Thursday 20 August 2020

WORLD MOSQUITO DAY AUGUST 20



WORLD MOSQUITO DAY AUGUST 20




.உலகக் கொசு நாள் (World Mosquito Day), ஆண்டுதோறும் ஆகத்து 20 ஆம் நாள் பிரித்தானிய மருத்துவர் ரொனால்டு ராஸ் என்பவரின் நினைவாக உலக அளவில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. சர் ரொனால்டு ராஸ் 1987 ஆகத்து 20 ஆம் நாள் பெண் கொசுகள் மூலமாக மலேரியா நோய் மனிதருக்குப் பரவுகிறது என முதன் முதலில் கண்டுபிடித்தார்.[1] இவர் தனது கண்டுபிடிப்பின் பின்னர் இந்நாள் உலக கொசு நாள் என்ற பெயரில் ஆகத்து 20 அன்று ஆண்டு தோறும் கொண்டாடப்பட வேண்டும் என வேண்டுகோள்: விடுத்தார்.[1]

சுகாதார மற்றும் வெப்பவலய மருத்துவத்துக்கான இலண்டன் பள்ளி ஆண்டு தோறும் இந்நாளில் கண்காட்சிகள் உட்படப் பல கொண்டாட்டங்களை 1930களில் இருந்து நடத்தி வருகிறது.[2]

உருவத்தில் சிறியதாக இருக்கும் கொசுக்கள், அவை மனிதர்களுக்கு ஏற்படுத்தும் பாதிப்புகளில் முதலிடத்தில் உள்ளன. மலேரியா, டெங்கு உள்ளிட்ட நோய்கள் ஏற்படுவதற்கு கொசுக்களே காரணம். இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆக., 20ல், உலக கொசு ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

எப்படி வந்தது

'அனாபெலஸ்' பெண் கொசுக்கள் மூலம் தான் மலேரியா நோய் மனிதர்களுக்கு பரவுகிறது என்பதை 1897 ஆக., 20ல் கண்டுபிடித்தார் டாக்டர் ரொனால்டு ரோஸ். இவரது இந்த அரிய கண்டுபிடிப்பை அங்கீகரிக்கும் விதமாக இத்தினமே, உலக கொசு ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

மூன்று

கொசுக்களில் 3000 வகை இருந்தாலும், மலேரியாவை உருவாக்கும் 'அனாபெலஸ்', டெங்குவை உருவாக்கும் 'ஏடிஸ்', யானைக்கால் நோய், மூளைக்காய்ச்சலை உருவாக்கும் 'குளக்ஸ்' ஆகிய மூன்றும் தான் கொடியவை. இதன் பாதிப்புகள் மற்றும் தடுக்கும் முறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இத்தினத்தின் நோக்கம்.

யார் இவர்

ரொனால்டு ரோஸ், 1857ல் உத்தரகண்டின் அல்மோராவில் பிறந்தார். இவரது தந்தை ஆங்கிலேய ராணுவ அதிகாரி. பள்ளி மற்றும் கல்லுரி படிப்பை லண்டனில் நிறைவு செய்தார். படிப்பை முடித்து இந்தியா திரும்பிய பின், மலேரியாவை பற்றிய ஆராய்ச்சியில் 1882 - 1899 வரை
ஈடுபட்டார். 1897ல் மலேரியாவுக்கான காரணத்தை கண்டுபிடித்தார். இதற்காக இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. பிரிட்டன் சார்பில் நோபல் பரிசு வென்ற முதல் நபர் இவரே.

மலேரியாவால் என்ன பாதிப்பு

'பிளாஸ்மோடியம்' என்ற ஒட்டுண்ணி 'அனோபிலிஸ்' எனும் பெண் கொசுவின் வயிற்றில் தொற்றிக் கொள்கிறது. இந்த கொசு ஒருவரை கடிப்பதன் மூலம், மலேரியா பரவுகிறது. இது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவக் கூடியது. இது உடலில் கல்லீரலை தாக்குகிறது. பின் ரத்த சிவப்பு அணுக்களை தாக்கி அழிக்கிறது. மரணத்தை விளைவிக்கும் அளவு பயங்கரமானது.
எப்படி தடுப்பதுபொதுவாக கொசுக்கள் நீர்நிலைகளில் தான் முட்டையிட்டு உருவாகின்றன. எனவே வீடுகளின் அருகில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

* டயர்கள், தகரங்கள், பலகைகள், பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவற்றில் மழைநீர் தேங்காமல் அப்புறப்படுத்த வேண்டும்.* சீரான இடைவெளியில் தண்ணீர் சேர்த்து வைக்கும் பாத்திரங்களை சுத்தமாக கழுவி தலைகீழாக வெயிலில் காய வைக்க வேண்டும்.

* தண்ணீர் தொட்டிகளை மூடி வைக்க வேண்டும்.

உலகளவில் 2015 கணக்கின் படி, 21.2 கோடி பேர் மலேரியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 4.2 லட்சம் பேர் உயிரிழந்துள்ளர் எனவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. இதில் 90 சதவீதம் ஆப்ரிக்க நாடுகளில் தான் ஏற்படுகிறது.

மலேரியாவை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கையினால், 2010 லிருந்து 2015 வரை, உலகளவில் மலேரியாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 29% குறைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment