Saturday 6 June 2020

. NUTAN ,HINDI ACTRESS BORN 1936 JUNE 4 - 1991 FEBRUARY 21



NUTAN ,HINDI ACTRESS BORN 
1936 JUNE 4 - 1991 FEBRUARY 1991



.நூதன் பால் (Nutan Bahl) (நாதன் சமாரத், 4 சூன் 1936 - 21 பெப்ரவரி 1991) என்பவர் ஓர் இந்திய திரைப்பட நடிகையாவார். இவரது திரை வாழ்க்கை கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகள் ஆகும். 70 க்கும் மேற்பட்ட பாலிவுட் படங்களில் நட்சத்திர நடிகையாகவே தோன்றியுள்ளார்.[1][2] இந்தியத் திரைப்படத்துறை வரலாற்றில் போற்றப்படக் கூடிய ஒரு நடிகையாகவே கருதப்படுகிறார்.[3] பிலிம்பேர் வழங்கிய சிறந்த நடிகைக்கான விருது உட்பட ஐந்து விருதுகளை கொண்டுள்ளார், 30 ஆண்டுகள் திரை வாழ்க்கையில் இவர் பெற்ற விருதுகளை, 2011 இல் இவரது உறவினரான நடிகை கஜோல் சமன் செய்தார்.[4] 1974 ஆம் ஆண்டு, இந்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கியது.

குமார் சென் சமாரத் மற்றும் சோபனா சமாரத் ஆகியோரின் மகளும், திரைப்பட நடிகையுமான நூதன் தன்னுடைய 14 வது வயதில் நடிக்க ஆரம்பித்தார். அவரது தாயார் இயக்கிய "ஹமாரி பேட்டி" (1950) என்ற படத்தின் மூலம் அறிமுகமாகிய இவர், அதைத் தொடர்ந்து, 1950 இல் "நாகினா" மற்றும் "ஹம் லோக்" போன்ற படங்களில் தோன்ற ஆரம்பித்தார். 1955 ஆம் ஆண்டு வெளிவந்த "சீமா" என்ற படத்தில் இவரது பாத்திரம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. அது அவருக்கு சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதினையும் பெற்றுத் தந்தது. 1960 முதல் 1970களின் பிற்பகுதி வரை தொடர்ந்து நடித்து வந்த சுஜாதா (1959), பாந்தினி (1963), மிலன் (1967) மற்றும் மேய்ன் துள்சி தேரே ஆங்கன் கி (1978) போன்ற படங்களில் நடித்ததனால் தொடர்ந்து நான்கு விருதுகளைப் பெற்றுள்ளார். 1980களில் இவர் குணசித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்து அவர் இறக்கும் வரை நடித்து வந்தார். சாஜன் தி சகேலி (1981), மேரி ஜங் (1985) மற்றும் நாம் (1986) போன்ற படங்கள் உட்பட இவர் பெரும்பாலும் தாயார் வேடத்திலேயே நடித்துள்ளார். மேரி ஜங் படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகைக்கான ஆறாவது மற்றும் கடைசி பிலிம்பேர் விருது இவருக்கு கிடைத்தது.

நூதன் மார்பகப் புற்றுநோய் காரணமாக 1991 ஆம் ஆண்டு இறந்தார். நூதன் கடற்படை அதிகாரி லெட்டினன்ட் கமாண்டர் ரஜனிஷ் பால் என்பவரை 1959 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மோக்னீஷ் பால் என்ற ஒரு மகனும் உள்ளார். இவர் பின்னர் தொலைக்காட்சியிலும், திரைப்படங்களிலும் நடிகரானார். நூதனின் இறப்பினால் இவர்களது 30 வருட திருமண வாழ்க்கை முடிவுற்றது.
ஆரம்ப வாழ்க்கை

மராத்திய சந்திரசேனிய கயாஸ்த பிரபு என்ற குடும்பத்தில் இயக்குநரும் கவிஞருமான குமார் சென் சமார்த் மற்றும் அவரது மனைவியும் நடிகையுமான சோபனா என்பவர்களுக்கு பிறந்த நான்கு குழந்தைகளில் மூத்தவராக 1936 சூன் 4 அன்று நூதன் பிறந்தார். அவரது சிறு வயதில் தன்னுடைய நிறத்தைப் பற்றியும், அழகைப் பற்றியும் ஒரு தாழ்வு மனப்பான்மையுடன் வளர்ந்து வந்தார்.[5][6][7] நடிகை தனுஜா மற்றும் சதுரா என்ற இரு சகோதரிகளும், ஜெய்தீப் என்ற சகோதரனும் உண்டு. ஜெய்தீப் பிறப்பிற்கு முன்னரே இவரது பெற்றோர்கள் பிரிந்து விட்டனர். நூதன் பஞ்சாங்கி புனித சூசையப்பர் கான்வென்டில் படித்துள்ளார்.[8] 1953 இல் மேல் படிப்பிற்காக ஸ்விட்சர்லாந்து சென்றார். இவர் நடித்த திரைப்படம் தோல்வி கண்டவுடன் இவரது தாயாரின் கட்டளைப்படி இவர் சென்றதாகவும், அங்கு தான் இருந்த ஒரு வருடம் தன்னுடைய வாழ்க்கையின் மிக மகிழ்ச்சியான தருணமிது என நூதன் தெரிவித்தார்.[9]

சொந்த வாழ்க்கை

நூதன் கடற்படை அதிகாரி லெட்டினன்ட் கமாண்டர் ரஜனிஷ் பால் என்பவரை 1959 இல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மோக்னீஷ் பால் என்ற ஒரு மகன் பிறந்தார். பின்னர் இவர் தொலைக் காட்சியிலும், திரைப்படங்களிலும் நடிகரானார்.வேட்டையாடுவது இவருக்கு மிகவும் பிடிக்கும்.[10]

இறப்பு
1990 இல் நூதனுக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பதை அறிந்து அதற்கான சிகிச்சைகளை மேற்கொண்டார்.[11] அவரது உடல் நிலை மோசமானதால் 1991 பிப்ரவரியில், மும்பையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கக் பட்டார். அந்த சமயத்தில் கர்ஜனா மற்றும் இன்சானியாத் போன்ற படங்களில் நடித்து வந்தார். இவர் (இந்திய நேரப்படி) பிப்ரவரி 21, 1991 ஆம் ஆண்டு பிற்பகல் 12.07 மணிக்கு இறந்தார்.[12] அவரது கணவர் தன்னுடைய வீட்டில் ஏற்பட்ட ஒரு தீ விபத்தில் 2004 ஆம் ஆண்டு இறந்தார்.[13]


.

No comments:

Post a Comment