Posts

Showing posts with the label பாலயோகினி

பாலயோகினி பேபி சரோஜா

Image
பாலயோகினி  பேபி சரோஜா அன்றைய புகழ்பெற்ற இயக்குனர் கே சுப்ரமணியம் அவர்களால் பாலயோகினி (1937)  திரைப்படத்தின் மூலம் ஐந்து வயது குழந்தை ஒருவர் அறிமுகம் ஆனார்... குழந்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட பாலயோகினி படத்தில்...அந்த  ஐந்து வயது குழந்தையுடன்  கே ஆர் செல்லம், பால சரஸ்வதி, ஆர் பிரகதாம்பாள், பேபி ருக்குமணி ஆகியோரும் நடித்தனர்... படம் வெளிவந்தபோது அனைவரையும் விட அந்தக்குழந்தை மிகப்பெரும் புகழ் அடைந்தாள்... அன்றைய புகழ்பெற்ற ஹாலிவுட் குழந்தை நட்சத்திரமான ஷர்லி டெம்பிளுக்கு இணையாக புகழப்பட்டார்... பத்திரிகைகள் அவரை தமிழகத்தின் ஷர்லி டெம்பிள் என அழைத்தன...  தமிழ் பெண்கள் தன குழந்தையாகவே அவரை பார்த்து புல்லரித்துப் போனார்கள்...  தமிழ் திரைஉலகின் சரித்திரத்தில் முதல் முறையாக அந்தக் குழந்தையின் பெயரை தங்கள் தயாரிப்புகளில் வியாபாரிகள் பயன்படுத்த ஆரம்பித்தார்கள்... அந்தக் குழந்தை --"பேபி சரோஜா" சரோஜா  சோப் - சரோஜா பவுடர் -  சரோஜா கண்மை -  சரோஜா வளையல்...என அவரின் பெயர் பல பொருட்களில் பயன்படுத்தப்பட்டது... மேலும் கைப்பைகள், ...