ORU VIRAL KRISHNA RAO DIED 2002 AUGUST 16
ORU VIRAL KRISHNA RAO DIED 2002 AUGUST 16 .”ஒரு விரல்” கிருஷ்ணாராவ்– வயது-73. ஒரு விரல் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர். கிருஷ்ணாராவ் என்ற தனது இயற்பெயருடன் தனது முதல் படத்தின் பெயரான ”ஒரு விரல்” என்பதைச் சேர்த்துக் கொண்டு படங்களில் நடித்து வந்தார். கருந்தேழ் கண்ணாயிரம், காவியத்தலைவி, நான்கு கில்லாடிகள், பிராயச்சித்தம், சிம்லா ஸ்பெஷல், அம்மன் அருள், வனஜா கிரிஜா, எல்லோரும் நல்லவரே, புகுந்த வீடு, சின்னத்தம்பி, ஆணிவேர் வெள்ளை ரோஜா, வறுமையின் நிறம் சிவப்பு, வணக்கத்திற்குரிய காதலியே, சிவப்புச் சூரியன், பொய்க்கால் குதிரை, தங்கக்கோபுரம், எங்க மாமா, மஞ்சள் குங்குமம்,உட்பட 600-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். இவருக்கு ஹம்சா என்ற மனைவியும் 3 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். வீட்டுக்குள் நடந்துகொண்டிருந்தபோது கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டு மூளையில் இரத்தம் உறைந்ததால் வடபழனியிலுள்ள விஜயா மருத்துவமனையிலும், பெஸ்ட் மருத்துவமனையிலும் சிகிட்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிட்சை பலனின்றி 16.8.2002 அன்று தனது 73-ஆவது வயதில் மரணமடைந்தார். இவர் நடித்த மேலும் சில படங்கள் : நான்...