Posts

Showing posts with the label portugal

கோவா (1947) 1961 HISTORY OF GOA

Image
 HISTORY OF  GOA 1961 “கோவா தெரியுமா மாலு?” என்று கேட்டான் பாலு. “எனக்குத் தெரிந்து நிறைய கோவா இருக்கிறது. அதில் ரொம்பப் பிடித்தது பால் கோவா. இன்றைக்குக்கூட ஞாநி மாமா ஆவினிலிருந்து வாங்கி வந்து கொடுத்தார். கோவா என்கிற கொய்யாப்பழம் எனக்குப் பிடிக்காது. கோவா என்று நம் நாட்டில் ஒரு மாநிலம் இருக்கிறது. அங்கேதான் ஆண்டுதோறும் உலகத் திரைப்பட விழாவை இந்திய அரசு நடத்துகிறது. அண்ணாமலை மாமா தவறாமல் போகிறார். கோவாவில் வாடகைக்கு மோட்டார் சைக்கிள் தரும் வழக்கம் இருகிறது என்று அவர் சொன்னார். நீ எந்தக் கோவாவைப் பற்றி கேட்கிறாய்?” என்றேன். “அப்பாடா, ஒரு வழியாக விஷயத்துக்கு வந்தாய். கடைசியாக சொன்னாயே அந்த கோவாவைத்தான் தெரியுமா என்று கேட்டேன்.” என்றான் பாலு. “அந்த கோவாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் இருக்கும் சில தொடர்புகளைச் சொல்லட்டுமா?” என்றார் மாமா. 1965இல் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் நடந்துகொண்டிருந்தபோது, எம்.ஜி.ஆர். கோவாவில் படப்பிடிப்புக்குப் போய்விட்டாராம். இது அவர் கட்சிக்குள் பிரச்னையாக்கப்பட்டதாம். கோவாவை ஆண்ட போர்ச்சுகீசியர்கள்தான் சென்னை மயிலாப்பூரில் இருக்கும் ல...

VASCO-DA-GAMA ,PORTUGAL EXPLORER

Image
VASCO-DA-GAMA ,PORTUGAL EXPLORER வாஸ்கோ ட காமாவின் முதல் இந்தியப் பயணம்[தொகு] 1483 இல், டீகோ காவோ போர்ச்சுகலில் இருந்து ஆப்ரிக்காவின் காங்கோ ஆறு வரை கடலில் பயணம் செய்து வந்தடைந்தது; அதற்கு ஐந்தாண்டுகளுக்குப் பின் பார்டோலொமு டயஸ் ஆப்ரிக்க கண்டத்தை கடல் வழியே கடந்து, இந்தியப் பெருங்கடலை எட்டிப் பார்த்தது. ஒரு கதைப் படி, ஆப்ரிக்காவின் தொன்கோடி முனைக்கு "நன்நம்பிக்கை முனை" எனப் பெயர் வைத்தது - டயஸ் தான் என்பார்கள். (அதே இடத்திற்கு திரும்பவும் வந்து, பின் அங்கிருந்து இந்தியாவை அடையும் பயணத்தை துவக்கிடலாம் என்ற நம்பிக்கையில்). பின்னர் இன்னொரு பயணத்தில் அவர் இறந்து விட்டதால், அந்த பொறுப்பு வாஸ்கோ ட காமாவிடம் ஒப்படைக்கப்பட்டது. வெனிஸ் நகரத்திலிருந்து 1497 ஜூலை 8 இல் வாஸ்கோட காமா புறப்பட்டார்  அதன் பின்னர் நன்நம்பிக்கை முனையை 1497 இல் அடைந்தார் வாஸ்கோ ட காமா. பின்னர் அங்கிருந்து, ஆப்ரிக்காவின் கிழக்கு கரையோரமாகவே மூன்று இடங்களில் நிறுத்திய பின்னர், நான்காவது இடமாக, கிழக்கு ஆப்ரிக்காவில் மலிந்தியை (தற்போதைய கென்யா) அடைந்தார். மலிந்தியில், இந்தியப் பெருங்கடலின் ...

பெர்டினென்ட் மகலன் உலகை சுற்றி வர புறப்பட்ட நாள் ஆகஸ்ட் 10,1519

Image
பெர்டினென்ட் மகலன்  உலகை சுற்றி வர  புறப்பட்ட நாள் ஆகஸ்ட் 10,1519  பெர்டினென்ட் மகலன் அல்லது பெர்டினண்டு மகாலன் (Fernando de Magallanes) (1480 - ஏப்ரல் 27, 1521) போர்த்துக்கேய மாலுமி. உலகைச் சுற்றிவந்த முதல் மனிதராக அறியப்படுகிறார்.  1519 இல் உலகைக் கப்பல் மூலம் சுற்றிவந்து நிறைவு செய்தார். பசுபிக் கடலுக்கு அப்பெயரை இவர் இட்டார். பெர்டினென்ட் மகலன் Ferdinand Magellan பிறப்பு பெர்னாவோ டெ மகெலாஸ் 1480 சப்ரோசா,  போர்த்துகல் இறப்பு ஏப்ரல் 27, 1521 (அகவை 40–41) மக்தான்,  பிலிப்பீன்சு தேசியம் போத்துக்கீசர் அறியப்படுவது உலகைச் சுற்றிவந்த முதல் கப்பலின் கப்டன் கையொப்பம் குடும்பச்சூழல்] போர்ச்சுக்கல்லின் வடக்குப் பகுதியிலுள்ள பொன்ரே டே பாரா எனும் பகுதியில் மகலன் பிறந்தார். இவருக்கு பன்னிரண்டு வயது இருக்கும்போதே 1492 இல் அவனது அப்பா இரண்டாம் ஜோன் மன்னனின் அரசிக்கு எடுபிடி வேலை செய்ய அரண்மனைக்கு அனுப்பினார். இருப்பினும் அவனது படிப்பு தடைப்படவில்லை. அவனது படிப்புச் செலவினை இரண்டாம் ஜோன் மன்னன் ஏற்றுக் கொண்டார்.  மகலனின் அண்ணாவின் ...