Tuesday 25 August 2020

S.P.BALASUBRAMANIYAM ON SUMATHI EN SUNDARI




S.P.BALASUBRAMANIYAM ON 
SUMATHI  EN SUNDARI






'பொட்டு வைத்த முகமோ' என்ற பாடலுக்கு, மெல்லிசை மன்னர், எஸ்.பி.பி.யை தேர்ந்து் எடுத்தார். சிவாஜியிடம் தான் பெயரெடுக்க வேண்டும் என்று எஸ்.பி.பி., - 'சிவாஜிக்கு' தன் முதல் பாடல் என்ற பயத்தோடு ஒத்திகைக்கு சென்றார். ¶
ரிக்கார்டிங் தியேட்டரில் பாலு சென்றார். அங்கே நடிகர் திலகம் காத்து இருந்தார். எஸ்.பி.பி.க்கு நடிகர் திலகத்தைப் பார்த்தவுடன் எதற்காக வந்திருக்கிறார் எனப் புரியவில்லை. பாலுவை தனியாக அழைத்துச் சென்றார் சிவாஜி. ¶
ரிக்கார்டிங் தியேட்டரில் உள்ளவர்களுக்கு ஒரே சஸ்பென்ஸ், T.M.S. பாடல் பதிவுக்குக் கூட வராத சிவாஜி, S.P.B. பாடல் பதிவுக்கு வந்தது, அனைவரை வியப்பில் ஆழ்த்தியது. ¶
எஸ்.பி.பி.யும் சிவாஜியும், ரிக்கார்டிங் தியேட்டரில் இருந்த ரூமிற்குள் சென்றார்கள். என்ன பேசுகிறார்கள் என்பது தெரியவில்லை. பத்து நிமிடத்திற்குப் பிறகு வெளியே வந்தார்கள். சிவாஜி நேரே MSV.யிடம் வந்து ஏதோ சொல்லி விட்டுக் கிளம்பி சென்று விட்டார். சஸ்பென்ஸாக இருந்தது. ¶
‘பொட்டு வைத்த முகமோ’ பாடல் திட்டமிட்டபடி எடுத்து முடிக்கப்பட்டது. பாடல் மிக நன்றாக வந்ததாக பேசிக் கொண்டார்கள். ஆனால் T.M.S. குரலைப் போல, இந்த புதிய குரல் நடிகர் திலகத்தின் நடிப்போடு சேருமா என சந்தேகம் அடைந்தனர். ¶
‘சுமதி என் சுந்தரி’ படம் முடிந்தவுடன் பிரிவியூக்கு 'S.P.B. யும்', ‘ M.S.V'. யும் குடும்பத்துடன் வந்து இருந்தனர். அந்த பாடலில் எஸ்பிபியின் நளினமான குரலுக்கு ஏற்ப தமது நடையையும், பாவனைகளையும், அசைவுகளையும், குழையக் குழைய வெளிப்படுத்தி இருந்தார் நடிகர் திலகம். ¶
சந்தேகப்பட்டவர்கள் பிரமித்துப் போனார்கள். பிரமிப்பின் மறு பெயர் தானே நடிகர் திலகம்! தன் குரலுக்கு ஏற்ப தன் நடிப்பு ஸ்டைலை மாற்றிக் கொண்டு நடிகர் திலகம் நடித்திருப்பதைப் பார்த்து வியந்தார் பாலு.¶
அன்று நடிகர் திலகம் ரிகார்டிங்கில் பாலுவைச் சந்தித்து என்ன கூறினார் தெரியுமா?
“பாலு! எனக்குப் பாடப் போறேன்னு நினைச்சு உன்னுடைய ஸ்டைலை மாத்திப் பாட முயற்சி பண்ணாதே. இங்கே சில பேர் உன்கிட்ட டி.எம்.எஸ், ஸ்டைலில் பாடினாத் தான் எனக்குப் பிடிக்கும் னு சொல்லி உன்னை கன்ஃப்யூஸ் பண்ணக் கூடாது என்பதால்தான்-
நானே நேரா வந்தேன். உன்னோட ஒரிஜினல் ஸ்டைல்ல பாடு அதுக்கு ஏத்த மாதிரி நான் நடிக்க முயற்சி செய்றேன்” என்பதுதான். சிவாஜி கொடுத்த டானிக் பாலுவை அந்தப் பாடலை அற்புதமாகப் பாட வைத்தது. ¶
தன் குரலுக்காக, தன் ஆக்டிங் ஸ்டைலை மாற்றிக் கொண்ட அந்த நடிப்புச் செல்வத்தை, மனதார பாராட்டிக் கொண்டும் அதே நேரத்தில் அவரின் திறமையைக் கண்டு இன்றும், பிரமித்து கொண்டும், வியந்து கொண்டும் இருக்கிறார் எஸ்.பி.பி. ¶
இது ஒரு மீள்பதிவு...¶

No comments:

Post a Comment