Tuesday, 2 June 2020

RAJKAPOOR ,HINDI ACTOR,LEGEND BORN 1924 DECEMBER 14 -1988 JUNE 2




RAJKAPOOR ,HINDI ACTOR,LEGEND  
BORN 1924 DECEMBER 14 -1988 JUNE 2


ரண்பிர்ராஜ் "ராஜ்" கபூர் (இந்தி: राज कपूर,உருது: راج کپُور 1924வது ஆண்டு டிசம்பர் 14 அன்று பிறந்த ராஜ் கபுர், "பெரும் காட்சியாளர் " (தி ஷோ மேன்) என்றும் அறியப்பட்ட ஒரு இந்தியத் திரைப்பட நடிகர் மற்றும் இந்தித் திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஆவார்.

இவர் எட்டு ஃபிலிம்ஃபேர் விருதுகளை வென்றவர்; அவரது படங்களான ஆவாரா (1951) மற்றும் பூட் பாலிஷ் (1954) கேன்ஸ் திரைப்படத் திருவிழாவில் பால்மே டியோர் விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்டன
ஆரம்ப வாழ்க்கையும் பின்புலமும்
தற்போதைய பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கு எல்லை மாநிலமான
பெஷாவரில் ராஜ் கபூர் பிறந்தார். இவரது தந்தை நடிகர் பிரிதிவிராஜ் கபூர் மற்றும் தாயார் ராம்சரணி (ரமா) தேவி கபூர் (நீ மெஹ்ரா). ஆறு குழந்தைகள் கொண்ட கத்ரி ஹிந்த்கோ பேசும் குடும்பத்தில் இவர்தான் மூத்த பிள்ளை.[1][2][3] இவர் புகழ் பெற்ற கபூர் குடும்ப அங்கமான திவான் பாஷேஸ்வர்நாத் கபூரின் பேரன் மற்றும் திவான் கேஷவ்மல் கபூரின் கொள்ளுப் பேரனாவார். நடிகர்களான
ஷம்மி கபூர் மற்றும் சஷி கபூர் ஆகியோர் ராஜின் இளைய சகோதரர்கள். இவருக்கு ஊர்மிலா சியால் என்று ஒரு சகோதரியும் உண்டு. இவரது இளைய சகோதரர்கள் இருவர் நடை பழகும் இளஞ்சிறார் பருவத்திலேயே இறந்து விட்டனர்.


தொழில் வாழ்க்கை
ராஜ் கபூர் ஒரு படப்பிடிப்புத் தளத்தில் கிதார் ஷர்மாவுக்கு உதவியாளராக கட்டை தட்டும் பையன் பணியுடன் தன் தொழிலைத் தொடங்கினார். தனது பதினோராவது வயதில், முதன் முதலாக 1935வது வருடத்திய இங்க்விலாப் என்னும் திரைப்படத்தில் தோன்றினார். அடுத்த 12 வருடங்களுக்குப் பல படங்களில் நடித்த ராஜ் கபூருக்கு மிகப் பெரும் அளவில் மடைதிறந்த வாய்ப்பாக நீல் கமல் (1947) என்னும்
திரைப்படத்தில் அவர் ஏற்ற முன்னணிக் கதாபாத்திரம் அமைந்தது. இதில் அவருக்கு ஜோடியாக நடித்த மதுபாலா முதன் முதலாகக் கதாநாயகி வேடம் ஏற்றிருந்தார். 1948வது வருடம், தமது 24வது வயதில் அவர் ஆர்.கே.ஃபிலிம்ஸ் என்னும் பெயரில் தனது சொந்த படப்பிடிப்புத் தளத்தை நிறுவி, தனது சமகாலத்தில் மிக இளைய திரைப்பட இயக்குனரானார். ஒரு தயாரிப்பாளராக, இயக்குனராக மற்றும் நட்சத்திரமாக முப்பெரும் பணிகளையும் அவர் புரிந்த முதல் படம் 1948வது வருடத்திய ஆக் அவருடன் நர்கிஸ் நடித்த பல படங்களுக்கு இதுவே துவக்கமாக இருந்தது. இருப்பினும், இத் திரைப்படம் வசூலில் தோல்வி அடைந்தது.

1949வது வருடம் மெஹபூப் கான் தயாரித்த காவிய வெற்றிப்படமான அந்தாஜ் திரைப்படத்தில் மீண்டும் நர்கிஸ் மற்றும் திலீப் குமார் ஆகியோருடன் நடித்தார். இதுவே ஒரு நடிகராக அவருக்கு பெரும் வெற்றி ஈட்டித் தந்த முதல் படம்.


தொடர்ந்து, பர்சாத் (1949), ஆவாரா (1951) ஸ்ரீ 420 (1955), சோரி சோரி (1956) மற்றும் ஜிஸ் தேஷ் மே கங்கா பெஹதி ஹை (1960) போன்ற பல வெற்றிப் படங்களை அவர் தயாரித்து இயக்கி அவற்றில் நடிக்கலானார். சார்லி சாப்ளின் உருவாக்கிய மிகப் பிரபல திரையுருவான வேலையற்ற நாடோடி போன்ற ஒரு திரைப் பிம்பத்தை இத்திரைப்படங்கள் அவருக்கு நிலை நாட்டின. 1964வது வருடம் அவர் தயாரித்து, இயக்கி நடித்த சங்கம் அவரது முதல் வண்ணப்படம். ஒரு முன்னணிக் கதாநாயனாக பெரும் வெற்றியை அவர் ஈட்டியதும் இந்தத் திரைப்படத்தில்தான். 1970வது வருடம் அவர் தனது லட்சியப் படமான மேரா நாம் ஜோக்கர் (நான் ஒரு கோமாளி) என்னும் படத்தை இயக்கி நடித்தார். இத்திரைப்படம் முடிவடைய ஆறு வருடங்களுக்கு
மேலாகியது. 1970வது வருடம் அது திரையிடப்பட்டபோது, வசூலில் பெரும் தோல்வியடைந்து அவரை நிதி நெருக்கடிகளுக்கு உள்ளாக்கியது இவ்வாறு பின்னடைவு ஏற்படினும், இதையே தனது விருப்பமான திரைப்படமாக ராஜ் கருதினார்.

இதிலிருந்து மீண்டு 1971வது வருடம் தனது மூத்த மகனான ரந்தீர் கபூர், ஒரு நடிகர் மற்றும் இயக்குனராக அறிமுகமான கல் ஆஜ் ஔர் கல் (1971) என்னும் திரைப்படத்தில் அவருடன் ராஜ் கபூர் நடித்தார். இதில் அவரது தந்தையார் பிரிதிவி ராஜ் கபூர் மற்றும் பின்னாளில் ரந்தீர் கபூரை மணந்த பபிதா ஆகியோரும் நடித்திருந்தனர். அதன் பிறகு அவர் திரைப்படங்களில் குணசித்திரக் கதாபாத்திரங்களில் நடிக்கலானார். திரைப்படங்களைத்
தயாரிப்பதிலும் இயக்குவதிலும் கவனம் செலுத்தலானார். பாபி (1973) என்னும் திரைப்படத்தை தயாரித்து இயக்கி ரிஷி கபூர் என்னும் தனது இரண்டாவது மகனின் தொழில் வாழ்க்கையைத் துவக்கி வைத்தார். இது மிகப் பெரிய வெற்றி அடைந்தது மட்டும் அல்லாமல் பின்னாளில் மிகவும் பிரபல நடிகையாக விளங்கிய டிம்பிள் கபாடியா இதில்தான் அறிமுகமானார். மேலும், பதின்வயதினர் காதலைச் சித்தரித்த புதிய தலைமுறைக்கான முதல் படமாகவும் இது விளங்கியது. இந்தப் படத்தில் டிம்பிள் அணிந்த மிகக் குறுகலான நீச்சலுடை அந்த நாளைய இந்தியத் திரைப்படங்களில் மிகவும் தனித்தன்மையுடன் விளங்கியது.

1970களின் பிற்பகுதிகளிலும் 1980களின் முற்பகுதிகளிலும் பெண் கதாபாத்திரங்களை மையமாகக் கொண்ட பல திரைப்படங்களை அவர் தயாரித்து இயக்கினார்: ஜீனத் அமன் நடித்த சத்யம் ஷிவம் சுந்தரம் (1978), பத்மினி கோலாபுரெ நடித்த பிரேம் ரோக் (1982), மற்றும் மந்தாகினி அறிமுகமான ராம் தேரி கங்கா மைலி (1985).

ராஜ் கபூர் முக்கியமான ஒரு வேடத்தில் கடைசியாகத் தோன்றியது வக்கீல் பாபு (1982) என்னும் திரைப்படத்தில்தான். கிம் என்று பெயரிடப்பட்டு 1984வது ஆண்டு வெளியான பிரிட்டிஷ் தொலைக்காட்சிக்காகவே தயாரிக்கப்பட்ட ஒரு படத்தில் அவர் கௌரவ வேடம் ஏற்றிருந்தார். இதுவே இவர் இறுதியாக நடித்த வேடம்.

மரணம்

தனது இறுதி ஆண்டுகளில் ராஜ் கபூர் ஆஸ்த்மா நோயால் அவதியுற்றார்; ஆஸ்த்மா தொடர்பான சிக்கல்களால் அவர் 1988வது வருடம் தனது அறுபத்து மூன்றாவது வயதிலேயே மரணமடைந்தார். அவர் இறக்கும்போது ஹென்னா (ஒரு இந்திய-பாகிஸ்தானி காதல் கதை) என்ற ஒரு திரைப்படம் தொடர்பாகப் பணி புரிந்து கொண்டிருந்தார். பிறகு இந்தத் திரைப்படம் அவரது மகன் ரந்தீர் கபூரால் முடிக்கப்பட்டு 1991வது வருடம் திரையிடப்பட்டு மிகப் பெரும் வெற்றியடைந்தது.

மரபுரிமைச் செல்வம்
திரைப்பட விமர்சகர்கள் மற்றும் சாதாரண திரைப்பட விசிறிகள் ஆகிய இரு தரப்பினராலும் ராஜ் கபூர் பாராட்டப்படுகிறார். இந்திய சினிமாவின் சார்லி சாப்ளின் என்றே திரைவரலாற்றாசிரியர்கள் மற்றும் திரை ரசிகர்கள் இவரைக் குறிப்பிடுகின்றனர்; "காரணம், இவர் பாதகமான நேரங்களிலும் உற்சாகமும் நேர்மையும் கொண்டிருக்கும் ஒரு வேலையற்ற நாடோடி பாத்திரத்தைப் பல முறை சித்தரித்தார். இவரது புகழ் உலகெங்கும் பரவியது. ஆப்பிரிக்கா, மத்திய ஆசியா, முந்தைய சோவியத் யூனியன், சீனா மற்றும் தென் கிழக்கு ஆசியா போன்ற நாடுகளின் பெரும் பகுதிகளில் பார்வையாளர்களால் இவர் போற்றப்பட்டார்; இவரது திரைப்படங்கள் உலகார்ந்த அளவில் வணிக ரீதியாக வெற்றியடைந்தன.

ராஜ் கபூரின் அநேகப் படங்கள் தேசியப் பற்றைக் கருத்தாகக் கொண்டிருந்தன. அவரது படங்களான ஆக் , ஸ்ரீ 420 மற்றும் ஜிஸ் தேஷ் மே கங்கா பெஹதி ஹை (எந்த நாட்டில் கங்கை ஓடுகிறதோ ) ஆகியவை புதிதாகச் சுதந்திரம் அடைந்திருந்த இந்தியாவைக் கொண்டாடி, திரைப்பட ரசிகர்களின் நாட்டுப் பற்றை ஊக்குவிப்பதாக அமைந்தன. "மேரா ஜூத்தா ஹை ஜப்பானி" என்று துவங்கும் புகழ் பெற்ற இந்தப் பாடல் வரிகளை ஸ்ரீ 420 என்னும் திரைப்படத்தின் பாடலுக்காக ராஜ் கபூர் செயற்படுத்தினார்:

மேரா ஜூத்தா ஹை ஜப்பானி

ஏ பட்லூன் இங்க்லீஷ்தானி

சர் பே லால் டோபி ரூசி

ஃபிர் பீ தில் ஹை ஹிந்துஸ்தானி '

என் செருப்பு ஜப்பான் நாட்டிலானது

கால் சட்டை ஆங்கில நாட்டுடையது

இந்த சிவப்புத் தொப்பி ரஷ்ய நாட்டினுடையது

ஆனால், மனமோ இந்தியாவுக்கானது.'

இந்தப் பாட்டு மிகவும் பிரபலம் அடைந்து, ஸ்ரீ 420 வெளியான பிறகு பல படங்களிலும் கையாளப்பட்டுள்ளது. 2006வது வருடம் ஃபிராங்க்ஃபர்ட் புத்தகக் கண்காட்சியில் தனது துவக்கவுரையை நிகழ்த்திய மஹேஸ்வேதா தேவி, தனது மனங்கனிந்த நாடுப்பற்றையும், தமது நாட்டுக்கு தாம் செலுத்த வேண்டிய கடனையும் வெளிப்படுத்தும் வண்ணம், இந்த பாடல் வரிகளுடன் தன் உரையை முடித்துக் கொண்டார்.

ராஜ் கபூர் திரைப்பட இசை மற்றும் பாடல் வரிகளை இனங்காணும் ஒரு கூர்மதியாளராக விளங்கினார். அவர் கையாண்ட பல பாடல்கள் எந்தக் காலத்திற்குமானவையாக விளங்குகின்றன. இசை இயக்குனர்களான ஷங்கர் ஜெய்கிஷன் மற்றும் பாடலாசிரியர் ஹஸ்ரத் ஜெய்புரி ஆகியோரை அவர் அறிமுகம் செய்தார். தமது மிக அற்புதமான காட்சியமைப்பு பாணிக்காகவும் அவர் நினைவு கூரப்படுகிறார். அவர் மிக அற்புதமான பார்வை உருவாக்கங்களையும், நுட்பமான படப்பிடிப்புத் தளங்களையும், இசையினால் உருவாகும் மன நிலையை ஒத்துச் செல்லும் உணர்வு பூர்வமான ஒளியமைப்புகளையும் பயன்படுத்தினார். இவர் நிம்மி, டிம்பிள் கபாடியா மற்றும் மந்தாகினி போன்ற நடிகைகளை அறிமுகம் செய்தார்; தனது மகன்களான ரிஷி மற்றும் ராஜிவ் ஆகியோரின் தொழில் வாழ்க்கையை அறிமுகம் செய்ததோடு மட்டுமன்றி அவற்றை மீட்டெடுக்கவும் செய்தார்.

ராஜ் கபூர் பாலிவுட்டின் மிகப் பெரும் நடிகராக விளங்கினார்.

சொந்த வாழ்க்கை
கபூர் குடும்பம் தற்போதைய பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாநிலத்தில் தற்சமயம் ஃபைஸலாபாத் என்று அழைக்கப்படும் லயல்லபுரைச் சார்ந்தது.

1946வது வருடம் குடும்பத்தாரால் நிச்சயிக்கப்பட்டு, பாராம்பரிய முறையில் ஜபல்பூர் வாசியான கிருஷ்ணா மல்ஹோத்ராவை ராஜ்கபூர் மணந்தார். கிருஷ்ணா அவருக்கு தூரத்து உறவினர்தான்; அதாவது அவரது தந்தையின் தாய் மாமன் மகள். கிருஷ்ணாவின் சகோதரர்கள் பிரேம் நாத் மற்றும் ராஜேந்திர் நாத் ஆகியோரும் நடிகர்களே. ராஜ் கபூர்-கிருஷ்ணா தம்பதியின் மூத்த மகன் ரந்தீர் கபூர் 1947வது வருடம் பிறந்தார்; தொடர்ந்து அடுத்த வருடமான 1948வது வருடமே அவர்களது மூத்த மகள் ரிது பிறந்தார். இரண்டாவது மகன் ரிஷி கபூர் 1952வது வருடமும் இரண்டாவது மகள் ரீமா கபூர் 1956வது வருடமும் பிறந்தனர். இவர்களது கடைசி மகன் ராஜிவ் கபூர் 1962வது வருடம் பிறந்தார். ரந்தீர் கபூர், ரிஷி கபூர் மற்றும் ராஜிவ் கபூர் ஆகிய அனைவருமே நடிகர்களாக இயக்குனர்களாக அல்லது தயாரிப்பாளர்களாக பாலிவுட்டுடன் தொடர்பிலேயே இருநது வருகின்றனர்.

1950களில் புகழ் பெற்ற நடிகையாக விளங்கிய நர்கிஸுடன் நீண்ட காலத்திற்கான காதல் உறவைக் கொண்டிருந்ததாகவும் ராஜ் கபூர் அறியப்பட்டார். இந்த ஜோடி ஆவாரா , ஸ்ரீ 420 உள்ளிட்ட பல படங்களில் இணைந்து நடித்தது. சங்கம் திரைப்படத்தில் உடன் நடித்த வைஜயந்தி மாலாவுடனும் அவர் தொடர்பு கொண்டிருந்ததாகக் கூறப்பட்டது.

கபூரின் பேரப் பிள்ளைகளில் மூவர் தற்போது பாலிவுட் திரையுலகில் நட்சத்திரங்களாக உள்ளனர். இவரது பேத்திகளான கரிஷ்மா கபூர் மற்றும் கரீனா கபூர் ஆகியோர் நடிகைகளாக உள்ளனர். இவர்கள் ராஜ் கபூரின் மகன் ரந்தீர் கபூர் மற்றும் ரந்தீர் கபூரின் முன்னாள் மனைவி பபிதா ஆகியோரின் புதல்விகள். இவரது பேரனான நடிகர் ரன்பீர் கபூர், இவரது மகன் ரிஷி கபூர் மற்றும் அவரது மனைவி நீது சிங் ஆகியோரின் புதல்வர்.

== பிற கலைஞர்களுடன் இணக்கம் ==

ஷங்கர்-ஜெய்கிஷன்
ஷங்கர்-ஜெய்கிஷன் இவருக்கு விருப்பமான இசை இயக்குனர்கள். இவர்களுடன் அவர் பர்சாத் துவங்கி கல் ஆஜ் ஔர் கல் வரையிலான 20 திரைப்படங்களில் பணி புரிந்தார். இவற்றில் அவரது 10 சொந்தப் படங்களும் அடங்கும். (இந்தக் கால கட்டத்திற்கான இரண்டு விதி விலக்குகள் சலீல் சௌத்ரியுடன் பணிபுரிந்த ஜாக்தே ரஹோ மற்றும் அப் தில்லி தூர் நஹின்] ) ஜெய்கிஷன் மரணத்திற்குப் பிறகுதான் அவர் வேறு இசை இயக்குனரை - லக்ஷிமிகாந்த்-பியாரேலால்- தனது பாபி திரைப்படத்திற்காக நாடினார்.

ஷங்கர் ஜெய்கிஷனுடனான திரைப்படங்களின் பட்டியல்: (18 திரைப்படங்கள்)

பர்சாத் (1949)
ஆஹ் (1953)
ஆவாரா (1951)
பூட் பாலிஷ் (1954)
ஸ்ரீ 420 (1955)
சோரி சோரி (1956)
அனாடி (1959)
கன்ஹையா (1959)
மை நஷே மே ஹூம் (1959)
ஜிஸ் தேஷ் மே கங்கா பெஹதி ஹை (1960)
ஆஷிக் (1962)
ஏக் தில் ஸௌ அஃப்ஸானே (1963)
சங்கம் (1964)
' தீஸ்ரி கஸம்/0} (1966)
அரௌண்ட் தி வேர்ல்ட் (1967)
தீவானா (1967)
சப்னோன் கா சௌதாகர் (1968)
மேரா நாம் ஜோக்கர் (1970)
நர்கிஸ்
ராஜ் கபூர் மற்றும் நர்கிஸ், அவரது ஆறு சொந்தப் படங்களையும் உள்ளிட்டு 16 படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர்.
ஆக் (1948)
அந்தாஜ் (1949)
பர்சாத் (1949)
ப்யார் (1950)
ஜான் பெஹசான் (1950)
ஆவாரா (1951)
அம்பர் (1952)
அன்ஹோனி (1952)
ஆஷியானா (1952)
பேவஃபா (1952)
ஆஹ் (1953)
பாபி (1953)
தூன் (1953)
ஸ்ரீ 420 (1955)
சோரி சோரி (1956)
ஜாக்தே ரஹோ (1956)
முகேஷ்
அநேகமாக ராஜ்கபூரின் எல்லாப் படங்களிலும் அவருக்கே உரித்தான அவரது பாடும் குரலாகவே இருந்தவர் முகேஷ். இருப்பினும் மன்னா டே பல குறிப்பிடத்தக்க மற்றும் மிகவும் பிரபலமான பாடல்களை, உதாரணமாக ஸ்ரீ 420 மற்றும் சோரி சோரி ஆகிய திரைப்படங்களில், ராஜ் கபூருக்காகப் பாடியுள்ளார். கீழ்க்காணும் பாடல்கள் அத்தகைய பாடல்களின் உதாரணங்கள்:

தில் கா ஹால் சுனே தில் வாலா (ஸ்ரீ 420)
ஆஜா சனம் மதுர் சாந்தினி மே ஹம் (சோரி சோரி)
ஜஹான் மை ஜாதி ஹூம் வஹின் சலே ஆத்தே ஹோ (சோரி சோரி)
ஏ ராத் பீகி பீகி, ஏ மஸ்த் ஃபிஜாயேன் (சோரி சோரி)
மஸ்தி பரா ஹை சமான் (பர்வரிஷ்)
ஜானே கஹான் கயே ஓ தின் (மேரா நாம் ஜோக்கர்)
விருதுகள் மற்றும் பரிந்துரைகள்
ராஜ் கபூர் பெற்ற விருதுகளும் பரிந்துரைப்புகளும்
ராஜ் கபூர் 21க்கும் மேலான ஃபிலிம்ஃபேர் விருதுகளுக்காகப் பரிந்துரைக்கப்பட்டு அவற்றில் 12 விருதுகளை வென்றார்.

தாதாசாகெப் பால்கே விருது
இந்திய சினிமாவுக்கு தம் வாழ்நாளில் அளித்த பங்களிப்பிற்காக ராஜ் கபூர் 1987வது ஆண்டு 35வது தாதாசாகெப் பால்கே விருது வழங்கப் பெற்றார்.

மறைந்த ஹிந்தி நடிகர் ராஜ்கபூர். இவரின் மனைவி கிருஷ்ணா கபூர் (87 வயது). முதுமை காரணமாக உடல் நலமில்லாமல் இருந்தார். இதற்காக சிகிச்சை பெற்று வந்நிலையில் இன்று அதிகாலை 4 மணிக்கு மாரடைப்பு காரணமாக காலமானார். இவரின் மறைவுக்கு ஹிந்தி திரைப்பட உலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.ராஜ்கபூர்- கிருஷ்ணா கபூர் தம்பதிக்கு ரன்ந்தீர் கபூர், ரிஷி கபூர், ராஜீவ் கபூர் மகன்களும் ரிது கபூர், ரிமா கபூர் மகள்கள் உள்ளனர். ரன்ந்தீர் கபூரின் மகள்கள் கரீஷ்மா கபூர், கரீனா கபூர். ரிஷி கபூரின் மகன் பிரபல இளம் ஹீரோ ரன்பிர் கபூர்.

‘திஷோ மேன் ஆஃப் பாலிவுட்’ என்று புகழப்படும் இந்தி நடிகர், தயாரிப்பாளர், இயக்குநரான ராஜ்கபூர் (Raj Kapoor) பிறந்த தினம் இன்று (டிசம்பர் 14). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

l பாகிஸ்தானின் பெஷாவரில் (1924) பிறந்தார். இவரது தந்தை பிருத்விராஜ் கபூர் திரைப்பட, நாடக நடிகர். 1929-ல் குடும்பம் பாம்பேயில் குடியேறியது. படப்பிடிப்புத் தளத்தில் உதவி செய்யும் பையனாக திரைப்படத் துறையில் நுழைந்தவர், 11 வயதில் ‘இன்குலாப்’ என்ற படத்தில் நடித் தார்.
‘திஷோ மேன் ஆஃப் பாலிவுட்’ என்று புகழப்படும் இந்தி நடிகர், தயாரிப்பாளர், இயக்குநரான ராஜ்கபூர் (Raj Kapoor) பிறந்த தினம் இன்று (டிசம்பர் 14). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

l பாகிஸ்தானின் பெஷாவரில் (1924) பிறந்தார். இவரது தந்தை பிருத்விராஜ் கபூர் திரைப்பட, நாடக நடிகர். 1929-ல் குடும்பம் பாம்பேயில் குடியேறியது. படப்பிடிப்புத் தளத்தில் உதவி செய்யும் பையனாக திரைப்படத் துறையில் நுழைந்தவர், 11 வயதில் ‘இன்குலாப்’ என்ற படத்தில் நடித் தார்.
l 12 ஆண்டுகளுக்கு பிறகு, ‘நீல் கமல்’ படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் அறிமுக நாயகி மதுபாலாவுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 24 வயதில் ஆர்.கே.பிலிம்ஸ் என்ற பெயரில் சொந்தமாக ஸ்டுடியோ தொடங்கினார்.

விற்பனைக்கு வரும் ராஜ்கபூரின் ஆர்.கே.ஸ்டூடியோஸ்

ராஜ்கபூர் இந்திய சினிமாவின் மகத்தான கலைஞன். இந்திய சினிமாவுக்கு என்று தனி குணமும் மணமும் உள்ளது என்பதை உலகத்துக்கு உரக்கச் சொன்னவர். அந்த வண்ணக் கனவுக்காரரின் பிளாக் அண்ட் வொயிட் சாம்ராஜ்யம் இன்று மெல்லத் தகர்ந்து கொண்டிருக்கிறது. ஆம், ராஜ்கபூரின் கனவுகளில் ஒன்றாக இருந்த ஆர்.கே. ஸ்டூடியோஸ் விற்கப்படவுள்ளது. இந்தச் செய்தியை ராஜ்கபூரின் மகனும் பாலிவுட் ஸ்டாருமான ரிஷி கபூர் அறிவித்தபோது மொத்த தேசமும் அதிர்ந்தது. குறிப்பாக, பாலிவுட் திரை உலகமும் மும்பை குடிமக்களும் எதையோ இழந்ததைப் போன்ற வெறுமையிலும் சோகத்திலும் ஆழ்ந்தார்கள்.
அது, இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த அடுத்த ஆண்டு. சினிமா என்னும் கலை சார்ந்த வணிகம் தன் குழந்தைப் பருவத்தைக் கடக்காத காலம். ராஜ்கபூர், ஆர்.கே.பிலிம்ஸ் என்ற நிறுவனத்தைத் தொடங்குகிறார். மும்பையின் புறநகரான செம்பூரில் ஸ்டூடியோ உருவாகிறது. முதல் படம் ‘ஆக்’. படம் படுதோல்வி. ராஜ்கபூர் மனம் தளராமல் அடுத்த ஆண்டே ‘பர்சாத்’ படத்தை வெளியிட, அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகிறது.  இப்படித்தான் தொடங்குகிறது ஆர்.கே.ஸ்டூடியோஸின் பயணம். அடுத்தடுத்த பல  பத்தாண்டு களில் வெற்றி தோல்வி என மாறி மாறி சகட யோகம் சுழன்றடிக்க ஆர்.கே.ஸ்டூடியோஸ் இந்தி சினிமாவின் நிகரற்ற தலைமையிடமாகியது.

இரவு பகலாக ஷூட்டிங்குகள் அங்கு நடைபெற்றன. கோயில்கள், மசூதிகள், சர்ச்சுகள், குடிசை வீடுகள், மாட மாளிகைகள், போலீஸ் ஸ்டேஷன்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் என இந்திய நிலத்தின் எல்லா திணைகளும் அந்த ஸ்டூடியோவில் உயிர்பெற்றன. படித்த மேதைகள், படிக்காத பாமரர்கள், அழகிய யுவதிகள், அன்பான இல்லத்தரசிகள், பெரிய மனிதர்கள், பக்கா திருடர்கள் என சமூகத்தின் எல்லா தட்டு மக்களும் அதில் உலவிக்கொண்டிருந்தார்கள். விதவிதமான வண்ண விளக்குகளும் பெரிய பெரிய கேமராக்களும் அதை ஓயாமல் படம் பிடித்துக்கொண்டிருந்தன.

‘ஆக்’, ‘பர்சாத்’, ‘ஆவாரா’, ‘ஆஹ்’, ‘பூட் பாலிஷ்’, ‘420’, ‘ஜக்தே ரஹோ’, ‘சங்கம்’, ‘மேரா நாம் ஜோக்கர்’, ‘பாபி’, ‘தரம் கரம்’, ‘சத்தியம் சிவம் சுந்தரம்’, ‘பிரேம் ரோக்’ போன்ற இந்தி சினிமாவின் மறக்க முடியாத காவியங்கள் எல்லாம் ஆர்.கே.ஸ்டூடியோவில்தான் உயிர் பெற்றன. நாற்பதாண்டுகளுக்கும் மேலாக இந்தி சினிமாவில் கோலோச்சிக் கொண்டிருந்த இந்த ஸ்டூடியோவுக்கு சரிவுகளின் காலமும் பிறகு வந்தது. மாற்றம் ஒன்றே மாறாதது என்ற பொன்விதி எதற்குப் பொருந்துமோ இல்லையோ சினிமாவுக்கு அட்சரம் பிசகாமல் பொருந்தும்.

புதிது புதிதாக கேட்டுக் கொண்டிருக்கும் ரசிகர்களின் ரசனைக்குத் தீனி போட வேட்டையாடும் சினிமா படைப்பாளிகள், பழசாகிவிட்டது என ஸ்டூடியோக்களை நாடுவதைத் தவிர்த்தார்கள். அவுட்டோர் படப்பிடிப்புகள் அதிகரிக்கத் தொடங்கியதால் ஸ்டூடியோக்கள் காத்தாட ஆரம்பித்தன. எல்லா ஸ்டூடியோக்களையும் சூழ்ந்த இந்த துர்விதி ஆர்.கே.ஸ்டூடியோவையும் வளைத்தது. ஸ்டூடியோ மெல்ல தன் சோபையை இழக்கத் தொடங்கியது. ஆனால், மும்பைக்காரர்களுக்கு ஆர்.கே.ஸ்டூடியோ வெறும் சினிமா படப்பிடிப்புத் தளம் மட்டுமல்ல; அது ஒரு கலாசார மையம்.




ஆம், ராஜ்கபூர் இருந்தபோதும் இல்லாதபோதும் பண்டிகைக் காலங்களில் ஸ்டூடியோ களைகட்டிவிடும். குறிப்பாக, விநாயகர் சதுர்த்தியும் ஹோலியும் ஆர்.கே.ஸ்டூடியோவின் திருவிழா தினங்கள். ஆயிரக்கணக்கான மக்கள் ஸ்டூடியோவின் உள்ளிருந்து சாலை வரை நீளும் நெடிய வரிசைகளில் நின்று விநாயகரை தரிசிப்பார்கள். பிரசாதம், அன்னதானம் என நகரமே பசியாறும். ஹோலி என்றால் கேட்கவே வேண்டாம். பாலிவுட்டின் எல்லா செலிபிரிட்டிகளும் ஆஜராகி விடுவார்கள். ஒவ்வொரு காராக உள்ளே செல்லச் செல்ல தங்கள் அபிமான நட்சத்திரங்களைக் கண்ட ரசிகர்கள் கள்வெறி கொண்டதுபோல் ஆர்ப்பரிப்பார்கள்.

ஸ்டூடியோவுக்கு உள்ளும் புறமும் எங்கும் வண்ணமயம். எங்கெங்கும் உற்சாகம். ஒரு பக்கம் வண்ணப் பொடிகள், வண்ண நீர் என கலர் கலர் உற்சாகம் ஊற்றெடுக்க மறுபக்கம் பாங்குகள் ஆறாய்ப் பெருகும். பாலிவுட்டின் புகழ்பெற்ற நடிகர், நடிகைகள், கபூர் குடும்பத்தின் வாரிசுகள் என அனைவரின் திருமணமும் இங்குதான் கோலாகலமாக நடைபெறும். இப்படி காலங்காலமாக ஆர்.கே.ஸ்டூடியோ என்றாலே அது எப்போதும் கொண்டாட்டத்தின் இடமாக இருந்தது. நாள்தோறும் பல நூறு மனிதர்கள் வந்து செல்லும் பொதுவெளியாக இருந்தது.

சென்ற வருடம் ஜூலை மாதத்தில் ஆர்.கே.ஸ்டூடியோவில் நிகழ்ந்த பெரிய தீ விபத்து ஒன்று அதன் இறுதி நாட்களைக் கொண்டுவந்துவிட்டது. இந்தி சினிமாவின் புகழ்மிக்க நட்சத்திரங்கள் அணிந்திருந்த ஆடைகள் முதல் பல்லாயிரம் ரூபாய் மதிப்புமிக்க பர்னிச்சர்கள் வரை அத்தனையும் எரிந்து சாம்பலாயின. ஏற்கெனவே நஷ்டத்தில் இயங்கிக்கொண்டிருந்த ஸ்டூடியோவை இந்தத் தீ விபத்து முற்றிலுமாகவே முடக்கிவிட, வேறு வழியின்றி இதை விற்கும் முடிவுக்கு வந்துவிட்டார்கள் கபூர் குடும்பத்தினர். ‘ஆர்.கே.ஸ்டூடியோ ஒரு நோயுற்ற வெள்ளை யானை போல உள்ளது. எங்களால் அதைப் பார்த்துக்கொண்டிருக்க இயலவில்லை...’ என துயரம் தொனிக்க ரிஷி கபூர் சொன்ன சொற்களுக்குத்தான் எத்தனை கனம்!

- இளங்கோ கிருஷ்ணன்

l இவர் தயாரித்து, இயக்கி, நடித்து வெளிவந்த முதல் படம்‘ஆக்’. இதில் ஜோடியாக நர்கீஸ் நடித்தார். இந்த ஜோடி இணைந்து நடித்த படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றன. 1949-ல் மெஹபூப் கான் தயாரித்த ‘அந்தாஜ்’ திரைப்படம் மூலம் சிறந்த நடிகர் என்ற அந்தஸ்து பெற்றார்.

l தொடர்ந்து ‘பர்சாத்’, ‘ஆவாரா’, ‘சோரி சோரி’, ‘ஜிஸ் தேஷ் மே கங்கா பஹதீ ஹை’ என பல வெற்றிப் படங்களை தயாரித்து, இயக்கி, நடித்தார். 1964-ல் தனது முதல் வண்ணப்படமான ‘சங்கம்’ படத்தை தயாரித்து, இயக்கி நடித்தார். இதன் வெற்றி மூலம், உலகப்புகழ் பெற்றார்.

l இசை இயக்குநர்கள் ஷங்கர் ஜெய்கிஷன், பாடல் ஆசிரியர் ஹஸ்ரத் ஜெய்புரி, நடிகை டிம்பிள் கபாடியா உட்பட பலரை அறிமுகம் செய்தவர். இவரது ‘பாடும் குரல்’ என்று பேசப்பட்ட முகேஷ், அனேகமாக இவரது எல்லா படங்களிலும் இவருக்குப் பின்னணி பாடினார்.

l தனது லட்சியத் திரைப்படமான ‘மேரா நாம் ஜோக்கர்’ திரைப்படத்தை 6 ஆண்டுகள் போராடி தயாரித்தார். படம் தோல்வி அடைந்தபோதிலும் இதுதான் தனக்கு மிகவும் பிடித்த படம் என்பார்.

l மூத்த மகன் ரண்தீர் கபூர் இயக்குநராக, நடிகராக அறிமுகமான ‘கல் ஆஜ் அவுர் கல்’ படத்தில் நடித்தார். அதன் பிறகு குணச்சித்திர வேடங்களில் நடித்தார். நடிப்பதைவிட திரைப்படங்கள் தயாரிப்பது, இயக்குவதில் அதிக கவனம் செலுத்தினார்.

l இரண்டாவது மகன் ரிஷி கபூரை நாயகனாக வைத்து இவர் தயாரித்து, இயக்கிய ‘பாபி’ திரைப்படமும் மாபெரும் வெற்றி பெற்றது. ‘ 420’, ‘சப்னோ கா சவுதாகர்’, ‘பூட் பாலிஷ்’, ‘சத்யம் சிவம் சுந்தரம்’, ‘பிரேம் ரோக்’, ‘ராம் தேரி கங்கா மைலி’ ஆகிய திரைப்படங்கள் வசூலில் சாதனை படைத்தன.

l 1982-ல் நடித்த ‘வக்கீல் பாபு’ திரைப்படம்தான் ஒரு நடிகராக இவரது இறுதிப் படம். ‘ஹென்னா’ திரைப்பட வேலையில் ஈடுபட்டிருந்தபோது, உடல்நலம் பாதிக்கப்பட்டு, 63-வது வயதில் (1988) மறைந்தார்.

l இந்திய சினிமாவின் சார்லி சாப்ளின் எனப்படும் ராஜ்கபூர் 12 முறை ஃபிலிம் ஃபேர் விருது பெற்றுள்ளார். 1987-ல் தாதா சாஹேப் பால்கே விருது பெற்றார். இவரது குடும்பத்தைச் சேர்ந்த பெரும்பாலானோர் திரை நட்சத்திரங்களாக பாலிவுட்டில் கோலோச்சி வருகின்றனர்.

ஏறத்தாழ ஐம்பதாண்டுகளுக்கு மேலாக ஹிந்தி திரைப்பட உலகின் முக்கியமான ஆளுமையாக விளங்கிய ரன்பிர் ராஜ்கபூர் என்ற ராஜ்கபூர் அவர்களின் பிறந்ததினம் இன்று. 

ஹிந்தி திரைபட உலகின் தொடக்ககால நட்சத்திரங்களில் ஒருவரான பிரிதிவிராஜ்கபூரின் முதல் மகனாக பேஷவார் நகரில் 1924ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 14ஆம் நாள் பிறந்தவர் ராஜ்கபூர். இவரின் சகோதர்கள் சஷிகபூர், ஷம்மிகபூர் மற்றும் ஊர்மிளா என்ற சகோதரி. திரைப்பட நடிகராக பல்வேறு நகரங்களுக்கு மாறி மாறி பிரிதிவிராஜ்கபூர் வசித்ததால், அவரின் குடும்பமும் அவரோடே பயணப்பட வேண்டி இருந்தது. அதனால் ராஜ்கபூர் டெஹ்ராடூன், கொல்கத்தா, மும்பை என்று பல்வேறு நகரங்களில் உள்ள பள்ளிகளில் படித்துவந்தார். 

சிறுவயதில் இருந்தே கலைத்துறையில் ஆர்வம் கொண்டிருந்த ராஜ்கபூர் சினிமாவில் முதல்முதலாக கிளாப் அடிக்கும் வேலையில் இருந்துதான் தன் பயணத்தைக் தொடங்கினார். பல படங்களில் சிறுசிறு வேடங்களில் தலைகாட்டிய ராஜ்கபூர் முதல்முதலாக 1947ஆம் ஆண்டு நீல்கமல் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தார். இந்தப் படத்தில் இவரது ஜோடி மதுபாலா. 

தனது 24ஆம் வயதில் ஆர் கே ஸ்டூடியோ என்ற நிறுவனத்தை உருவாக்கி ஆக் என்ற படத்தை இயக்கினார். இந்தப்படத்தில் நர்கிஸ் இவருக்கு ஜோடியாக நடித்தார். இதன் மூலம் அந்த காலத்தில் மிக இளைய திரைப்பட இயக்குனர் என்ற பெருமை ராஜ்கபூரை வந்தடைந்தது. திலிப்குமார், நர்கிஸ் ஆகியோரோடு ராஜ்கபூர் நடித்த அன்டாஸ் என்ற படம் பெரும் வெற்றியை பெற்றது. ராஜ்கபூர் தயாரித்து, இயக்கி நடித்த பர்ஸாட் என்ற படம் திரையுலகின் முக்கியமான ஆளுமையாக ராஜ்கபூரை நிலைநிறுத்தியது. 

தனது ஆர் கே ஸ்டுடியோ சார்பில் ராஜ்கபூர் தயாரித்து நடித்த ஆவாரா, ஸ்ரீ 420, ஜிஸ் தேஷ் மே கங்கா பெஹத்தி ஹை ஆகிய படங்கள் அன்றைய வெற்றிப்படங்கள். 1970களில் ராஜ்கபூர் மேரா நாம் ஜோக்கர் என்ற படத்தை தயாரித்து இயக்கி நடித்தார். ஆனால் இன்று கொண்டாடப்படும் இந்தப்படம் அன்று ஒரு தோல்விப்படமாக இருந்தது. 1973ஆம் ஆண்டு இவர் தயாரித்த பாபி என்ற திரைப்படம் மிகப்பெரும் வெற்றியைப் பெற்றது. 

எழுபதுகளின் பிற்பாதிகளிலும் எண்பதுகளிலும் பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பல படங்களை ராஜ்கபூர் தயாரித்து இயக்கினார். ஸிநத் அமன் நடித்த சத்தியம் சிவம் சுந்தரம், பத்மினி கோல்ஹாப்பூரி நடித்த பிரேம் ரோக், மந்தாகினி அறிமுகமான ராம் தேரி கங்கா மைலி ஆகியவை அதில் முக்கியமானவையாகும். இந்த காலகட்டங்களில் ராஜ்கபூர் குணசித்ர வேடங்களில் நடிக்கத் தொடங்கி இருந்தார். 

1946ஆம் ஆண்டு ராஜ்கபூர் கிருஷ்ணா மல்ஹோத்ரா என்ற பெண்மணியை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஐந்து குழந்தைகள். அதில் ரன்திர்கபூர், ரிஷிகபூர், ராஜிவ்கபூர் ஆகியோரும் திரைத்துறையில்தான் இயங்கிக்கொண்டு உள்ளார்கள். இவரது மகளான ரீத்து எஸ்கார்ட்ஸ் குழுமத்தின் ராஜு நந்தாவைத் திருமணம் செய்துகொண்டு உள்ளார். இவர்கள் மருமகள்தான் அமிதாப் பச்சனின் மகள் ஸுவேதா. ராஜ்கபூரின் மற்றொரு மகளான ரீமா மனோஜ் ஜெயின் என்ற முதலீட்டு ஆலோசகரை மணந்து கொண்டுள்ளார். பிரிதிவிராஜ்கபூரின் தொடங்கி நான்கு தலைமுறையாக இவர்கள் குடும்பம் ஹிந்தி திரையுலகின் பல்வேறு துறைகளில் தனி முத்திரை பதித்து வருகிறது. 

பல்வேறு திரைப்படங்களுக்காக ராஜ்கபூருக்கு மூன்று தேசிய விருதுகளும், பதினோரு பிலிம்பேர் விருதுகளும் வழங்கப்பட்டு உள்ளது. 1971ஆம் ஆண்டு பத்மபூஷன் விருதும் 1987ஆம் ஆண்டு தாதாசாஹேப்பால்கே விருதும் இவருக்கு வழங்கப்பட்டு உள்ளது. 

திரு ராஜ்கபூர் 1988ஆம் ஆண்டு ஜூன் 2ஆம் நாள் காலமானார். திரை ரசிகர்கள் மனதில் இன்றும் ராஜ்கபூர் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார். 


Raj Kapoor was one of the greatest and most influential actors and filmmakers of Hindi cinema. While people mostly remember the icon for his contribution to cinema, there’s more to the person beyond his passion for movies. On his 94th birth anniversary, we walk down memory lane to give you a sneak-peek into his childhood, his acting career and his relationship with his children.

1. With father Prithviraj Kapoor frequently leaving behind his family to travel for work, Raj Kapoor, the eldest among all children, was lonely and very protective about his mother, who was only 16 years older to him.

2. Raj was obsessed with food, something that goes back to his childhood when he wanted to take part in races only to get the snacks at the end.
3. The actor finally had his way after a dramatic showdown with his father, who wanted him to lead a conventional life away from showbiz.

4. As a boy, Raj did not have much of an interest in academics. Instead, he loved to read comics like Archies and Little Lulu. “He told our children mythological stories,” actor Randhir Kapoor said in a magazine interview. “Or he would read aloud from Archie comics,” Rishi Kapoor had added.5. At the age of 10, Raj Kapoor appeared in a film titled Inquilab for the first time. At the age of 24, he became the youngest film director of his times by making the film Aag, starring himself and Nargis in lead roles.

6. As a father, Raj Kapoor wanted his children to discover their own identity. “He [Raj] is my guru…When I reached the set to film Main shayar to nahi, there was no choreographer to help me with the shoot. I asked sahab (Raj Kapoor) about it and he said there was no need for one. I got very upset and nervous about it as it was my first time shooting a song. But he was certain about it as he didn’t want me to copy someone else…he wanted me to have my own signature style,” Rishi Kapoor had revealed while speaking at the 16th Pune International Film Festival’s PIFF Forum.
7. For Raj, cinema wasn’t just his profession; it was his life. On holidays, he would visit his farm near Pune or his Swiss resort to be at the races. But it’s not like he wasn’t around for his children when needed.

8. In an interview with Filmfare, Raj’s daughter Rima Jain had revealed, “Papa was not a regular dad, who’d be available at all times. But he was aware of everything that we did. Basically, Papa, for us, meant ‘entertainment’. Movies, vacations, parties, new outfits… He loved throwing lavish parties.”

9. Despite being known to the world as a showman, he enjoyed simple things and enjoyed sleeping on a mattress on the floor, even if it meant dragging it off the bed at a hotel. He also preferred to be driven in the Ambassador car, while the Mercedes was reserved for his wife.

10. Raj Kapoor was honoured with Padma Bhushan in 1971, and the Dadasaheb Phalke Award in 1987.




Bollywood actor Raj Kapoor, also known as the greatest showman of Hindi cinema once said, "My films and I, to me it is same as saying my beloved and I, or my life’s breath and I, or my purpose and I. To me, my films are all these rolled into one, perhaps more." He inherited the art of acting but made his identity by working hard on his own. The pioneer was the winner of several accolades including 3 National Film Awards and 11 Filmfare Awards in India. For unversed, the Filmfare Lifetime Achievement Award is named after the legendary actor. Raj Kapoor debuted with Madhubala from the 1947 film Neelkamal after which he appeared in super hit films like Aag, Awara, Shree 420, and gave 8 consecutive super hits with Nargis. He took his last breath on 2 June 1988 at the age of 63 and the reason for his death was heart attack.

Not just acting and direction, he even launched many actors and actresses after which he became the godfather of the industry. Raj Kapoor even introduced actresses like Nimmi, Dimple Kapadia, and Mandakini including music directors Shankar-Jaikishan, and the lyricists Hasrat Jaipuri and Shailendra. At the age of 17, Raj Kapoor worked as a spot boy where he learned a lot and later ventured into the acting world.

மும்பையில் உள்ள காலஞ்சென்ற பிரபல நடிகர் ஆர். கே.ஸ்டுடியோவை விற்பதற்கான பேச்சு வார்த்தை நடப்பதாக வந்த தகவலை அவரது பேத்தியும், நடிகையுமான கரினாகபூர் கான் மறுத்துள்ளார். "இது எங்கள் தாத்தாவின் சொத்து. இதை போற்றி பாதுகாப்பது எங்கள் கடமை. ஆர்.கே. குடும்ப பெண்கள் இதை மீட்க முன்வந்துள்ளனர். முதலில் கரிஷ்மா, அடுத்து நான், இப்போது ரன்பீர் கபூர் என ராஜ்கபூரின் வாரிசுகளான நாங்கள் முயற்சியில் இறங்கியுள்ளோம். அடுத்து எங்கள் குழந்தைகளும் இதை மீட்க முயற்சிப்பவர்கள்'' என்று கரினாகபூர் கூறியுள்ளார்.











.


.

No comments:

Post a Comment