Posts

Showing posts with the label SIVANTHA MANN

SIVANTHA MANN ,SHOOTING, EDGE.....

Image
 SIVANTHA MANN SHOOTING EDGE..... .அந்நிய மண்ணில் ‘சிவந்த மண்’ படமாகிக்கொண்டிருந்தது. படக்குழு அப்போது பாரிஸ் நகரத்தில் முகாமிட்டிருந்தது. அன்று படப்பிடிப்பு முடிந்து ஹோட்டலுக்குத் திரும்பி ஆயிற்று. அந்த ஹோட்டலின் பெரிய பூங்காவில் உலா போய்விட்டு தன் அறைக்குத் திரும்பிச் செல்ல லிப்டில் ஏறினார் கோபு. அப்போது உள்ளே நுழைந்தார் ஒருவர். அவர் தி.மு.க எம்.பி. முரசொலி மாறன். “என்ன கோபு சார் இங்கே. அதுவும் வேட்டியுடன்?” - மாறன் கேட்டார். “நான்தான் வேட்டி! சிவாஜி, ஸ்ரீதர் எல்லாரும் லுங்கியோட வாக்கிங் போறாங்க. ‘சிவந்த மண்’ ஷூட்டிங், இங்கதான் தங்கியிருக்கோம்” என கோபு பெருமையுடன் சொன்னார். “தப்பு பண்ணிட்டீங்களே கோபு” என்றவர், அவர்கள் படக்குழுவைக் காண வந்தார் மாறன். மாறனைப் பார்த்ததும் சிவாஜிக்கும் ஸ்ரீதருக்கும் வியப்பு. நல விசாரிப்புகளுக்குப் பின் முரசொலி மாறன் ஒரு குண்டைத் தூக்கி போட்டார். “ஸ்ரீதர்... இன்னும் ரெண்டு நாள் நீங்க இந்த ஹோட்டல்ல தங்கினீங்கன்னா ‘சிவந்த மண்’ படத்தோட பட்ஜெட் முழுவதையும் இந்த ஹோட்டலுக்கே செலவழிக்க வேண்டியிருக்கும். நல்லவேளை, நான் கோபுவைப் பார்த்தேன். உடனே காலி பண்ணிக்கி...

50 YEARS OF SIVANTHA MANN RELEASED 1969 NOVEMBER 9

Image
. பொன் விழா காணும் சிவாஜியின் “சிவந்தமண்”..!! சிவாஜிக்கு ஒரு பிரம்மாண்டம்! sivandha-mann தமிழ் சினிமாவின்  சிறந்த நடிகரும் புதுமை இயக்குநரும் ஆக்‌ஷன் திரைப்படம் ஒன்றில் ஒன்றாக இணைந்தனர். அவர்கள் இருவருமே அதிகம் பயணப்பட்டிராத பாதையில் கைகோத்தபோது தமிழ் ரசிகர்களுக்குக் கிடைத்தது ஓர் கேளிக்கைக் காவியம். 1969 நவம்பர் 9-ல் வெளியாகி 50 வருடங்களை நிறைவு செய்து பொன்விழா காணும் அந்தப் படம் ‘சிவந்த மண்’. நடிகர் திலகம் சிவாஜிக்கு ஆக் ஷன் பாதையை பாலாஜி திறந்து வைக்க, ராமண்ணா இன்னும் கொஞ்சம் செப்பனிட்டார். அதை ‘சிவந்த மண்’ மூலமாக ராஜபாட்டையாக விரிவாக்கம் செய்தார் இயக்குநர் ஸ்ரீதர், உடைப்பெடுத்த ஆறு சமூகப் படங்களில் பிரம்மாண்டம் என்பது ‘சிவந்த மண்’ணிலிருந்து தொடங்கியது. படத்தின் பாதிக்கும் மேற்பட்ட காட்சிகள் வெளிநாடுகளில் படமாக்கப்பட, எஞ்சிய காட்சிகளைப் பிரம்மாண்ட அரங்கங்கள் அமைத்துப் படமாக்கினார்கள். எகிப்தின் பிரமிடை மிகப் பெரிய அளவில் வடிவமைத்து ‘பட்டத்து ராணி’ பாடலுக்கான அரங்கம் அமைக்கப்பட்டது. போர்த்துக்கீசிய கப்பலின் உள்வடிவம், மதுபானக் கடைக்குப் பின்புறமாகப் புர...