Monday, 3 August 2020

ANWARDEEN KHAN ,SECOND ARCOT NAWAB DIED 1749 AUGUST 3


ANWARDEEN KHAN ,SECOND ARCOT NAWAB DIED 1749 AUGUST 3




அன்வருத்தீன் கான் (Anwaruddin Khan) (1672 – 3 ஆகஸ்டு 1749), என்றழைக்கப்படும் முகமது அன்வருத்தீன் இரண்டாவது ஆற்காடு நவாப் ஆவார். முதலிரண்டு கர்நாடகப் போர்களில் பங்கு வகித்தவர்களில் முக்கிய நபர். தற்கால பாக்கித்தானில் 1721-1733 காலங்களில் இராணுவ சுபேதாரகப் பணியாற்றியவர்.

வாழ்க்கை
அன்வருத்தீன் கான், தற்கால இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தின் அவத் பிரதேசத்தின் ஹர்தோய் மாவட்டத்தில் 1672ல் ஹாஜி முகமது அன்வர் உத்தீன் கானுக்குப் பிறந்தவர்.

தில்லி முகலாயப் பேரரசின் போர்ப் படையில் சேர்ந்த அன்வருத்தீன் கான், பின்னாளில் ஐதராபாத் நிசாம் முதலாம் ஆசப் ஷாவின் நம்பிக்கைக்கு உரியவரானார்.

ஐதராபாத் நிஜாம் பேரரசின் எல்லூர் மற்றும் இராஜமுந்திரி பகுதிகளுக்கு அன்வருத்தீன் கான் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

1725க்குப் பின்னர் அவுரங்கசீப் பகதூர் என்ற பட்டம் அன்வருத்தீன் கானுக்கு வழங்கினார். 1725 - 1743 முடிய சிறீகாகுளம் மற்றும் இராஜமகேந்திரபுரம் மற்றும் மசூலிப்பட்டினம் பகுதிகளின் பௌஜ்தாராக ஐதராபாத் நிசாமால் நியமிக்கப்பட்டார்.

இரண்டாம் சாதுல்லா கான் இறந்த பின்னர், சூலை 1744ல் ஐதராபாத் நிஜாமின் பிரதிநிதியாகவும், ஆற்காடு நவாப் ஆகவும் நியமிக்கப்பட்டார். இவ்வாறாக அன்வருத்தீன் கான் இரண்டாம் ஆற்காடு நவாபு வம்சத்தினை நிறுவினார்.

பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியர்களிடத்தில் நட்புடன் பழகிய அன்வருத்தீன் கான், 1748ல் ஐதராபாத் நிஜாம் மன்னர் நிஜாம் உல் மாலிக்கின் இறப்பிற்குப் பின், பிரெஞ்சுக் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியாளர்களிடம் பிணக்குக் கொண்டார்.

தென்னிந்தியாவில் தங்கள் பலத்தை நிருபிக்க, பிரித்தானிய மற்றும் பிரான்சு கிழக்கிந்திய கம்பெனி நிறுவனத்தினர்கள் போட்டியிட்டதன் விளைவாக 1746ல் முதலாம் கர்நாடகப் போர் நடைபெற்றது. ஆற்காடு பகுதி இவ்வாறக இரண்டு கம்பெனியர்களுக்குமிடையே போர்க்களமானது.

1746ல் மதராஸ் சண்டையில், பிரெஞ்ச் கம்பெனிப் படைகள், பிரித்தானிய கம்பெனியின் சென்னையின் புனித ஜார்ஜ் கோட்டையைக் கைப்பற்றியது. முகமது அன்வருத்தீன் கான், கம்பெனி ஆட்சியாளரகளின் இரண்டு தரப்பினரையும் கூப்பிட்டு கண்டித்து அமைதிப்படுத்தினார். ஆனால் பிரெஞ்ச் ஆளுநர் டூப்ளே, ஆற்காடு நவாப் முகமது அன்வருத்தீனின் எச்சரிக்கையைப் பொருட்படுத்தவில்லை.


எனவே முகமது அன்வருத்தீன், பத்தாயிரம் பேர் கொண்ட படையுடன் தனது மகனை, பிரெஞ்சுப் படைகளிடமிருந்து சென்னையைக் கைப்பற்ற அனுப்பினார். 29 அக்டோபர் 1746 அன்று பிரெஞ்ச் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராக நடைபெற்ற அடையாறு போரில் ஆற்காடு நவாபு படைகள் தோற்றது.[1]முகமது அன்வருத்தீன் கானுக்கு ஆங்கிலேய - பிரெஞ்சு கம்பெனிகளிடமிருந்து, தங்களுக்கே ஆதரவு தரவேண்டும் என அழுத்தம் கொடுத்தனர். ஆனால் அன்வருத்தீன் கான் ஆங்கிலேயர்களுக்கு ஆதரவு அளிக்க முன் வந்தார்.

தென்னிந்தியாவில் ஆங்கிலேய ஆதிக்கத்தை அகற்றுவதற்கு, பிரெஞ்ச் கிழக்கிந்தியக் கம்பெனியினர், முகமது அன்வருத்தீன் கானுக்கு பதிலாக உசைன் தோஸ்த் கான் என்ற சந்தா சாகிபை, ஆற்காடு நவாப் ஆக பதவியில் அமர்த்த வேண்டும் என முடிவு செய்தனர்.

ஐதராபாத் நிசாம் நவாப் பதவிக்கு போட்டியிட்ட, இருவருக்கு ஆங்கிலேயர்களும், பிரெஞ்சியரும் தனித்தனியாக ஆதரவளித்தனர்.

1748ல் நிஜாம் உல் முல்க் இறந்து விடவே, அவரது இரண்டாம் மகன் நசீர் ஜங்கிற்கும், பேரன் முசாபர் ஜங்கிற்கு நிசாம் மன்னர் பதவிக்கு போட்டியிட்டனர். முசாபர் ஜங், தெற்கிலிருந்து சந்தா சாகிப் மற்றும் பிரெஞ்ச் படைகளுடன் ஐதராபாத் நோக்கி புறப்பட்டார்.

வயதான ஆற்காடு நவாப் முகமது அன்வருத்தீன் கான், ஆங்கிலேயப் படைகள் உதவியுடன், ஆம்பூர் அருகே 3 ஆகஸ்டு 1749ல் பிரெஞ்ச் படைகளுடன் நடைபெற்ற ஆம்பூர் போரில் அன்வருத்தீன் கான் தமது 77வது வயதில் கொல்லப்பட்டார்


#ஆம்பூர்_போர் , #3_ஆகஸ்டு_1749

இரண்டாம் #கருனாடகப்போரில், 1749 ஆம் ஆண்டு, #ஆகஸ்ட் மூன்றாம் நாள் #முஜாபர் ஜங்- சந்தா சாகிப் கூட்டு படைகளும் -பிரான்சு படைகளும் இணைந்து #ஆற்காடு நவாபு முகமது #அன்வருதீன்கான் படைகளுடன் *ஆம்பூரில்* போரிட்டன. இப்போரில், ஆற்காடு நவாபு, முகமது அன்வருதீன்கான் மரணமடைந்தார். இப்போர் *ஆம்பூர்* போர் என்றழைக்கப்படுகிறது. இரண்டாம் கர்நாடகப் போரின் முதல் பெரிய போர் *ஆம்பூர்* போராகும்

1748 இல் ஐதராபாத் நிசாம் நிசாம்-உல்-முல்க் இறந்தார்[2]. அவரது மகன் நாசிர் ஜங்கும் பேரன் முசாபர் ஜங்கும் அடுத்த நிசாமாகப் போட்டியிட்டனர். அதே வேளை தோஸ்த் அலியின் மருமகனான சந்தா சாகிப் முசாபர் ஜங்குடன் சேர்ந்து, பிரெஞ்சு ஆதரவைப் பெற்று ஆற்காடு நவாபாக முயன்றார். நாசிர் ஜங், ஆற்காடு நவாப் அன்வருத்தீன் கான் மற்றும் அவர் மகன் முகமது அலி கான் வாலாஜா ஆகியோர் பிரித்தானியக் கம்பெனிப் படைகளின் ஆதரவைப் பெற்றிருந்தனர்.

அன்வருத்தீன் கான் (#Anwaruddin Khan) (1672 – 3 ஆகஸ்டு 1749), என்றழைக்கப்படும் முகமது அன்வருத்தீன் இரண்டாவது ஆற்காடு நவாப் ஆவார். முதலிரண்டு கர்நாடகப் போர்களில் பங்கு வகித்தவர்களில் முக்கிய நபர். தற்கால பாக்கித்தானில் 1721-1733 காலங்களில் இராணுவ சுபேதாரகப் பணியாற்றியவர்.

முகம்மது அன்வர்த்தின் கான் 1672 ஆம் ஆண்டில், ஆவாத்தில் உள்ள ஹாரோயி மாவட்டத்தில் கோபாமாவில் பிறந்தார். இவர் ஹாஜி முகமது அன்வர் உத்-தின் கானின் மகன் ஆவார். இரண்டாம் கர்நாடகப் போரில் ஆங்கிலேயர்களும் பிரெஞ்சுக்காரர்களும் இவரைப் படடைக் காயாகப் பயன்படுத்திக் கொண்டனர் . இரண்டாம் கர்நாடகப் போரின் முடிவில் இவரது மகன் முகமது அலிக்கே முடி சூட்டப்பட்டது.
நாவாப் ஆவதற்கு முன் தில்லிக்கு சென்று, ஏகாதிபத்திய இராணுவத்தில் சேர்ந்தார். விரைவில் உயர் நிலைக்கு உயர்ந்தார். ஹைதராபாத்தின் முதல் நிஜாம் ஆவார்.

#ஆம்பூர்_போர் இரு வாரிசுரிமைச் சச்சரவுகள் காரணமாக (1749 - 1754) தோன்றியது. ஹைதராபாத்தில் நிசாம் பதவிக்கு வரவிரும்பிய முஸபர் ஜங் என்பவரை டியூப்ளே ஆதரித்தார். ஆற்காடு அரியணையைக்கைப்பற்ற விரும்பிய சந்தா சாகிப்புடன் டியூப்ளே ஏற்கனவே நட்பு கொண்டிருந்தார். இம்மூவரின் படைகள் முதலாம் கர்நாடகப்போரில் ஆங்கிலேயருக்கு பக்க பலமாக நின்ற அன்வாருதீனின் படைகளை முறியடித்தன.

1749ஆம் ஆண்டு நடைபெற்ற #ஆம்பூர் போரில் அன்வாரூதீன் கொல்லப்பட்டார். அந்த வெற்றியின் விளைவாக முஸபர் ஐங் நிசாம் பதவியை ஏற்றார். சந்தா சாகிப் ஆற்காடு நவாப் பதவியில் அமர்ந்தார். அன்வாருதீனின் மகன் முகமது அலி திருச்சிக்கு தப்பியோடினார். அவருக்கு ஆதரவாக ஆங்கிலேயர்கள் சில துருப்புக்களை அனுப்பிவைத்தனர். இதற்கிடையில் பிரிட்டிஷ் படைத்தளபதியான ராபர்ட் கிளைவ் ஆற்காட்டைக் கைப்பற்றினார். காவேரிப்பாக்கம் என்ற இடத்தில் பிரஞ்சுப்படைகளை முறியடித்தார். சந்தா சாகிப் கைப்பற்றப்பட்டு தஞ்சாவூரில் சிரச்சேதம் செய்யப்பட்டார்.

No comments:

Post a Comment