ANJALAIAMMAL FREEDOM FIGHTER BORN 1890 -1961 JANUARY 20
ANJALAIAMMAL FREEDOM FIGHTER BORN 1890 -1961 JANUARY 20 நம் நாட்டின் விடுதலைக்காக போராடிய பெண்கள் பல பேர் உண்டு..அதற்காக அவர்கள் செய்த தியாகங்கள் ஏராளம்..கடலூரை சேர்ந்த ஆஞ்சலை அம்மாள் அப்படி பட்ட ஒரு வீரப் பெண்மணி..கல்வி அறிவு இல்லாவிட்டாலும்..தன் கணவரிடம் செய்திகளை கேட்டு தெரிந்து கொண்டு வீறு கொண்டு எழுந்தார். அஞ்சலை அம்மாள் பிறந்தது 1890ஆம் ஆண்டு. 1921ஆம் ஆண்டில் தனது முப்பத்தியோராவது வயதில் சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்டு, தமிழகத்தின் முதல் பெண் சுதந்திரப் போராளி எனும் பெருமையைப் பெற்றார். இவரும் இவரது கணவரும் நம் நாட்டில் நடந்த அத்தனை போராட்டங்களிலும் கலந்து கொண்டார்கள் தொழுநோயால் பாதிக்கப்பட்ட வீரர் சுப்பிரமணிய சிவா விற்கு அடைக்கலம் கொடுத்து பாதுகாத்தவர் அஞ்சலையம்மாள்🙏🙏🙏🙏🙏 நாட்டின் விடுதலைக்கான போராட்ட களத்தில் இருந்த பெண்மணிகளில் ஒருவரான ஜான்சிராணி லட்சுமிபாய் தனது குழந்தையை முதுகில் சுமந்தபடி ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடினார். அஞ்சலையம்மாளோ வயிற்றில் குழந்தையை சுமந்தபடி அன்னியருக்கு எதிரான போராட்டங்களில் கலந்துகொண்டு சிறைவாசத்தை அனுபவித்தார். பாரம்பரியமி...