MESHA RAASI NEYARKALE


               MESHA RAASI NEYARKALE




.*மேஷம்* -
தெனமும் மோசம் போகும்
மேஷ ராசி அன்பர்களே !
உங்கள் பையில வச்சிருக்கிற பணத்தை உள்ளாடையில மறச்சி வையுங்க !!
சிம்ப்புலா பீர் சாப்பிட்டா போதும் !!

.
*ரிசபம்* - குடிச்சிட்டு குப்புறப்படுத்து தூங்கும் நேயர்களே இன்று மாலை 6 மணி முதல் 10 மணி வரை உங்கள் ராசியில் சனி சஞ்சரிப்பதால் இன்று ஒரே ஒரு
குவாட்டர் மட்டும் தண்ணி கலக்காம சாப்பிடுவது நல்லது.

*மிதுனம்* - எந்த சரக்கா இருந்தாலும் மிச்சம் வைக்காம குடிக்கிற மிதுன ராசி நேயர்களே !இன்று உங்கள் ராசிக்கு நீங்கள் கன்னி ராசி நண்பருடன் டாஸ்மாக்கில் சண்டை
போட நேரிடலாம் எனவே இன்று ஒருநாள்
மட்டும் டாஸ்மாக் போவதை தவிர்க்கவும்.

*கடகம்* -கட்டிங்கை கரெக்ட்டாகா சாப்பிடும்
கடக ராசி நண்பர்களே இன்று நீங்கள் கட்டிங்
சாப்பிடும் போது சைடிஷ்க்கு ஊறுகாய்
மட்டும் சாப்பிட்டால் போதுமானது.

*சிம்மம்* - மொடா குடியகார சிம்ம ராசி
நண்பர்கள் இன்று கூலிங் பீரை 2 பாட்டில்
சாப்பிடுவது உகந்தது. மேலும் பீரில்
ஏலக்காய் அல்லது சிறிதளவு பெப்பரை(மிளகு)
கலந்து கொள்ளலாம்.

*கன்னி* - கன்னி ராசி நேயர்கள் குடித்துவிட்டு
மனைவியின் அருகில் செல்லாமல் இருப்பது
நல்லது.இன்று உங்கள் ராசிக்கு உங்கள்
மனைவியிடம் வெளக்கமாறு பிய்யும் வரை
அடி வாங்க நேரிடலாம்.

*துலாம்* - அளவோடு குடிக்கும் துலாம் ராசி
நேயர்களே உங்கள் ராசிக்கு இன்று நீங்கள்
வோட்கா அல்லது ஒயின் அல்லது இது
இரண்டையும் மிக்ஸ் பன்னி சாப்பிடுவது
நல்லது.

*விருச்சிகம்* - சைடிஷ்க்கு மிச்சர் சாப்பிடும்
விருச்சிக ராசி நண்பர்களே இன்று நீங்கள்
சரக்கடிக்கும் போது 7Upஅல்லது Sprite
பயன்படுத்தினானால் வாந்தி வரலாம் எனவே
மிக்சிங் செய்ய அக்வாபீனா அல்லது அம்மா
வாட்டரை கோட்டரில் கலந்து குடிக்கவும்.

*தனுசு* - தாறுமாறாக குடிக்கும் தனுசு ராசி
நேயர்களே குடித்துவிட்டு ரோட்டில் செல்லும்
பொதுமக்களை கெட்ட கெட்ட வார்த்தைகளால்
திட்டுவதை தவிர்ப்பது நல்லது. யாரிடமாவது
வாயில் உதை வாங்க நேரிடலாம்.

*மகரம்* -இன்று குடிக்காமல் இருப்பது
நல்லது. டாஸ்மாக் இருக்கும் திசை நோக்கி
செல்வதை தவிர்க்கவும்.

*கும்பம்* - கும்பலாக குடிக்கும் கும்ப ராசி
நேயர்களே இன்று நண்பர் ஒருவர் சரக்கை
வாங்கி கொடுக்க நேரிடலாம் எனவே
அவசரப்பட்டு உங்கள் பணத்தை செலவு
செய்யாதீர்கள்.

*மீனம்*- மானங்கெட்ட மீன ராசி நண்பர்களே
ஒசியில் சரக்கடிப்பதை இன்றுடன் மறந்து
விடுங்கள். சொந்த காசில் குடிக்க கற்றுக
கொள்ளுங்கள்.

Comments

Popular posts from this blog

DACOITS OF CHAMBAL

PARAVAS OF TAMILNADU

MAHARANI SITADEVI OF BARODA the "Indian Wallis Simpson" INTERESTING LIFE STORY OF HER