CORONO VIRUS - HUSBAND DIED OF HEART ATTACK , WHILE BIRTH OF HIS CHILD IN KERALA
CORONO VIRUS - HUSBAND DIED OF HEART ATTACK , WHILE BIRTH OF HIS CHILD IN KERALA அவர் முகத்தை ஒருமுறையாவது எனக்குக் காட்டுங்களேன்...... நான் ஒரு பாவி ஆயிட்டேனே.... என்று கணவரின் சடலத்தைக் கண்டு ஆதிரா அழுதது அனைவரின் இதயத்தையும் பிழிந்து விட்டது....... குழந்தை பிறந்த அன்றே கணவரும் இறந்த அதிசயக் கொடுமை கேரளாவில் நடந்துள்ளது.!!!! கேரளா மாநிலம் கோழிக்கோடு பரம்பரா பகுதியை சேர்ந்தவர்கள் நிதின் - ஆதிரா தம்பதியினர்.. நிதின் துபாயில் வேலை பார்க்கிறார். ஆதிராவும் கணவருடனேயே துபாயில் இருந்தார். இந்நிலையில், ஆதிரா கர்ப்பமானார்.. துபாயில் கொரோனா தொற்று அதிகம் என்பதால், மனைவி அங்கிருப்பது சரியில்லை என்று நினைத்தார்.. இதே சமயம் கர்ப்பிணியை உடனிருந்து கவனித்துக் கொள்ள முடியாது என்பதாலும் கேரளாவுக்கு ஆதிராவை அனுப்ப முயற்சி எடுத்தார். ஆனால் உடனடியாக அனுமதி கிடைக்கவில்லை.. பிறக்கப் போகும் குழந்தைக்கும், தாய்க்கும் எதுவும் ஆகிவிடக்கூடாது என்பதற்காக சுப்ரீம் கோர்ட்டுக்கே சென்றார்.. ஏப்ரல் மாதம் மனு ஒன்றைத் தாக்கல் செய்து அனுமதியும் பெற்றார். ...