SECRET LANGUAGE OF CHINA - NOOSU FOR LADIES ONLY
SECRET LANGUAGE OF CHINA - NOOSU FOR LADIES ONLY ஆணுக்கு தெரியாமல் பெண் பேசிய ரகசிய மொழி ஆக்கம்:S.P.SENTHIL உலகில் வித்தியாசமான நாடு என்றால் அது சீனாதான். நம்மை வியக்க வைக்கும் பல்வேறு தகவல்களை சரித்திரம் முழுவதும் தனக்குள் வைத்திருக்கிறது. அதில் ஒன்றுதான் இந்த 'பெண்ணின் மொழி'. மனித நாகரிக வளர்ச்சியில் எழுத்துக்கள் தோன்றிய காலத்தில் அறிவில் சிறந்து விளங்கிய பெண்களை ஆண்களுக்கு பிடிக்கவில்லை. இதனால் பெண்களை ஒதுக்கி வைக்க ஆரம்பித்தார்கள். இதை புரிந்து கொண்ட பெண்கள் எதுவும் தெரியாத அப்பாவிப் பெண்கள் போல் நடிக்கத் தொடங்கினார்கள். #நுஷு_எழுத்துக்கள் சீனப் பெண்கள் ஒருபடி மேலே போய் தங்களுக்கு எழுதப் படிக்கக் கூட தெரியாது என்பது போல் நடித்தார்கள். ஒரு மாதம், இரண்டு மாதம் அல்ல. பல நூற்றாண்டுகள் இந்த நடிப்பு தொடர்ந்தது. அப்போது பெண்கள் தங்களுக்கு என்று தனி எழுத்து வடிவம் பயன்படுத்த தொடங்கினார்கள். பெண்கள் பேசுவதற்கும் எழுதுவதற்கும் என்று தனியாக ஒரு மொழியை உருவாக்கினார்கள். அந்த மொழிக்கு 'நுஷு' என்று பெயர் வைத்தார்கள். நுஷு என்றால் சீன மொழியில் 'பெண்ணின் எழுத்து' என்று...