Posts

Showing posts with the label WIFE

wife had 62 other names தமிழில் மனைவி என்பதற்கு 62 வகையான பெயர்கள் உள்ளனவாம் .

Image
  தமிழில் மனைவி என்பதற்கு  62 வகையான பெயர்கள் உள்ளனவாம் . 01.துணைவி  02.கடகி  03,கண்ணாட்டி 04.கற்பாள்  05 காந்தை 06.வீட்டுக்காரி 07.கிருகம் 08.கிழத்தி 09.குடும்பினி 10.பெருமாட்டி 11.பாரியாள் 12.பொருளாள் 13.இல்லத்தரசி, 14.மனையுறுமகள் 15.வதுகை 16வாழ்க்கை 17.வேட்டாள்  18.விருந்தனை  19.உல்லி 20.சானி 21.சீமாட்டி 22.சூரியை 23.சையோகை 24.தம்பிராட்டி 25.தம்மேய்  26.தலைமகள் 27.தாட்டி 28.தாரம்  29.மனைவி 30.நாச்சி 31.பரவை 32.பெண்டு  33.இல்லாள் 34.மணவாளி  35.மணவாட்டி 36.பத்தினி  37.கோமகள் 38.தலைவி  39.அன்பி 40.இயமானி 41.தலைமகள் 42.ஆட்டி 43.அகமுடையாள் 44.ஆம்படையாள்  45.நாயகி 46.பெண்டாட்டி 47.மணவாட்டி  48.ஊழ்த்துணை 49.மனைத்தக்காள் 50.வதூ  51.விருத்தனை 52.இல் 53.காந்தை 54.பாரியை 55.மகடூஉ 56.மனைக்கிழத்தி 57.குலி 58.வல்லபி 59.வனிதை 60.வீட்டாள் 61.ஆயந்தி 62.ஊடை இப்போது புரிகிறதா, இந்த  62 அவதாரங்களை ஒரு  அப்பாவி சமாளிப்பது எவ்வளவு பெரிய கலையென்று !🤪😜😜

NO HOLIDAYS FOR WIFE

Image
NO HOLIDAYS FOR WIFE .எனக்கு விடுமுறைகள் கிடையாது - மனைவி ''நான் வேலைக்கு போறேன்... என் மனைவி வீட்டுல சும்மாதான் இருக்கா!'' (ஒரு பெண்ணின் சாட்டையடி பதில்) தகவல்-வாட்ஸ்ப் மற்றும் அவள் விகடன்) கணவன் ஒருவர், உளவியல் நிபுணரை சந்தித்தபோது, நடந்த உரையாடல்... நிபுணர் : நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்? கணவர்: ஒரு வங்கியில் அக்கவுண்டன்ட் ஆக பணிபுரிகிறேன். நிபுணர் : உங்கள் மனைவி? கணவர் : அவள் வேலை செய்வது கிடையது. வீட்டில்தான் இருக்கிறாள். நிபுணர் : குடும்பத்தினர் சாப்பிடுவதற்கு காலை உணவை தினமும் யார் தயாரிக்கிறார்கள்? கணவர்: என் மனைவிதான். ஏனென்றால் அவள்தான் வேலைக்கு செல்வதில்லையே. நிபுணர் : தினமும் காலை உணவு சமைப்பதற்காக உங்கள் மனைவி எப்போது எழுவார்? கணவர்: அவள் காலை 5 மணிக்கு எழுவாள். ஏனென்றால் சமைப்பதற்கு முன்பாக வீட்டைச் சுத்தம் செய்வாள். அவள்தான் சும்மா இருக்கிறாளே! நிபுணர் : உங்கள் குழந்தைகளை யார் பள்ளிக்கு அழைத்துச் செல்வார்கள்? என் மனைவிதான் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்வாள். அவளுக்குதான் வேலையில்லையே. நிபுணர்: பள்ளியில் விட்டுவந்தது ப...

AISWARYA RAJYA LAXMI DEVI SHAH WIFE OF BEERENDRA BORN 1949 NOVEMBER 7 -2001,JUNE 1

Image
AISWARYA RAJYA LAXMI DEVI SHAH  WIFE OF BEERENDRA  BORN  1949 NOVEMBER 7 -2001,JUNE 1 .ஐஸ்வர்யா ராஜ்ய லக்ஷ்மி தேவி ஷா (Aishwarya Rajya Laxmi Devi Shah நேபாளி: ऐश्वर्या राज्य लक्ष्मी देवी शाह) (7 நவம்பர் 1949 – 1 ஜூன் 2001) காத்மாண்டுவில் உள்ள லாசிம்பெட்டு தர்பாரில் கேந்த்ரா சம்செர் சங் பகதூர் ராணா மற்றும் சிறீ ராச்சிய லட்சுமி தேவி ஷா தம்பதிக்கு முதல் மகளாகப் பிறந்தவர்.  நேபாள ராணியாக 1972 இல் இருந்து 2001 ஆண்டு வரை இருந்தார். இவர் படா மகாராணி எனவும் அழைக்கப்பட்டார். இவர் ராஜா பிரேந்திராவின் மனைவியாவார். இவர்களுக்கு பட்டத்து இளவரசர் திபேந்திரா, இளவரசர் நிரஞ்சன் மற்றும் இளவரசி சுருதி ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர். இவர் பாரம்பரிய அழகுடைய பெண் என்று கொண்டாடப்பட்டார். இவரது உடை அலங்காரம் மற்றும் சிகை அலங்காரங்கள், இன்னும் நேபாள பெண்கள் மத்தியில் பிரபலம் வாய்ந்ததாக காணப்படுகின்றது. கல்வி இந்தியாவில் உள்ள செயின்ட் ஹெலென்ஸ் கான்வென்ட் ஆப் குரஸூங் இல் பள்ளி படிப்பை முடித்தார். 1963 இல் கண்டி ஐஸ்வரி ராஜ்ய லட்சுமி மேல் நிலை பள்ளியில் எஸ் எல் சி தேர்வுபெற்றார...

WIFE BURNT HUSBAND ON ACCOUNT OF MARTIAL REFUSE PAST 3 YEARS MAY 20,2015

Image
WIFE BURNT HUSBAND ON ACCOUNT OF MARTIAL REFUSE PAST 3 YEARS MAY 20,2015 மதுரை அருகே குடும்பம் நடத்த வர மறுத்த கணவரை, அவரது குடும்பத்தாருடன் எரித்துக் கொலை செய்த மனைவி கைது செய்யப் பட்டுள்ளார். மதுரை, சேடபட்டி அருகே உள்ள குமாரபுரத்தைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி பாண்டீஸ்வரி. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இவர்களுக்கு திருமணம் ஆனது. திருமணத்திற்குப் பிறகு பணி நிமித்தம் சென்னைக்கு சென்று விட்டார் கண்ணன். எனவே, தன்னுடன் குடும்பம் நடத்த வரும்படி கண்ணனை அழைத்து வந்தார் முருகேஸ்வரி. ஆனால், அதற்கு கண்ணன் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்தார். இந்நிலையில், சம்பவத்தன்று தனது பெற்றோருடன் கண்ணன் உறங்கி கொண்டிருந்தார். இதனைக் கண்டு ஆத்திரமடைந்த முருகேஸ்வரி வீட்டின் கதவுகளை வெளிப்பக்கமாக பூட்டினார். பின்னர் உள்ளே படுத்திருந்தவர்கள் மீது பெட்ரோலை ஊற்றி வீட்டிற்கு தீ வைத்தார். இதில், வீட்டினுள் உறங்கி கொண்டிருந்த கண்ணன், அவரது தந்தை வேலு, தாய் பேச்சியம்மாள், சகோதரி மகள் சுகந்தி(35), சங்கீதா (17), வினித்(13), சங்கீத்(12), ஆகியோர் தீ விபத்தில் சிக்கினர். வினித் தவிர மற்றவர்கள் ...

DUBAI PRINCESS ESCAPED FROM HUSBAND , TAKE SHELTER IN ENGLAND AND FILE DIVORCE SUIT

Image
DUBAI PRINCESS ESCAPED FROM HUSBAND , TAKE SHELTER IN ENGLAND  AND FILE DIVORCE SUIT பிரிட்டனில் தப்பி வாழும் துபாய் இளவரசி - கட்டாயத் திருமண உறவிலிருந்து பாதுகாக்க கோரிக்கை .மத்திய கிழக்கு நாடுகளில் அதிகாரம் மிக்க தலைவர்களில் ஒருவரான துபாயை ஆளும் ஷேக் முகமது அல் மேக்டூமை விட்டு சென்றுவிட்ட அவரது ஆறாவது மனைவி, முழு சம்மதமில்லாமல் கட்டாயப்படுத்தி தாம் ஈடுபடுத்தப்படுத்தப்பட்ட திருமண உறவில் இருந்து தன்னை பாதுகாக்க வேண்டுமென்றும் பிரிட்டன் நீதிமன்றத்தில் கோரியுள்ளார். ஷேக் முகமது அல் மேக்டூமின் மனைவியான இளவரசி ஹயா பின்ட் அல்-ஹூசைன், கணவரை விட்டு சென்று நீதிமன்றத்தை நாடும் மூன்றாவது பெண்ணாவார்.  இளவரசி ஹயா அவரது உயிருக்கு பயந்து லண்டனில் தலைமறைவாக வாழ்ந்து கொண்டிருப்பதாக இந்த மாதம் தகவல் வெளியானது. செவ்வாய்க்கிழமை லண்டனில் இந்த வழக்கு தொடங்கியுள்ளது. நீதிமன்றத்தில் நடந்தது என்ன? ஐக்கிய அரபு எமிரேட்டில் இருந்து தப்பி வந்தபோது, தாம் அழைத்து வந்த அவரது குழந்தைகளுக்கு தன்னையே பாதுகாவலராக நியமிக்க வேண்டுமென்றும், கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைக்கப்பட்ட உறவி...

CATHERINE HOWARD ,FIFTH WIFE OF IMPOTENT HENRY VIII EXECUTED FOR TREASON

Image
CATHERINE HOWARD ,FIFTH WIFE OF IMPOTENT HENRY  VIII EXECUTED  FOR TREASON 10 December 1541 – இங்கிலாந்து மன்னர் எட்டாம் என்றியின் மனைவியும் அரசியுமான கேத்தரீன் உடன் தகாத உறவு வைத்திருந்தமைக்காக தோமசு கல்பெப்பர், கோடரியால் வெட்டப்பட்டும் ,பிரான்சிசு டெரெகம் தூக்கிலிடப்பட்டும் இறந்தனர் ( Culpeper and Dereham were arraigned at Guildhall on 1 December 1541 for high treason. They were executed at Tyburn on 10 December 1541, Culpeper being beheaded and Dereham being hanged, drawn and quartered.) நான் அரசியாக சாகிறேன் . ஒரு வஞ்சகனோடு( எட்டாம் ஹென்றி ) வாழ்ந்தேன் கேத்தரீன்Catherine Howard கேத்தரீன் ஹவார்டு (Catherine Howard, அண். 1523 – 13 பெப்ரவரி 1542)[1] இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி மன்னரின் ஐந்தாவது மனைவியாக 1540 முதல் 1541 வரை இங்கிலாந்தின் அரசியாக இருந்தவர். இவர் எட்மண்ட் ஹவார்ட் பிரபு, ஜோயிசு கல்பெபெர் ஆகியோரின் மகளும், எட்டாம் என்றி மன்னரின் இரண்டாம் மனைவி ஆன் பொலினின் உடன்பிறவா சகோதரியும், நோர்போக் கோமகன் தோமசு ஹவார்டின் மருமகளும் ஆவார். என்றியின் அரசவையில...