THE GREAT TRAIN ROBBERY
OF GOLD 1855 MAY 22
.ஓடும் ரயிலில் நடந்த தங்க கொள்ளை, 22 மே 1855
தமிழகத்தில் முதல் முறையாக ஓடும் ரயிலில் கொள்ளை நடந்துவிட்டதாம், ஊடகங்கள் பொங்குகின்றன, ஆனால் உலகில் என்ன நடந்திருக்கின்றது?
உலகின் மிக பிரபலமான கொள்ளை இன்றுவரை இங்கிலாந்தில் நடந்த ஓடும் ரயிலில் நடந்த தங்க கொள்ளை, 22 மே 1855ல் நடந்த பிரமாண்ட கொள்ளை அதுஒரு கொள்ளை எப்படி அடிக்கபடவேண்டும் , எப்படி திட்டமிட வேண்டும் என்பதற்கு இன்றுவரை அகராதியாக திகழும் சம்பவம் அது.
அதாவது ரயிலின் ஒரு பெட்டியில் தங்கம் கொண்டு செல்லபடும், ரயில் புறப்பட 5 நிமிடம் முன்னால்தான் காவலோடு ஏற்படும், சீல் வைக்கபட்டு ரயில் கிளம்பும், இறங்குமிடமும் கடும் காவல் ரயில் நிற்காது, ஒரே வீக்னஸ் பயணிகள் ரயிலின் ஒரு பெட்டியில் இது இணைக்கபட்டிருக்கும்அதன் லாக்கரில் 4 சாவிகள் வசதி உண்டு, பிரமாண்ட லாக்கர் அது, உருவாக்கவே 2 வருடம் ஆனது. உடைப்பதோ, தூக்குவதோ சாத்தியமே இல்லை.சாவிகள் இன்றி திறக்கமுடியாது, 4 சாவிகளும் ஒரே நேரத்தில் செலுத்தபடவேண்டும்.
ஒரு சேர 4 அதிகாரிகள் திறப்பார்கள், தங்கம் நிரப்பபட்டு சீல் வைக்கபடும், பின் சேருமிடத்தில் அதுபோல் 4 அதிகாரிகள் காவல் சூழ திறப்பார்கள். 4 சாவிகளும் 4 இடங்களில் பாதுகாப்பாக இருக்கும். உச்சமாக ஒரு அதிகாரி கழுத்திலே சாவி தொங்கவிட்டிருப்பது யாருக்கும் தெரியாது, 4ம் சாவி இடம் மாறி மாறி பாதுகாக்கபடும்.
இதில் எப்படி கொள்ளை சாத்தியம்
ஒரு பெரும் கில்லாடி திட்டமிட்டான், ஒரு விலை மாது உட்பட 3 பேரை சேர்த்துகொண்டான், 4 சாவிகளையும் கடும் பாதுகாப்பிலும் தந்திரமாக நுழைந்து நகல் எடுத்தான். ஒரு முறை ஒத்திகையும் பார்த்தான், எல்லாம் டைமிங் ஒத்திகை,
எப்படி 4 சாவி நகல் எடுத்தான், எப்படி செய்தான் என்பதெல்லாம் மயிர் கூச்செறியும் விஷயங்கள், எழுதினால் தாங்காது. ஆனால் அட்டகாசமான வில்லன், நம்ம ஊர் திருடர்கள் எல்லாம் சும்மா.
கொஞ்சம் உளறிய ஒரு கூட்டாளியினை கொன்றும் போட்டான்.எப்படி ஒத்திகை பார்த்தான் என்றால், பிணபெட்டியில் பிணமாக ரயிலேறி படுத்துகொண்ட கில்லாடி அவன்.ஒரு சுபநாளில் கொள்ளையிட திட்டமிட்டான், எல்லாம் சரி, அவனும் அவளும் ரயில் ஏறினர். நடு வழியில் ரயில்பெட்டி மேல் நடந்து சிறிய துளை வழியாக இறங்கி லாக்கரை திறந்து தங்கத்தை எடுத்துவிட்டு, மிக சரியாக கூட்டாளி நிற்க சொன்ன இடத்தில் எறிந்துவிட்டு சாதுர்யமாக வந்து அமர்ந்தும் கொண்டான், டைமிங்
லண்டனே அலறியது, பிரிட்டன் அவமானத்தில் சிவந்தது, ஸ்காட்லாந்து யார்டு களமிறங்கியது, என்ன பெரிய கில்லாடி என்றாலும் ஒரு விஷயத்தில் மாட்டுவான் அல்லவா? அவன் மறந்தது என்ன? அது புகை வண்டி. ரயில்பெட்டி மேல் இவன் திறமை காட்டியபொழுது உடலெல்லாம் கரி அப்பி கொண்டது, அது முகத்திலும் இருந்தது, சிலர் கவனித்ததை போலிசிடம் சொன்னார்கள்
அவ்வளவுதான் எல்லா பயணிகள் வந்தவர்கள், போனவர்கள் எல்லோரையும் சோதித்து குற்றவாளியியில் ஒருவனை பிடித்தார்கள், அவன் மூலவரை காடிவிட்டான். அவர் அடுத்த காப்பி கடையில் காபி குடித்தபொழுது பிடித்தார்கள்.
அவன் லண்டனில் மகா பிரபலமானான், இப்படி ஒரு கில்லாடியா என அவனை கோர்ட்டில் ஆஜர் படுத்தியபொழுது பார்க்க அடுத்த நாடுகளில் இருந்தெல்லாம் மக்கள் விசா வாங்கி வந்தார்கள். லண்டன் கண்ட பெரும் கூட்டத்தில் அதுவும் ஒன்று
கோர்ட்டில் அவன் கொடுத்த வாக்குமூலத்தில் அரண்டு போய் இருந்தது நீதிமன்றம், இப்படியும் ஒருவன் திட்டமிட முடியுமா? இவ்வளவு நுட்பமா? என வியந்தார்கள்.நமது நாட்டில் இப்படி ஒரு அறிவாளியா என சிலர் காலரை தூக்கிகொண்டார்கள்.
அவன் பக்க்கத்து கல்லறை தோட்டத்தில் கல்லறையில் தங்கத்தை புதைத்து வைத்ததாக சொல்லிவிட்டு வெளிவந்தான், ஒரு பெண் வாயில் முத்தம் கொடுத்தாள், அவள் அதே விலைமாது.
முத்தம் கொடுத்தவள் வாய்க்குள் ஒரு பின்னை செலுத்திவிட்டு சென்றதை யாரும் கவனிக்கவில்லை, அந்நாளைய குதிரை வண்டி காவலில் செல்லும்பொழுது அந்த பின்னை வைத்து கை விலங்கினை திறந்து தப்பினான் அவன்.
அதன் பின் அவனையும் காணவில்லை, அவளையும் காணவில்லை ,பெரும்பான்மை தங்கத்தையும் காணவில்லை, உலகிலே கொள்ளையிட்டு அகபபட்டால் எப்படி மீதி தங்கத்தோடு தப்பி என்ன செய்யவேண்டும், என திட்டமிட்ட முதல் கொள்ளையன் அவனே, அவ்வளவு எச்சரிக்கை அவனுக்கு.இன்று வரை உலகின் சுவாரஸ்யமான கொள்ளை அது, உலகறிவுள்ள திருடர்களுக்கெல்லாம் அவனே குரு, துர் ஆத்மா, வழிகாட்டி எல்லாம், அப்படி ஒரு திறமையான திருடன் இனி பிறக்க வாய்ப்பில்லை என்கின்றார்கள், பெரும் கொள்ளையர்கள் அவன் ஆளுயர படத்தினை வைத்து ரகசியமாக வணங்குவர் என்பார்கள்
இப்பொழுது என்ன நடந்திருக்கின்றது, சேலத்தில் இருந்து சென்னை வந்த ரயிலில் அதே போல 340 கோடி ரூபாய் ஓடும் ரயிலில் கொள்ளையடிக்க பட்டிருக்கின்றது, தமிழ்நாடு அலறுகின்றது
இங்கிலாந்து கொள்ளையில் ஸ்காட்லாண்டு யார்டு தன்னை யார் என நிரூபித்தது, இதில் தமிழக போலிஸ் எப்படி தன்னை நிருபிக்கின்றது என பார்க்கலாம்
மகா சுவாரஸ்யமான கொள்ளை இது, குற்றவாளிகள் பிடிபடும்பொழுதுதான் உண்மை தெரியும், இப்பொழுதெல்லாம் குற்றவாளிக கழுத்தினை அறுத்துகொள்கின்றார்களாம், ஆனாலும் ஒரு விவர வட்டம் வெளிவரும்
.
No comments:
Post a Comment