RANDAR GUY , DICTIONERY OF CINEMA BORN 1937,NOVEMBER 8
RANDAR GUY , DICTIONERY OF CINEMA BORN 1937,NOVEMBER 8 ராண்டார் கை (Randor Guy) ஒரு திரைப்பட மற்றும் சட்ட வரலாற்றாளர்.[1] இவரது இயற்பெயர் மாதபூஷி ரங்கதுரை.[2] இவர் பிறந்த தேதி நவம்பர் 8, 1937[3][4] (அல்லது கலாட்டா.காம் தரும் விவரப்படி மார்ச் 13, 1945). ராண்டார் கை என்பது ரங்கதுரையின்(Ranga Dorai) ஆங்கில வடிவின் கரந்துறைமொழி (Anagram).இவர் திரைக்கதாசிரியர், இயக்குநர், நடிகர் என்று பன்முகப் பரிமாணம் கொண்டவர் ஆரம்பகால வாழ்க்கை[மூலத்தைத் தொகு] சிறுவயதில் நெல்லூரில் பள்ளிப்பருவ சமயத்திலேயே விஷ்ணுஜித் என்ற நாடகத்தை எழுதி இயக்கியவர். நாகேஸ்வரராவை அறிமுகப்படுத்திய பிரதிபா புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் பலராமையாவின் சகோதரர் கண்டசாலா ராதாகிருஷ்ணையாவின் நாட்டிய மண்டலி அமைப்பின் பக்த ராமதாஸ் நாடகத்தில் நடிக்க ஆரம்பித்தார்.[5] ராண்டார் கை சென்னைப் பல்கலைக்கழகத்தில் அறிவியல் மற்றும் சட்டத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். வழக்கறிஞராகத் தனது வாழ்க்கையை ஆரம்பித்தார். சிறிதுகாலம் கழித்து பேட்டர்சன் அன்கோ என்ற நிறுவனத்தில் 5 ஆண்டுகள் பணிபுரிந்தார். 1976ல் எழுத்துப்பணியில் முழுமைய...