Sunday 14 June 2020

CORONO VIRUS - HUSBAND DIED OF HEART ATTACK , WHILE BIRTH OF HIS CHILD IN KERALA





CORONO VIRUS - HUSBAND DIED OF HEART ATTACK ,
            WHILE BIRTH OF HIS CHILD IN KERALA

அவர் முகத்தை ஒருமுறையாவது எனக்குக் காட்டுங்களேன்......
 நான் ஒரு பாவி ஆயிட்டேனே....என்று கணவரின் சடலத்தைக் கண்டு ஆதிரா அழுதது அனைவரின் இதயத்தையும் பிழிந்து விட்டது.......
 குழந்தை பிறந்த அன்றே கணவரும் இறந்த அதிசயக் கொடுமை கேரளாவில் நடந்துள்ளது.!!!!கேரளா மாநிலம் கோழிக்கோடு பரம்பரா பகுதியை சேர்ந்தவர்கள் நிதின் - ஆதிரா தம்பதியினர்..


நிதின் துபாயில் வேலை பார்க்கிறார்.
ஆதிராவும் கணவருடனேயே துபாயில் இருந்தார்.
இந்நிலையில், ஆதிரா கர்ப்பமானார்.. துபாயில் கொரோனா தொற்று அதிகம் என்பதால், மனைவி அங்கிருப்பது சரியில்லை என்று நினைத்தார்..இதே சமயம் கர்ப்பிணியை உடனிருந்து கவனித்துக் கொள்ள முடியாது என்பதாலும் கேரளாவுக்கு ஆதிராவை அனுப்ப முயற்சி எடுத்தார். ஆனால் உடனடியாக அனுமதி கிடைக்கவில்லை.. பிறக்கப் போகும் குழந்தைக்கும், தாய்க்கும் எதுவும் ஆகிவிடக்கூடாது என்பதற்காக சுப்ரீம் கோர்ட்டுக்கே சென்றார்..ஏப்ரல் மாதம் மனு ஒன்றைத் தாக்கல் செய்து அனுமதியும் பெற்றார்.
பிறகு, வந்தே பாரத் திட்டத்தின் கீழ் துபாயிலிருந்து இந்தியர்கள் தாய்நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்... அதில் ஆதிராவும் ஒருவர்.. அவர் கர்ப்பிணி என்பதால், முன்னுரிமை தரப்பட்டு, முதல் ஃபிளைட்டிலேயே கேரளாவுக்கு அழைத்து வரப்பட்டார் ...சொந்த ஊருக்கு மனைவி வந்து சேர்ந்த பிறகே நிதினுக்கு நிம்மதி ஆனது..அதன்பிறகு தொடர்ந்து வேலை பார்த்துக் கொண்டிருந்தார்..


 நிதினுக்கு ஏற்கனவே ஹார்ட் ஆபரேஷன் ஆகி உள்ளது.. மேலும் ஹை-பி.பி.யும் உள்ளது.. ஆனால் ஆதிரா பக்கத்தில் இல்லாததால் எந்த மருந்ததையும் எடுத்துக் கொள்ளாமல் அசால்ட்டாக விட்டு விட்டார்.
அவர் இருக்கும் வரை எல்லா மாத்திரைகளையும் சரியாக எடுத்துத் தந்து வந்தார்.. இப்போது அஜாக்கிரதையால் மாத்திரை சாப்பிடாமல் போகவும் நிதினுக்கு ஹார்ட் அட்டாக் வந்து விட்டது.. துபாய் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளித்தும் உயிர் போய் விட்டது..நிதின் சடலமாகும் சமயம் தான் ஆதிராவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது.. குடும்பத்தினர் உடனடியாக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்..அப்போது நிதின் இறந்த தகவல் சொல்லப்பட்டது..


ஆனால் ஆதிராவின் உடல், மனநிலையை கருத்தில் கொண்டு டாக்டர்களும், உறவினர்களும் விஷயத்தை மறைத்து விட்டனர். ஆதிராவிற்கு அழகான ஒரு பெண் குழந்தையும் பிறந்தது.. குழந்தை பிறந்ததும் நிதினுக்குத் தான் முதலில் சொல்ல வேண்டும் என்று போனை எடுத்தார் ஆதிரா.ஆனால் குடும்பத்தினர் ஏதேதோ சொல்லி அவரைத் தடுத்து வந்தனர்.. ஒவ்வொரு முறையும் அவரைத் தடுத்து நிறுத்துவதே பெரும் சிரமமாகி விட்டது.. இப்படியே 2 நாள் ஓடியது.. நிதினுக்கு கொரோனா டெஸ்ட் செய்யப்பட்டு, பிறகு நெகட்டிவ் என்று ரிசல்ட் வந்த பிறகு தான் ஆதிராவுக்கு விஷயத்தை சொன்னார்கள்.


 நிதின் உடலும் கேரளா வந்து சேர்ந்தது.. நேராக ஆதிரா அனுமதிக்கப்பட்டிருந்த ஆஸ்பத்திரிக்குத் தான் உடல் கொண்டு போகப்பட்டது.. எத்தனையோ கனவுகளை சுமந்து கொண்டிருந்த ஆதிரா கணவரின் சடலத்தை பார்த்ததும் கதறி விட்டார்.ஆனால் வெறும் 2 நிமிடங்கள் தான் கணவரின் முகத்தை பார்க்க அனுமதி தரப்பட்டது.. "ஒருமுறையாவது அவர் முகத்தை எனக்குக் காட்டுங்க" என்று கெஞ்சி அழுதார் ஆதிரா.ஆஸ்பத்திரி வளாகத்தில் இருந்தவர்கள் அத்தனை பேரும் இதைப் பார்த்து கலங்கி விட்டனர்.. அது ஆஸ்பத்திரி என்பதால் அதிக நேரம் அங்கே சடலத்தை வைக்க முடியாத சூழலே இதற்குக் காரணம்.தன் மனைவிக்கும், குழந்தைக்கும் எதுவும் ஆகிவிடக்கூடாது என்பதற்காக நிதின் சுப்ரீம் கோர்ட் வரை சென்று எடுத்த முயற்சியால், இன்று தாய்-சேய் உடல்நிலை நன்றாக உள்ளது.. ஆனால் குழந்தை முகத்தைப் பார்க்காமலேயே நிதின் உடல் பிரிந்தது..


உங்க முகத்தைக் கூட பார்க்க முடியாத பாவியாகி விட்டேனே" என்று ஆதிரா அழுது கொண்டே இருக்க, அந்த ஆம்புலன்ஸ் அங்கிருந்து நகர ஆரம்பித்தது.

No comments:

Post a Comment