S.P.BALASUBRAMANIYAM ON SUMATHI EN SUNDARI
S.P.BALASUBRAMANIYAM ON SUMATHI EN SUNDARI 'பொட்டு வைத்த முகமோ' என்ற பாடலுக்கு, மெல்லிசை மன்னர், எஸ்.பி.பி.யை தேர்ந்து் எடுத்தார். சிவாஜியிடம் தான் பெயரெடுக்க வேண்டும் என்று எஸ்.பி.பி., - 'சிவாஜிக்கு' தன் முதல் பாடல் என்ற பயத்தோடு ஒத்திகைக்கு சென்றார். ¶ ரிக்கார்டிங் தியேட்டரில் பாலு சென்றார். அங்கே நடிகர் திலகம் காத்து இருந்தார். எஸ்.பி.பி.க்கு நடிகர் திலகத்தைப் பார்த்தவுடன் எதற்காக வந்திருக்கிறார் எனப் புரியவில்லை. பாலுவை தனியாக அழைத்துச் சென்றார் சிவாஜி. ¶ ரிக்கார்டிங் தியேட்டரில் உள்ளவர்களுக்கு ஒரே சஸ்பென்ஸ், T.M. S. பாடல் பதிவுக்குக் கூட வராத சிவாஜி, S.P.B. பாடல் பதிவுக்கு வந்தது, அனைவரை வியப்பில் ஆழ்த்தியது. ¶ எஸ்.பி.பி.யும் சிவாஜியும், ரிக்கார்டிங் தியேட்டரில் இருந்த ரூமிற்குள் சென்றார்கள். என்ன பேசுகிறார்கள் என்பது தெரியவில்லை. பத்து நிமிடத்திற்குப் பிறகு வெளியே வந்தார்கள். சிவாஜி நேரே MSV.யிடம் வந்து ஏதோ சொல்லி விட்டுக் கிளம்பி சென்று விட்டார். சஸ்பென்ஸாக இருந்தது. ¶ ‘பொட்டு வைத்த முகமோ’ பாடல் திட்டமிட்டபடி எடுத்து முடிக்கப்பட்டது. ப...