50 YEARS OF SIVANTHA MANN RELEASED 1969 NOVEMBER 9
. பொன் விழா காணும் சிவாஜியின் “சிவந்தமண்”..!! சிவாஜிக்கு ஒரு பிரம்மாண்டம்! sivandha-mann தமிழ் சினிமாவின் சிறந்த நடிகரும் புதுமை இயக்குநரும் ஆக்ஷன் திரைப்படம் ஒன்றில் ஒன்றாக இணைந்தனர். அவர்கள் இருவருமே அதிகம் பயணப்பட்டிராத பாதையில் கைகோத்தபோது தமிழ் ரசிகர்களுக்குக் கிடைத்தது ஓர் கேளிக்கைக் காவியம். 1969 நவம்பர் 9-ல் வெளியாகி 50 வருடங்களை நிறைவு செய்து பொன்விழா காணும் அந்தப் படம் ‘சிவந்த மண்’. நடிகர் திலகம் சிவாஜிக்கு ஆக் ஷன் பாதையை பாலாஜி திறந்து வைக்க, ராமண்ணா இன்னும் கொஞ்சம் செப்பனிட்டார். அதை ‘சிவந்த மண்’ மூலமாக ராஜபாட்டையாக விரிவாக்கம் செய்தார் இயக்குநர் ஸ்ரீதர், உடைப்பெடுத்த ஆறு சமூகப் படங்களில் பிரம்மாண்டம் என்பது ‘சிவந்த மண்’ணிலிருந்து தொடங்கியது. படத்தின் பாதிக்கும் மேற்பட்ட காட்சிகள் வெளிநாடுகளில் படமாக்கப்பட, எஞ்சிய காட்சிகளைப் பிரம்மாண்ட அரங்கங்கள் அமைத்துப் படமாக்கினார்கள். எகிப்தின் பிரமிடை மிகப் பெரிய அளவில் வடிவமைத்து ‘பட்டத்து ராணி’ பாடலுக்கான அரங்கம் அமைக்கப்பட்டது. போர்த்துக்கீசிய கப்பலின் உள்வடிவம், மதுபானக் கடைக்குப் பின்புறமாகப் புர...