Tuesday 25 August 2020

TASLIMA NASRIN WRITER BORN 1962 AUGUST 25



TASLIMA NASRIN WRITER BORN 1962 AUGUST 25



.தஸ்லிமா நசுரீன் (வங்காள: তসলিমা নাসরিন, சுவீடிய: Taslima Nasrin பி. ஆகஸ்ட் 25, 1962) வங்காளதேசத்தை சேர்ந்த ஓர் எழுத்தாளரும் முன்னாள் மருத்துவரும் ஆவார். 1980களில் எழுதத் தொடங்கி சமயங்களையும் திட்டவட்டமான இஸ்லாமையும் எழுத்துகளில் கண்டனம் செய்து, பெண்ணியத்தைப் பற்றி எழுதி உலகில் புகழுக்கு வந்தார். இஸ்லாமுக்கு எதிராக எழுதினது காரணமாக வங்காளதேசத்துக்கு திரும்பி செல்லமுடியாத நிலையில் சுவீடனுக்கு வெளியேறினார். 2008இல் திரும்பி இந்தியாவுக்கு வந்து உச்ச பாதுகாப்பு நிலையில் தில்லியில் தற்போது வசிக்கிறார். 2015 ஆம் ஆண்டு இவர் கூறும் போது நான் ஒரு நாத்திகன், என்னை முஸ்லீம் என்று சொல்லாதீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார். [1] இவர் எழுதிய லஜ்ஜா என்ற புதினம் இவருக்கு பெரிய பரபரப்பை ஏற்படுத்திக்கொடுத்தது. ஒரு பேட்டியில் இந்தியாவைப் பற்றி இவர் கூறும்போது இந்தியா ஒரு சகிப்பு தன்மையுள்ள நாடு, என்று கூறினார்.[2]

ஹைதராபத்தில் தஸ்லீமா நசுரீன் தாக்கப்பட்டதும் கருத்துச் சுதந்திரம், கத்தரிக்காய் சுதந்திரம் என்றெல்லாம் சிலர் லெக்சர் கொடுக்கிறார்கள். குறிப்பாக பா.ஜ.க. வின் மல்ஹோத்ரா முதல் கீழ்மட்ட பரிவாரங்கள்வரை குதிக்கிறார்கள். உண்மையான கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான இவர்கள், கொஞ்சம் கூட ‘லஜ்ஜை’யின்றித் தற்போது கருத்துச் சுதந்திரம் பற்றி பேசுகிறார்கள்!

தஸ்லீமா தாக்கப்பட்டுது குறித்து பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் வி.கே. மல்கோத்ரா கூறுகையில், ” எழுத்தாளர் தஸ்லிமா நசுரீன் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. தாக்குதல் நடத்தியவர்கள் ஆந்திராவில் ஆளும் கூட்டணியில் இடம் பெற்றுள்ளனர். குஜராத் இனக் கலவரம் தொடர்பாக குரல் எழுப்பிய மதச்சார்பற்ற கட்சியினர், தஸ்லிமா மீது நடத்தப்பட்ட தாக்குதல் பற்றி கருத்து தெரிவிக்காமல் அமைதி காப்பது வேடிக்கையாக உள்ளது” என்றார்.

முன்னாள் மத்திய அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா கூறுகையில், “தஸ்லிமாவைக் கொலை செய்வேன் என பகிரங்கமாக மிரட்டிய எம்.ஐ.எம். கட்சியின் சட்டசபை தலைவர் அக்பருதின் ஓவைசி மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ய வேண்டும்” என்றார்.

கூடுதலாக, ஆர்.எஸ்.எஸ் . அமைப்பின் பத்திரிக்கையான “பாஞ்சஜன்யா’வின் ஆசிரியர் தருண் விஜய் கூறுகையில்,”வங்க தேசத்தில்சிறுபான்மையினராக உள்ள இந்துக்களுக்கு ஆதரவாக தஸ்லிமா நசுரீன் குரல் கொடுத்து வந்தார். இதனால்தான் முஸ்லிம் பழமைவாதிகளின் கோபத்துக்கு அவர் ஆளானார்” என்று ஜோக் அடித்தார்.

இஸ்லாத்திற்கு எதிராக எழுதப்படும் எதையும், கருத்துச்சுதந்திரம் என்று வாய்கிழிய முழங்கும் இவர்கள் மறுக்கும் கருத்துச் சுதந்திரங்களின் பட்டியலைப் பார்ப்போம்:

கருத்துச் சுதந்திரம் # 1

கிரஹாம் ஸ்டையின்ஸ் என்ற கிறிஸ்தவர், ஒரிசா தொழுநோயாளிகளுக்கு பணிவிடைச் செய்ததோடு பைபிள் கருத்துக்களையும் சுதந்திரமாகப் பிரச்சாரம் செய்து வந்தார்.கருத்துச் சுதந்திரத்திற்கு காவடி தூக்கும் உணர்ச்சி வசப்பட்ட சங்பரிவாரங்களால் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டார் !

கருத்துச் சுதந்திரம் # 2

ஓவியர் M.F.ஹுசைன் இந்துக்கள் பெண்கடவுளாகக் கருதும் சரஸ்வதியைச் சுதந்திரத்துடன் நிர்வாணமாகச் சித்திரம் வரைந்ததால், அவருடைய அலுவகம் தாக்கப் பட்டது!

கருத்துச் சுதந்திரம் # 3

காந்தியடிகளின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தி Let’s Kill Gandhi என்ற நூலில், பிராமனர்களே காந்தியின் படுகொலைக்குக் காரணம் என்ற உண்மையைச் சுதந்திரமாக எழுதினார். இதுவும் சிலருக்கு மனதைப் புண்படுத்தியதாம்! அதனால் மிரட்டப்பட்டு பின்னர் “நான் எல்லா பிராமனர்களையும் சொல்லவில்லை” என்று சொல்ல வைக்கப்பட்டார் .

கருத்துச் சுதந்திரம் # 4

இன்றைய தமிழக முதல்வர் கருணாநிதி, “இந்து என்றால் திருடன்” என்று சொன்னார். அது அவரின் சொந்தக் கருத்தல்ல; ஏற்கனவே எழுதப்பட்டிருந்த இந்தி அகராதியின் மொழிபெயர்ப்பைச் சுதந்திரமாகச் சொன்னார். இதுவும் இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியதாகச் சொல்லி இந்து முன்னணியின் வற்புறுத்தலால் அன்றைய ஜெயலலிதா அரசு வழக்குத் தொடர்ந்தது.

கருத்துச் சுதந்திரம் # 5


பெரியார் ஈ.வெ.ராமசாமி இந்து மதத்தின் மூடநம்பிக்கைகளைச் சுதந்திரமாக விமர்சித்ததால் அவர்மீது செருப்பை எறிந்தனர். ஸ்ரீரங்கம் கோவிலின் எதி
.

No comments:

Post a Comment