Thursday 27 August 2020

MY SCHOOL DAYS WITHOUT CLOCK


MY SCHOOL DAYS WITHOUT CLOCK




விருதுநகரில் கடிகாரம் இல்லாத என் பள்ளி வாழ்க்கை
பொழுது புலர்ந்தது !
சிலோன் ரேடியோவில் பிறந்தநாள் இன்று பிறந்தநாள்
நாம் பிள்ளைகள் போலெ தொல்லைகளெல்லாம் மறந்த நாள் என்று எங்கோ பாடும்போது சரியாக காலை ஏழு மணி .
டைட்டானிக் கப்பலில் சாப்பாட்டுக்கு ஓசை எழுப்புவது போல டேய் சின்னவனே ,பெரியவனே எந்திரிங்க ! இந்தாங்க சூடா காப்பியை
குடிங்கன்னு சொல்லுவாங்கன்னு தான நினைக்கிறீங்க ! அதான் இல்ல !!
ஒரு அஞ்சு நிமிஷம் பாப்பாங்க ! அப்பயும் எழுந்திருக்க மாட்டோம் . முதுகுல வலிக்கும் வலிக்காதது மாதிரி ஒரு அடி குடுப்பாங்க !
எழுந்திரிச்சி வெளியில போய் காலை
இளம் வெய்யிலில் நிற்போம் . 1960 களில் இப்போது போல் ஒசாண்படலத்தில் ஓட்டை விழாத காலம் . எனவே வருஷத்தில் 365 நாளும் காலையில் குளிர் அடிக்கும் .
.சிலோன் ரேடியோவில் பொங்கும் பூம்புனல் என்று
நினைக்கிறேன் .அது பாடும்போது மணி 7.30 . வலுக்கட்டாயமாக சாம்பல் கையில் திணிப்பாங்க .பல் விளக்குவதும் எங்க பல்லைக்காட்டு ன்னு சொன்னவுடன் ஆயிரத்தில் ஒருவன்ல பல்லை கட்டுவது போல .காட்டுவோம் இப்பிடியா பல்லை தேய்க்கிறதுன்னு பல்லை வலிக்க வலிக்க தேய்ச்சி விடுவாங்க
.இதுக்கு முன்னாடி காலை 6 .30 க்கு பயறு விற்கும்
கிழவியிடம் அஞ்சு பைசாவுக்கு மொச்சை பயறு
வாங்கி வச்சிருப்பாங்க .குளிச்சி முடிச்சிட்டு வர்றப்ப
பயறு வதக்கும் வாசனையே தனி . நெறையா வெங்காயம் போட்டு எண்ணையில் தாளிச்சி ,பக்கத்துக்கு வீட்டுல கருவேப்பிலை கடன் வாங்கி இறக்கும் போது மணி சரியாக எட்டுமணி .
நாங்க மாலைக்கோவில் தெருவில் குடியிருந்தோம்
தெப்பத்து கிழக்கு மூலையில் பூடத்திற்கு கொட்டுமேளத்தோடு வரும்போது மணி எட்டு .இது ஒரு நிமிஷம் கூட தவறியதாக சரித்திரமே இல்லை .மழை காலத்திலும்
மணி 8.15 .சரியாக பக்கத்துக்கு வீட்டு சேகர் ,பிரபாகர் ,தனபாலுவுடன் நாலு பேருமா முதுகுல புத்தகமூட்டையுடன் செல்வோம் .
மணி 8.20
பஸ் முதன் முதலாக வெள்ளைக்காரன் காலத்தில் செய்யப்பட்டமஞ்சள் பாடி ,சிகப்பு முகப்புடன் வண்ணம் பூசிய பஸ் மருளுத்து கொக்களாஞ்சேரி ரெம்ப சிரமப்பட்டு புள்ளத்தாச்சி மாதிரி நடந்து
வரும் .அதனுடைய உச்சபட்ச வேகமே மணிக்கு பத்து மைல் தான் .பஜாரை சுற்றி கருமாதி மடம் வழியாக மருளுத்து போகும்
கொஞ்சம் இருங் க ! லைலாவை மூஸா கிழவிகிட்ட இருந்து சிந்துபாத் காப்பாத்திட்டானான்னு ஒரு நிமிஷம் பாத்துட்டு வந்துடறேன் இளஞ் சிங்கம் படக்கதை பாக்கவிடாம ஒருத்தன் சொல்லுவான் .படிக்கிற பயக பேப்பர் படிக்கிறதுனாலதான் நாடே குட்டிசுவரா போகுதுன்னு சொல்லுவான் அந்த மாபெரும் விஞ்ஞானி .
பேசிக்கிட்டே போவோம் .யாராவது வந்து சொல்லுவாங்க தம்பி பாத்துப்போங்க ..
வெயிலா தேவன் யாரையோ வெட்டி
போட்ருக்கான் .நேர பாத்து போங்க .அங்க இங்க திரும்பாதிங்கன்னு.
அவ்வளவுதான் .
எங்கள் சந்தோசமெல்லாம் டமால்னு வெடிச்சி செதறிடும்
.
.

No comments:

Post a Comment