Sunday 30 August 2020

TARA SUKKO HEAD SENT TO SHAHJAKHAN BY AURANGAZEEB 1659 AUGUST 30


TARA SUKKO  HEAD SENT TO SHAHJAKHAN 
BY AURANGAZEEB 1659 AUGUST 30
.
ஆகஸ்ட் 30 ,1659

அவுரங்கசீப்பின் பார்வைக்கு அனுப்பப்பட்டது தாரா சுக்கோவின் தலை .!
அதை ஷாஜகானுக்கு அனுப்பினார் அவுரங்கசீப் !!
அன்றிரவு பெரிய விருந்து .வெற்றிகரமாக தன் ஒரு சகோதரன் வெற்றிக்காக கொண்டாடினாள் சகோதரி ரோஷனா பேகம் !!! ஆகஸ்ட் 30 ,1659

.தாரா சுக்கோ ஷாஜகானின் முதல் மகன் ஆவார் .அவுரங்கசீப் பிற்கும் இவருக்கும் சிறிய வயது முதல் ஆகாது .பிரிய மகன் தாரா சுக்கோ சொன்னபடி யெல்லாம் ஷாஜகான் ஆடினார்

.அவுரங்கசீபை எவ்வளவு அவமானப் படுத்த முடியுமோ
அவ்வளவு தூரம் அவமானப் படுத்தினர் ஷாஜகானும் ,இந்த நிலையில் ஒரு அவசர செய்தி " ஷாஜகானின் உடல்நிலை மோசம் "

முராட் பக்ஸ் தன்னை அரசராக முடிசூடி குஜராத்தை விழுங்கி கொண்டார் . ஷா சுஜாவும் அதையே தான் செய்தார் வங்கத்தின் அரசர் ஆனார் .

அவுரங்கசீப் நிதானமாய் முன்னேறினார் .


தாராவிற்கு படைபலம் அதிகம் .மேலும் ஷாஜகான் துணை வேறு .ஆனால் படை நடத்தும்
அனுபவம் இல்லாதவர் .அவுரங்கசீப்புக்கோ படை நடத்துவதில் சூரர் .படைபலம் குறைவு .கூடவே மீர் ஜூம்லா ,தக்காண சுல்தான்கள் ஆதரவு.

முதலில் முரத் பாக்சுடன் இணைந்தார் .தாராவின் படைக்கும் ,அவுரங்கசீப்பிற்கும் சண்டை .வெற்றி பெற்று ஆக்ரா சென்றார் .போர் முடிவுற்றதும் " ஆலம்கீர் " என்று பொறிக்கப்பட்ட வாளுடன் வரவேற்றார் ஷாஜகான் .

என்னை சந்திக்க வா மகனே ...என்ற கடிதம் வேறு . அவுரங்கசீப் நிதானமாய் சிந்தித்தார் .தன்னை கொலை செய்ய சதி நடக்கிறது என்று சந்தேகப்பட்டார் .

தந்தையே கோட்டையை என்னிடம் ஒப்படையுங்கள் ..கடிதம் எழுதினார் .

கோட்டையை அடையுங்கள் - இது ஷாஜகான்


மூன்று நாள் பொறுமை காத்தார் அவுரங்கசீப் .நாலாவது நாள் கோட்டைக்கு செல்லும் யமுனை நதி நீரை நிறுத்தினார்

மனம் வெறுத்து போய் தனயன் கட்டளையை மீற முடியாமல் கோட்டை கதவை திறந்தார் . அவசரப்படவில்லை அவுரங்கசீப் .

ரெண்டுநாள் கழித்து சகோதரி ஜஹானாராவிடம் இருந்து ஒரு கடிதம் அதில் பேரரசில் பெரும்பகுதியை எடுத்துக்கொள் .சகோதரர்களுக்கு கொடுக்க வேண்டிய நியாயமான பங்கை கொடுத்து விடு .
தந்தை இது சமந்தமாய் பேச விரும்புகிறார் .

குழப்பத்தில் அவுரங்கசீப் !

சகோதரி ரோஷனா விடம் இருந்து ஒரு எச்சரிக்கை கடிதம்

அண்ணா ! உன்னை அழைத்து பேசுவதாக நடித்து அங்குள்ள பலம் வாய்ந்த அலி பெண்களால்
தாக்கி கொலை செய்வதாக திட்டம் .எச்சரிக்கையாய் இரு .

மறுநாள் அவுரங்கசீப்பின் மகன் ஒரே உதவியாளன் உடன் சென்று தாத்தாவை பார்க்க அனுமதி கேட்டான்
திடீரென்று ஷாஜகானின் பாதுகாவலரை தாக்கி கொன்றான் .அவுரங்கசீப் தந்தையை சந்திக்கவே இல்லை கைது செய்யப்பட்டு கோட்டைக்குள்ளே சகல சௌகரியங்களுடன் சிறை வைக்கப்பட்டார் ஷாஜகான்
ஆசனத்தில் அமர்ந்து நிர்வாகத்தை தானே ஏற்று நடத்து வதாய் அறிவித்தார் .முடி சூட்டி கொள்ளவில்லை

என் எதிரிகள் தோற்கடிக்கப்பட்டுள்ளனர் -இன்னும் ஓழிக்கப்படவில்லை

இதற்கிடையில் ஷாஜகான் தன் மகன் முரத்துக்கு கடிதம் எழுதினார்

" நீ அவுரங்கசீபை வீழ்த்தி அரியணையை கைப்பற்று
ஆட்சிப்பொறுப்பை நீயே ஏற்று நடத்து "
இந்த கடிதம் முராத் எங்கோ தவற விட்டு விட்டார் .அது அவுரங்கசீப் கையில் கிடைத்தது

உன்னை பார்த்து நாள் ஆகிறது .என்னோடு உணவருந்த வா என் சகோதரனே என்று அவுரங்கசீப்
கடிதம் எழுதினார் .விருந்தில் தாராளமாய் மது பரிமாறப்பட்டது .துணைக்கு ஒரு அடிமை பெண் .
முரத் பக்ஸ் கழித்த கடைசி சந்தோச நாள் அதுவே

.அதன் பிறகு கொலைக்குற்றம் சாட்டப்பட்டு
1661 டிசம்பரில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது

.அடுத்து சுஜா . போர்க்களத்தில் தப்பி ஓடி
பழங்குடியினரால் கிழக்கு வங்கத்தில் ( பங்களாதேஸ் ) கொலை செய்யப்பட்டார்

தாரா கொலை
----------------------

குஜராத்தில் பல ஆயத்தங்கள் செய்வதாய் தகவல் .உடனே அங்கு சென்றார் அவுரங்கசீப் .
ஓட ஓட துரத்தி மாலிக் ஜவான் என்ற நண்பரிடம் அடைக்கலம் புகுந்தார் .அவரோ " தாராவை
பிடித்து வைத்துள்ளேன் " என்று அவுரங்கசீப்புக்கு தகவல் அனுப்பினார்

நலிவடைந்த ஒரு பெண் யானை .அதன் மேல் கிழிந்த உடையில் கைகால்கள் கட்டப்பட்டபடி
தாரா சுக்கோ .பேராசை ஆள ஒருவர் மட்டும் போதும் .தாரா ஆபத்தானவன் ,அழிக்கப்பட வேண்டியவன்
நீ உண்மையான இஸ்லாமியனாக நடந்து கொள்ளவில்லை
மதத்துரோகம் செய்திருக்கிறாய்

மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது
ஆகஸ்ட் 30 ,1659

.
.



மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது
ஆகஸ்ட் 30 ,1659

அவுரங்கசீப்பின் பார்வைக்கு அனுப்பப்பட்டது தாரா சுக்கோவின் தலை .!
அதை ஷாஜகானுக்கு அனுப்பினார் அவுரங்கசீப் !!
அன்றிரவு பெரிய விருந்து .வெற்றிகரமாக தன் ஒரு சகோதரன் வெற்றிக்காக கொண்டாடினாள் சகோதரி ரோஷனா பேகம் !!! ஆகஸ்ட் 30 ,1659

No comments:

Post a Comment