Showing posts with label LITERATURE. Show all posts
Showing posts with label LITERATURE. Show all posts

Sunday, 10 April 2022

MALAYALAM LITERATURE - AN EVOLUTION

 


MALAYALAM LITERATURE - AN EVOLUTION 


மலையாள இலக்கிய எழுத்தாளர், விமர்சகர், கல்வியாளருமான எஸ்.குப்தன் நாயர் எழுதிய முன்னுரை:

தகழி சிவசங்கரன் பிள்ளை.

நாவல், மத்தியதர வர்க்கத்தினரின் – அல்லது பூர்ஷ்வா (முதலாளித்துவ) வர்க்கத்தினரின் – கலையுருவமாகத்தான் பிறவி எடுத்தது. மத்தியதர வர்க்கத்தினரின் உயர்வு தாழ்வுகள், கனவுகள், இவற்றின் சீரழிவு – ஆகியவற்றையே இந்தக் கலையுருவம் மீண்டும் மீண்டும் பிரதிபலித்து வந்திருக்கிறது. சமூகமென்ற பெரும் கோட்டையின் நடுவில் யுத்தத்துக்கு ஆயத்தமாக நின்ற தனிமனிதனே, பழைய நாவலின் இடையறாத மையக் கருத்து. பதினெட்டாம் நூற்றாண்டில் நடைபெற்ற தொழில் புரட்சியின் விளைவாக, இங்கிலாந்து, ஃபிரான்ஸ் ஆகிய நாடுகளில் புதியதொரு மத்தியதர வர்க்கம் உருப்பெற்றது; இன்றைய நாவல் இலக்கியம் பிறந்ததும் இந்நாடுகளில் தான். மாறுபட்ட சூழ்நிலையில், வாழ்வது என்பதே மத்தியதர வர்க்கத்தினருக்குச் சாகசம் மிக்க ஒரு செயலாகிவிட்டிருந்தது. இந்தச் சாகசங்களைச் சித்திரிப்பதில் தான் அன்றைய நாவலாசிரியர்கள் ஆர்வம் காட்டினார்கள். ராபின்ஸன் குரூஸோ, டான் க்விக்ஸாட், பிக்விக் ஆகியோர் இந்தச் சாகசங்களின் பிரதிநிதிகளேயாவர்.

இலக்கியத்தில் தோன்றிய நாவல் என்ற இந்த நவீன இலக்கிய வடிவம் நம் நாட்டில் உதயமானபோது, அது புராணங்களின் சாயல் உடையதாக இருந்தது. மலையாளத்தில் எழுதப்பட்ட முதல் நாவலாகக் கருதப்படும் ‘குந்தலதா'(1887), ஒரு புராணத்தின் பண்புகளை உடையதாகவே இருக்கிறது. அதில் பல சிறப்பம்சங்கள் இருக்கலாம்; ஆனால் கேரள நாட்டுப் பண்பாடு என்ற அம்சம் மட்டும் அதில் அறவே காணப்படவில்லை. அது கலிங்க நாட்டில் நடைபெற்ற ஒரு கதை என்று அந்த நாவலாசிரியர் நம்மை நம்ப வைக்க முயல்கிறார். கலிங்கம், அல்லது வங்கம், அல்லது மாளவம் ஆகிய எந்த ஒரு தேசத்தில் அது நடைபெற்றதாக இருந்தாலும் நமக்கு ஆட்சேபம் இல்லை. ஆனால் கதை புனைய வேண்டுமென்ற நோக்கத்தைத் தவிர, அந்த ஆசிரியருக்கு வேறு எந்த நோக்கமும் இருந்ததாகத் தெரியவில்லை. இன்று எவரும் வாசிக்க விரும்பாததும், இலக்கிய வரலாற்றுப் பட்டியல்களில் மட்டுமே இடம் பிடித்துக் கொண்டிருப்பதுமான ஒரு நாவலாக ‘குந்தலதா’ விளங்குவதற்கு இதுவே காரணமாக இருக்கவேண்டும்.

அடுத்தாற்போல, குந்தலதாவை அடுத்து-1888ஆம் ஆண்டில் வெளிவந்த ‘இந்துலேகா’ என்ற நாவலை இன்றும் ஏராளமான மக்கள் விரும்பிப் படிக்கின்றனர். லார்ட் பீக்கன்ஸ்ஃபீல்ட் என்பவர் எழுதிய ’ஹென்ரீடா டெம்பிள்’ என்னும் நாவலை முன்மாதிரியாகக் கொண்டே இந்துலேகாவை அதன் ஆசிரியர் சந்து மேனன் உருவாக்கினாரென்றாலும், அந்த நாவல் முழுக்க முழுக்கக் கேரளத் தன்மை கொண்டதாகவே விளங்குகிறது. பழையதொரு தாய்வழி உறவுக் குடும்பத்தின் கதையைத் தான் சந்து மேனன் அந்நாவலில் கூறுகிறார். வேறு எந்தச் சமூத்திலும் நடைபெறாத ஒரு திருமண முறை, உயர் மட்டத்திலுள்ள அன்றைய நாயர் குடும்பங்களில் நடைமுறையில் இருந்து வந்தது. ஜாதி உயர்வினை மட்டும் ஆதாரமாகக் கொண்டு நம்பூதிரிப் பிராமணர்களுக்கு நாயர் பெண்களை மணம் செய்து கொடுக்கும் முறையே அது. இப்படி மணந்து கொள்ளும் நம்பூதிரிகளில் பலர் வயோதிகர்களாகக்கூட இருப்பார்கள். அவர்களைப் பொறுத்த வரையில், இந்தத் திருமணம் வைதீகக் கோட்பாடுகளுக்கு அப்பாற்பட்ட ஓர் உறவு. அவர்கள் மனைவி வீட்டில் மிகவும் மதிக்கப்படுகின்ற விருந்தினர்களாக இருந்தார்கள். இந்தத் திருமண முறை அவ்விரு வகுப்பினரையுமே – குறிப்பாக அந்த வகுப்பைச் சேர்ந்த பெண்களை – சீரழிக்கத்தான் உதவிற்று என்பதைச் சமூக சீர்திருத்தவாதிகள் உணரவில்லை. உணர்ந்தவர்கள் பகிரங்கமாக அதைச் சொல்லவும் இல்லை.

அவர்கள் மனத்திலே பதிந்துவிட்ட எண்ணங்களுக்குச் சக்தி மிக்க, மறைமுக வர்ணனைகளால் அழகியதோர் உருவம் கொடுத்தார் சந்து மேனன். அதுதான் இந்துலேகா! மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்போது அது மிகச் சாதாரணமானதொரு காதல் கதையாகவே தோற்றமளிக்கிறது. கதையைவிட எளிமையாக இருக்கிறது. அதைச் சொல்லப் பயன்படுத்தியுள்ள மொழி. ஓர் இலக்கியப் படைப்பினை உருவாக்குகிறோம் என்ற உணர்வே அவருக்கு இருக்கவில்லை என்று சொல்லத் தோன்றுகிறது. ஆனால் இந்த எளிமைக்கும் சாதாரணத் தன்மைக்கும் பின்னால் பிரமிப்பூட்டும் ஒரு வேகமும், என்றும் மங்காத ஒரு புதுமையும் மறைந்திருக்கின்றன. அதனால் தான் இன்றும் மக்கள் அந்த நாவலை ஆர்வத்துடன் படிக்கிறார்கள். அந்த நாவலில் சித்திரிக்கப்பட்டிருக்கிற பாத்திரங்கள் முக்கால் நூற்றாண்டுக்கு முன்னால் வாழ்ந்து மடிந்த மனிதர்கள் என்று நமக்குத் தோன்றுவதில்லை; மாறாக, நமது கிராமங்களில் ஆங்காங்கே இன்று கூடப் பார்க்க முடிகிற, நமக்கு நன்கு அறிமுகமான சில மனிதர்களாகவே அவர்கள் காட்சி தருகின்றனர்.

குந்தலதா நாவல்.

மேற்கத்திய நாகரிகத்துக்கே உரிய அழகிய சில அம்சங்களைப் பலவந்தமாக இந்த நாட்டின் சூழலில் புகுத்தியிருக்கிறார் சந்து மேனன். பியானோ வாசிக்கிற ஒரு கதாநாயகியை எண்பது வருடங்களுக்கு முன்னால் கற்பனை செய்து பார்த்தார் அவர். இன்றைய நாவலாசிரியர்கள் தங்கள் கதாநாயகிகளை வீணைதான் வாசிக்கவைப்பார்கள்.

பஞ்சாலை, ஏலத் தோட்டம் ஆகியவை பற்றி இந்துலேகாவில் சொல்லப் பட்டிருக்கிறது. நாத்திகவாதத்தை ஆசிரியர் பகிரங்கமாக ஆதரிக்காவிட்டாலும், டார்வின், தாமஸ் ஹக்ஸ்லி ஆகியோரின் சிந்தனைகளையும் கருத்துக்களையும் சர்ச்சை செய்திருக்கிறார். சுருங்கக் கூறின், சந்து மேனன் ஒரு புரட்சிவாதியாகவே இருந்திருக்கிறார்.

மலையாள நாவலாசிரியர்களிலேயே மிகப் பெரிய கற்பனைத் திறன் படைத்தவராயிருந்த சி.வி.ராமன் பிள்ளை (1858-1922), வரலாற்றுக்குக் கதை உருக்கொடுப்பதில் தான் தம் ஆற்றலைக் காண்பித்தார். ராமன் பிள்ளை ஒரு சீர்திருத்தவாதியாக இருக்கவில்லை. ஸனாதனவாதியாக, ராஜபக்தராக, தம் ஜாதியைப்பற்றிப் பெருமையுள்ளவராக, பண்டைய அறநெறிகளைப் பின்பற்றுகிறவராக, வீரர்களை வணங்குபவராக இருந்திருக்கிறார். புதிய தலைமுறையினர் அவரை ஒரு பிற்போக்குவாதி என அழைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆனால் சி.வி.ராமன் பிள்ளை அவருக்கு முன்னும் பின்னும் வாழ்ந்திருந்த, அல்லது வாழ்ந்து வருகின்ற, எந்த ஒரு நாவலாசிரியருக்கும் இல்லாத ஒரு திறன் படைத்தவராயிருந்தார் – அது தான் ஒரே சமயத்தில் மூன்று காலங்களையும் பார்த்தறியவல்ல கண் – all seeing eye. ஹென்ரி ஜேம்ஸின் வார்த்தைகள் இவை.

எஸ்.குப்தன் நாயர்.

இருநூறு வருடங்களுக்கு முன்னாலுள்ள, நிகழ்ச்சிகள் நிறைந்த திருவாங்கூரின் வரலாற்றைப் பெரும் பிரதாபசாலிகளான மாவீரர்களைச் சுற்றிப் புனையப்பட்ட கதைகள் மூலம் வரைந்து காட்டினார் சி.வி.ராமன் பிள்ளை. கற்பனை வளம் மிக்க அந்தப் படைப்பாளியின் கண்ணெதிரில், புராதனமான நிகழ்காலம், ஆடை அணிகலன்களுடன் ஆடம்பர மேள தாளங்களுடன் நடனமாடியது. வியப்பைத் தருகின்ற எத்தனை எத்தனைக் காட்சிகள்! நிகழ்காலமென்னும் திரைக்குப் பின்னாலிருந்து வெளிப்பட்ட எத்தனை எத்தனை உக்கிரமான மூர்த்திகள்! மலையாளத்தில் மாபாணி (grand style) என்று ஒன்று உண்டானால் அது சி.வி.யின் பாணிதான். அவர் படைத்தது எல்லாமே மகத்தானவை; விரிவானவை. ‘மாத்தாண்டவர்மா’, ’தருமராஜா’, ‘ராமராஜ பகதூர்’ என்ற அந்த மூன்று படைப்புகளின் ஆழமும், வரலாற்றுப் பரப்பும், ஸ்காட்டையல்ல, டால்ஸ்டாயைத்தான் நமக்கு நினைவூட்டுகின்றன. குழந்தைபோல் தடுமாறித் தடுமாறி நடை பயின்று கொண்டிருந்த மலையாள நாவல் இலக்கியத்தைப் பிரபஞ்ச இலக்கியத்தின் ராஜ தர்பாருக்கு அவர் அழைத்துச் சென்றார் எனலாம்.

இவ்விரு மாமேதைகளின் காலத்துக்குப் பிறகு பல வருடங்கள் வரையில் மலையாள நாவல் இலக்கியம் இரண்டாந்தர எழுத்தாளர்களின் விளையாட்டு அரங்கமாக விளங்கியது. அப்பன் தம்புரான், கே.எம்.பணிக்கர் முதலியோர் சில சரித்திர நாவல்களைப் படைத்தனர் என்றாலும், அவர்களால் சி.வி.யின் அருகில் கூட நெருங்க முடியவில்லை. 1930-ஆம் வருடத்துக்குப் பிறகு தான் புதிய சில அசைவுகள் தென்படத் தொடங்கின. புகழ்பெற்ற சிந்தனையாளரும், பத்திரிகை ஆசிரியருமான ஏ.பாலகிருஷ்ண பிள்ளை எழுதிய கட்டுரைகள் வாயிலாக, யதார்த்தவாதம், மனோ தத்துவம் போன்ற புத்தம் புதிய உத்திகளைப் பற்றி எழுத்தாளர்கள் அறிந்துகொண்டனர். பாலகிருஷ்ண பிள்ளையின் சீடர் குழாமைச் சேர்ந்த சில இளம் எழுத்தாளர்கள் புதிய படைப்பு முறைகளைச் சோதித்துப் பார்க்கத் துணிந்து முன்வந்தனர். அவர்களில் ஒருவர்தாம் தகழி சிவசங்கரன் பிள்ளை. தொழிலாளர் இயக்கங்களிலே பங்கு பெற்றவரான கேசவதேவ், அவற்றின் வாயிலாகப் புதியதோர் இலக்கியப் பாதையை வகுத்துக்கொண்டார். பொட்டேகாட், பஷீர் ஆகியோர் மாறிவரும் காலத்தின் தவிர்க்க இயலாத தூண்டுதலால் சிறு கதைகளிலே புதிய உத்திகளைப் புகுத்திப் பார்க்க முயன்று கொண்டிருந்தனர்.

சி.வி.ராமன் பிள்ளை.

இவர்கள் அனைவரும் சிறுகதைகளையும், குறுநாவல்களையுமே முதலில் எழுதினர். தகழியின் ‘பதிதபங்கஜம்’, ’தியாகத்தின் பிரதிப் பயன்’ ஆகிய கதைகள், நவீன உத்திகளாலும், உள்ளடக்கத்தின் விசேஷ குணாதிசயங்களாலும், சொல்முறையின் மேன்மையினாலும் மக்கள் கவனத்தை ஈர்த்தன. இவர்களைப் புகழ்ந்தவர்கள் இருந்ததுபோல இகழ்ந்தவர்களும் இருக்கத்தான் செய்தார்கள். நச்சு இலக்கியங்கள் படைக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டுகள், ஆட்சேபங்கள் பல கிளம்பின. தகழி மட்டுமன்றி, கேசவதேவ், பஷீர் போன்றவர்களும் இத்தகைய ஆட்சேபங்களுக்கு இலக்காயினர். இவர்களுடைய படைப்புகளிலே வறுமை, சமூகக் கொடுமை ஆகியவற்றின் சித்திரங்கள் சில சந்தர்ப்பங்களில் தேவைக்கதிகமான வண்ணங்களில் தீட்டப்படவில்லை என்று சொல்ல முடியாது. இத்தகைய மிகைப்படுத்திக் கூறும் தன்மை, விக்டர் ஹயூகோ, எமிலி கோலா போன்றவர்களின் படைப்புகளில் கூட இருக்கத்தானே செய்கிறது?

மேற்சொன்ன நாவலாசிரியர்கள் எவருமே, பழங்காலத்து ஆசிரியர்களைப் போல், தங்கள் கதாபாத்திரங்களை வாழ்க்கை எனும் நாடகத்தின் துவக்கம் முதல் இறுதி வரையிலுமுள்ள எல்லாக் காட்சிகளையும் நடிக்க வைக்க முற்படவில்லை. சிறுகதையைவிடச் சற்றே அதிகமான விஸ்தாரத்தை இவற்றில் பார்க்கமுடியும், அவ்வளவுதான். ஏறத்தாழ 1945-ம் வருடம் வரையிலும் நிலைமை இவ்வாறாக இருந்து வந்தது. பிறகு இலக்கியம் திசை மாறிச் சஞ்சரிக்கத் தொடங்கியது. முற்போக்கு இலக்கியம் உருவெடுக்கத் தொடங்கியது. விஷயங்களை விரிவாக, முன்னை விடப் பகிரங்கமாக எடுத்துரைக்கலாம் என்ற நிலைமை ஏற்பட்டுவிட்டது. இந்தக் கால கட்டத்திலேதான் ’சாக்கடையிலிருந்து’, ‘இரண்டு படி’, ‘தோட்டி மகன்’, ‘குழந்தைப் பருவத் தோழி’, ‘விஷக்கன்னிகை’ முதலிய புகழ்பெற்ற நாவலகள் நமக்குக் கிடைத்தன. இந்த நாவல்கள் அனைத்திலுமே ஆசிரியர்களின் சொந்த அனுபவங்கள் பெருமளவில் கலந்திருக்கின்றன. வறுமை எனும் புதிய அம்சம் இந்த நாவல்களில் தான் முதல் முதலாகக் காட்சி தருவதை நாம் பார்க்கிறோம். ரிக்சாக்காரன், தோட்டி, குட்டநாட்டு விவசாயத் தொழிலாளியான புலையன் ஆகியோர் இதற்கு முன்புள்ள காலகட்டங்களில் வெளிவந்த மலையாள நாவல்களில் இடம் பெறவில்லை. புதியதொரு வாழ்க்கை முறைக்காகத் தாகமுற்றுக் குமுறியெழுகிற தொழிலாளியும், விவசாயியும் சமூகத்தின் மேல் தட்டினை நோக்கி மெல்ல மெல்லக் கிளர்ந்தெழுந்து வரும் தோற்றத்தை இந்த நாவலாசிரியர்களே முதல் முதலில் வெளிக்காட்டினர். இந்தக் கைங்கரியத்தைச் சிறுகதைகள் வாயிலாக இவர்கள் ஏற்கனவே செய்தவர்கள் தாம். ’இந்துலேகா’விலிருந்து ’இரண்டு படி’ வரையிலுமுள்ள தூரம், பிரமுக நாயர் குடும்பங்களின் மாடி வீட்டிலிருந்து விவசாயத் தொழிலாளியின் மண் குடிசை வரையிலுமுள்ள தூரமேயாகும்.

செம்மீன் நாவல்.

இங்குள்ள நாவல் இலக்கியம் பூர்ஷ்வா (முதலாளித்துவ) வாழ்க்கை முறையிலிருந்து புராலிடேரியன் (தொழிலாளி வர்க்க) வாழ்க்கை முறையை நோக்கி முழுதும் நடந்தேறிச் சென்றதென்று இதனால் அர்த்தம் கொள்ளக்கூடாது. இந்த நாவல் – ஆசிரியர்களில் பெருவாரியினர் மத்தியதர வர்க்கத்தைச் சார்ந்தவர்களாக இருந்தமையால் இயற்கையாகவே அந்த வர்க்கம் நாவலின் பின்னணியாகத் தோன்றிக் கொண்டிருந்தது. தகழி, பொட்டேகாட், உரூப் ஆகியோரின் நாவல்களிலே குறிப்பாக இந்தக் குணாம்சத்தைப் பார்க்கலாம். ஆயினும், அவர்கள் புதிய அரங்கங்களை, சமூகத் துறைளைக் கண்டுபிடிக்க நிரந்தரமாக முயன்று கொண்டிருந்தனர். தகழி செம்படவர்களின் வாழ்க்கைத் துறைக்குள்ளும் (செம்மீன்), உரூப் மலபார் முஸ்லிம்களின் வாழ்க்கைத் துறைக்குள்ளும் (உம்மாச்சு), பொட்டேகாட் கோழிக்கோடு நகரத்தின் இருள் சூழ்ந்த கீழ்ப்பகுதிகளுக்குள்ளும் (தெருவின் கதை) நுழைந்து பார்த்தது இவ்வாறாகத்தான்.

இந்த நாவல்களெல்லாம் வெவ்வேறு வகைளில் இலக்கிய உலகிலே அசைவுகளை ஏற்படுத்தியிருக்கிற நிகழ்ச்சிகளாகப் பரிணமித்தன என்று சொல்வதில் தவறு இல்லை. ஒரு நாவலாசிரியருக்கு இரண்டு விதமான பார்வைகள் இன்றியமையாதவை எனச் சொல்லப்படுகிறது: பௌதீகமும் ஆன்மிகமுமான இரண்டு பார்வைகள். மேற்சொன்ன நாவல்களில் இவ்விரு பார்வைகளும் சிறப்பான முறையில் இடம் பெற்றிருப்பதைக் காணலாம்.

படிக்க:
♦ நூல் அறிமுகம் : ஆர்.எஸ்.எஸ்.சும் பா.ஜ.க.வும் | ஏ.ஜி.நூரனி
♦ நிலவுடைமை முறையை மாற்றிய சோழர்களின் ஆட்சி !

தகழியின் ‘செம்மீன்’ நாவல் செம்படவர்களின் வாழ்க்கைப்பற்றிய ஒரு செய்திக் கதிர் (டாகுமெண்டரி) சித்திரமன்று. அவர்கள் வாழ்க்கையின் எத்தனையோ துறைகளை அவர் அந்நாவலில் தொடவில்லை. அது அவசியமும் இல்லை. செம்மீன் செம்படவச் சமூகத்தைப் பற்றிய அடிப்படை உண்மையின் சாரம் என்று நம்மை நம்ப வைக்கத் தகழியால் முடிந்தது. அதுதான் அந்த நாவலின் வெற்றி. நான் குறிப்பிட்ட ஏனைய நாவல்களைப் பற்றியும் இதையே கூறலாம். உரூபின் ‘சுந்தரிகளும், சுந்தரன்மார்களும்’ என்ற படைப்பைப் பொறுத்தவரையில் ஒரு தகவல் திரைப்படத்தின் தன்மை இதில் அதிகம் காணப்படுகிறது. மலபாரில் நடைபெற்ற மாப்பிள்ளைக் கலவரத்தின் பின்னணியில் அங்குள்ள மக்களின் வாழ்க்கை எவ்வாறு சீர்குலைந்த தென்பதையும், அந்தச் சீர்குலைவிலே எத்தனையோ குடும்பங்கள் சின்னா பின்னமாகி, எத்தனையோ நபர்கள் வேறு மதத்தைத் தழுவி மாறுபட்ட வாழ்க்கை முறையைத் தேடிக் கண்டுபிடித்தனரென்பதையும் உரூப் சித்திரித்துக் காட்டுகிறார். கண்ணிகள் அறுந்து போகாமல், தேவையற்ற ஒட்டு வேலைகளைச் செய்யாமல், மனித மகிமையின் இனிமையுடன், மூன்று நான்கு தலைமுறையினரின் கதையை அவர் விவரித்துள்ளார். உரூபின் இந்த நவீனம், தேசச் சுதந்திரத்துக்குப் பின் படைக்கப்பட்ட மிகவும் அருமையான இலக்கிய சிருஷ்டி என்ற முறையில், இவ்வாசிரியருக்குச் சாகித்திய அகாதெமிப் பரிசைப் பெற்றுக் கொடுத்ததில் ஆச்சரியமில்லை.


Wednesday, 14 April 2021

SIRUPAANAATRUPADAI ,SANGAM AGE LITERATURE

 


SIRUPAANAATRUPADAI ,SANGAM AGE LITERATURE



நத்தத்தனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டது சிறுபாணாற்றுப்படை[1] எனும் இந்நூல். இது 269 அடிகளாலமைந்தது.ஓய்மான் நாட்டு மன்னனான நல்லியக்கோடன் என்பவனைத் தலைவனாகக் கொண்டு எழுதப்பட்ட இந்நூல், அம்மன்னனிடம் பரிசு பெற்ற சிறுபாணன் ஒருவன் தான் வழியிற் கண்ட இன்னொரு பாணனை அவனிடம் வழிப்படுத்துவதாக அமைந்துள்ளது


சிறுபாணாற்றுப்படை அமைப்பு

சிறுப்பாபாணனின் வழியழகு (1 முதல் 12 அடிகள்), விறலியர் அழகு (13 முதல் 30 அடிகள்), பசி துரத்த வந்த பாணன் (31 முதல் 50 அடிகள்), சங்கம் வளர்த்த தமிழ் மதுரை (51 முதல் 67 அடிகள்), உறையூரும் வறிதானது (65 முதல் 83 அடிகள்), வள்ளலில் பெரிய வள்ளல் (84 முதல் 99 அடிகள்), வாரி வழங்கும் மாரி (100 முதல் 115 அடிகள்), பாடும் பணியே பணியாக (116 முதல் 129 அடிகள்), மானும் பேனும் பாணனின் மனைவி (130 முதல் 145 அடிகள்), நீலமணி பூக்கும் நெய்தல் (146 முதல் 163 அடிகள்), வேலூர் விருந்து (164 முதல் 177 அடிகள்), அறிவுடையார் வாழும் ஊர் ஆமூர் (178 முதல் 195 அடிகள்), நல்லவூர் நல்லியக் கோடன் ஊர் (196 முதல் 212 அடிகள்), தகுதியறிந்து தருவான் கொடை (213 முதல் 230 அடிகள்), ஈரம் கசியும் இதயம் உடையவன் (231 முதல் 245 அடிகள்), வரையாது கொடுக்கும் வான்மழை போன்றவன் (246 முதல் 261 அடிகள்), விரும்பும் பரிசு வேண்டும் மட்டும் (262 முதல் 269 அடிகள்) ஆகிய பொருண்மைகள் உள்ளடக்கியது சிறுபாணாற்றுப்படையாகும்.


புலவர் புலமை

ஓய்மானாட்டு நல்லியக்கோடன் புகழ் பாடிப் பரிசில் பெற்ற பாணன் ஒருவன், தன் எதிர்ப்பட்ட இன்னொரு பாணனிடம் நல்லியக்கோடனின் நல் இயல்புகளையும் அவன் நாட்டின் வளத்தையும் செல்வச் செழிப்பையும் எடுத்துக் கூறுவதாக இந்நூல் அமையப் பெறுகிறது. குறிஞ்சி நாட்டுத் தலைவன் நல்லியக்கோடனைக்காண, நெய்தல் நில எயிற்பட்டினம், முல்லை நிலம், மருத நிலம் ஆகிய ஊர்களைக் கடந்து செல்லவேண்டும். இச்செய்தியைக் கூற வந்த புலவர் இந்நான்கு நிலச் சிறப்புகளை மட்டும் கூறாது மூவேந்தர்களின்[2] தலை நகரான வஞ்சியும்[3] உறையூரும்[4] மதுரையும்[5] முன்போல் செழிப்பாக இல்லை. வந்தவருக்கு வாரி வழங்கும் வன்மை அந்த அரசுக்கும் இல்லை. மேலும் கொடை கொடுப்பதில் கடையெழு வள்ளல்கள்[6] பாரி, பேகன், காரி, ஓரி போன்றோர் கொடை வழங்குவதில் வள்ளன்மை படைத்தவர்கள் என்பதை (84-111) ஆகிய 28 வரிகளில் இலக்கியச் சிறப்பை எடுத்துக் கூறுகிறார் புலவர். இவர்களையும் விட மாஇலங்கை ஆண்ட ஓவிய மன்னர் குலத்து வந்த நல்லியக்கோடனை நாடிச் சென்றால் இவர்களைவிட அதிகமாகக் கொடை தரும் வள்ளல் குணம் உடையவன் என்று தம் இலக்கியப் புலமையைக் காணலாம்.



சிறுபாணாற்றுப்படை உவமை

சிறுபாணாற்றுப்படையில் உவமை என்பது இலக்கியச் சிறப்பை உணர்த்துவதாகும். இவ்வகையில் இந்நூல் உவமையிலே தொடங்குகிறது,


“மணிமலைப் பணைத்தோள் மாநில மடந்தை


அணிமுலைத் துயல்வரூஉம் ஆரம் போல”


என அழகிய உவமையை வைத்து நத்தத்தனார் இந்நூலைத் தொடங்கியுள்ளார். நிலமடந்தையின் கொங்கை மீது அசைகின்ற முத்துமாலையைப் போல, மலையின் மீதிருந்து இழியும் காட்டாற்று வெள்ளம் காட்சியளித்தது என்பதை இந்த அடிகளின் பொருளாகும். அதனைத் தொடர்ந்து, மலையினின்றும் இறங்கிய நீர், பின்னர்க் காட்டாறாகப் பெருக்கெடுத்தது. அதன் கரையோரம் கருமணல் படிந்திருந்தது. அந்தக்காட்சி, பெண்ணின் கூந்தல் விரிந்திருப்பதைப் போலக் காட்சியளிப்பதாகவும் அந்தக் கருமணல் பரப்பின் மீது, அருகில் இருந்த சோலையில் பூத்திருந்த புதிய பூக்கள் அணில்கள் குடைந்ததால் விழுந்ததாகவும், அப்படி விழுந்த புதிய மலர் வாடல்கள் மகளிர் கூந்தலில் சூடியுள்ள பூவைப்போலக் காட்சியளிப்பதாகவும் உவமை அமைத்து நல்லாதனார் நூலை அழகு படுத்தியுள்ளார்.

பாணன் நடந்து செல்லும் பாதை

சிறுபாணாற்றுப்படையில் 31-50 வரிகளில் பாணன் நடந்து செல்லும் பாதை குறிப்பிடப்படிகிறது.


“மடமான் நோக்கில் வாள்நுதல் விறலியர்


நடை மெலிந் தசைஇ நல் மென் சீறடி


கல்லா இளையர் மெல்லத் தைவர


பொன் வார்ந்தன்ன புரி அடங்கு நரம்பின்


இன் குரல் சீறியாழ் இடவயின் தழீஇ”


என்ற வரிகளின் மூலம் பாணனின் கூட வரும் கற்பில் சிறந்த விறலியர் மான் போலும் மருளும் கண்களை உடையவர்கள், ஒளி பொருந்திய அழகிய நெற்றியை உடையவர்கள் இவர்கள் காட்டு வழியே நடந்து வந்ததால் வருந்தி மெலிந்த பாதங்களைப் பிடித்துவிடும் இளஞர்கள். முறுக்கேரிய இன்னிசை எழுப்பும் சிறிய யாழை தம் இடப்பக்கம் அனைத்துக் கொண்டு நட்ட பாடை என்னும் பண் இசைத்துக் கொண்டு செல்கிறான். நிலையில்லாத இவ்வுலகத்தில் பாடிப் பரிசில் பெற வருவோர்க்கு உதவி செய்து, நிலைத்தப் புகழைப் பெற்று வாழ விரும்பும் வள்ளன்மை உடையவர்களைத் தேடி நடந்து செல்கின்றனர். வருத்தும் பசித்துன்மமாகிய பகையைப் போக்கிக் கொள்ள, வறுமைத் துயர் துரத்த, வழி நடத்தும் துன்பம் தீர வந்து இங்கு இளைப்பாறும் அறிவில் சிறந்த இரவலனே! என்று புலவர் கூறுகிறார். நடந்து வரும் பாதை இவ்வளவு கொடுமையானதாக இருந்தாலும் தன் வாழ்வாதாரத்திற்காக ஒரு இனக்குழு வாழ்ந்துள்ளது. புலமையும் வறுமையும் பிரியாதது என்பதைப் போல் பாணர்களின் வாழ்க்கை அமைந்துள்ளது.


பாணனின் வறுமை

சிறுபாணன் நடந்து செல்லும் பாதை கொடியது என்றாலும் தன் பசியைப் போக்கிக்கொள்ள பரிசில் தருவோரை நோக்கி செல்வது வாழ்வியல் நிலையாக உள்ளது. இத்தகைய பாண்னின் வறுமை என்பது,


“இந்நாள்


திறவாக் கண்ண சாய் செவிக் குருளை


கறவாப் பால்முலை கவர்தல் நோனாது


புனிற்று நாய் குரைக்கும் புல்லென் அட்டில்


காழ்சேர் முதுசுவர்க் கணச் சிதல் அரித்த


பூழி பூத்த புழல் காளாம்பி”


என்ற பாடல் வரிகளில், பாணனின் சமையல் கூடம் எவ்வறு உள்ளது என்பதை விவரிக்கிறது. கண்விழிக்காத வளைந்த நாய்க்குட்டி தாய்மடியில் வாய் வைத்துப் பால் குடிக்கிறது. தாயிடம் பால் இல்லாததால் வலி பொறுத்துகொள்ள முடியாத அப்போதுதான் குட்டி ஈன்ற தாய் நாய். இத்தகையான ஏழ்மையான வீடு பாணன் வீடு. பாணன் வீட்டு அடுப்படியில் நாய் குட்டி ஈன்று இருக்கிறது. இதுபாணனின் வறுமை நிலை. இங்கே நீண்ட நாள் அடுப்பு பயன்படுத்தப் படாததால் நாய் குட்டி போட்டுள்ளது என்று வறுமையைப் புலப்படுத்துகிறார் ஆசிரியர். வீட்டின் அமைப்பு மேல்கூறி இடிந்து விழுவது போல் உள்ளது. கரையான் பிடித்த சுவர். வீடெல்லாம் புழுதி. புழுதியிலே பூத்த காளான். இப்படிப்பட்ட வீட்டில் பசியில் வருந்தி ஒடுங்கிய வயிறு வளை அணிந்த கையும் உடைய பாணனின் மனைவி. தன் கைவிரல் நெகத்தால் குப்பையிலே முளைத்திருக்கிற வேளைக் கீரையை எடுத்து உப்பு கூட போட வழியில்லாமல் இல்லாமால் சமைத்த உணவு. இப்படிப்பட்ட உணவை உண்பதை மற்ற பெண்கள் பார்த்தால் நகைப்பு ஆகிவிடும் என்று கருதி வீதிக்கதவை அடைத்து வைத்துவிட்டு உப்பில்லாத குப்பைக் கீரையை சமைத்து சாப்பிட்டனர். இப்படிப்பட்ட பாணனின் வறுமை ஒரு சமூக நோயாக இருந்துள்ளது. இதைப் போக்குவதற்கு நல்லியக்கோடன் போன்ற நல்லியல்பு வள்ளல்களும் இருந்துள்ளனர்.




பாணரின் அடுக்களையில் நாய்க்குட்டி ஈன்றுள்ளதையும், கண்ணும் திறவாத அதன் குட்டிகள் பாலில்லாத வறுமுலையைப் பற்றி இழுத்ததனால் துன்பம் தாளாது தாய் நாய் குரைத்தலையும் புலவர்,

திறவாக் கண்ண சாய்செவிக் குருளை
கறவாப் பான்முலை கவர்தல் நோனாது
புனிற்று நாய்குரைக்கும் புல்லென் அட்டில்



(குருளை = குட்டி ; நோனாது = பொறுக்காமல்; புனிற்று = அண்மையில் குட்டியீன்ற; புல்லென் = பொலிவு அற்ற; அட்டில் = அடுக்களை)

என்று கூறுவார். பாணர் குடும்பப் பெண் குப்பையில் முளைத்த வேளைக் கீரையைக் கொய்து கொண்டு வந்து, நீரை உலையாக ஏற்றி அதில் அதை வேகவைத்து, அதனைப் பிறர் காணாது கதவை அடைத்துத் தன் சுற்றத்தோடு உண்ணும் அவலத்தை, புலவர் அழகாகப் படம் பிடித்துள்ளார்.






பத்துப்பாட்டு நூல்களுள் மூன்றாவதாக அமைந்த சிறுபாணாற்றுப்படை ஓர் ஆற்றுப்படை இலக்கியம். 269 அடிகளைக் கொண்ட நெடும்பாடல். இது ஓய்மாநாட்டு நல்லிக்கோடனைப் புகழ்ந்து இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் எனும் புலவரால் பாடப்பட்டது.

ஆற்றுப்படையின் தலையாய மாந்தராகிய ஆடி மகிழ்விக்கும் கூத்தரும், பாடிப் பரவசப்படுத்தும் பாணரும், இசைக் கருவியின் மூலம் இன்பமூட்டும் பொருநரும் விறலியும் ஆகிய நாற்பாலரும், அரசர்களையோ, வள்ளல்களையோ பாடிப்புகழ்ந்து தாம் பெற்றுவந்த பெருஞ் செல்வத்தை, எதிர்வந்த தம்போன்ற வறிய கலைஞனும் பெறவேண்டும் என அவருக்கு அறிவுறுத்தி ஆற்றுப்படுத்துவதே ஆற்றுப்படை இலக்கியமாகும்.

இப்பாடலில், "செங்கோட்டியாழ்' என்னும் சீறியாழ் (சிறிய யாழ்) வாசிக்கும் யாழ்ப்பாணர் "சிறுபாணர்' என அழைக்கப்பட்டனர். சிறுபாணாற்றுப்படையில் பாணனது இல்லத்தில் உறையும் வறுமையின் கொடுமையை நல்லூர் நத்தத்தனார் ஓர் அழகிய ஓவியமாகக் காட்சிப்படுத்தியுள்ளார்.

 

""..... ....... இந்நாள்

திறவாக் கண்ண சாய்செவிக் குருளை

கறவாப் பால்முலை கவர்தல் நோனாது

புனிற்றுநாய் குரைக்கும் புல்லென் அட்டில்

காழ்சோர் முதுசுவர்க் கணச்சிதல் அரித்த

பூமி பூத்த புழற்கா ளாம்பி

ஓங்குபசி உழந்த ஒடுங்குநுண் மருங்குல்

வளைக்கைக் கிணைமகள் வள்ளுகிர்க் குறைத்த

குப்பை வேளை உப்பிலி வெந்ததை

மடவோர் காட்சி நாணிக் கடையடைத்து

இரும்பேர் ஒக்கலொடு ஒருங்குடன் மிசையும்

அழிபசி வருத்தம் வீடப்பொழிகவுள்

தறுகண் பூட்கைத் தயங்குமணி மருங்கின்

சிறுகண் யானையொடு பெருந்தேர் எய்தி

யாமவன் நின்றும் வருதும்...'' (அடி.129-143)

 

"பிறந்து சில நாள்களேயான திறவாத கண்களை உடைய, வளைந்த செவிகளை உடைய நாய்க்குட்டி தன் தாயின் கறவாப் பால் முலையை இழுத்து பாலுண்ண முயற்சி செய்கிறது. ஆனால், ஈன்றணிமை நீங்காத தாய் நாய்க்கு உணவின்றி பால் சுரக்காததால் வலிதாங்க முடியாமல் வேதனையோடு குரைக்கிறது. கூரை கழிகள் கட்டவிழ்ந்து வீழ்கின்ற சுவரை உடைய அடுக்களையில் கூட்டமான கரையான் அரித்து ஈரமான புழுதியில் காளான்கள் பூத்துக்கிடந்து, அடுக்களையைப் பொலிவிழக்கச்செய்து கொண்டிருக்கிறது. பசியால் வாடி இளைத்த பாணன் மனைவி, ஒடுங்கிய இடையினையும் மெலிந்த கைகளையும் பெற்றிருக்கிறாள். "குப்பை' என்று ஒதுக்கப்பட்ட வேளைக் கீரையை தன் பெரிய நகத்தால் கிள்ளி, உப்புக்கும் வழியில்லாததால், கீரையை உப்பில்லாமல் வேகவைத்து, "வறுமையுறுதல் இயல்பு என்றுணராத அறிவற்றவர்கள் இதைக் காணக்கூடாது' என்று தன் வீட்டின் தலைவாயிலை மூடி, பசியால் வருந்தும் தம் சுற்றத்துடன் முழுதும் உண்பர்.

மானம், குலம், கல்வி, வண்மை, அறிவுடைமை, தானம், தவம், உயர்ச்சி, தாளாண்மை, காமம் ஆகிய பத்தையும் அழிக்கும் பசி என்னும் பிணி போகுமாறு நல்லியக்கோடன் யானையும் தேரும் தர, யாம் அவற்றைப்பெற்று வந்துகொண்டிருக்கிறோம். நீங்களும் அவன்பால் சென்று உங்கள் வறுமையைப் போக்கிக் கொள்ளுங்கள்' என்று ஆற்றுப்படுத்துவதன் மூலம் நல்லியக்கோடனின் ஈகைத்திறத்தைப் போற்றி, வறுமையின் கொடுமையைக் கண்முன் நிறுத்துகிறார் புலவர்.


பசி, பிணி, பகை இவையின்றி இருப்பதே நல்ல நாடு (குறள்.734) என்கிறார் வள்ளுவர். இம்மூன்றும் இல்லாத நாடு எது? என்பதே பலரும் கேட்கும் கேள்வி. ஆனால், சங்க காலத்தில் பசிக்கொடுமையும் இருந்தது; அப்பசி என்னும் பிணியைப் போக்கும் மருத்துவராக அக்கால அரசர்களும் இருந்திருக்கிறார்கள் என்பதே ஆற்றுப்படை இலக்கியத்தின் தனிச்சிறப்பாகும்.




மணிமலைப் பணைத்தோள் மாநில மடந்தை
யணிமுலைத் துயல்வரூஉ மாரம் போலச்
செல்புன லுழந்த சேய்வரற் கான்யாற்றுக்
கொல்கரை நறும்பொழிற் குயில்குடைந் துதிர்த்த
புதுப்பூஞ் செம்மல் சூடிப் புடைநெறித்துக்
5
கதுப்புவிரித் தன்ன காழக நுணங்கற
லயிலுருப் பனைய வாகி யைதுநடந்து
வெயிலுருப் புற்ற வெம்பரல் கிழிப்ப
வேனி னின்ற வெம்பத வழிநாட்
காலைஞா யிற்றுக் கதிர்கடா வுறுப்பப்
10
பாலை நின்ற பாலை நெடுவழிச்


வேனில் காலத்தில் காலை நேரத்தில் இளவெயில் காயும்போது பாலை நிலத்தில் சிறுபாணன் தன் சுற்றத்தாருடன் சென்றான். மாநில மடந்தைக்கு முலை மலை. ஆறு அவளது மார்பில் தொங்கும் ஆரம். ஆற்றங்கரையை உடைத்துக்கொண்டு நெடுந்தொலைவிலிருந்து வரும் காட்டாறு துன்புற்றுக் கொண்டிருந்தது. அதாவது நீர் இல்லாமல் வறண்டு போயிருந்தது. அந்த ஆற்றின் மணல் படிவுகள் நிலமடந்தைக்குக் கூந்தல். ஆற்றங்கரை மலர்ச் சோலைகளில் பூத்திருக்கும் மலர்களைக் குயில்கள் குடைந்து உண்ணும்போது உதிர்க்கும் பூக்கள் ஆற்றின் அறல் மணலைப் போர்த்திக் கிடந்தன. அந்தப் போர்வை மகளிர் இடுப்பில் அணியும் காழகம் ( = பாவாடை ) போல் சுருக்கம் சுருக்கமாகக் காணப்பட்டது. ( காற்றால் அறுபட்டுப் படிந்திருக்கும் மணல் படிவில் உதிர்ந்த பூக்கள் பாவாடை சுருக்கத்திற்கு உவமை. ) ஆற்றில் கிடக்கும் பருக்கைக் கற்கள் நடந்து செல்லும் பாணன் பாடினியரின் கால்களை உருத்தின, கிழித்தன. அவர்கள் மெல்ல மெல்ல நடந்து சென்றனர். அவர்களது நடை பார்ப்பவர்களுக்குச் சுவையாக இருந்தது. அது வேனில் காலம் வெயிலின் சூடுதான் வேனிலுக்குப் பதம். காலை ஞாயிறு தன் கதிர்ச்சுடரை வீசி வாட்டத் தொடங்கியது. பாலைநில வழியில் அவர்கள் சென்றனர்.

    Thursday, 14 June 2018

    LLIAD EPIC LITERATURE







    LLIAD EPIC LITERATURE


    இலியட் மஹாகாவியம் 
    கிரேக்க கதைகளையும் கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள்

    ஆதிகால கிரேக்கர்களின் சமய நம்பிக்கை பல தெய்வ உருவ வழிபாட்டுக் கோட்பாட்டில் அமைந்திருந்தது. வானத்துக்கும் பூமிக்கும் தனித்தனியே கடவுள்கள் இருந்தனர். மலைகளுக்கும் கடலுக்கும் கடவுளர்கள் கற்பிக்கப்பட்டனர். சூரியனும் சந்திரனும் கடவுளர்களாகத் தெரிந்தனர். நெருப்புக்கும் நீருக்கும் கடவுளர்கள் இருந்தனர்.

    காட்டுக்கென்றும் கழனிக்கென்றும் கடவுளர்கள் இருந்தனர். காட்டில் அலையும் மிருகங்களுக்கென்றும், கடலில் திரியும் மீன்களுக்கும் கடவுள்கள் உண்டு. வயலில் விளையும் தானியங்களுக்கும், காய்த்துக் குலுங்கும் கனிகளுக்கும் கடவுள்கள் உண்டு. இரும்படிக்கும் கருமானுக்கும் தனியாகக் கடவுள் இருந்தான். வேட்டைக்காரர்களுக்கு வேண்டியவை செய்ய தெய்வம் இருந்தது. போருக்குச் சென்றாலும் வெற்றியை ஈட்டித்தர கடவுள் இருந்தது.

    கல்விக்குத் தனித் தெய்வம் உண்டு. காதலுக்கும் அது போல் தனியே தெய்வம் உண்டு. செல்வத்துக்கும், சேமத்துக்கும் தனியே கடவுளோ தெய்வமோ கற்பிக்கப்பட்டிருந்தது. இப்படி எல்லாவற்றுக்கும் தனித்தனியே கடவுள்களைக் கற்பித்து வணங்கி வந்தனர்.

    இதற்கிடையே ரோமர்கள் கிரேக்கர்களின் சமய நம்பிக்கைகளையும் இலக்கியத்தையும் தங்களோடு எடுத்துக்கொண்டும் ஏற்றுக்கொண்டும் அவற்றைத் தங்களுடைய சமயம், இலக்கியம் ஆகியவற்றில் புதிய வார்ப்புகளாக வடிவமைத்து, தாங்கள் அதுவரை வணங்கி நின்ற தெய்வங்களோடு கிரேக்கர்கள் வணங்கிவந்த தெய்வங்களை இணைத்தும் இணையாக்கியும் வைத்தனர்.

    இதனால் கிரேக்கர்களின் ஆதிகால சமய இதிகாசக் கதைகளின் பெரும்பாலான சாயல்கள் ரோமர்களின் சமய இதிகாசக் கதைகளிலும் ஏற்பட்டு, படிக்கும்போது முதற்பார்வையில் குழப்பத்தை ஏற்படுத்துவதுண்டு. எனவேதான், கிரேக்கர்களின் முழுமுதல் கடவுளர்க ளாக உள்ள பன்னிருவர், ரோமர்களால் எப்படி எடுத்தும் ஏற்றும் கொள்ளப்பட்டு மாற்றுப் பெயர்களால் அழை க்கப்பட்டனர் என்பதையும் நாம் அறிந்து கொள்வது அவசியமாகின்றது.

    கிரேக்கர்களுக்கு முழு முதற்கடவுள் அல்லது தலைமைக் கடவுள் ஸீயஸ் என்பவன். இதே கிரேக்கர்களுக்கு, இவனுக்கு முன்பு க்ரோனஸும், க்ரோனஸுக்கு முன்பு யுரேனஸும் இப்பதவியில் இருந்தனர். இந்த ஸீயஸ் (ரோமர்களால் ஜுபிடர் என்று அழைக்கப்பட்டான். இவனுடைய மனைவி கிரேக்கர்களுக்கு ஹீரா ரோமர்களுக்கு ஜுனோ அல்லது ஜோவ். இந்தப் பன்னிரண்டு முக்கிய மூலத்தெய்வங்கள் யார் யாரென்றும் இவர்களுக்குக் கிரேக்கர்களும் ரோமர்களும் இட்டு அழைத்த பெயர் என்னவென்றும் மேலும் அவர்கள் எவற்றுக்கு கடவுளராய் உள்ளனர் என்பதையும் இனிக்காண்போம்.

    கிரேக்கர்களின் கடவுள் / ரோமர்களின் கடவுள் / கடவுளின் துறை

    ஸீயஸ் / ஜுபிடர் / தலைமைக் கடவுள், வான மண்டலத்தின் தேவன்

    அபோலியன் / அப்போலோ / சூரியனுக்குக் கடவுள்

    ஆரெஸ் / மார்ஸ் / போருக்குரிய கடவுள்

    ஹெர்மஸ் / மெர்க்குரி / செய்தி பரப்புத் துறை; தூதுவச் சேவை; கட்டியங்காரன்

    பொசைடான் / நெப்டியூன் / பெருங்கடல்களுக்குத் தலைமைக் கடவுள்

    ஹபாயிஸ்டஸ் / வல்கன் / கருமான், கொல்லன், நெருப்புக் கடவுள்

    ஹீரா / ஜுனோ / தலைமைப் பெண் தெய்வம்

    டிமெட்டர் / சிரஸ் / பூமியின் தெய்வம் வேளாண்மைத் துறைத் தலைவி!

    ஆர்டெமிஸ் / டயானா / நிலவுக்கும் வேட்டைக்கும் இவளே தெய்வம்

    ஏத்தீனா / மினர்வா / கல்வி, அறிவு தெய்வம்

    ஆஃப்ரோடைட் / வீனஸ் / காதல், அழகு தெய்வம்

    ஹெஸ்டி / வெஸ்தா / வீட்டுக் குடித்தனம் தொடர்பான தெய்வம்

    கிரேக்கர்கள், ரோமர்கள் ஆகியோரின் முக்கிய 12 கடவுளர்கள் மேற்குறிப்பிடப்பட்டவர்கள். இவர்களோடு மேலும் நால்வரும் கிரேக்கர்களால் வணங்கப்பட்டு வந்துள்ளனர்.

    டியோனிசஸ் (Dionysos) : மதுவுக்கும் போதைக்குமான கடவுள். இவனை ரோமர்கள் பக்கஸ் (Bacchus) என்றழைப்பர். இந்தக் கடவுளை மூலதெய்வமாகக் கொண்டு பிற்காலத்தில் ஒரு தனிச்சமயம் உருவானது. இது ஒரு மறுமலர்ச்சி மதம்; அல்லது பரிணாமமடைந்த சமயம் என்று வர்ணிக்கப்பட்டது.

    ஈராஸ் (Eros) என்னும் ரோமர்களின் கியூப்பிட் (Cupid) என்ற காதல் கடவுள் நமது ஊர் மன்மதன்.
    ப்ளூடன் (Pluton) என்னும் ரோமர்களின் ப்ளூட்டோ (Pluto). இவன் பாதாள லோகத்துக் கடவுள்.
    க்ரோனஸ் என்ற ரோமர்களின் சாத்தான் சனி பகவான். நல்ல நேரம், கெட்ட நேரம் இவற்றின் நிர்ணயகர்த்தா இவனே.

    தனிச்சிறு தெய்வங்களும் வணங்கப்பட்டுள்ளன.
    ஆஸ்குளோப்பியஸ் என்பவள் நோயிலிருந்து நிவாரணம் அளிக்கும் கடவுள்.

    ஹெடஸ் பாதாள லோகத்துக்குக் கடவுள்.
    ஹைஜீயா அல்லது ஹைஜினியா : இவள் ஆரோக்கிய வாழ்வுக்கு ஆதரவான தெய்வம். ஹைஜீன் என்ற சொல் இதிலிருந்தே வந்தது.

    ஹைப்பரியான் : இவன் ஹெலியஸ் என்ற சூரியனையும், செலீன் என்ற சந்திரனையும் இயாஸ் என்ற வைகறைப் பொழுதுக்குரிய தேவதையையும் பெற்றெடுத்தவன்.

    சட்யர்ஸ் என்பவள் காடு கழனிகளைக் காக்கும் மோகினித் தெய்வம்.

    தெமீஸ் : சட்டம், நீதி ஆகியவற்றின் தலைமை நாயகி.
    தனித்தனி குணாதிசயங்களை உருவாக்கி, தனித்தனியே துறை வாரியாக கடவுளர்கள் இப்படி உருவாக்கப்பட்டு, வணங்கப்பட்டார்கள். மேலே உள்ளது ஒரு துளி மட்டுமே. இது போக ஏராளமானவர்கள் இருக்கிறார்கள்.

    டைட்டான்கள் என்னும் ஆதி தேவர்கள்
    கிரேக்கர்களின் மூலக் கடவுள், முதலாவது கடவுள் யுரேனஸுக்கும் முதல் பெண் தெய்வமான ஜியாவுக்கும் பிறந்த பன்னிரண்டு மக்கள், டைட்டன்கள் என்று அழைக்கப்படுகின்றனர். ஆறு ஆண், ஆறு பெண் குழந்தைகள்.

    ஆண் டைட்டன்களின் பட்டியல்
    * ஓஷனஸ் (Oceanus)
    * கூயஸ் (Coeus)
    * கிரியஸ் (Crius)
    * ஹைப்பிரியான் (Hyperion)
    * ஐயபீடஸ் (Iapetus)
    * க்ரோனஸ் (Cronus)
    பெண் டைட்டன்களின் பட்டியல்
    * திய்யா (Theia)
    * ரீயா (Rhea)
    * தெமிஸ் (Themis)
    * நெமோசின் (Mnemosyne)
    * ஃபோபே (Phoebe)
    * தேத்திஸ் (Tethys)

    உலகை ஆள்வதில் முன்னவனாகத் திகழும் யுரேனஸ், பூமிதேவி ஜீயா பெற்றெடுத்தவன்தான். எனினும், இவளைத் தவிர உலகில் வேறு பெண்ணினத்தைச் சேர்ந்தவள் யாரும் இல்லையென்பதால், இவளே இவனுக்கு மனைவியாகி பட்டத்து மகிஷியாகவும் ஆகிறாள். இப்படி யூரேன்ஸ்-ஜியா தம்பதியினர் பெற்றெடுத்தவர்கள்தான் இந்த டைட்டன்கள் என்று அழைக்கப்படுகின்ற ஆதி தேவர்கள்.

    இவர்கள் தவிர நூறு கைகள் கொண்ட பிரம்ம அரக்கர்கள், சைக்கிளாப்ஸ் என்று அழைக்கப்படும் ஒற்றைக் கண் மாமல்லர்கள் என்று ஏராளமான பிள்ளைகள்.

    ஆனால் ஏனோ தந்தை யுரேனஸ்ஸுக்கு இவர்கள் யாரையுமே பிடிக்கவில்லை. பெற்றெடுத்த பிள்ளைகளை, ஆஜானுபாகுவான தோற்றமும் அமானுஷ்ய ஆற்றலும் உடைய 12 டைட்டன்களையும் நூறு கைகள் கொண்ட பயங்கர தோற்றம் கொண்ட பிரம்ம அரக்கர்களான பிரியார, காட்டஸ், கியாஸ், என்செலடஸ் போன்றோரையும், ஒற்றை முழுவட்டக் கண்களுடன் முரட்டு ஆகுதி கொண்ட சைக்கிளாப்ஸ்களான அர்கஸ், ஸ்ட்ரோப்ஸ், புரோன்டஸ் ஆகியோரையும் யுரேனஸ் துரத்தியடிக்கிறான். தன் தாயுடன் பிறந்தவனான டார்டரஸிடம் இவர்கள் மாட்டிக்கொண்டு அடிமைகளாக அல்லல்படுகின்றனர்.

    இந்நிலையில்தான் நாம் முன் அத்தியாயம் ஒன்றில் விவரித்துள்ளபடி கொடுமைக்கு உள்ளான டைட்டன்களின் ஒருவனான க்ரோனஸ் குமுறி எழுகின்றான். தன் தாய் ஜீயாவின் உதவியால் தன் தந்தை யுரேனஸ்ஸை வெட்டி வீழ்த்தி விட்டு ஆட்சியைப் பிடிக்கிறான்.

    க்ரோனஸ் ஆட்சிப்படி ஏறிய சிறிது காலத்துக்குள் அவனது மனமும் மாறிவிடுகிறது. தன் தந்தையைப் போன்று இவனும் தன் சகோதரர்களை வெறுத்து, மீண்டும் அவர்களை அதே டார்டரஸின் நரக பாதாளத்துக்குத் துரத்திவிடுகிறான். மிச்சக்கதையை முந்தைய அத்தியாயத்தில் பார்த்தோம்.
    இனி டைட்டன்களில் சிலரைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்துகொள்வோமா?

    ஓஷனஸ் 

    இவன்தான் டைட்டன்களில் மூத்தவன். தன்னுடன் பிறந்தவளான தேத்திஸ் என்பவளை மணந்தான். இவள் மூலமாக ஓஷியனடைஸ் என்று அழைக்கப்படுகின்ற கடல் தேவ-தேவியர்களையும், நதி தேவ-தேவியர்களையும் மோகினிகளையும் பெற்றெடுத்தான்.

    இவன்தான் கடலுக்குத் தேவன். இவனும் இவன் மனைவியும் ஹீராவுக்குத் துணையாகப் பல நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளனர். இவனுடைய மகள்தான் அழகும் அறிவுக் கூர்மையும் கொண்ட மெட்டீஸ் என்பவள். ஸீயஸின் இளமைக் காதல் இவளோடு ஆரம்பித்தது. இவள் தான் க்ரோனஸ்ஸை ஒழிக்க பானம் கலந்து ஸீயஸ் மூலமாக கொடுத்த னுப்பியவள்.

    ஹைப்பிரியான்
    இவன் ஸீயஸுக்குத் தோள் கொடுத்த முக்கியமான டைட்டன். ஹெலியாஸ் -சூரியன். செலன், நிலவு. இயோஸ் -வைகறை ஆகியோரின் தந்தை.

    ஐயபிடஸ்
    கடல் தெய்வம் ஓஷியனிட்டான கிலைமென் மூலமாக இவனுக்கு அட்லாஸ், புரோமித்தியஸ், எபிமித்தியஸ், மெனதியஸ் ஆகியோர் பிறந்தனர்.

    மனித இனத்தின் மூதாதை இவனே என்ற கூற்றும் உண்டு

    Monday, 4 June 2018

    CHINESE LITERATURE - WOLFS WAITING ஒநாய்கள் காத்திருக்கின்றன





    CHINESE LITERATURE - WOLFS WAITING



    ஒநாய்கள் காத்திருக்கின்றன

    உலக இலக்கியத்தின் போக்கினை ஒவ்வொரு பத்தாண்டுகாலமும் ஒரு குறிப்பிட்ட இலக்கிய வகை திசைமாற்றம் செய்கிறது. ஆப்ரிக்க இலக்கியங்கள், லத்தீன் அமெரிக்க இலக்கியங்கள், அமெரிக்காவின் நான்லீனியர் எழுத்து, பின்நவீனத்துவக் கதையாடல் என்று மாறிவந்த சூழலில் இரண்டாயிரத்துக்கு பிறகான இலக்கியப் போக்கினை மாற்றம் கொள்ளச் செய்திருப்பது ஆசியாவின் சமகால இலக்கியங்களே.

    குறிப்பாக சீனா, ஜப்பான், லெபனான், கொரியா, இந்தியா, துருக்கி, இஸ்ரேல், கம்போடியா,  ஆர்மீனியா என்று ஒவ்வொரு தேசமும் தனக்கான தனித்துவமான இலக்கியப் பங்களிப்பையும் முன்னில்லாத புதிய கதைசொல்லும் முறைகள், கவித்துவ வெளிப்பாடுகள், சிந்தனைத் தளங்களை அடையாளப்படுத்தி வருகின்றன.

    இன்று உலக அளவிலான சிறந்த இலக்கியப் பரிசிற்கான தேர்வு பட்டியலில் ஆசிய நாடுகளின் புத்தங்களே மூன்றில் இரண்டு பங்கை வகிக்கின்றன. முக்கிய பரிசுகளை வென்றுமிருக்கின்றன.  இந்த வளர்ச்சியை மேற்குலகம் இன்னமும்  அங்கீகாரம் கொள்ளாதற்கு அதன் அரசியல் நிலைப்பாடுகளே காரணம் .

    இந்தியாவினைப் போலவே நீண்ட இலக்கிய பராம்பரியம் உள்ள சீனாவில் சமகால இலக்கியம் அதிதீவிரமான வளர்ச்சியைக் கண்டிருக்கிறது. கடந்த இருபத்தைந்து வருசங்களில் வெளியான நவீன சீன நாவலோ, சிறுகதை தொகுப்போ. கவிதைகளோ எதுவும் தமிழில் மொழியாக்கம் செய்யப்படவேயில்லை. சீனா ஒரு கம்யூனிச நாடு என்ற பொதுதயக்கம் மற்றும் காரணமற்ற வெறுப்பு நம்மை விலக்கி வைத்திருக்கிறது என நினைக்கிறேன், அதன் சமகால இலக்கியத்தை தொடர்ந்து வாசிப்பவன் என்ற ரீதியில் அது நமக்கு மிகவும் நெருக்கமாக இருப்பதை பலநேரங்களில் உணர்ந்திருக்கிறேன்

    சீனாவின் இன்றைய இலக்கியம் சமகால அரசியலை தீவிரமாக விமர்சனம் செய்கிறது, மாவோவின் கலாச்சாரக் கட்டுபாடுகள் குறித்து மறுவிவாதம் நடைபெறுகிறது,  அந்த வரிசையில் வெளியான முக்கியமான நாவலே வுல்ப் டோடம். இது ஒரு கம்யூனிச எதிர்ப்பு நாவல் என்று  கடுமையான சர்ச்சை உருவாகி உள்ளது

    சீனாவின் ஐம்பது ஆண்டுகால இலக்கிய வரலாற்றில் மிக அதிகமான பிரதிகள் விற்ற நாவலாக Wolf Totem   கொண்டாடப்படுகிறது. இந்த நாவலின் திரைப்பட உரிமையை லார்ட் ஆப் தி ரிங்ஸ் இயக்கிய பீட்டர் ஜாக்சன் வாங்கியிருக்கிறார்.

    Man Asian Literary Prize, உள்ளிட்ட பத்து முக்கிய இலக்கிய விருதுகளை இந்த நாவல் வென்றிருக்கிறது. 2004ல் சீனாவில் இதன் முதல்பதிப்பு வெளியாகி லட்சம் பிரதிகள் விற்பனையானது. அதன் தொடர்ச்சியாக இந்த நாவல் 13 மொழிகளில் வெளியாகி இதுவரை நான்கு கோடிப் பிரதிகள் வரை விற்பனையாகி உள்ளதாகக் கூறுகிறார்கள்.

    வுல்ப் டோடம் எழுதிய Jiang Rong தன்னை யார் என்று அடையாளம் காட்டிக் கொள்ளாமலே புனைப்பெயரில் எழுதியிருக்கிறார்.  நாவலின் வெற்றிக்குப் பிறகே அவரது சுயஅடையாளம் வெளியானது. நாவலை எழுதுவதற்கு இருபது ஆண்டுகாலம் ஆனது என்றும் டினமான் சதுக்கத்தில் நடைபெற்ற மாணவர் போராட்டத்தில் ஈடுபட்டதால் அரசிற்கு எதிரான கலகக்காரன் என்று ஒன்றரை ஆண்டுகாலம் சிறைவாசம் அனுபவித்து உள்ளதாகவும் நேர்காணலில் ஜியாங ராங் குறிப்பிடுகிறார்.

    நாவல் மிகுந்த சர்சைக்கு உள்ளதானதோடு தடையும் விதிக்கபட்டது. இன்று அதன் பிரதிகள் 26 மொழிகளில் மொழிபெயர்க்க அனுமதிவழங்கபட்டிருக்கிறது. சீனாவில் ஒரு நாவலின் ஆங்கில உரிமை லட்சம் டாலர் முன்பணம் தந்து வாங்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை.

    1970ல் துவக்கத்தில் மங்கோலியாவின் ஸ்டெப்பி புல்வெளி பகுதியில் கதை நடக்கிறது. மாவோவின் கலாச்சாரக் கெடுபிடிகளால் Chen Zhen என்ற பீஜிங் பல்கலைகழக மாணவன்  நாடோடிகளுடன் சேர்ந்து வாழ்வதற்காக அனுப்பபடுகிறான். மங்கோலியாவின் தனிமைத் தீவு போல உள்ள புல்வெளியில் செங்கிஸ்கானின் வாரிசுகளாக கருதப்படும் இடையர்களுடன் சேர்ந்து தங்கிக் கொள்கிறான்.

    அவர்கள் இயற்கையோடு இணைந்து வாழ்கிறார்கள், வேட்டையாடும் ஒநாய்களும் அவர்கள் வாழ்வும் ஒரே சங்கிலியால் பின்னப்பட்டிருக்கிறது, அவர்கள் அதை ஒரு சமநிலை எனக் கருதுகிறார்கள்

    ஒநாய் என்பதை விழிப்புற்ற மனசாட்சியாக நாடோடிகள் நினைக்கிறார்கள், ஆகவே அவர்கள் ஒநாயை வெறுப்பதேயில்லை, அவர்களுடன் சேர்ந்து வாழ்ந்து கால்நடை வளர்ப்பது ஒநாய்களை வேட்டையாடுவதையும் நாடோடிகள் ஒநாய் குட்டிகளைத் திருடி வந்து வளர்ப்பதையும் அறிந்து கொள்கிறான். அத்துடன்  நாடோடி கலாச்சார அடையாளங்களைப் புரிந்து கொள்ளவும் துவங்குகிறான்.

    ஒநாய்கள் பற்றி அறிந்து கொள்வது அவனைப் பரவசமூட்டுகின்றது. அவன் ஒநாய்கள் தனக்கு எதையோ கற்றுக் கொடுப்பதாக உணர்கிறான். அதன்பிறகு அவன் காட்டிற்குள் சென்று ஒநாய்களின் வாழ்க்கையை நெருங்கி அறியத் துவங்குகிறான். இயற்கை குறித்த அதுவரையான அவனது பார்வை உருமாறத்துவங்குகிறது.

    இந்நிலையில் நிலஅபிவிருத்திதிட்டம் என்ற பெயரில் அரசு ஒநாய் குலத்தையே மொத்தமாக அழித்து ஒழிக்க ஆணையிடுகிறது. ஒநாய்களின் குலத்தை அழிப்பதற்காக நடைபெறும் அதிகார வேட்டையை நேரடியாக காண்கிறான் சென்ஷான். அது அவனது மனசாட்சியை உறுத்தத் துவங்குகிறது.

    மங்கோலியாவின் ஆன்மாதான் ஒநாயாக உருக்கொண்டிருக்கிறது. சீனாவின் வடபகுதியில் வாழும் இந்த நாடோடி இனம் மிகவும் தைரியமானது. வரலாற்றின் முன்னோடி இனமது. அது ஒடுக்கபடுகிறது என்பதன் அடையாளமாகவே இந்த சம்பவங்களை உணர்கிறான்.

    நாவல் முழுவதும் ஒநாய் மங்கோலியாவின் புராதனச் சின்னம் போலவே காட்டப்படுகிறது. ஏதோவொரு காலத்தில் மூதாதையர்களில் ஒருவர் காட்டில் கொண்டு போய்விடப்பட்ட போது அவர் ஒநாயால் எடுத்து வளர்க்கபட்டு காப்பாற்றபட்டார் என்ற நம்பிக்கை நாடோடிகளிடம்  இன்றும் உள்ளது.

    ஒநாய்கள் தனக்கென தனித்துவமான வாழ்வியலைக் கொண்டிருக்கின்றன

    ஒநாய் வேட்டையாடுகிறது என்ற பொதுபிம்பம் கலைந்து ஒநாய் வேட்டையாடப்படுகிறது என்ற புதிய கவனம் அவனுக்குள் உருவாகிறது, இந்த மாறுதலே அதிகார அரசியலின் முக்கிய அம்சம் என்பதை அவன் உணர்ந்து கொள்கிறான்

    ஒநாய்களின் இயல்பையும் அவை மங்கோலிய புல்வெளியில் வாழும் முறைகளையும் நாவல் மிக நுட்பமாக நிறைய விவரிக்கிறது. இன்னொருபக்கம் நாடோடி வாழ்வின் சாராம்சங்களை நாவல் கவித்துவமாக எழுதிப்போகிறது.

    ஒநாய்கள் இந்த நாவலில் கலாச்சார அடக்குமுறை மற்றும் இனக்குழுவினை சுய அடையாள ஒடுக்கத்தின் குறியீடாகவே சித்தரிக்கபடுகிறது. தன்னுடைய சொந்த வாழ்வின் அனுபவத்திலிருந்து இந்த நாவலை உருவாக்கியுள்ளதால் நாவல் முழுவதும் நேரடியான இயற்கை விவரணைகள், நுட்பமான தகவல்கள், விவரிப்புகள் என்று காட்சிகள் கண்முன்னே தோன்றிமறைகின்றன.

    மனிதர்களோடு ஒநாய்கள் உண்மையில் அன்பு கொண்டிருக்கின்றன. அதன் தோற்றமே அதை விட்டு நம்மை விலக்கி வைத்திருக்கிறது. தெருநாய்கள் போல காரணமில்லாமல் ஒநாய்கள் குலைப்பதில்லை. அவை மௌனமாக பார்த்துக் கொண்டிருக்கின்றன. வாழ்வைப் போராடி வெல்கின்றன, ஒநாய்களை முக்கிய கதாபாத்திரமாக சொல்லும் பௌத்தகதைமரபும் இந்த நாவலை வாசிக்கையில் நினைவிற்கு வருகிறது.

    சமகால சீன இலக்கியத்தினை உலகின் கவனத்திற்கு இந்த ஒரேயொரு நாவல் கொண்டு சேர்ந்துவிட்டது. இதன்விளைவாக இந்த ஆண்டு ஐம்பதுக்கும் மேற்பட்ட சீன நாவல்கள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்ய உரிமை பெற்றுள்ளன. மேற்குலகைத் திரும்பி பார்க்க வைக்ககூடிய இப்படியான ஒரு பெருவெடிப்பிற்காக தான் தமிழ் நாவல் உலகமும் காத்திருக்கிறது போலும்.

    Sunday, 25 February 2018

    OOTHUMALAI JAMEEN SOUTHERN LOVE LITERATURE


    OOTHUMALAI JAMEEN 
    SOUTHERN LOVE LITERATURE

    ஊத்துமலை ஜமீன் 
    தென்னாட்டு காதல் காவியம் 




    ஊத்துமலையில் அரண்மனை இருந்தபோது இருதாலய மருதப்பதேவர் பரிவாரங்களுடன் தனது குதிரையில் குருந்தன்மொழி சென்றார். அந்த சமயத்தில் மீனாட்சி சுந்தர நாச்சியாரை பார்த்து அவரது அழகில் மயங்கினார். தனது உடைவாளை அனுப்பி அவரிடம் மணம் முடிக்க சம்மதம் கேட்டார். ‘‘ஜமீன்தாரை மணக்க நான் சம்மதிக்கிறேன். ஆனால், வானம் பார்த்த பூமியான ஊத்துமலைக்கு நான் வாழ்க்கைப் படமாட்டேன். குளிர்ச்சியான இடத்தில் ஒரு அரண்மனை கட்டினால் நான் அவரோடு வாழ்கிறேன்” என்றார் மீனாட்சி சுந்தர நாச்சியார். 

    ஊத்துமலை ஜமீன்தார்கள் கோயில்களை பராமரிப்பதில் ஆர்வம் கொண்டவர்களாக திகழ்ந்தனர். தமிழுக்கும் சிறந்த தொண்டாற்றிய அவர்கள் தாங்கள் வழிபடும் ஆலயத்தில் தங்கக் கொடிமரத்தை நிறுவி வணங்கி வருகின்றனர். கோயில்களை புனரமைப்பதிலும் திருவிழா நடத்துவதிலும் முன்னணியில் நிற்பர். கோமதி அம்மனை தங்களது வீட்டில் பிறந்த மகளாக எண்ணி அவரது திருமணத்தை தங்கள் இல்லத் திருமணம்போல் விமர்சையாக நடத்தி வருகின்றனர். ஜமீன்தார்கள் தென்பகுதிகளில் ஒரு குறுநில மன்னர்கள்போல ஆண்டு வந்தனர். அவர்கள் பாளையக்காரர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் மறவர் பாளையமும், கிழக்குப் பகுதியில் நாயக்கர் பாளையமும் சிறப்புற்று விளங்கின. திருநெல்வேலி சீமையில் ஆட்சி செய்த மறவர் இனத்தைச் சேர்ந்த பாளையக்காரர்கள் அனைவரும் ராமநாதபுரம் பகுதியில் உள்ள “கிலுவை” நாட்டிலிருந்து வந்தவர்கள். மறவர் இனத்தில் கொண்டயங்கோட்டைப் பிரிவை சேர்ந்தவர்கள்தான் ஊத்துமலை ஜமீன்தார்கள்.


    மதுரை மன்னன் விஸ்வநாத நாயக்கர் காலத்தில் பிரிக்கப்பட்ட 72 பாளையங்களில், ஊத்துமலை மிகப்பெரிதாக திகழ்ந்துள்ளது. இதன் ஆளுகைக்குள் 148 கிராமங்கள் இருந்தன. ஒரு காலக் கட்டத்தில் சுரண்டை ஜமீனையும் ஊத்துமலை ஜமீன்தார் ஏலம் எடுத்து தனது ஆளுகைக்கு கொண்டுவந்தார். ஊத்துமலை ஜமீன்தாருக்கு விஜயகுணராம பாண்டியன் என்ற பட்டம் உண்டு. இவர் உபய சாமரம், புலிக்கொடி, மகரக்கொடி, இந்திரனின் கொடியான வலரிக் கொடி ஆகியவற்றைப் பெற்றவர். பாண்டிய மன்னன் பல்வேறு காலகட்டங்களில் இவரது செயல்திறனுக்கு ஏற்ப இவற்றை வழங்கியுள்ளார். ஊத்துமலை பாளையம் எப்படி உருவாயிற்று? பாண்டிய மன்னன் மதுரையிலிருந்து தெற்கே திருநெல்வேலிச் சீமையிலுள்ள உக்கிரன் கோட்டைவரை ஆட்சி புரிந்து வந்தான். உக்கிரன் கோட்டையைச் சுற்றி வாழ்ந்த குறும்பர்கள் பாண்டிய மன்னனுக்கு பல தொல்லைகளைக் கொடுத்தனர். இவர்களை அடக்கி ஒடுக்க வேண்டும் என்று மன்னன் முயற்சி செய்தான். அப்போது ஊத்துமலை ஜமீன்தார்களின் முன்னோர்கள் பெரும் படையெடுத்து வந்து குறும்பர்களின் தொல்லைகளை அடக்கினர். 

    இதனால் ஊத்துமலைப் பாளையம் அவர்களுக்கு வழங்கப்பட்டது. அந்தச் சமயத்தில் ஊத்துமலை பெருங்காடாக இருந்தது. ஜமீன்தார் தங்களது உறவுக் கூட்டத்தை அழைத்து வந்து காடுகளை அழித்து சீரமைத்து ஊரை உருவாக்கினார். அதன் பின் கோட்டை கட்டி வாழ்ந்து வந்தார். ஊத்துமலை ஜமீன்தார் சேரநாட்டிலிருந்து வந்ததாகவும் இதனாலேயே இவர் வம்சா வழியினர் வைணவ மதத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. வல்லப மகாராஜா (1534-1543) தென்காசியை தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தார். இவர் நடத்திய நவராத்திரி விழாவிற்கு ஊத்துமலை மன்னர் வந்து சிறப்பு செய்தார். (தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் தெப்பத்திருவிழாவை ஊத்துமலை ஜமீன்தார் வாரிசுகள் இப்போது நடத்தி வருகின்றனர்.) பாண்டியன் அரண்மனையில் தசரா விழா நடந்து கொண்டிருந்தது. அந்தச் சமயத்தில் வீரதீர செயல்கள் நடைபெறும். இதன் பொருட்டு சண்டையிடுவதற்காக இரண்டு யானைகள் கூட்டி வரப்பட்டன. 

    அதில் ஒரு யானை தப்பிச் சென்று வீதியில் தென்படும் மக்களை எல்லாம் தூக்கி வீசி காலால் மிதித்துக் கொல்ல முயன்றது. அந்த சமயத்தில் ஊத்துமலை மன்னர் அங்கு வந்து தைரியமாக யானையை அடக்கினார். இதை அறிந்த பாண்டிய மன்னன் அந்த யானையின் மீது ஜமீன்தாரை ஏற்றி மேளதாளத்துடன் வீதிஉலா வரச் செய்தார். அவருக்கு ஏராளமான பரிசுகளையும் வழங்கி வழியனுப்பி வைத்தார். தென்காசியை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த பாண்டிய மன்னன் சடையவர்மன் பராக்கிரம பாண்டியனுக்கும் ஊத்துமலை பாளையக்காரர்கள் உதவியுள்ளனர். மதுரையில் நாயக்கர் ஆட்சியை ஒழித்து விட்டு பாண்டியர் ஆட்சியை மீண்டும் நிலை நிறுத்த மாவீரன் பூலித்தேவன் தலைமையில் ஐந்து கோட்டைகள் அமைக்கப்பட்டன. அவற்றில் முக்கியமானது ஊத்துமலை கோட்டை. ஊத்துமலையில் கட்டப்பட்ட கோட்டைக்கு பஞ்ச பாண்டியர்களில் ஒருவரான மாறவர்மன் பெயர் சூட்டப்பட்டது. 


    ‘ஊற்று’ உள்ள மலை ‘ஊற்றுமலை’ என்றழைக்கப்பட்டு நாளடைவில் ஊத்துமலை என்று வழங்கலாயிற்று. ஊத்துமலை ஜமீன்தார்கள் ஆட்சி துவங்கிய காலம் அறியப் போதிய ஆதாரம் இல்லை. ஊத்துமலை ஜமீன்தார்கள் காட்டுக்குள் “டானா” என்ற இடத்தின் வடக்குப் பகுதியில் முதல் கோட்டையையும், ஊத்துமலை நகருக்கு வடக்கே உள்ள “வையம் தொழுவான்பாறை” என்ற இடத்தில் இரண்டாவது கோட்டையையும் அமைத்துள்ளனர். நாளடைவில் ஆட்சிப்பரப்பு விரிந்ததால் அரண்மனையை இடம் மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் மூன்றாவதாக ஊத்து மலையில் தற்போது ஆர்.சி. பள்ளி இருந்த இடத்துக்கு அரண்மனையை மாற்றினார்கள். இங்குதான் தமிழ்ச் சங்கம் நடத்தப்பட்டது. அரசவைக்கு பல கவிஞர்களை வரச்செய்து ஜமீன்தார்கள் தமிழ் வளர்த்தனர். இருதாலய மருதப்பதேவர் தனது காதல் மனைவிக்காக வீரகேரளம்புதூரை தலைநகராக மாற்றி அரண்மனையைக் கட்டினார். ராணி மீனாட்சி சுந்தர நாச்சியார் அருகிலுள்ள குருந்தன்மொழி கிராமத்தில் சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்தவர். 


    ஊத்துமலையில் அரண்மனை இருந்தபோது இருதாலய மருதப்பதேவர் பரிவாரங்களுடன் தனது குதிரையில் குருந்தன்மொழி சென்றார். அந்த சமயத்தில் மீனாட்சி சுந்தர நாச்சியாரை பார்த்து அவரது அழகில் மயங்கினார். தனது உடைவாளை அனுப்பி அவரிடம் மணம் முடிக்க சம்மதம் கேட்டார். ‘‘ஜமீன்தாரை மணக்க நான் சம்மதிக்கிறேன். ஆனால், வானம் பார்த்த பூமியான ஊத்துமலைக்கு நான் வாழ்க்கைப் படமாட்டேன். குளிர்ச்சியான இடத்தில் ஒரு அரண்மனை கட்டினால் நான் அவரோடு வாழ்கிறேன்” என்றார் மீனாட்சி சுந்தர நாச்சியார். 

    உடனே ஜமீன்தார் சிற்றாற்றின் குறுக்கே “தாயார் தோப்பு” என்னும் இடத்தில் தடுப்பணை கட்டினார். அந்த அணையிலிருந்து வீராணம் கால்வாய் வெட்டினார். வீரகேரளம்புதூர் என்ற இடத்தில் கால்வாயின் இருபுறங்களிலும் அரண்மனையைக் கட்டினார். அந்தக் காலத்திலேயே நீர்வழிப்பாதையை கட்டுப்படுத்தி மதிநுட்பத்துடன் தடுப்பணையை அவர் கட்டினார். ஆற்றில் வெள்ளம் வந்தால் அரண்மனை அழிந்து விடக்கூடாது என்பதற்காக ஒரு பர்லாங் தூரத்தில் ஒரு வடிகாலையும் அமைத்தார். அருகிலேயே நவநீத கிருஷ்ண சுவாமி கோயிலை கட்டினார். 




    தொடர்ந்து அரண்மனையை வீரகேரளம் புதூருக்கு மாற்றினார். 
    25.5.1864 அன்று இருதாலய மருத்தப்ப தேவருக்கும் மீனாட்சி சுந்தர நாச்சியாருக்கும் திருமணம் நடந்தது. அரண்மனையின் ஒருபுறம் இருவரும் வாழ்ந்தனர். மறுபுறம் ராஜதர்பார் நடந்தது. அதில், புலவர்களை அழைத்து வந்து தமிழ் வளர்க்கும் பணியும் தொய்வில்லாமல் நடந்தது. இரவு பகலாக ஓலைச் சுவடியில் புலவர் பெருமக்கள் கவிதைகளை வடித்தனர். 

    காதல் மனைவிக்காக ஊத்துமலை ஜமீன்தார் கட்டிய அரண்மனை வீரகேரளம் புதூரில் இப்போதும் சிறப்புடன் காணப்படுகிறது. ஊத்துமலையை ஆட்சி செய்த பாண்டிய மன்னன் வீரகேரளகுலவர்மன் (1021-1028) பெயரால் இந்த ஊர் உருவாகியிருக்கலாம். வீரகேரளம்புதூர் நகரை நிர்மாணித்த பிறகு திறப்பு விழாவிற்கு அப்போதைய சேர மன்னனை அழைத்து சிறப்பித்துள்ளனர். விழாவுக்கு வந்த சேரமன்னன் இங்குள்ள மக்கள் வீரமாக இருப்பதையும் இப்பகுதி கேரளம்போல் செழிப்புடன் இருப்பதையும் பார்த்து இதற்கு “வீரகேரளம்புதூர்” என்று பெயர் சூட்டியதாகவும் கூறப்படுகிறது.



    விழா, முடிந்து சேர மன்னன் தனது நாட்டிற்கு திரும்பும் வேளையில் ஊத்துமலை ஜமீன்தார் அவருக்கு ஒரு விநாயகர் சிலையை பரிசாக கொடுத்தார். அந்த சிலையை செங்கோட்டையில் பிரதிஷ்டை செய்தனர். அந்த கோயில் அமைந்துள்ள தெருவுக்கு “வீரகேரள விநாயகர் தெரு” என்று பெயரிட்டனர். தற்போதும் இந்த பெயர் விளங்கி வருகிறது. கேரளம் என்னும் பெயருக்கு ஏற்ப இந்த ஊர் கேரள நாட்டின் சாயலைக் கொண்டுள்ளது. தென்னை, மா, பலா, வாழை ஆகிய மரங்கள் செழிப்பாக காணப்படுகின்றன. இவ்வூர் தெப்பத்தில் உள்ள மண்டபம் கேரள கட்டிடக் கலையை ஒத்துள்ளது. மன்னர் மருதப்பபூபதி காலத்தில் வீரகேரளம்புதூர் “மருதபூபதி” என்னும் பெயருடன் விளங்கியதாக குறிப்பு உள்ளது. ஊத்துமலை ஜமீன்தார்கள் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், திருச்செந்தூர் முருகன் கோயில், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில், திருக்குற்றாலம் குற்றால நாதர் கோயில் உள்ளிட்ட பல கோயில்களின் நித்திய பூஜைக்கு நிலங்களை தானமாக வழங்கியுள்ளனர். மன்னார்கோயிலில் உள்ள ராஜகோபாலசுவாமி கோயிலில் கொடிமரம் நிறுவினார்கள். நாங்குநேரி வானமாமலை ஜீயர் மடத்துக்கும் ஊத்துமலை மன்னருக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருந்துள்ளது. 


    ஊத்துமலை ஜமீன்தார்களின் குலதெய்வம் நவநீதகிருஷ்ணசாமி. வைணவ மதத்தைச் சேர்ந்தவர்களாக அவர்கள் விளங்கியதால் அங்கு நடைபெறும் முக்கிய விழாக்களில் ஜீயர் சுவாமிகள் பங்கேற்று சிறப்பித்துள்ளார். நவநீதகிருஷ்ண சுவாமிக்கு மன்னர் தேரோட்டத் திருவிழா நடத்தினர். இறைவனுக்கு ஏராளமான அணிகலன்களையும் நிலங்களையும் வழங்கினர். வீரகேரளம்புதூரில் அரண்மனையின் தென்புறத்தில் ஸ்ரீ நவநீதகிருஷ்ணசாமி கோயில் உள்ளது. அங்கே நித்திய நைவேத்தியங்கள் சிறப்பாக நடைபெறுகிறது. அதற்குரிய நித்திய படித்தரம் பத்து வராகன், லாடு, லட்டு, ஜிலேபி, தேன்குழல் முதலியவை இறைவனுக்கு நிவேதனம் செய்யப்படும். ஒரு லாடு என்பது உரித்த தேங்காய் அளவுக்கு இருக்கும். தேன்குழல் பெரிய சந்தனக்கல் அளவுக்கு காணப்படும். தினந்தோறும் காலையில் விஸ்வரூபம், திருமஞ்சனம், காலசந்தி, உச்சிகாலம், சாயரட்சை, அர்த்தஜாமம் ஆகிய நான்குகால பூஜைகள் இங்கு சிறப்பாக நடக்கின்றன. 




    இந்தக் கோயிலில் முன்பு ரதவீதியில் தேர் உள்ளது. தேரைக் கடந்து உள்ளே நுழைந்தால் பிரமாண்ட வளைவு வரவேற்கிறது. “1911ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12ம் தேதியாகிய இன்றைய தினம் டெல்லி மாநகரில் நடக்கும் மாட்சிமை தாங்கிய இந்திய சக்கரவர்த்தி 5வது ஜார்ஜ், சக்கரவர்த்தினி மேரி இவர்களுடைய மகுடாபிஷேக மகோத்சவம் குறிப்பாக திருநெல்வேலி ஜில்லா, ஊத்துமலை ஜமீன் ராஜா பத்தியுள்ள பிரஜைகளால் இயற்றப்பட்டது” என்று அதில் தமிழில் கல்வெட்டு காணப்படுகிறது. எதிரே ஆங்கிலத்திலும் இதே தகவல் கல்வெட்டில் உள்ளது. இருபுறமும் உள்ள வீடுகள். தொடர்ந்து நடந்தால் தொன்மையான சிறப்புமிக்க நவநீத கிருஷ்ண சுவாமி கோயிலை அடையலாம். கோயிலின் முன்பக்கம் இரும்பாலான தீபஸ்தம்பம் உள்ளது. அந்தக் காலத்தில் இரவு முழுவதும் அணையாமல் தீபம் எரிய காவலர்கள் எண்ணெய் ஊற்றிக்கொண்டே இருப்பார்கள். கோயிலின் முன்புள்ள கல் மண்டபத்தில் உபரியான தேர்ச் சக்கரங்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

    கோயில் கதவு அருகே மியூரல்வகை ஓவியங்கள் பிரமிக்க வைக்கின்றன. நெடிய கதவைத் திறந்து உள்ளே நுழைந்தால் வலதுபுறம் திருவிழாக் காலங்களில் அரண்மனைப் பெண்கள் அமர்ந்து பூஜை செய்யும் காட்சி மண்டபம் உள்ளது. இங்கு தங்கக் கொடிமரம் கம்பீரமாக நிற்கிறது. இந்தக் கொடிமரத்தைச் சுற்றிவந்து வழிபடுகிறவர்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும், திருமணம் கைகூடும் என்று பக்தர்கள் நம்புகின்றனர். 

    நவநீத கிருஷ்ணன் கோயில் கொடிமரத்தைக் கடந்ததும், ஊத்துமலை ஜமீன்தார் இருதாலய மருதப்ப தேவரின் சிலை கம்பீரமாக காட்சிய ளிக்கிறது. தமிழையும், ஆன்மிகத்தையும் இரண்டு கண்களாக போற்றி பாதுகாத்த இவரது தோற்றம் பார்ப்பவர்களை வணங்கத் தூண்டுகிறது. இவரது தமிழ் பற்றுக்கு உதாரணமாக கோயில் வளாகத்தில் ஏராளமான ஓலைச்சுவடிகள் தற்போதும் காணப்படுகின்றன. எழுதி முடித்தும் முடிக்காமலும், பதம் செய்யப்பட்டும் நேர்த்தி செய்யப்படாமலும் உள்ள அந்த ஓலைச்சுவடிகள் உள்ளன. இங்குதான் இருதாலய மருதப்ப தேவர் தமிழ் அறிஞர்களைக் கொண்டு ஓலைச்சுவடிகளை எழுதியுள்ளார். ஆலயத்தின் வெளிப்பிராகாரத்தில் நூற்றுக்கணக்கானோர் அமர்ந்து பணி மேற்கொண்டிருந்திருக்கின்றனர். அந்தச் சுவடிகள்தாம் இவை. 

    மருதப்பரின் உறவினர்கள் சிலரும் பெருங்கவிஞர்களாக, இறையருள் பெற்ற புலவர்களாகத் திகழ்ந்துள்ளனர். இருதாலய மருதப்பத்தேவர் கல்வி ஞானம் மிகுந்தவர். தமிழறிஞர்களிடம் அவர் மிகுந்த நேசம் கொண்டிருந்தார்; அவர்களை அரவணைத்து உதவுவார். டாக்டர் உ.வே. சாமிநாத அய்யர் எழுதிய “நான் கண்டதும், கேட்டதும்” என்னும் நூலில் இதுபற்றிக் குறிப்பிட்டுள்ளார். ஓலைச் சுவடிகளை, புத்தகங்களாகப் பதிப்பித்த அண்ணல் அவர். அவர் பணி சிறக்க, இரண்டு வில் வண்டிகள் நிறைய ஓலைச் சுவடிகளை இருதாலய மருதப்பதேவர் வழங்கியுள்ளார். “ஊத்துமலை ஜமீன்தார்கள் கலைகளை மட்டுமன்றி, தமிழ் அறிஞர்களையும் போற்றி வந்தனர். 

    இவர்களது அரண்மனையில் அதிகமான ஓலைச்சுவடிகள் உள்ளன. நான் முதல் முதலில் இருதாலய மருதப்ப தேவரை அரண்மனையில் சந்தித்தபோது அவர் வேட்டைக்காரர் கோலத்தில் இருந்தார்’’ என்றும் “மன்னர் மருதப்பர், தினமும் காலையில் நான்கு மணிக்கு எழுந்து காலைக்கடன்களை முடிப்பார். பாலை பருகி 6 மணிக்கெல்லாம் பரிவாரங்களுடன் நகர் உலா செல்வார். யானை, குதிரை, காளை கட்டுமிடங்களை நேரடியாக பார்வையிடுவார். அவரால் அமைக்கப்பட்ட இருபுறமும் மரங்கள் சூழ்ந்த சாலையைப் பார்வையிட்டுக் கொண்டே உலாவுவார். காலை 8 மணி முதல் 10 மணி வரை தமிழ்ப் புலவர்களுடன் கலந்துரையாடுவார். காலை 10 மணிக்கு மேல் அரண்மனை கச்சேரிக்கு சென்று சமஸ்தான பணிகளை கவனிப்பார். மதிய உணவுக்குப் பிறகு மீண்டும் 2 மணிக்கு தமிழ் நூல்களைப் படிக்க உட்காருவார். தொடர்ந்து மாலை 4 மணியிலிருந்து 6 மணி வரை சமஸ்தான வேலைகளில் ஈடுபடுவார். பின்னர் தன்னை பார்க்க வந்தவர்களை உபசரித்து பேசுவார். ஓலைகளில் எழுதியுள்ளதை அவர்கள் நீட்டுவார்கள். அவற்றை படித்து பார்த்து மறுநாள் தனது கருத்தை சொல்வார். மாலையில் நல்ல பாடல்களை இசைக்கச் செய்து ஆலய வழிபாடு மேற்கொள்வார். வெளியூரில் இருந்து வந்த விருந்தினர்களை அவரே கோயிலுக்கு அழைத்து சென்று மரியாதை செய்து பிரசாதம் வழங்கி கவுரவிப்பார்” என்றும் தனது நூலில் உ.வே.சா. குறிப்பிட்டுள்ளார்.

    கோயில்களில் கவி பாடவும், ஓலைச்சுவடிகளை எழுதவும் கவிராயர்களை இருதாலய மருதப்பர் பணியமர்த்தினார். சங்கர நமச்சிவாயர் என்னும் புலவரை நன்னூலுக்கு உரை எழுதச்செய்தார். மாதம் ஒன்றுக்கு நான்கு கோட்டை நெல்லும், தினந்தோறும் ஒருபடி பாலும் அவருக்கு சன்மானமாக வழங்கப்பட்டது. இவரைக்கொண்டே தொல்காப்பியத்துக்கும் ஊத்துமலை ஜமீன்தார் உரை எழுதவைத்தார். அந்த உரை திருவனந்தபுரம் அரசு காப்பகத்தில் தற்போதும் பாதுகாக்கப்பட்டு வருவதாகச் சொல்லப்படுகிறது. சைவத்தையும் வைணவத்தையும் ஒருங்கே கருதிய மருதப்பர், அகரம் என்ற நகரில் மனக்காவல் ஈஸ்வரர், சிவகாமியம்மைக்கு பெருங்கோயிலை கட்டியுள்ளார் என்கிறார் டாக்டர் ராஜையா.

    ஊத்துமலை ஜமீன் வருவாய் தரக்கூடிய 52 கிராமங்களை உள்ளடக்கியது. அதில் கீழப்பாவூர், மேலப்பாவூர் கிராமங்களில் 272 ஏக்கர் நிலம் ஜமீன்தாருக்கு சொந்தமாக இருந்தது. இந்த இடங்களை வீரகேரளம்புதூர் நவநீத கிருஷ்ணசாமி கோயிலுக்கு எழுதி வைத்தார். அப்போதைய நிலவரப்படி ரூ 60 ஆயிரம் மதிப்புள்ள தங்கம், வெள்ளிப் பொருட்களையும் கோயிலுக்கு அளித்தார். இவரைப் போற்றி 344 பாடல்களை அண்ணாமலை ரெட்டியார் பாடியுள்ளார். ஒரு சமயம் மருதப்பத்தேவர் கழுகுமலை முருகனை தரிசிக்க நடந்து சென்றார். அப்போது பயணம் எளிமையாக அமைய காவடிச்சிந்து பாடல்களை அண்ணாமலை ரெட்டியார் பாடியவாறு கூடவே சென்றார். இப்பாடல்களை புலமை படைத்த ஊத்துமலை மன்னரே இயற்றியதாக ஒரு கருத்து உள்ளது என்கிறார் எழுத்தாளரும், தென்காசி அரசு வக்கீலுமான மருது பாண்டியர். இப்பாடல்களை நூலாக வெளியிட்டார் மருதப்ப மன்னர். இந்த காவடிசிந்து ஐ.நா சபையில் இசைப் பேரரசி எம்.எஸ். சுப்புலெட்சுமியால் பாடி கூடுதல் பெருமை பெற்றது. இந்நூலில் அரண்மனையின் அலங்காரத்தைப் பற்றியும், மருதப்பரின் செல்வச் செழிப்பான வாழ்க்கை மற்றும் இறைபக்தி பற்றியும் வர்ணித்து எழுதப்பட்டுள்ளது.

    ஓலைச்சுவடிகள் வைக்கப்பட்டிருந்த பகுதியை அடுத்து கோயிலைச் சுற்றி வரும்போது சுவாமி வாகனங்களைக் காணலாம். பொதுவாக கோயில்களில் காணப்படும் மரத்தால் செய்யப்பட்ட வாகனங்கள்போல் இல்லாமல், இங்கு செப்பு உலோகத்தால் செய்யப்பட்ட தேர், யானை, குதிரை உள்ளிட்ட வாகனங்கள் உள்ளன. இவை ஜமீன்தார்கள் கோயிலுக்கு தானமாக அளித்தவை. கோயில் வெளிபிராகாரத்தில் தற்போது ஆஞ்சநேயர், நவகிரக சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.12.09.1891 அன்று மருதப்பர் இப்பூவுலகை நீத்தார். மனம் கலங்கிய ராணியார் செய்வதறியாமல் தவித்தார். கணவரின் நோக்கத்தை ஈடேற்றவேண்டும் என்று உறுதி பூண்டார். நவநீத கிருஷ்ண சுவாமியின் அருளோடு அவர் ஆட்சி பொறுப்பை ஏற்க முன்வந்தார். 

    ஆங்கிலேயர் ஆட்சியில் கணவனை இழந்தவர் அரசாட்சி செய்ய முடியாது என்று ஒரு சட்டம் இருந்தது. மகாராணி, கணவர் இருதாலய மருதப்ப தேவர் போல மாவு பொம்மை ஒன்றைத் தயார் செய்தார். அவர் உயிரோடு இருந்தபோது மேற்கொண்டிருந்த அலங்காரங்களை தினமும் அந்தச் சிலைக்குச் செய்தார். ராஜதர்பாரில் அந்த பொம்மையை ராஜாவாக நிறுவி அதன் காலை தொட்டு வணங்கிய பின்னரே தனது அன்றாட செயல்களைத் தொடங்கினார். மருதப்பர் விட்டுச்சென்ற பணிகளை எல்லாம் சிரமேற்கொண்டு செய்தார். கோயிலுக்கு அருகே பொதுமக்களுக்காக கிணறு ஒன்றை வெட்டினார். அன்ன சத்திரம் அமைத்தார். கோயில் வளர்ச்சிக்காக, வீரகேரளம்புதூர், கலிங்கம்பட்டி, வடக்கு கிருஷ்ணபேரி (ம) ராமனூர், ராஜகோபாலபேரி, அச்சங்குன்றம், மேலகிருஷ்ணபேரி, முத்துகிருஷ்ணபேரி ஆகிய ஏழு கிராமங்களை இணைத்தார். (இதுகுறித்த கல்வெட்டு கோயில் முகப்பில் வைக்கப்பட்டுள்ளது.)


    மருதப்பர் உயிரோடு இருப்பதாகவே பாவித்து அந்த மாவு பொம்மையுடன் அரசாட்சி செய்தார் ராணி. 
    மகாராணியார் 1921  ஆண்டு ஜூலை 4 இல் இறந்தார் 

    தற்போது 150 வருடங்களை தாண்டியும் அந்த மாவு பொம்மை ஜமீன்தாரின் வாரிசான பாபுராஜ் என்ற மருதுபாண்டியரால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இப்படி, இருதாலய மருதப்ப தேவர் இன்றும் தம்முடன் வாழ்வதாகவே ஜமீன் வாரிசுகள் நம்புகின்றனர்.

    நவநீத கிருஷ்ணன் கோயில் ஜமீன் நிர்வாகத்தின் கீழ் இருந்தாலும் அனைத்து சமுதாயத்துக்கும் மண்டகப்படி உண்டு. கோயிலில் பங்குனி உத்திர திருவிழா பத்து நாட்கள் நடைபெறும். முதல்நாள் திருவிழாவை பிராமண சமூகத்தினரும், இரண்டாம் நாள் யாதவர் சமூகத்தினரும், 3வது நாள் பிள்ளைமாரும், 4வது நாள் கர்ணம் வகையாறாக்களும், 5வது நாள் நாச்சியார் என்னும் அரண்மனை பெண்களும், 6வது நாள் வீராணம் தேவர் இனத்தவர்களும், 7வது நாள் சின்ன புலியப்ப தேவர் வகையறாக்களும், 8வது நாள் ஜமீன் உறவினர்களும், 9வது நாள் தேவர் சமுதாயத்தை சேர்ந்தவர்களும், 10வது நாள் சேனை தலைவர் சமுதாயத்தினரும் நடத்தி வருகின்றனர். தேர்த்திருவிழா மிக விமர்சையாக நடக்கும். முதலில் ஜமீன்தார் வடம் பிடித்து இழுத்த பின்னரே தேரோட்டம் நடக்கும். வானில் கருடன் வட்டமிட்ட பிறகே தேரை வடம் பிடித்துக்கொடுப்பார் ஜமீன்தார். தேரடி முக்கில் ஒரு காவல் தெய்வம் உள்ளது. இந்த தெய்வத்துக்கு அசைவப் படையலும் உண்டு. மழை பொய்த்தால் ஜமீன்தார் தலைமையில் இந்த தெய்வத்துக்கு பூஜை நடக்கும். உடனடியாக மழைபொழியும் அதிசயமும் நடந்துள்ளது.

    நவநீத கிருஷ்ணர் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா மிகச் சிறப்பாக நடைபெறும். அதுசமயம் ஆலயத்தில் வேலை செய்யும் அனைவரும் கோயில் நிர்வாக அதிகாரி தலைமையில் அரண்மனைக்கு சென்று மேளதாளத்துடன் ஜமீன்தாரை அழைத்து வருவர். சரியாக நள்ளிரவு 12 மணிக்கு கிருஷ்ணர் அவதரித்த நேரத்தில் முதல் தரிசனம் ஜமீன்தாருக்குத்தான். அவருக்கு பரிவட்டம் கட்டி, மாலை அணிவித்து, சீடை, அப்பம், வெண்ணெய், அவல், பொரி ஆகியவை பிரசாதமாக வழங்கப்படும். அதன் பிறகே மற்றவர்கள் தரிசனம் செய்வர். அன்றைய தினம், குருவாயூரில் இருப்பது போலவே சிறப்பு அலங்காரத்தில் குழந்தையாக நவநீத கிருஷ்ணன் காட்சியளிப்பார். இங்குள்ள உற்சவர் ராஜகோபாலன், ருக்மணி, சத்யபாமா சிலைகள் ஐம்பொன்னால் உருவாக்கப்பட்டவை. சரஸ்வதி பூஜையின்போது வீரகேரளம்புதூரில் உள்ள முப்பிடாதி அம்மன், உஜ்ஜயினி மாகாளி அம்மன், கருமேனி அம்மன் கோயில்களில் கொலு வைப்பார்கள். மூன்று அம்மன்களும் சப்பரத்தில் பவனி வருவர். அன்று ராஜகோபால சுவாமி பரிவேட்டைக்கு சப்பரத்தில் புறப்படுவார். அன்றும் ஜமீன்தார் வந்து துவக்கி வைத்த பின்னரே சப்பரம் புறப்படும்.




    இருதாலய மருதப்ப தேவரையும், அவருக்கு பிறகு அரியணை ஏறிய ராணி மீனாட்சி சுந்தர நாச்சியாரையும் ஜமீன் சுப்பையா தேவர் கடவுளாகவே கருதினார். சிற்றாற்றின் கரையில் இருதாலய ஈஸ்வரர் என்ற பெயரில் ஒரு சிவாலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் சிவனுக்கு இருதாலய மருதப்பர் என்றே பெயர்! கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ள சிவபெருமான் மருதப்ப தேவராகவே வணங்கப்பட்டு வருகிறார். தெற்கு நோக்கி இருக்கும் அம்மன் சந்நதி கருவறையில் ராணி மீனாட்சி சுந்தர நாச்சியாரின் சிலை உள்ளது. இருவரையும் வணங்குவது போல எதிரே உள்ள தூணில் சுப்பையா தேவர் சிலை காணப்படுகிறது. 

    இந்தச் சிறிய கோயிலில் நவகன்னிகள், நந்தியம்பெருமான் உள்ளிட்ட தெய்வங்களும் உள்ளன. இக்கோயிலில் பிரதோஷம் உள்ளிட்ட விழாக்கள் சிறப்பாக நடந்து வருகின்றன.ஜமீன்களின் சீரிய ஆன்மிகப் பணியைப் பறைசாற்றும் வகையில் கோமதி அம்மனை ஜமீன்தார் தனது மகளாக பாவித்து வழிபடும் திருவிழா நடைபெறுகிறது. பொதுவாக ஒரு பெண் தெய்வத்தை அன்னையாக பாவிப்பது வழக்கம்; ஆனால், மகளாக பாவித்து நடத்தப்படும் இந்த அதிசய வழிபாடு நெல்லை மாவட்டத்தில் உள்ள சங்கர நாராயண சுவாமி கோயிலில் நடக்கிறது.