Posts

Showing posts with the label HERA

LLIAD EPIC LITERATURE

Image
LLIAD EPIC LITERATURE இலியட் மஹாகாவியம்  கிரேக்க கதைகளையும் கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள் ஆதிகால கிரேக்கர்களின் சமய நம்பிக்கை பல தெய்வ உருவ வழிபாட்டுக் கோட்பாட்டில் அமைந்திருந்தது. வானத்துக்கும் பூமிக்கும் தனித்தனியே கடவுள்கள் இருந்தனர். மலைகளுக்கும் கடலுக்கும் கடவுளர்கள் கற்பிக்கப்பட்டனர். சூரியனும் சந்திரனும் கடவுளர்களாகத் தெரிந்தனர். நெருப்புக்கும் நீருக்கும் கடவுளர்கள் இருந்தனர். காட்டுக்கென்றும் கழனிக்கென்றும் கடவுளர்கள் இருந்தனர். காட்டில் அலையும் மிருகங்களுக்கென்றும், கடலில் திரியும் மீன்களுக்கும் கடவுள்கள் உண்டு. வயலில் விளையும் தானியங்களுக்கும், காய்த்துக் குலுங்கும் கனிகளுக்கும் கடவுள்கள் உண்டு. இரும்படிக்கும் கருமானுக்கும் தனியாகக் கடவுள் இருந்தான். வேட்டைக்காரர்களுக்கு வேண்டியவை செய்ய தெய்வம் இருந்தது. போருக்குச் சென்றாலும் வெற்றியை ஈட்டித்தர கடவுள் இருந்தது. கல்விக்குத் தனித் தெய்வம் உண்டு. காதலுக்கும் அது போல் தனியே தெய்வம் உண்டு. செல்வத்துக்கும், சேமத்துக்கும் தனியே கடவுளோ தெய்வமோ கற்பிக்கப்பட்டிருந்தது. இப்படி எல்லாவற்றுக்கும் தனித்தனியே கடவுள்க...