Sunday 7 June 2020

SARITHA ,TAMIL ACTRESS BORN 1961 JUNE 7




SARITHA ,TAMIL ACTRESS BORN 1961 JUNE 7


சரிதா தென்னிந்திய திரைப்பட நடிகை. 141 படங்களில் நடித்திருக்கிறார். சின்னத்திரை தொடர்களிலும் நடித்துவருகிறார். தமிழின் சிறந்த நடிகைகளில் ஒருவராக கருதப்படுகிறார்.வரலாறு
சரிதா கெ. பாலசந்தரால் 1978இல் மரோசரித்ரா என்ற தெலுங்குப்படத்தில் கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டார். தமிழில் சரிதா நடிகையாக அறிமுகமான முதல் படம் 1978 ல் வெளிவந்த அவள் அப்படித்தான். அதில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தார். அதன்பின் கெ.பாலசந்தரின் தப்பித தாளா என்ற கன்னடப்படத்தில் அதே ஆண்டு நடித்தார். அந்தப்படம் தப்புத்தாளங்கள் என்ற பேரில் தமிழில் வெளியாகியது


சரிதா பாலசந்தரின் முக்கியமான கதாநாயகி. 22 படங்களில் பாலசந்தர் அவரை நடிக்கச்செய்திருக்கிறார். அவற்றில் தண்ணீர் தண்ணீர், அச்சமில்லை அச்சமில்லை, அக்னிசாட்சி, புதுக்கவிதை போன்றவை குறிப்புடத்தக்கவை. பாலசந்தர் படங்கள் வழியாக சரிதா பல முக்கியமான விருதுகளைப் பெற்றார்.

தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களில் தொடர்ந்து நடித்த சரிதா ஓர் இடைவெளிக்குப்பின் 2005 ல் தமிழில் ஜூலி கணபதி என்ற திரைப்படத்தில் மனநிலை பிறழ்ந்த கதாபாத்திரத்தில் நடித்தார்
விருதுகள்
சரிதா சிறந்த தமிழ் நடிகைக்கான விருதை 1979-80, 1982-83, 1988 ஆகிய ஆண்டுகளுக்காகப் பெற்றார்



சரிதா – K. பாலசந்தரால் 1978 -இல் மரோசரித்ரா என்ற தெலுங்குப்படத்தில் கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டார். தமிழில் சரிதா நடிகையாக அறிமுகமான முதல் படம் 1978 ல் வெளிவந்த அவள் அப்படித்தான். அதில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தார். அதன்பின் K.பாலசந்தரின் தப்பித தாளா என்ற கன்னடப்படத்தில் அதே வருடம் நடித்தார். அந்தப்படம்  தப்புத்தாளங்கள் என்ற பேரில் தமிழில் வெளியாகியது. அந்த படத்தில் ரஜனிகாந்துடன் மிகச்சிறப்பாக நடித்தார். நெற்றிக்கண் படத்தில் ரஜினியுடனும் கீழ்வானம் சிவக்கும் படத்தில் நடிகர் திலகத்துடனும்  போட்டிப்போட்டு நடித்தார். 140-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். வண்டிச்சக்கரம் படத்தில் சாமிக்கண்ணுவின் மகளாக வாழ்ந்துகாட்டினார். மௌன கீதங்கள் படத்தில் பாக்கியராஜுடன் இணைந்து தன் அபார நடிப்பை வெளியிட்டார்.



சரிதா கே.பாலசந்தரின் பிரதான கதாநாயகிகளில் அன்று ஜெயந்தி, சௌகார் ஜானகியைப் போன்று 1980 களில் சரிதாவும் விளங்கினார். 22 படங்களில் பாலசந்தர் அவரை நடிக்கச்செய்திருக்கிறார். அவற்றில் தண்ணீர் தண்ணீர், அச்சமில்லை அச்சமில்லை, அக்னிசாட்சி , புதுக்கவிதை போன்றவை முக்கியமான படங்கள். பாலசந்தர் படங்கள் வழியாக சரிதா பல முக்கியமான விருதுகளைப் பெற்றார். இவர் மலையாள நடிகர் மூகேஷ் என்பவரைக் காதலித்து மணந்து கொண்டார். சில வருடங்களுக்கு முன் அவரை விவாகரத்து செய்துகொண்டார்.

தமிழ்,கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளப்படங்களில் தொடர்ந்து நடித்த சரிதா ஓர் இடைவெளிக்குப்பின் 2005 -இல் தமிழில் ஜூலி கணபதி என்ற படத்தில் மனநிலை சரியில்லாத கதாபாத்திரத்தில் நடித்தார்.

நன்றி: விக்கிப்பீடியா




"திரை உலகிற்கு வந்தபோது நான் வெறும் களிமண். என்னை நடிகை ஆக்கியவர் பாலசந்தர் என்று சரிதா கூறினார்.

பாலசந்தர் இயக்கிய 15 படங்களில் நடித்தவர் சரிதா. மாபெரும் வெற்றி பெற்ற "மரோசரித்ரா'' படத்தின் கதாநாயகி.

அவர் பாலசந்தர் பற்றி கூறியிருப்பதாவது:-

"நான் ஒரு "அ.கெ.மு'' என்ன, புரியவில்லையா? அதுதான் "அறிவு கெட்ட முண்டம்.'' பாலசந்தர் சார் என்னை அப்படித்தான் கூப்பிடுவார்! அப்படி அவர் கூப்பிடுவதற்கு நான் ரொம்பவும் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.



திரை உலகிற்கு வருவதற்கு முன் நான் வெறும் களிமண். இதை சொல்வதற்கு எனக்கு கொஞ்சம் கூட தயக்கமோ, வெட்கமோ கிடையாது.
என்னை பக்குவமாக "மோல்ட்'' செய்து, நல்ல நடிகை என்று பெயர் வாங்கித் தந்தவர் பாலசந்தர். நடிப்பு என்றால் என்ன, அதன் எல்லைகள் என்ன, கனபரிமாணங்கள் என்ன, இதை எல்லாம் தெரிந்து கொள்வதற்கு பாலசந்தர் பல்கலைக்கழகத்தை விட உயர்ந்த இடம் வேறு என்ன இருக்கிறது?

பாலசந்தர் படத்தில் நடிக்கிற எந்த ஆர்டிஸ்டுமே அவர் செய்து காட்டுகிற நடிப்பிலே, பத்து சதவீதம் வெளிப்படுத்தினால் போதும், சிறந்த நடிகராக வரமுடியும்.

தமிழில் என்னுடைய முதல் படமான தப்புத்தாளங்களில் நடிக்கும்போது, எனக்கு என்ன தெரியும் என்று நினைக்கிறீர்கள்? வெறும் ஜீரோதான் நான்!

நான் ஓரளவு நடிக்கக் கற்றுக்கொண்ட பிறகு பாலசந்தர் சார் என்னிடம் "உன் திறமைக்கு சவாலாக இருக்கக்கூடிய வித்தியாசமான ரோல்களாகப் பார்த்து ஒத்துக்கொள். ஒரு சீனில் அழுகிற மாதிரி, இன்னொரு சீனில் இருக்கக் கூடாது. வித்தியாசம் இருக்க வேண்டும். எந்த ஒரு நடிகையின் நடிப்பின் சாயலும் உனக்கு வந்து விடாதபடி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்'' என்றார்.

இப்போது கூட எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. "நூல்வேலி'' தெலுங்குப் படத்திலே ஸ்ரீதேவி நடிச்சி இருந்தாங்க. அதை நான் ஒருதரம் பார்த்தேன். தமிழில் நான் நடிக்கிறபோது, தெலுங்கில் ஸ்ரீதேவி உதட்டைக் கடித்த மாதிரி செய்தேன்.

பாலசந்தர் அதை சட்டென்று கண்டுபிடித்துவிட்டார். "உன்னோட பாணியில் புதுவிதமா அதைச்செய். ஸ்ரீதேவி மாதிரி செய்ய வேண்டுமென்றால், தமிழிலும் ஸ்ரீதேவியையே இந்த வேடத்திற்கு போட்டிருப்பேனே!'' என்றார்.

சாதாரணமாக செட்டுக்கு போய்விட்டால் அந்த கேரக்டர் பற்றியே நினைத்துக்கொண்டு இருப்பேன். மனதை வேறு எங்கேயும் அலைபாய விடமாட்டேன். அதுவும் பாலசந்தர் சார் படம் என்றால், இன்னும் இறுக்கமாக இருப்பேன்.

டைரக்டர் என்னிடம் ஒரு காட்சியை சொல்லி விட்டு, "எப்படி செய்யலாம் என்று யோசித்து வை'' என்று சொல்லிவிட்டு, கொஞ்சம் டயம் கொடுப்பார்.

`இப்படி செய்யலாமா, அப்படி செய்யலாமா' என்று மனதுக்குள் நூறு முறை ஒத்திகை பார்த்துக் கொள்வேன்.

"என்ன, இந்த சீனை எப்படி செய்யப்போறே?'' என்று அவர் என்னைக் கேட்கும்போது, நாலைந்து விதமாய் செய்து காட்டுவேன். பளிச்சென்று அவருக்கு ஒருவிதம் பிடித்து விடும். "அப்படியே செய்'' என்று சொல்லி, சில மாற்றங்களை மட்டும் செய்து காட்டுவார். அதை அப்படியே நடித்துக்காட்டினால் போதும். காட்சி பிரமாதமாக அமைந்துவிடும்.''

இவ்வாறு சரிதா கூறியுள்ளார்.

பாலசந்தர் டைரக்ஷனில், சிவகுமார், சரிதாவும் இணைந்து நடித்த படம் "அக்னிசாட்சி.'' பாலசந்தரின் லட்சிய படங்களில் ஒன்று.

அந்தப்படம் தயாராகும்போது நடந்த நிகழ்ச்சிகள் பற்றி சிவகுமார் எழுதியிருப்பதாவது:-

"புதுக்கவிதையில் நாட்டம் உள்ள, சிறு வயதில் மனதில் காயம் ஏற்பட்ட கண்ணம்மா என்பவள்தான் "அக்னி சாட்சி''யின் கதாநாயகி. அவளை நேசிக்கும் அற்புத மனிதன் அரவிந்தன் (நான்).

`என் தலைவா! உன் பெயரை, ஒரு பேப்பரில் எழுதித் தடவிப்பார்! அதில் ஈரப்பசை இருக்கும்...! ஏனெனில், உன் திருநாமம், என் உதட்டு எச்சில்களால், ஒரு நாளைக்கு ஆயிரம் முறைகளுக்கு மேல் குளிப்பாட்டப்பட்டதல்லவோ...!' என்று அரவிந்தன் மீது, தான் கொண்டுள்ள அன்பை வெளிப்படுத்துவாள்.

கண்ணம்மா கருத்தரிப்பாள். வயிற்றுக்குள் வளரும் குழந்தைக்கு ஒரு கவிதை எழுதுவாள்!



"அன்புக்குழந்தையே! அம்மா எழுதுகிறேன்... தாய்ப்பால் வருவதற்கு முன்பு, தபால் வருகிறதே என்று பார்க்கிறாயா...!'' என்று துவங்கும் பாடலைப் படமாக்கும்போது, சரிதா, அளவு கடந்த களைப்பு காரணமாக கே.பி. எதிர்பார்த்தபடி செய்யவில்லை.

"இந்த சீன் படத்தில் வரவே வராதுன்னு நெனைச்சு இப்படி நடிக்கிறியா?'' என்று சீறினார். அந்தக் கோபத்தின் உக்கிரமë தாங்காமல் சரிதா மயக்கமாகி விட்டார். அப்படியும் அவர் விடவில்லை. தண்ணீர் தெளித்து எழுப்பி, நடிக்க வைத்தார்.

படத்தின் கிளைமாக்ஸ்... சரிதா பிரசவத்தில் இறந்து போவது கதை. "ஒரு `பிரேம்' கூட சரிதா பிரசவ வேதனைப்படுவதைக் காட்டமாட்டேன்...! உன் மூலம் ஆஸ்பத்திரியில் அவள் முடிவைச் சொல்லப்போகிறேன்'' என்று என்னிடம் சொல்லி, பிரமாதமாக அந்தக் காட்சியைப் படமாக்கினார்.

பின்னணி இசை (ரீ-ரிக்கார்டிங்) சேர்க்காமல் படத்தை மேனா தியேட்டரில் கே.பி. அவர்களும் நானும் சரிதாவும் பார்த்தோம்.

படத்தின் உச்சகட்டக் காட்சியைப் பார்த்து நான் கேவிக்கேவி அழுதேன். சரிதா கிட்டத்தட்ட மூர்ச்சையடைந்து விட்டார். அவ்வளவு அழுத்தம். கே.பி.தான் எங்களைத் தேற்றினார்.

அப்படி இழைத்து இழைத்து அவர் உருவாக்கிய படம், எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. பல மாதங்கள் டைரக்டர் படுத்து விட்டார்.

மல்யுத்த மேடைதானே திரையுலகம்...! மீண்டும் சிலிர்த்து எழுந்தார்! `சிந்து பைரவி' படம் உருவாக்கினார்.''

இவ்வாறு சிவகுமார் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் நடிகர்கள் ஒரு லெவலுக்கு செல்வது போல் நடிகைகள் செல்வதில்லை.குறிப்பாக பல்வேறு நடிகைகள் ஒருசில படங்களில் நடித்துவிட்டு காணாமல் போகிறார்கள்.அந்தவகையில் பல நடிகைகளை நாம் பார்த்திருக்கிறோம்.

80, 90 களில் நடித்த தமிழ் சினிமா நடிகைகள் தங்களின் படவாய்ப்புகளை படத்தில் எப்படி நடிக்கிறோம் என்பதை வைத்துதான் கமிட்டாவார்கள். ஆனால் தற்போதைய நடிகைகள் தங்களின் மார்க்கெட்ட்டை தக்க வைக்க இயக்குநர், தயாரிப்பாளர்களை கவரும் வகையில் அடைகளில் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள்.ஆனால் துளி ஆபாசம் இல்லாமல் நடித்து மக்கள் மனதை கவர்ந்தவர் சரிதா.1980ல் உச்ச நடிகையாக இருந்தவர் நடிகை சரிதா. குடும்ப பாங்கான இவரது நடிப்பு அனைவரையும் சொக்க வைக்கும் வகையில் இருக்கும். தெலுங்கில் பாலச்சந்தரின் மரோசரித்ரா படத்தில் கமலுக்கு ஜோடியாக அறிமுகமகி தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.சினிமாவிற்கு வரும் முன்பே, இவருக்கு 16 வயதாக இருந்தபோதே வெங்கட சுப்பையா என்பவருடன் முதல் திருமணம் நடந்தது. இது 6 மாதம் கூட நீடிக்கவில்லை.பின்னர் சினிமா வாய்ப்பு கிடைக்கவே, தீவிரமாக படங்களில் கவனம் செலுத்திய சரிதா மக்கள் மத்தியில் பிரபலமானார். அதனை தொடர்ந்து, 1988ல் மலையாள நடிகர் முகேசை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். அதோடு சினிமாவுக்கு முழுக்கு போட்டார்.அதன் பிறகு சினிமா மற்றும் மீடியா பக்கம் தலை காட்டுவதை தவிர்த்து வந்தார் சரிதா. இந்நிலையில், நடிகை ஸ்ரீப்ரியா சமீபத்தில் சரிதாவை சந்தித்துள்ளார். அப்போது, எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

படங்கள்
அவள் அப்படித்தான்
தப்புத்தாளங்கள்
நெஞ்சில் ஒரு ராகம்
மலையூர் மம்பட்டியான்
கொம்பேறி மூக்கன்
மௌனகீதங்கள்
நெற்றிக்கண்
தண்ணீர் தண்ணீர்
ஊமை விழிகள்
சாட்டை இல்லாத பம்பரம்
வீட்டுக்கு ஒரு கண்ணகி
அண்ணி
அக்னி சாட்சி
கல்யாண அகதிகள்
பொண்ணு ஊருக்கு புதிசு
எங்க ஊரு பொண்ணு
புதுக்கவிதை
சிவப்பு சூரியன்
தங்கைக்கு ஒரு கீதம்
நூல்வேலி
பூப்பூவா பூத்திருக்கு
வேதம் புதிது
ஒரு புல்லாங்குழல் அடுப்பூதுகிறது
தாய் மூகாம்பிகை
மேல் மருவத்தூர் ஆதி பராசக்தி
கீழ்வானம் சிவக்கும்
வண்டிச்சக்கரம்
ஆல்பம்
ஜூலி கணபதி
.

No comments:

Post a Comment