GREEKS BURN`T TROY JUNE 11,1186 B.C-
GREEKS BURN`T TROY JUNE 11,1186 B.C- திராயன் போர் அல்லது திரோயன் போர் (Trojan War) ஓமர் எழுதிய இரு பெரும் கிரேக்க காப்பியங்களான இலியட்டு மற்றும் ஓடிசிக்கு பின்புலம் ஆகின்றது. இலியட்டு பத்து ஆண்டுகள் நிகழந்த திராயன் போரின் இறுதி ஆண்டின் ஐம்பது நாட்களை விபரிக்கின்றது. ஓடிசி, திராயன் போரில் பங்குகொண்ட ஒரு கிரேக்க தீவின் அரசனான ஓடீசியசு நாடு திரும்புகையில், வழிதவறி மீண்ட ஒரு பயணக் கதையை விபரிக்கின்றது. கிரேக்க காப்பியங்கள், கடவுள்கள், மனிதர்கள், பல வித உயிரினங்கள், இடங்கள், உலகங்கள், சக்திகள், இயற்கை வினோதங்கள், நிகழ்வுகள் எனப் பல அம்சங்கள் அடங்கிய பரந்த கதைப் புலங்களைக் கொண்டவை. எனினும் திராயன் போரை கெலன் (ஃகெலன்) என்ற ஒரு பெண்ணுக்கான ஒரு போராக, ஒரு மனித தளத்தில் நோக்கலாம் கெலன் (Helen, மாற்றுப் பெயர்ப்பு:ஹெலன்) கிரேக்கத் தொன்மவியலில் ஓர் முதன்மையான பெண்ணாவார். உலகிலேயே மிகவும் அழகானவராக கருதப்படுபவர். திராயன் போரிலும் ஓமரின் இலியட்டிலும் முதன்மையான இடம் பெற்றுள்ளார். இவருக்காகத்தான் பலநாட்டு மன்னர்களும் திராயன் போரில் சண்டையிட்டு திராயும் அழிபட்...