SURRENDER OF EAST INDIA COMPANY TO AURANGAZEEB
SURRENDER OF EAST INDIA COMPANY TO AURANGAZEEB ஒளரங்கசீப் முன் மண்டியிட்ட கிழக்கிந்திய கம்பெனி ஜஃபர் சையத் பிபிசி உருது 25 செப்டெம்பர் 2018 ஆங்கிலேயரின் கோட்டையை ஒளரங்கசீப் முற்றுகையிட்டபோது நடந்தது என்ன? 1603ஆம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவிற்கு வந்தபிறகு தொடர் வெற்றிகளை பதிவு செய்தது. ஒரு நிறுவனம், உலக சரித்திரத்திலேயே முதல்முறையாக நாட்டையே பிடித்த வரலாற்று நிகழ்வை நிகழ்த்திக் காட்டியது. ஆனால் அதற்காக ஆங்கிலேயர்கள் எடுத்த முயற்சியில் இறுதியில் வெற்றியடைந்தாலும், பல அவமானகரமான தோல்விகளையும் சந்திக்க நேர்ந்தது. தோல்விகளை மறைப்பதற்காக பல முயற்சிகளை மேற்கொண்ட கிழக்கிந்திய கம்பெனி நிர்வாகம் கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதை நிரூபிப்பதில் வெற்றியும் கண்டது.சிராஜ் உத் தவ்லா மற்றும் திப்பு சுல்தானை வெற்றிக் கொள்வதற்கு முன்னர், கிழக்கு இந்தியா கம்பெனி முகலாய பேரரசர் ஒளரங்கசீப்பிற்கு எதிராக போரிட முயன்று படுதோல்வியை எதிர்கொண்டது. ஒளரங்கசீப் முன் மண்டியிட்ட கிழக்கிந்திய கம்பெனி பிறகு, பிரிட்டனின் தூதர்கள் கைவிலங்குகளால் பிணைக்கப்பட்டு, முகலாய அரசவையில் ஒளரங்கசீ...