KILAKKE POKUM RAYIL
KILAKKE POKUM RAYIL கடல் தொடாத நதி - 27 - கிழக்கே போகும் ரயில் எப்போ வரும்? அன்னக்கிளி ஆர்.செல்வராஜ் பிரீமியம் ஸ்டோரி ஒரு படத்தின் திரைக்கதை எங்கேயோ ஆரம்பித்து, எங்கேயோ முடிந்த தருணங்கள் ஏராளம். பாரதிராஜா, ‘16 வயதினிலே’ படத்தை முடித்ததும் அடுத்த படத்துக்காக உருவாக்கிய கதை, ‘கிழக்கே போகும் ரயில் எப்போ வரும்?’ கடல் தொடாத நதி - 27 - கிழக்கே போகும் ரயில் எப்போ வரும்? கதை விவாதம் முடிந்து, ஷூட்டிங் கிளம்பத் தயாராகினர். எனக்கு ‘இந்தக் கதையில் ஏதோ ஒண்ணு குறையுதே’ எனத் தயக்கமாகவே இருந்தது. மறுநாள் காலை, எல்லோரும் கிளம்பப் போகிறார்கள். முந்தின நாள் இரவு ஒரு பிரெஞ்சு நாவலைப் படித்துக் கொண்டிருந்தேன்; மூளைக்குள் ஒரு ஸ்பார்க். காலையில் எழுந்ததும் பாரதி ராஜாவைத் தொடர்புகொண்டேன். அப்போது செல்போன் இல்லை. யாரோ அவனுடைய அலுவலகத்தில் எடுத்தார்கள். ‘‘பாரதியை என்னிடம் பேசச் சொல்லுங்கள்’’ என்றேன். ஒவ்வொருவராக ரயில் பிடிக்க ஆயத்தமாகிக்கொண்டிருப்பது அவர்களின் பரபரப்பில் புரிந்தது. எனக்கு போன் வரவில்லை. இருப்பு கொள்ளாமல் மீண்டும் போன் செய்தேன். ‘‘ஷூட்டிங் கிளம்பிட்டேன்.அப்புறம் பேசறேன்னு சொல்லுங்க’...