனைக் காட்டியது.

மேலும் வழக்கின் முதன்மை சாட்சியான வாசுவையும் அழைத்துக் கொண்டு ராதாவின் துப்பாக்கியையும் எடுத்துக்கொண்டு நேராக காவல் நிலையத்திற்குச் செல்லாமல் அரசு வழக்கறிஞர் வீட்டிற்குச் சென்றது எதற்காக என்ற வலுவான கேள்வியையும் எழுப்பினார். நீதிபதி தனது தீர்ப்பில் இதற்கு பதிலளிக்கும் வகையில் அது வாசுவிற்குத் தன்மீது பழிவந்துவிடுமோ என்ற அச்சத்தின் காரணமாக இருந்திருக்கலாம் என்று தெரிவித்திருந்தார்.

தீர்ப்பு மற்றும் தண்டனைக்குப் பின்

மக்களால் பெரிதும் கவனிக்கப்பட்ட இவ்வழக்கைப் பற்றியும் நீதிமன்ற தீர்ப்புகள் தொடர்பாகவும் தகவல்களைத் திரட்டி ஒரு நாளிதழ் நிருபர் என்ற புனைவுப் பாத்திரத்தின் பார்வையில் எழுதப்பட்ட புத்தகம்
இராதா சிறையில் இருக்கும்போது ரஷ்யா அல்லது ராணி என்றழைக்கப்பட்ட அவரது மகளுக்குத் திருமணம் நடந்தது. இராதாவால் அதில் கலந்துகொள்ள முடியவில்லை. காமராஜரின் தூண்டுதலின்பேரில்தான் இராதா எம்.ஜி.ஆரைச் சுட்டார் என்ற வதந்தி நிலவியதால் அவர் திருமணத்திற்குத் தலைமை தாங்கவில்லை, பெரியார் தலைமையேற்றார். திரையுலக நடிகர்களில் ஜெமினி கணேசன்-சாவித்திரி தம்பதியைத் தவிர வேறு பெரிய நடிகர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.

1968 இறுதியில் இராதாவிற்கு திருச்சியில் தங்கியிருக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டுடன் ஜாமீன் கிடைத்தது. பின்னர் உச்சநீதிமன்ற தீர்ப்பிற்குப்பின் இராதா விடுதலையானார். விடுதலையானபின் தனது வெற்றி நாடகங்களான தூக்குமேடை, ரத்தக்கண்ணீர், லட்சுமிகாந்தன் கொலை வழக்கு ஆகிய நாடகங்களின் தொகுப்பாக கதம்பம் என்ற பெயரில் நாடகம் நடத்தினார். ராதாவே எம்.ஜி.ஆருடன் பேசி நாடகத்திற்குத் தலைமை தாங்குமாறு அழைத்தார்; அவரும் ஒப்புக் கொண்டார். எனினும் எம்.ஜி.ஆர் விசுவாசிகள் பயந்தனர். அதன் காரணமாக எம்.ஜி.ஆர் கலந்துகொள்ளவில்லை. பின்னர் பெரியாரின் இறுதிச் சடங்கின்போது எம்.ஜி.ஆரும் இராதாவும் சந்தித்துக் கொண்டனர் என்றும் அப்போது அவர் எம்.ஜி.ஆருக்கு தனதருகில் இருப்பவர்களை நம்பக்கூடாது என்று எச்சரிக்கை செய்ததாகவும் கூறப்படுகிறது.

மு. க. முத்து நடிப்பில் வந்த சமையல்காரன் என்ற திரைப்படத்திலும் பின்னர் ஜெய்சங்கருடன் நான்கு படங்களிலும் இராதா நடித்தார். 1975-ல் இந்திரா காந்தி அரசின் நெருக்கடி நிலை அறிவிப்பின்பின் உள்நாட்டுப் பாதுகாப்புப் பேணல் சட்டம் மிசாவின்கீழ் மீண்டும் கைது செய்யப்பட்டார். அப்போது விடுதலைக்கீடாக பெரியாருடன் தொடர்பில்லை என்று எழுதித்தர வேண்டும் என்ற நிபந்தனையை ஏற்க மறுத்துவிட்ட அவர் பதினோரு திங்கள் சிறைக்குப்பிறகு மைய அரசு அமைச்சர்களின் தலையீட்டின் பேரில் வெளிவந்தார்.

அதன்பின் சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் வெற்றிகரமாக நாடகம் நடத்திவிட்டு மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டதையடுத்து திருச்சி திரும்பினார். 1979-ம் ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி இறந்தார். அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள எத்தனித்தாலும் அவரது பாதுகாப்புக் கருதி இராதா குடும்பத்தினர் அவரை வர வேண்டாம் எனக் கூறிவிட்டனர். அரசுமரியாதையையும் ஏற்க மறுத்துவிட்டனர்.

எம்.ஜி.ஆரின் நிலை
ம.கோ.இராவின் தொண்டையில் பாய்ந்த குண்டை நீக்க வேண்டாமென மருத்துவர்கள் கூறினர். பின்பு சிறுக சிறுக உடல் நலம் பாதித்தது. சில ஆண்டுகள் மட்டுமே நடிக்கவும் முடிந்தது. குரலில் மாற்றம் இருந்த போதும் அவரது படங்களுக்கு வரவேற்பு இருந்தது. தொண்டையில் குண்டுடனே வாழ்ந்து வந்தார். பின்பு உடல்நலம் குன்றி 1987-ல் இறந்து விட்டார்.
ண்டகாலமாகவே பலரின் சந்தேகத்துக்கு இடமான எம் ஆர் ராதாவின் தன்னை தானே சுட்ட விடயம் தற்போது ஒரு வெளிச்சத்தை நோக்கி வந்துள்ளது.  எம்ஜியாரோடு மிகவும் நெருக்கமாக இருந்த முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம் அது பற்றி ஒரு தொலைக்காட்சி பேட்டி யில் கொஞ்சம் விபரித்து இருக்கிறார்,
கோபத்தில்  இருந்த ராதாண்ணன்  உண்மையில் எம்ஜியாரை கொஞ்சம் மிரட்டவே துப்பாக்கியை நீட்டினார். பின்பு நிதானம் இழந்து வேகமாக  சுட்டு இருக்கவேண்டும் ஆனால்  மிகவும் துடிப்பாக சூழ்நிலைகளை புரிந்து வேகமாக செயலாற்றும் இயல்பு கொண்ட எம்ஜியார் அதை எப்படி எதிர்கொண்டிருப்பார் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?
எம் ஆர் ராதாவை விட பல மடங்கு...ஸ்டண்டுகளில் தேர்ச்சி பெற்ற எம்ஜியார் நிச்சயம் பதிலடி கொடுத்திருப்பார்?
 சூட்டு காயத்துடனேயே வீட்டின் கீழ் தளத்துக்கு காயத்தோடு எம்ஜியார் ஓடி வந்தார் என்பதுவும் மிகவும் கவனிக்க வேண்டிய செய்தியாகும். வைத்தியசாலையில் இருந்து ராதாண்ணை எப்படி இருக்கிறார்? என்று எம்ஜியார் விசாரித்த வண்ணம் இருந்தார். மேலும் அவரை நன்றாக கவனிக்குமாறும் வேண்டிகொண்டார்.
இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு இது பற்றி ராதாவிடமும் சரி எம்ஜியாரிடமும் சரி கேட்ட பொழுது இருவருமே சிரிப்பையே பதிலாக தந்தார்கள் என்பது வரலாறு.
 தீர்ப்புக்குப் பின்...
badriseshadri.in/2005/06/blog-post_15.htm சுதாங்கன்

ராதாவின் மகளான ரஷ்யா என்கிற ராணிக்கும் டாக்டர் சீனிவாசன் என்பவருக்கும் ராதா சிறையில் இருக்கும்போதுதான் திருமணம் நடந்தது. ராதாவால் திருமணத்தில் கலந்து கொள்ள முடியவில்லை. 1968-ம் வருடம் ஆகஸ்ட் 26-ம் தேதி நடந்த திருமணத்துக்கு தந்தை பெரியார்தான் தலைமை தாங்கினார். முதலில் காமராஜர்தான் தலைமை தாங்குவதாக இருந்தது. ராதா வேண்டாமென்று மறுத்துவிட்டார். காமராஜர் சொல்லித்தான் ராதா எம்.ஜி.ஆரைச் சுட்டார் என்கிற வதந்தி பரவிக் கிடந்தது. அதனால் காமராஜர் திருமணத்தில் கலந்து கொண்டார்; தலைமை தாங்கவில்லை.

திருமணத்தைத் திரையுலகப் பிரபலங்கள் பலரும் புறக்கணித்தனர். ராதாவின் நாடக மன்றத்தில் நடித்து வளர்ந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். அவர் திருமணத்துக்கு வரவில்லை. வந்த ஒரே நட்சத்திர தம்பதிகள் ஜெமினி கணேசனும், சாவித்திரியும்தான். இதன் பிறகு 1968 இறுதியில் ராதாவுக்கு ஜாமீன் கிடைத்தது. ஆனால் அவர் திருச்சியில் தங்கியிருக்க வேண்டும் என்று நிபந்தனை.

இதற்கிடையில் என்ன நடந்ததோ தெரியாது, நீதிமன்ற வரலாற்றிலேயே ஆபூர்வமாக ஒரு விஷயம் நடந்து. வழக்கமாக ஒரு வழக்கு விசாரணைக்கோ, தீர்ப்புக்கோ எடுத்துக் கொள்ளப்பட்டால், அதைப் பற்றிய ஓர் அறிவிப்பு வெளிவரும். இதை லிஸ்ட் என்பார்கள். இப்படி ஒரு லிஸ்ட் வராமலேயே உயர் நீதிமன்றம் இந்த வழக்கை எடுத்துக் கொண்டு செஷன்ஸ் கோர்ட்டில் வழங்கிய ஏழு ஆண்டுச் சிறைத் தண்டனையை உறுதி செய்தது. ராதாவின் ஜாமீனையும் நிராகரித்தது. ராதா மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

உயர் நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு, வழக்கு உச்சநீதிமன்றம் சென்றது. வழக்கமாக இது போன்ற வழக்குகளில் கீழ் நீதிமன்றங்களில் சரியான முறையில் விசாரணை நடந்திருக்கிறதா என்றுதான் உச்ச நீதிமன்றம் பார்க்கும். ராதா வழக்கில் இன்னொரு அசாதாரணமான விசாரணையும் உச்ச நீதிமன்றத்தில் நடந்தது. உயர் நீதிமன்ற சாட்சிகளையும் அழைத்து விசாரித்தது உச்ச நீதிமன்றம். இந்த விசாரணையின்போதுதான், ராதாவின் தண்டனைக் காலம் குறைக்கப்பட்டது. ஏற்கெனவே அனுபவித்த சிறைத் தண்டனையை மனத்தில் கொண்டு, மூன்றரையாண்டு சிறை வாசத்துக்குப்பின் ராதா விடுதலையானார்.

விடுதலையானதற்குப் பிறகு ராதாவால் வெகுநாட்கள் வேலை ஏதும் செய்யாமல் சும்மா இருக்க முடியவில்லை. நாடகம் போடத் தீர்மானித்தார். புதிய நாடகத்தின் தலைப்பு கதம்பம். அவர் ஏற்கெனவே மேடையேற்றி நடித்த தூக்குமேடை, ரத்தக்கண்ணீர், லட்சுமிகாந்தன் கொலை வழக்கு ஆகிய மூன்று நாடகங்களின் தொகுப்பு. அவருடன் முன்னர் நடித்த பழைய ஆள்கள் பலர் அப்போது இல்லை. இருந்த சிலரும் அவருடன் நடிக்க பயந்தார்கள். ஆனாலும் வேறு சிலரைத் தயார் செய்து நடிக்க வைத்தார்.

அப்போது திருவல்லிக்கேணியில் பார்த்தசாரதி சபா அரங்கம் மிகவும் பிரபலம். அங்கேதான் நாடக அரங்கேற்றம். யாரைத் தலைமை தாங்க அழைக்கலாம் என்கிற யோசனை எழுந்தது. உடனே ராதா எம்.ஜி.ஆரை அழைக்கலாம் என்றார். ராதாவே எம்.ஜி.ஆருடன் பேசி தலைமை தாங்க அழைத்தார். எம்.ஜி.ஆரும் ஒப்புக்கொண்டார். ஆனால் கடைசி நிமிடத்தில் வரவில்லை. நாடகத்தில் ஒரு காட்சியில் லட்சுமிகாந்தனைத் துப்பாக்கியால் ராதா பாத்திரம் சுடுவதுபோல் வரும். பழைய பகையை மனத்தில் வைத்துக்கொண்டு நிஜமாகவே உண்மையான துப்பாக்கியால் எதிரே பார்வையாளர் பகுதியிலுள்ள எம்.ஜி.ஆரைச் சுட்டுவிட்டால் என்னாவது என்று யாரோ எம்.ஜி.ஆரிடம் சொல்லியதால்தான் அவர் கலந்து கொள்ளவில்லை என்று பேசப்பட்டது. அப்போது ராதாவுக்கு அறுபத்தைந்து வயது.

வெளியூர்களில் ராதாவின் நாடகங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்க ஆரம்பித்தது. கீமாயணம்-1 என்கிற பெயரில் 'லட்சுமிகாந்தன் கொலை வழக்கு' நடக்கும். கீமாயணம்-2 என்கிற பெயரில் 'தூக்கு மேடை' நாடகம். கீமாயணம்-3 என்கிற பெயரில் 'ரத்தக்கண்ணீர்'. உடல் தளர்ந்தபோதும் நாடகம் போடுவதை நிறுத்தவில்லை. நாடகம் போட்டுத்தான் ஆக வேண்டுமா என்று குடும்பத்தினர் ராதாவிடம் கேட்டார்கள். அதற்கு அவர், "கடைசி காலத்தில் தொழில் இல்லாமல்தான் கலைவாணர் இறந்தார். தியாகராஜ பாகவதருக்கும் அந்த நிலைதான் ஏற்பட்டது. எனக்கு அந்த நிலை ஏற்படக்கூடாது" என்றாராம்.

சில மாதங்கள் கழித்து 'சமையல்காரன்' என்கிற படத்தில் நடிக்க ராதாவுக்கு வாய்ப்பு வந்தது. அன்றைய தமிழக முதல்வரான கருணாநிதியின் மகன் மு.க.முத்துதான் படத்தின் கதாநாயகன். மைசூரில்தான் படப்பிடிப்பு. படப்பிடிப்புக்காக ராதா காரில் மைசூர் சென்றார். அதிகாலை நேரம், பெங்களூரில் காரைவிட்டு வெளியே இறங்கிய ராதா, "பெட்டி படுக்கையெல்லாம் காரிலேயே இருக்கட்டும். பெரியார் இறந்துடுவார்னு தோணுது. அநேகமாக நாம மறுபடியும் திரும்ப வேண்டியிருக்கும்" என்றாராம். ராதாவும் மற்றவர்களும் ஹோட்டல் அறையில் ஒய்வு எடுத்துக் கொண்டிருந்தார்கள். காலை ஏழரை மணிக்கு பெரியார் இறந்துவிட்டதாகத் தகவல் வந்தது.

காரில் சென்னை திரும்பிய ராதா, நேராகப் பெரியாரின் உடல் வைக்கப்பட்டிருந்த ராஜாஜி ஹாலுக்குத்தான் போனார். அவர் உடல் மீது விழந்து புலம்பினார். "போச்சு, எல்லாம் போச்சு. இனிமேல் தமிழ்நாட்டுக்குத் தலைவனே கிடையாது" என்றாராம். அந்த இடத்தில்தான் எம்.ஜி.ஆர் - ராதா சந்திப்பு பல வருடங்களுக்குப்பின் நடந்தது. அப்போது ராதா எம்.ஜி.ஆரிடம், "உன் கூட இருக்கிற யாரையும் நம்பாதே, கழுத்தறுத்துடுவாங்க" என்றாராம்.

'சமையல்காரன்' படத்தில் வில்லனுக்கு அப்பா வேடம் ராதாவுக்கு. அவருக்கு அந்த வயதான பாத்திரம் பிடிக்கவில்லை. கருணாநிதியிடம் சொல்லிப்பார்த்தார். பாத்திரத்தை எப்படி வேண்டுமானலும் மாற்றிக்கொள்ளுங்கள் என்று கருணாநிதி ராதாவுக்கு அனுமதி கொடுத்தாராம். அதற்கு பிறகே ராதா நடித்தார். அந்தப் படத்தில் ராதாவை அறிமுகம் செய்கிற காட்சியில் அவர் ஜெயிலிலிருந்து வெளியே வருவார். "ஜெயில்லதான் காபி கொடுக்கிறான். வெளியே கடைசி எழுத்தத்தான் கொடுக்கிறான்" என்றுதான் அறிமுகமாவார்.

தொடர்ந்து ராதா ஜெய்சங்கருடன் 'ஆடுபாம்பே', 'தர்மங்கள் சிரிக்கின்றன', 'பஞ்சபூதம்', 'கந்தரலங்காரம்' ஆகிய படங்களில் நடித்தார்.

அதற்குப் பிறகு அரசியல் மாறியது. இந்தியப் பிரதமராக இருந்த இந்திரா காந்தி 1975-ல் இந்தியா முழுவதும் "எமர்ஜென்ஸி' கொண்டு வந்தார். பலர் இந்தியா முழவதும் கைது செய்யப்பட்டனர். ராதாவையும் மிசாவில் கைது செய்தார்கள். ராதா கைதானவுடனேயே, "உங்களுக்கும் தந்தை பெரியாருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று எழுதிக் கொடுங்கள். உங்களை விடுதலை செய்கிறோம்" என்றனர். ராதா மறுத்துவிட்டார். பிறகு ராதாவின் மகன் ராதா ரவி டெல்லி சென்று அன்றைய மத்திய மந்திரியாக இருந்த ஒம் மேத்தாவையும், இந்திரா காந்தியையும் சந்திந்து ராதாவின் உடல்நிலையை விளக்கி ராதாவுக்கு விடுதலை பெற்றுத் தந்தார்.

பதினோரு மாதங்கள் சிறைவாசம் அனுபவித்துவிட்டுத் திரும்பியவுடன் மலேசியா, சிங்கப்பூரில் நாடகம் போட ராதாவுக்கு அழைப்பு வந்தது. மூன்று மாதங்கள் இரண்டு நாடுகளிலும் நாடகம் நடத்தினார். சில கூட்டங்களில் பேசினார். அந்தப் பேச்சுக்கள் ஒலிநாடாவாக்கப்பட்டு பல ஆயிரம் பிரதிகள் விற்றுத் தீர்த்தது. பல ஆபூர்வமான சுயசிந்தனைக் கருத்துக்கள் அந்தப் பேச்சுக்களில் நிறைந்து இருந்தது. அங்கிருந்தபோதே ராதாவை மஞ்சள் காமாலை நோய் தாக்கியது. இந்தியா திரும்பி நேரே திருச்சி சென்று தங்கினார் ராதா.

ராதா 1979-ம் ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி இறந்தார். எம்.ஜி.ஆர் அப்போது தமிழக முதல்வர். அவர் ராதாவின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளக் கிளம்பினார். ராதாவுக்கு திருச்சியில் செல்வாக்கு அதிகம், பிரச்னை வரக்கூடாது என்பதற்காக ராதா குடும்பத்தினர் எம்.ஜி.ஆரை வரவேண்டாம் என்று தடுத்துவிட்டனர். எம்.ஜி.ஆர் ராதாவின் இறுதிச் சடங்குக்காக ஓர் அரசாங்க வண்டிக்கு ஏற்பாடு செய்தார். ஆனால் ராதா குடும்பத்தினர் அதையும் ஏற்றுக்கொள்ளவில்லை என்கிற தகவலும் உண்டு.

ராதா இறந்த அன்று தந்தை பெரியாருக்கு 101வது பிறந்த நாள் விழா.
Posted by Badri Seshadri

metronews.lk/e ;தமிழ்த் திரை­யு­ல­கிலும் தமி­ழக அர­சி­யலிலும் நிகரற்ற நாய­க­னாக விளங்­கிய மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை (எம்.ஜி.ராமச்­சந்­திரன்) நடிகர் எம்.ஆர்.ராதா துப்­பாக்­கியால் சுட்டு, இன்று
ஞாயிற்­றுக்­கி­ழ­மை­யுடன் 47 வரு­டங்கள் பூர்த்­தி­யா­கின்­றன.

அது தமி­ழக சட்­ட­சபைத் தேர்தல் பிரசாரம் உச்சக் கட்­டத்தை எட்டிக் கொண்­டி­ருந்த காலம். முன்­னணி நடி­க­ரான எம்.ஜி.ஆர். அப்­போது தி.மு.கவில் நட்­சத்­திர அங்­கத்­த­வ­ராக இருந்தார். திடீ­ரென எம்.ஜி.ஆர். சுடப்­பட்ட செய்தி ஒட்­டு­மொத்த தமி­ழ­கத்­தையும் உலுக்­கி­யது.

எம்.ஜி.ஆரை சுட்­ட­தோடு தன்­னையும் சுட்­டுக்­கொண்டார் எம்.ஆர்.ராதா. இரு­வரும் அவ­சரம் அவ­ச­ர­மாக மருத்­து­வ­ம­னைக்குக் கொண்டு செல்­லப்­பட்­டனர். தீவிர சிகிச்­சைக்குப் பிறகு இரு­வ­ருமே உயிர் பிழைத்­தனர். தனிப்­பட்ட முரண்­பாடு கார­ண­மாக நடந்த இந்த மோதல் அர­சி­யல்­ ரீ­தி­யா­கவும் முக்­கி­யத்­துவம் பெற்­றது.

எம்.ஜி.ஆரை எம். ஆர்.ராதா சுட்டார் என்­பது பல­ருக்குத் தெரியும். ஆனால், எதற்­காக,  எந்தச் சூழ்­நி­லையில் எம்.ஆர். ராதா சுட்டார் என்­பது பலர் அறி­யா­தது. இச்­சம்­ப­வத்­திற்­கான உண்­மை­யான,  துல்­லி­ய­மான காரணம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.,  நடி­கவேள் எம்.ஆர்.ராதா இரு­வ­ருக்கு மட்­டுமே தெரிந்த இர­க­சியம் என்­கின்­றனர்.

ஆனால், 1967 ஜன­வரி 12 ஆம் திகதி இடம்­பெற்ற இச்­சம்­ப­வத்­திற்­கான கார­ண­மாக அப்­போது பர­ப­ரப்­பாக பேசப்­பட்ட விட­யங்கள் இவை:

எம்.ஜி.ஆர். நடித்த 'பெற்­றால்தான் பிள்­ளையா?' என்ற படத்தை எம்.ஆர்.ராதாவின் நெருங்­கிய நண்­ப­ரான வாசு தயா­ரித்து 9.12.1966 -ஆம் திகதி வெளி­யிட்­டி­ருந்தார். நண்­ப­னுக்கு உதவி செய்யும் எண்­ணத்­தில்தான் படத்தை முடிக்க கட­னு­தவி செய்தார் ராதா.

'படத்தை முடிக்க வேண்­டிய கட்­டத்தில் புதிய காட்­சி­களை இணைக்கச் சொல்­லி­விட்டார் எம்.ஜி.ஆர். அதனால் செலவு கூடி­விட்­டது. இலாப­மில்­லா­விட்­டாலும் பர­வா­யில்லை. கையைக் கடிக்­காமல் இருந்தால் போதும். உங்­க­ளுக்கு வேறு பணம் தர வேண்டும். என்ன செய்­வது என்றே விளங்­க­வில்லை' என எம்.ஆர்.ராதா­விடம் புலம்­பி­னாராம் வாசு.

'நான் கொடுத்த பணம் திரும்பி வராதா? இந்நாள் வரை நான் இள­கிய மனம் உடை­ய­வ­னாக வாழ்ந்து வந்­தி­ருக்­கிறேன். எந்தச் சூழ்­நி­லை­யிலும் இனி யாருக்கும் உதவி செய்­யக்­கூ­டாது. பணம் கொடுத்து பகையைத் தேடிக் கொள்­ளக்­கூ­டாது என்ற என்னை மாற்­றி­விட்டாய். வா. என்­னோடு.... எம்.ஜி.ஆரி­டமே பேசுவோம்' என்று எம்.ஆர்.ராதா கூறி­னாராம்.

அன்று மாலை 5 மணிக்கு ராமா­வரம் தோட்­டத்தில் உள்ள எம்.ஜி.ஆர். வீட்­டுக்கு எம்.ஆர்.ராதாவும் சென்றார். 'பெற்­றால்தான் பிள்­ளையா' படத்தின் தயா­ரிப்­பாளர் வாசுவும் சென்­றனர்.

அங்கு செல்­லும்­போது எம்.ஆர். ராதா கைத்­துப்­பாக்­கி­யையும் எடுத்து வைத்­துக்­கொண்­டது எனக்குத் தெரி­யாது என்று பின்னர் ஒரு பேட்­டியில் வாசு கூறினார்.

ராமா­வரம் தோட்­டத்தில் எம்.ஆர்.ராதாவும், வாசுவும் எம்.ஜி.ஆரைச் சந்­தித்­தனர். 'என்­னு­டைய தொழில் நடிப்­பது... பண விட­யத்­துக்கு நான் பொறுப்­பில்லை' என்று எம்.ஜி.ஆர் கூறி­னாராம். இதனால் உணர்ச்சி வசப்­பட்டு கைத்­துப்­பாக்­கியால் சுட்­டாராம் எம்.ஆர்.ராதா.

'எம்.ஜி.ஆரை ராதாவும் வாசுவும் சந்­தித்­தார்கள். அப்­போது தக­ராறு ஏற்­பட்­டது. எம்.ஆர்.ராதா தன் மடியில் வைத்­தி­ருந்த கைத்­துப்­பாக்­கியை எடுத்து, எம்.ஜி.ஆரை சுட்டார். எம்.ஜி.ஆர். குனிந்தார். குண்டு இடது புற காது அருகே கன்­னத்தில் பாய்ந்­தது. உடனே ராதா துப்­பாக்­கியைத் தன் தலையில் வைத்து விசையை அழுத்­தினார். குண்டு அவர் நெற்­றியில் பாய்ந்­தது' என்று பொலிஸார் பின்னர் தெரி­வித்­தனர்.
சுடப்­பட்ட எம்.ஜி.ஆர். முதலில் ராயப்­பேட்டை ஆஸ்­பத்­தி­ரிக்குக் கொண்டு போகப்­பட்டார். முதல் சிகிச்­சைக்குப் பிறகு, சென்னை பொது வைத்­தி­ய­சா­லையில் சேர்க்­கப்­பட்டார். எம்.ஆர்.ராதாவும் இதே வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டார். அவர் நெற்­றியில் பாய்ந்த குண்டு அகற்­றப்­பட்­டது.

ஆனால், எம்.ஜி.ஆர். கழுத்தில் பாய்ந்த குண்டு, மூன்று முக்­கிய நரம்­பு­க­ளுக்கு இடையே பதிந்­தி­ருந்­தது. அதை அகற்­றினால் நரம்­பு­க­ளுக்குச் சேதம் ஏற்­பட்டு, உயி­ருக்கே ஆபத்து ஏற்­ப­டலாம் என்ற நிலை. எனவே மருத்­து­வர்கள் இந்த குண்டை அப்­ப­டியே விட்டு விட்டுத் தையல் போட்­டனர்.

பரங்­கி­மலைத் தொகு­தியில் தி.மு.க. வேட்­பா­ள­ராக எம்.ஜி.ஆர். போட்­டி­யிட்ட நேரத்­தில்தான் அவர் சுடப்­பட்டார். தேர்தல் பிர­சா­ரத்­திற்குப் போகா­ம­லேயே, ஆஸ்­பத்­தி­ரியில் படுத்­த­படி அவர் வெற்றி பெற்றார்.

சிகிச்­சைக்குப் பின், எம்.ஜி.ஆரும் எம்.ஆர்.ராதாவும் குணம் அடைந்­தார்கள். எம்.ஜி.ஆரை சுட்­ட­தாக ராதா மீது சைதாப்­பேட்டைக் நீதிமன்றில் வழக்கு நடந்­தது. இந்த வழக்கில் 1967.05.22 ஆம் திகதி எம்.ஜி.ஆர். நீதி­மன்­றுக்கு வந்து சாட்­சியம் அளித்தார்.

வழக்கு விசா­ரணை முடிவில் எம்.ஆர்.ராதா குற்­ற­வாளி என்­பது உறுதி செய்­யப்­பட்டு சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது. சென்னை செஷன்ஸ் நீதி­மன்­றத்தில் அவ­ருக்கு 7 ஆண்­டுகள் சிறைத்­தண்­டனை என்று தீர்ப்பு கூறப்­பட்­டது. இதை எதிர்த்து மேல் நீதி­மன்றில் மேன்­மு­றை­யீடு செய்தார். ஏழு ஆண்டுகள் சிறைத்­தண்­ட­னையை மேல்­நீ­தி­மன்றம் உறுதி செய்­தது.

பின்னர் உயர் நீதி­மன்­றுக்கு மேன்­மு­றை­யீடு செய்தார். அந்­நீ­தி­மன்றம் சிறைத்­தண்­ட­னையை 5 ஆண்­டு­க­ளாகக் குறைத்­தது. சிறையில் நன்­ன­டத்தை கார­ண­மாக தண்­டனை சற்று குறைந்­தது. நான்­கரை வரு­டங்­க­ளின்பின் அவர் விடு­த­லை­யானார்.

எம்.ஜி.ஆருக்கு ஏற்­பட்ட குண்டு காயத்­தினால் பேசும் திறன் பாதிக்­கப்­பட்டு இருந்­தாலும்  எம்.ஜி.ஆரின் செல்­வாக்கு பன்­ம­டங்கு உயர்ந்­து­விட்­டி­ருந்­தது. விடு­த­லை­யான எம்.ஆர்.ராதாவின் வாழ்வில் எத்­த­னையோ மாற்­றங்கள். அவ­ரு­டைய இயல்­பான ஆர்ப்­பாட்­டங்கள் இல்லை. கிண்டல்இ கலாட்டா, சத்தம் எல்­லாமே அடங்­கி­விட்­டன. ஆனால், அப்­போது அவ­ருக்கு ஏரா­ள­மான ரசி­கர்கள் இருந்­தனர்.

அவ­ரது வாயைக் கிளறி செய்­தி­களை வர­வ­ழைத்து பத்­தி­ரி­கையில் வெளி­யிட முயன்­றார்கள். 'ஒன்றும் பேசா­தீர்கள். இரா­மச்­சந்­திரன் நல்­லவர். நடையைக் காட்­டுங்கள்' என்று பத்­தி­ரி­கைக்­கா­ரர்­களை விரட்­டி­வி­டுவார் எம்.ஆர். ராதா.

தனது உயி­ருக்கே உலை வைக்­கக்­கூ­டிய நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டி­ருந்­தாலும் எம்.ஆர்.ராதா மீது எம்.ஜி.ஆர் பகைமை பாராட்டவில்லை.  ஆனால், இந்த கசப்பான சம்பவத்திற்குப் பிறகு படத்தில் அவருடன் நடிப்பதை நிறுத்திக் கொண்டார் எம்.ஜி.ஆர். துப்பாக்கிப் பிரயோகத்தின் பின்னரும் ராதா அண்ணனை காப்பாற்றுங்கள் என எம்.ஜி.ஆர். கூறினாராம்.

பின்னர் தி.மு.க.விலிருந்து எம்.ஜி.ஆர். விலக்கப்பட்டு 1972 இல் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தை ஆரம்பித்த எம்.ஜி.ஆர். 1977 முதல் 1987 இல் தான் இறக்கும்வரை அப்பதவியை வகித்தார். இதற்கிடையில் 1979 ஆம் ஆண்டு எம்.ஆர்.ராதா தனது 72 ஆவது வயதில் காலமானார்.
இதை மின்னஞ்சல் செய்க


.
.மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வரலாறு
December 15, 2011 by V2V Admin
எம்.ஜி.ஆர். என்ற மூன்று எழுத்தால் பாரெங் கும் புகழ்பெற்ற புரட்சித் தலைவர் மக்கள் தில கம் பாரத ரத்னா டாக்டர். எம்.ஜி. இராமச்சந் திரன் (எம்.ஜி.ஆர்) என்ற மருதூர் கோபா லமேனன் இராமச்சந்திரன் 1917ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் நாள் இலங்கையின் கண்டிக்கு அருகேயுள்ள நாவ லப்பிட்டியில் மருதூர் கோபாலமேனனுக்கும் சத்தியபாமாவுக்கும் மகனாகப் பிறந்தார். அவருடைய தந்தையின் மறைவுக்குப் பின் தாயும் மகனும் தமிழகத்தில் கும்பகோணத்தில் குடியேறினார்கள். குடும்ப சூழ் நிலை காரணமாக சிறுவயதிலேயே அவர் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். பின் னர் படிப்படியாக உயர்ந்து திரைப்படங்களில் நடிக்கத் துவ ங்கினார்.

1936 ல் சதிலீலாவதி என்னும் திரைப்படத்தில் முதலில் நடித் திருந்தும், 1947ல் அவர் நடித்த ராஜகுமாரி படம் வெளிவரும்வரை அதிகம் புகழ் கிடைக்கவில்லை. தொடர்ந்து வந்த அடுத்த 25 ஆண்டுகள், எம்.ஜி.ஆர். தமிழ் திரைப்பட உலகில் மிக முக்கியமான வர்களில் ஒருவ ராக விளங்கினார். எம்.ஜி.ஆர். நடித்த திரைப் படங்கள் 135. இவற்றுள் அவர் கதா நாயகனா க நடித்த படங்களின் எண்ணிக்கை 115.

எம்.ஜி.ஆர். முதலில் தங்கமணி என்பவரை மணந்தார். அவர் நோயுற்று இறந்துவிடவே பின்னர் இரண்டாவதாக சதானந்தவதி யை மணந்தார். இவரும் நோயுற்று இறந்து விட் டார். பின்னர் எம்.ஜி.ஆர். வி. என் .ஜான கியை மணந்து கொண்டார். துரதிர்ஷ்டவச மாக இவர்களுக்கு குழந்தைப்பேறு வாய்க்க வில்லை.

எம்.ஜி.ஆர். ஆரம்ப நாட்களில் காங்கிரஸ் ஆதரவாளராகவும், நேதாஜி பக்தராகவும் இருந்தார். பின்னர் ராஜகுமாரி, மந்திரிகுமாரி படப்பிடி ப்பு நாட்களில் கலைஞர் கருணா நிதியுடன் கொண்ட நட்பால் திரா விட முன் னேற்றக் கழகத்தின் பால் ஈர்க்கப்பட்டார். பின்னர் திராவிட முன் னேற்றக் கழகத்தின் முக்கிய உறுப்பினராக திகழ்ந்தார். எம். ஜி. ஆர்.  அக்கட்சியின் பொருளாளராக வும் நீண்ட காலம் பணியாற்றினார். சி. என். அண்ணாதுரையின் மறைவுக்குப் பின், முதலமைச்சராக பதவி ஏற்ற கலைஞர் மு. கருணாநிதியுடன் ஏற்பட்ட முரண்பாடுகள் காரண மாக எம்.ஜி.ஆர். திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து வெளியேறி னார். 1972ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் நாள் அனைத்திந்திய அண்ணா திரா விட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியைத் துவங்கினார். 1977ல் நடைபெற்ற தேர்தலில் பெரும் வெற்றி பெற்று தமிழக முதல்வ ராகப் பொறுப் பேற்றார். பின்னர் 1980ஆம் ஆண்டு நடை பெற்ற தேர்தலிலும் வெற்றி பெற்று மீ ண்டும் இரண்டாம் முறையாக முதல்வ ரானார். 1984ல் இவர் சிறுநீரகக் கோளா று காரணமாக கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டார். இதற்கு சிகி ச்சை பெற அமெரிக்காவின் புருக்ளின் மரு த்துவமனையில் அனும திக்கப்பட்டார். மருத்துவமனை யில் இருக்கும் போதே தமிழக த்தில் நடை பெற்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற் றார். 1987ஆம் ஆண்டு வரை 10 ஆண் டுகள் தொடர்ச்சியாக முதல மைச்சர் பதவியை வகித்து பத வியிலிருக்கும் போதே 1987 ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் நா ள் இயற்கை எய்தினார். அவரது மறைவிற்குப் பின் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. 

இன்றளவும் எம்.ஜி.ஆர். அவர்கள் தாம் நடித்த திரைப்படங் களுக்காக மட்டுமின்றி, தம் ஆட்சிக்காலத்தில் செயல்படுத்திய பல மக்கள் நல் வாழ்வு திட்டங்களுக்காகவும் மிக வும் போற்றப்படு கிறார். அவற்றுள் மிக முக்கியமானது பள்ளி மாண வர்களுக்காக அவர் கொண்டுவந்த சத்துணவுத் திட்டம் ஆகும். மேலும் ஈழ மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாக தமது இறுதிநாள் வரை பெரிதும் துணைநின்றார் எம்.ஜி. ஆர். அவர்கள்.

விருதுகள் மற்றும் கௌரவங்கள்

1960 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டும் இந்தி யில் அதன் வாசகங்கள் இருந்ததால் ஏற்க மறுத்துவிட்டார்.

1972 ஆம் ஆண்டு ரிக்ஷாகாரன் படத் துக்காக சிறந்த நடிகருக்கான தேசி ய விருது

1987 ஆம் ஆண்டு மரணத்துக்கு பிந் தைய பாரத ரத்னா விருது
சென்னை பல்கலை மற்றும் அரிசோ னா உலகப் பல்கலையின் டாக்டர் பட்டம்

எம்.ஜி.ஆர். நடித்துள்ள படங்கள்
முப்பதுகளில்

1. சதி லீலாவதி – 1936 – மனோரமா பிலிம்ஸ் – எல்லிஸ் ஆர். டங்கன்
2. இரு சகோதரர்கள் – 1936 – பரமேஸ்வரி சவுண்ட் பிக்சர்ஸ் – எல்லிஸ் ஆர். டங்கன்
3. தட்ச யக்ஞம் – 1938 – மெட்ரோபாலிடன் பிக்சர்ஸ் – ராஜா சந்திரசேகர்
4. வீர ஜகதீஷ் – 1938 – வி.எஸ். டாக்கீஸ் – டி.பி.கைலாசம், ஆர் பிரகாஷ்
5. மாய மச்சேந்திரர் – 1939 – மெட்ரோபாலிடன் பிக்சர்ஸ் – ராஜா சந்திரசேகர்
6. பிரஹலாதா – 1939 – சேலம் சங்கர் பிலிம்ஸ் – பி.என். ராவ்

நாற்பதுகளில்
7. அசோக்குமார் – 1941 – முருகன் டாக் கீஸ் பிலிம் கம்பெனி – ராஜா சந்திரசேகர்
8. வேதவதி அல்லது சீதா ஜனனம் – 1941 – சியாமளா பிக்சர்ஸ் – டி.ஆர். ரகுநாத்
9. தமிழ் அறியும் பெருமாள் – 1942 – உமா பிக்சர்ஸ் – டி.ஆர். ரகுநாத்
10. தாசி பெண் அல்லது ஜோதி மலர் – 1943 – புவனேஸ்வரி பிக்சர்ஸ் – எல்லிஸ் ஆர். டங்கன்
11. அரிச்சந்திரா – 1943 – ஸ்ரீ ராஜ ராஜே ஸ்வரி பிலிம் கம்பெனி – நாகபூஷணம்
12. மீரா – 1945 – சந்திரபிரபா சினிடோன் – எல்லிஸ் ஆர். டங்கன்
13. சாலிவாகனன் – 1945 – பாஸ்கர் பிக்சர்ஸ் – பி.என். ராவ்
14. ஸ்ரீ முருகன் – 1946 – ஜுபிடர் – எம். சோமசுந்தரம், வி.எஸ். நாராயண்
15. பைத்தியக்காரன் – 1947 – என்.எஸ்.கே. பிலிம்ஸ் – கிருஷ்ணன், பஞ்சு
16. ராஜகுமாரி – 1947 – ஜுபிடர் – ஏ.எஸ்.ஏ. சாமி – 160 நாட்கள்
17. அபிமன்யூ – 1948 – ஜுபிடர் – ஏ.எஸ்.ஏ. சாமி
18. மோகினி – 1948 – ஜுபிடர் – லங்கா சத்யம் – 133 நாட்கள்
19. ராஜ முக்தி – 1948 – நரேந்திரா பிக்சர்ஸ் – ராஜா சந்திரசேகர்
20. ரத்னகுமார் – 1949 – முருகன் டாக்கீஸ் பிலிம் கம்பெனி – கிருஷ்ணன், பஞ்சு
ஐம்பதுகளில்
21. மந்திரி குமாரி – 1950 – மாடர்ன் தியேட்டர்ஸ் – டி.ஆர். சுந்தரம், எல்லிஸ் ஆர். டங்கன் – 146 நாட்கள்
22. மருதநாட்டு இளவரசி – 1950 – ஜி.கோவிந்தன் அண்ட் கோ – 133 நாட்கள்
23. மர்ம யோகி – 1951 – ஜுபிடர் – கே. ராம்நாத் – 151 நாட்கள்
24. ஏக்தா ராஜா – 1951 – இந்தி (டப் பிங்) 
25. சர்வாதிகாரி – 1951 – மாடர்ன் தியேட்டர்ஸ் – 141 நாட்கள்
26. சர்வாதிகாரி – 1951 – தெலுங்கு (டப் பிங்) 
27. அந்தமான் கைதி – 1952 – ராதாகிருஷ்ணா பிலிம்ஸ் – வி. கிருஷ்ணன் – 133 நாட்கள்
28. என் தங்கை – 1952 – அசோகா பிக் சர்ஸ் – சி.எ. நாராயணமூர்த்தி – எம்.கே.ஆர். நம்பியார் – 181 நாட்கள்
29. குமாரி – 1952 – ஆர்.பத்மநாபன், ராஜேஸ்வரி – ஆர். பத்மநாபன் – 112 நாட்கள்
30. ஜெனோவா – 1953 – சந்திரா பிக்சர்ஸ் – எப். நாகூர் – 133 நாட்கள்
31. ஜெனோவா – 1953 – மலையாளம் (டப்பிங்)
32. நாம் – 1953 – ஜுபிடர், மேகலா – ஏ. காசிலிங்கம் – 84 நாட்கள்
33. பணக்காரி – 1953 – உமா பிக்சர்ஸ் – கே.எஸ். கோபாலகிருஷ்ணன் – 70 நாட்கள்
34. கூண்டுக்கிளி – 1954 – ஆர்.ஆர். பிக்சர்ஸ் – டி.ஆர். ராமண்ணா – 77 நாட்கள்
35. மலைக்கள்ளன் – 1954 – பக்ஷிராஜா – எஸ்.எம்.ஸ்ரீராமுலு நாயுடு – 150 நாட்கள்
36. குலேபகாவலி – 1955 – ஆர்.ஆர். பிக்ச ர்ஸ் – டி.ஆர். ராமண்ணா – 166 நாட்கள்
37. அலிபாபாவும் 40 திருடர்களும் – 1956 – மாடர்ன் தியேட்டர்ஸ் – டி.ஆர். சுந்தரம் – 168 நாட்கள்
38. மதுரை வீரன் – 1956 – கிருஷ்ணா பிக்சர்ஸ் – யோகானந்த் – 169 நாட்கள்
39. தாய்க்குப் பின் தாரம் – 1956 – தேவர் பிலிம்ஸ் – எம்.ஏ. திருமுகம் – 147 நாட்கள்
40. சக்கரவர்த்தி திருமகள் – 1957 – உமா பிக்சர்ஸ் – பி. நீலகண்டன் – 140 நாட்கள்
41. மகாதேவி – 1957 – ஸ்ரீ கணேஷ் மூவி டோன் – சுந்தர் ராவ் நட்கர்னி – 117 நாட் கள்
42. புதுமைப்பித்தன் – 1957 – சிவகாமி பிக்சர்ஸ் – டி.ஆர். ராமண்ணா – 112 நாட்கள்
43. ராஜராஜன் – 1957 – நீலா புரொ டக்சன்ஸ் – டி.வி. சுந்தரம் – 77 நாட்கள்
44. நாடோடி மன்னன் – 1958 – எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் – எம்.ஜி.ஆர். – 161 நாட்கள்
45. தாய் மகளுக்கு கட்டிய தாலி – 1959 – கல்பனா கலா மந்திர் – ஆர். ஆர். சந்திரன் – 86 நாட்கள்

அறுபதுகளில்
46. பாக்தாத் திருடன் – 1960 – சதர்ன் மூவிஸ் – டி.பி. சுந்தரம் – 112 நாட்கள்
47. மன்னாதி மன்னன் – 1960 – நடேஷ் ஆர்ட் பிக்சர்ஸ் – எம். நடேசன் – 93 நாட்கள்
48. ராஜா தேசிங்கு – 1960 – கிருஷ்ணா பிக்சர்ஸ் – டி.ஆர். ரகுநாத் – 77 நாட்கள்
49. அரசிளங்குமரி – 1961 – ஜுபிடர் – ஏ.எஸ்.ஏ. சாமி – 92 நாட்கள்
50. நல்லவன் வாழ்வான் – 1961 – அரசு பிக்சர்ஸ் – பி. நீலகண்டன் – 84 நாட்கள்
51. சபாஷ் மாப்பிள்ளை – 1961 – ராகவன் புரொடக்சன்ஸ் – எஸ். ராகவன் – 70 நாட்கள்
52. தாய் சொல்லைத் தட்டாதே – 1951 – தேவர் பிலிம்ஸ் – எம்.ஏ. திருமுகம் – 133 நாட்கள்
53. திருடாதே – 1961 – ஏ.எல்.எஸ். – பி. நீலகண்டன் – 161 நாட்கள்
54. குடும்பத் தலைவன் – 1962 – தேவர் பிலிம்ஸ் – எம்.ஏ. திருமுகம் – 108 நாட்கள்
55. மாடப்புறா – 1962 – பி.வி.என். புரொ டக்சன்ஸ் – எஸ்.ஏ. சுப்புராமன் – 77 நாட்கள்
56. பாசம் – 1962 – ஆர்.ஆர். பிக்சர்ஸ் – டி.ஆர். ராமண்ணா – 84 நாட்கள்
57. ராணி சம்யுக்தா – 1962 – சரஸ்வதி பிக்சர்ஸ் – யோகானந்த் – 70 நாட்கள்
58. தாயைக் காத்த தனையன் – 1962 – தேவர் பிலிம்ஸ் – எம்.ஏ. திருமுகம் – 140 நாட்கள்
59. விக்கிரமாதித்தன் – 1962 – பாரத் புரொடக்சன்ஸ் – டி.ஆர். ரகுநாத், என்.எஸ். ராம்தாஸ் – 79 நாட்கள்
60. ஆனந்த ஜோதி – 1963 – ஹரிஹரன் பிலிம்ஸ் (பி.எஸ்.வி.) – வி.என். ரெட்டி
61. தர்மம் தலைக்காக்கும் – 1963 – தேவர் பிலிம்ஸ் – எம்.ஏ. திருமுகம் – 117 நாட்கள்
62. கலை அரசி – 1963 – சரோடி பிரத ர்ஸ் – ஏ. காசிலிங்கம்
63. காஞ்சித் தலைவன் – 1963 – மே கலா பிக்சர்ஸ் – ஏ. காசிலிங்கம்
64. கொடுத்து வைத்தவள் – 1963 – ஈ.வி.ஆர். பிக்சர்ஸ் – பி. நீலகண்டன் – 91 நாட்கள்
65. நீதிக்குப் பின் பாசம் – 1963 – தேவர் பிலிம்ஸ் – எம்.ஏ. திருமுகம்
66. பணத்தோட்டம் – 1963 – 84 நாட் கள்
67. பரிசு – 1963 – கௌரி பிக்சர்ஸ் – யோகானந்த்
68. பெரிய இடத்துப் பெண் – 1963 – ஆர்.ஆர். பிக்சர்ஸ் – டி.ஆர். ராமண்ணா
69. தெய்வத் தாய் – 1964 – சத்யா மூவிஸ் – பி. மாதவன்
70. என் கடமை – 1964 – நடேஷ் ஆர்ட் பிக்சர்ஸ் – எம். நடேசன்
71. படகோட்டி – 1964 – சரவணா பிலிம்ஸ், டி. பிரகாஷ் ராவ்
72. பணக்கார குடும்பம் – 1964 – ஆர்.ஆர். பிக்சர்ஸ் – டி.ஆர். ராமண்ணா
73. தாயின் மடியில் – 1964 – அன்னை பிலிம்ஸ் – ஆடூர்தி சுப்பா ராவ்
74. தொழிலாளி – 1964 – தேவர் பிலிம்ஸ் – எம்.ஏ. திருமுகம்
75. வேட்டைக்காரன் – 1964 – தேவர் பிலிம்ஸ் – எம்.ஏ. திருமுகம்
76. ஆசை முகம் – 1964 – மோகன் புரொடக்சன்ஸ் – பி.புல்லையா
77. ஆயிரத்தில் ஒருவன் – 1965 – பத்மினி பிக்சர்ஸ் – பி.ஆர். பந்துலு
78. எங்க வீட்டுப் பிள்ளை – 1965 – விஜயா கம்பைன்ஸ் புரொடக்சன்ஸ் – சாணக்யா – 236 நாட்கள்
79. கலங்கரை விளக்கம் – 1965 – சர வணா பிலிம்ஸ் – கே. சங்கர்
80. கன்னித் தாய் – 1965 – தேவர் பிலி ம்ஸ் – எம்.ஏ. திருமுகம்
81. பணம் படைத்தவன் – 1965 – ஆர்.ஆர். பிக்சர்ஸ் – டி.ஆர். ராமண்ணா
82. தாழம்பூ – 1965 – ஸ்ரீ பால முரு கன் பிலிம்ஸ் – எஸ். ராமதாஸ்
83. அன்பே வா – 1966 – ஏ.வி.எம். – ஏ.சி. திரிலோகசந்தர்
84. நான் ஆணையிட்டால் – 1966 – சத்யா மூவிஸ் – சாணக்யா
85. முகராசி – 1966 – தேவர் பிலிம்ஸ் – எம்.ஏ. திருமுகம்
86. நாடோடி – 1966 – பத்மினி பிக்சர்ஸ் – பி.ஆர். பந்துலு
87. சந்திரோதயம் – 1966 – சரவணா பிலி ம்ஸ் – கே. சங்கர்
88. பறக்கும் பாவை – 1966 – ஆர்.ஆர். பிக்சர்ஸ் – டி.ஆர். ராமண்ணா
89. பெற்றால் தான் பிள்ளையா? – 1966 – ஸ்ரீ முத்துகுமரன் பிக்சர்ஸ் – கிருஷ்ணன், பஞ்சு
90. தாலி பாக்கியம் – 1966 – வரலக்ஷ்மி பிக்சர்ஸ் – கே.பி. நாகபூஷணம்
91. தனிப்பிறவி – 1966 – தேவர் பிலிம்ஸ் – என்.எஸ். வர்மா
92. அரச கட்டளை – 1967 – சத்யராஜா பிக்சர்ஸ் – எம்.ஜி. சக்ரபாணி
93. காவல்காரன் – 1967 – சத்யா மூவிஸ் – பி. நீலகண்டன்
94. தாய்க்கு தலைவணங்கு – 1967 – தேவர் பிலிம்ஸ் – எம்.ஏ. திருமுகம்
95. விவசாயி – 1967 – தேவர் பிலிம்ஸ் – எம்.ஏ. திருமுகம்
96. ரகசிய போலீஸ் 115 – 1967 – பத்மினி பிக்சர்ஸ் – பி.ஆர். பந்துலு
97. தேர் திருவிழா – 1968 – தேவர் பிலிம்ஸ் – எம்.ஏ. திருமுகம்
98. குடியிருந்த கோயில் – 1968 – சரவணா ஸ்கிரீன்ஸ் – கே. சங்கர்
99. கண்ணன் என் காதலன் – 1968 – சத்யா மூவிஸ் – பி. நீலகண்டன்
100. ஒளி விளக்கு – 1968 – ஜெமினி – சாணக்யா
101. கணவன் – 1968 – வள்ளி பிலிம்ஸ் – பி. நீலகண்டன்
102. புதிய பூமி – 1968 – ஜே.ஆர். மூவிஸ் – சாணக்யா
103. காதல் வாகனம் – 1968 – தேவர் பிலிம்ஸ் – எம்.ஏ. திருமுகம்
104. அடிமைப் பெண் – 1969 – எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் – கே. சங்கர்
105. நம் நாடு – 1969 – விஜயா இண்டர்நேசனல் – ஜம்பு

எழுபதுகளில்
106. மாட்டுக்காரன் வேலன் – 1970 – ஜெயந்தி பிலிம்ஸ் – பி. நீலகண்டன் – 156 நாட்கள்
107. என் அண்ணன் – 1970 – வீனஸ் பிக்சர்ஸ் – பி. நீலகண்டன்
108. தலைவன் – 1970 – தாமஸ் பிக்சர்ஸ் – பி.ஏ. தாமஸ்
109. தேடி வந்த மாப்பிள்ளை – 1970 – பத்மினி பிக்சர்ஸ் – பி.ஆர். பந்துலு
110. எங்கள் தங்கம் – 1970 – மேகலா பிக்சர்ஸ் – கிருஷ்ணன், பஞ்சு
111. குமரிக் கோட்டம் – 1971 – கே.சி. பிலிம்ஸ் – பி. நீலகண்டன்
112. ரிக்ஷாக்காரன் – 1971 – சத்யா மூவிஸ் – எம். கிருஷ்ணன் நாயர்
113. நீரும் நெருப்பும் – 1971 – நியூ மணி ஜே. சினி புரொடக்சன்ஸ் – பி. நீலகண்டன்
114. ஒரு தாய் மக்கள் – 1971 – நாஞ்சில் புரொடக்சன்ஸ் – பி. நீலகண்டன்
115. சங்கே முழங்கு – 1972 – வள்ளி பிலிம்ஸ் – பி. நீலகண்டன்
116. நல்ல நேரம் – 1972 – தேவர் பிலிம்ஸ் – எம்.ஏ. திருமுகம்
117. ராமன் தேடிய சீதை – 1972 – ஜெயந்தி பிலிம்ஸ் – பி. நீலகண்டன்
118. அன்னமிட்ட கை – 1972 – ராமசந்திரா புரொடக்சன்ஸ் – எம். கிருஷ்ணன்
119. நான் ஏன் பிறந்தேன் – 1972 – காமாட்சி ஏஜன்சிஸ் – எம். கிருஷ்ணன்
120. இதய வீணை – 1972 – உதயம் புரொடக்சன்ஸ் – கிருஷ்ணன், பஞ்சு
121. உலகம் சுற்றும் வாலிபன் – 1973 – எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் – எம்.ஜி.ஆர். – 203 நாட்கள்
122. பட்டிக்காட்டு பொன்னையா – 1973 – வசந்த் பிக்சர்ஸ் – பி.எஸ். ரங்கா
123. நேற்று இன்று நாளை – 1974 – அமல்ராஜ் பிலிம்ஸ் – பி. நீலகண்டன்
124. உரிமைக் குரல் – 1974 – சித்ரயுகா – சி.வி. ஸ்ரீதர்
125. சிரித்து வாழவேண்டும் – 1974 – உதயம் புரொடக்சன்ஸ் – எஸ்.எஸ். பாலன்
126. நினைத்ததை முடிப்பவன் – 1974 – ஓரியண்டல் பிக்சர்ஸ் – பி. நீல கண்டன்
127. நாளை நமதே – 1975 – கஜேந் திரா பிலிம்ஸ் – கே.எஸ். சேது மாதவன்
128. பல்லாண்டு வாழ்க – 1975 – உத யம் புரொடக்சன்ஸ் – கே. சங்கர்
129. இதயக்கனி – 1975 – சத்யா மூவி ஸ் – ஏ. ஜெகந்நாதன்
130. நீதிக்கு தலை வணங்கு – 1976 – ஸ்ரீ உமையாம்பிகை புரொட க்சன்ஸ் – பி. நீலகண்டன்
131. உழைக்கும் கரங்கள் – 1976 – கே.சி. பிலிம்ஸ் – கே. சங்கர்
132. ஊருக்கு உழைப்பவன் – 1976 – வீனஸ் பிக்சர்ஸ் – எம். கிருஷ்ணன்
133. இன்று போல என்றும் வாழ்க – 1977 – சுப்பு புரொடக்சன்ஸ் – கே. சங்கர்
134. நவரத்னம் – 1977 – சி.என்.வி. மூவிஸ் – ஏ.பி. நாகராஜன்
135. மீனவ நண்பன் – 1977 – முத்து எண்டர்பிரைசஸ் – சி.வி. ஸ்ரீதர்
136. மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் – 1978 – சோலீஸ்வர் கம் பைன்ஸ் – பி. நீலகண்டன்

நன்றி: பல இணையதளங்கள். 
.
.

.

.



.

.

No comments:

Post a Comment