ANWARDEEN KHAN ,SECOND ARCOT NAWAB DIED 1749 AUGUST 3
ANWARDEEN KHAN ,SECOND ARCOT NAWAB DIED 1749 AUGUST 3 அன்வருத்தீன் கான் (Anwaruddin Khan) (1672 – 3 ஆகஸ்டு 1749), என்றழைக்கப்படும் முகமது அன்வருத்தீன் இரண்டாவது ஆற்காடு நவாப் ஆவார். முதலிரண்டு கர்நாடகப் போர்களில் பங்கு வகித்தவர்களில் முக்கிய நபர். தற்கால பாக்கித்தானில் 1721-1733 காலங்களில் இராணுவ சுபேதாரகப் பணியாற்றியவர். வாழ்க்கை அன்வருத்தீன் கான், தற்கால இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தின் அவத் பிரதேசத்தின் ஹர்தோய் மாவட்டத்தில் 1672ல் ஹாஜி முகமது அன்வர் உத்தீன் கானுக்குப் பிறந்தவர். தில்லி முகலாயப் பேரரசின் போர்ப் படையில் சேர்ந்த அன்வருத்தீன் கான், பின்னாளில் ஐதராபாத் நிசாம் முதலாம் ஆசப் ஷாவின் நம்பிக்கைக்கு உரியவரானார். ஐதராபாத் நிஜாம் பேரரசின் எல்லூர் மற்றும் இராஜமுந்திரி பகுதிகளுக்கு அன்வருத்தீன் கான் ஆளுநராக நியமிக்கப்பட்டார். 1725க்குப் பின்னர் அவுரங்கசீப் பகதூர் என்ற பட்டம் அன்வருத்தீன் கானுக்கு வழங்கினார். 1725 - 1743 முடிய சிறீகாகுளம் மற்றும் இராஜமகேந்திரபுரம் மற்றும் மசூலிப்பட்டினம் பகுதிகளின் பௌஜ்தாராக ஐதராபாத் நிசாமால் நியமிக்கப்பட்டார். இரண்டாம் சாதுல்...