Showing posts with label WROTE. Show all posts
Showing posts with label WROTE. Show all posts

Monday, 14 June 2021

SEKKILAAR ,WROTE PERIA PURANAM ,DIED ON VAIKASI POOSAM

 

SEKKILAAR ,WROTE PERIA PURANAM ,DIED ON VAIKASI POOSAM 



சேக்கிழார் என்பவர் 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சிவ அடியார் ஆவார். இவர் இரண்டாம் குலோத்துங்க சோழனின் அரசவையில் முதன்மை மந்திரியாக இருந்தவர். சோழன் சீவகசிந்தாமணி எனும் காமரசம் அதிகமுள்ள சமண நூலை படிப்பதனால், சோழனையும், மக்களையும் நல்வழிப்படுத்த சிவபெருமானின் அடியார்களான அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாற்றை விளக்கும் திருத்தொண்டர் புராணத்தினை இயற்றியவர் ஆவார்.


பெரியபுராணத்தைப் பாட தில்லையில் சிவபெருமானே உலகெல்லாம் என்று அடியெடுத்து கொடுத்தாக நம்பிக்கையுண்டு. சிவத்தொண்டின் காரணமாகவும், மதிநுட்பத்தின் காரணமாகவும் இவர் உத்தம சோழப் பல்லவன், தொண்டைமான், தெய்வப்புலவர், தெய்வச்சேக்கிழார் போன்ற பட்டங்களைப் பெற்றவர். உமாபதி சிவாச்சாரியார் என்பவரால் சேக்கிழார் புராணம் எனும் நூலும், மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களால் சேக்கிழார் பிள்ளைத்தமிழ் எனும் நூலும் சேக்கிழாரை முன்வைத்து இயற்றப்பட்டுள்ளன.


பெயர்க்காரணம்

சே என்பதற்கு காளை என்றும் சேக்கிழார் என்றால் காளைக்கு உரியவர் என்று பொருள் தருவதாகும். வெள்ளாளர்களில் காளையை வைத்து உழவுத்தொழில் செய்து வந்தோர்களில் அமைச்சராகவும், சிவனடியாராகவும் சிறந்து விளங்கியமையால் இயற்பெயரான அருண்மொழித்தேவர் என்பது மறைந்து சேக்கிழார் என்பதே பெயராக அறியப்படுகிறது.[சான்று தேவை]


வரலாறு

கீழ்வருகின்ற சேக்கிழார் வரலாறு சேக்கிழார் புராணம் எனும் உமாபதி சிவாச்சாரியாரால் எழுதப்பெற்ற நூலை அடிப்படையாகக் கொண்டதாகும். இந்நூலில் வருகின்ற சில செய்திகளையும், இந்த நூலின் ஆசிரியர் உமாதி சிவாச்சாரியார் என்பதையும், மா. இராசமாணிக்கனார் எனும் ஆய்வாளர் மறுத்துள்ளார்.


பிறப்பு

கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் தொண்டை நாட்டைச் சேர்ந்த புலியூர்க் கோட்டத்தில் உள்ள குன்றத்தூர் என்னும் ஊரில் வேளாளர்[1] மரபில் வெள்ளியங்கிரி மற்றும் அழகாம்பிகை ஆகியோருக்கு முதல் மகனாக சேக்கிழார் பிறந்தார்.[சான்று தேவை] இவருக்கு பெற்றோர் அருண்மொழித்தேவர் என்று பெயரிட்டனர்.[1] இவருக்கு பாலறாவாயர் என்ற தம்பியும் இருந்தார்.[1]


இளமைப் பருவம்

சோழநாட்டு அரசனான இரண்டாம் குலோத்துங்க சோழன் அநபாயசோழருக்கு கடலினும் பெரியது எது உலகினும் பெரியது எது மலையினும் பெரியது என்ற கேள்விகள் தோன்றின. அநபாய சோழரின் அமைச்சராக இருந்த சேக்கிழாரின் தந்தை இந்தக் கேள்விகளுக்கு விடைதெரியாது தவித்த பொழுது, சேக்கிழார் விடையை அளித்தார். அதனை மன்னரிடம் கூறியமையால் சேக்கிழாருக்கு அமைச்சர் பதவியை அநபாய சோழர் அளித்தார்.


சேக்கிழார்க்கு உத்தம சோழப் பல்லவன் என்ற சிறப்பு பட்டத்தினை தந்தார் அரசன். சேக்கிழார் திருநாகேசுவரம் கோயில் இறைவன் மீது பற்று வைத்திருந்தார். அதனால் குன்றத்தூரில் திருநாகேசுவரம் என்ற பெயரிலேயே கோயிலொன்றினைக் கட்டினார்.


அமைச்சர் பணி

இரண்டாம் குலோத்துங்க சோழன் போர்களில் ஈடுபடாமல், கேளிக்கைகளில் மனதினை செலுத்தியதாகவும், அதன் காரணமாக சமண முனிவரான திருத்தக்க தேவரால் எழுதப்பெற்ற சீவகசிந்தாமணி எனும் நூலை படித்து இன்புற்றதாகவும் தெரிகிறது. சீவகசிந்தாமணி என்பது களவிநூலாக இருந்தமையாலும், அந்நூல் இம்மைக்கும் மறுமைக்கும் துணை செய்யாது என்பதையும் எண்ணி சேக்கிழார் வருத்தம் கொண்டு, மன்னனுக்கு எடுத்துரைத்தார்.


மறுமைக்கு துணை புரியக் கூடிய சிவபெருமானின் தொண்டர்கள் வரலாற்றை சுந்தரமூர்த்தி நாயனாரால் பாடப்பெற்ற திருத்தொண்டர் தொகையிலிருந்து சோழ மன்னனுக்கு சேக்கிழார் எடுத்துரைத்தார். அத்துடன் நம்பியாண்டார் நம்பி அவர்களால் பாடல்பெற்ற திருத்தொண்டர் திருவந்தாதியையும் கூறினார். அவற்றைக் கேட்ட சோழ மன்னன், நாயன்மார்களின் வரலாற்றை விரிவாக எடுத்துரைக்குபடி சேக்கிழாரை வேண்டினான். அதன் காரணமாக சுந்தரமூர்த்தி நாயனாரையும், அவருடைய நூலில் குறிப்பிடப்பட்டுள்ள அறுபத்து இரண்டு சிவத்தொண்டர்களின் வரலாற்றையும் ஊர் ஊராக சென்று அதிக தகவல்களை திரட்டினார் சேக்கிழார். எழுதா இலக்கியம் எனும் நாட்டுப்புற பாடல்களையும், கல்வெட்டுகளையும், அடியார்கள் கதையும் கேட்டறிந்து, அவர்கள் வாழ்ந்த இடங்களுக்குச் சென்று குறிப்புகள் எடுத்துக் கொண்டார்.


திருத்தொண்டர் புராணம் இயற்றுதல்

புராணம் இயற்ற தில்லை எனப்படும் சிதம்பரம் நடராசர் கோயிலுக்குச் சென்றார். அங்கு சிவகங்கைத் தீர்த்தத்தில் நீராடித் தில்லை நடராசப் பெருமானை வணங்கினார். பின்பு ஆயிரம் கால் மண்டபத்தில் அடியார்கள் முன்னிலையில் இறைவன் "உலகெலாம்" என அடியெடுத்துக் கொடுக்க புராணம் பாடத் தொடங்கினார். சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திர நாளன்று புராணம் தொடங்கி, அடுத்த வருடம் சித்தரை மாதம் அதே திருவாதிரை நட்சத்திரத்தில் புராணத்தினை முடித்தார். ஓராண்டு காலம் புராணம் இயற்றப்பட்டது. இந்நூலில் திருத்தொண்டத் தொகையில் சுந்தர மூர்த்தியார் பாடியவாறே அடியார்களின் வரலாற்றை அதன் வரிசையிலேயே பாடினார். அத்துடன் சுந்தரமூர்த்தியாரையும், அவரது பெற்றோர் சடையனார், இசைஞானியாரையும் நாயன்மார்களாக இணைத்துக் கொண்டார்.


பெரிய புராணத்தில் இரண்டு காண்டங்களும், பதிமூன்று சருக்கங்களும், நான்காயிரத்து இருநூற்று எண்பத்து ஆறு (4286) பாடல்களும் உள்ளன. அதுநாள் வரை சைவசமய இலக்கியங்களில் பதினொரு திருமுறைகள் இருந்தன. அதனுடன் பன்னிரண்டாம் திருமுறையாக பெரியபுராணம் சேர்த்துக் கொள்ளப்பட்டது.



மன்னன் சிறப்பு செய்தமை

சேக்கிழார் பெரியபுராணத்தினை திருவாதிரை நட்சத்திரத்தன்று பாடி முடிந்ததும், அரசன் வந்து அவரை தன்னுடைய பட்டத்து யானையின் மீது ஏற்றினார். பின்பு தானும் அந்த யானையின் மீது ஏறி, சேக்கிழாருக்கு வெண் சாமரம் வீசி புராணத்தோடு ஊர்வலம் சென்றார். அடியார்கள் பின் தொடர்ந்து வந்தனர். தில்லையில் வாழ்ந்த அடியார்கள் பெரிய புராணத்தினை சிவபெருமானாக கண்டனர் என்பது நம்பிக்கையாகும்.



இராசமாணிக்கனார் ஆய்வு

சேக்கிழார் வரலாறு குறித்தும், அவருடைய காலம் குறித்தும் பல்வேறு அறிஞர்கள் ஆய்வு செய்துள்ளார்கள். மா. இராசமாணிக்கனார் அவரது பெரியபுராண ஆய்வு நூலில் பல்வேறு ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளார்.[2]


அதன்படி சேக்கிழாரின் இயற்பெயர் இராமதேவன் என இருக்கலாம் என்று கூறுகிறார்.[2] மேலும் சேக்கிழார் வரலாற்றில் கூறப்படும் அரசன் சீவக சிந்தாமணியை படித்ததும், அதற்கு சேக்கிழார் மறுப்பு தெரிவித்து பெரியபுராணம் இயற்றியது குறித்தான கருத்துரு தவறானது என்றும், சேக்கிழார் சீவக சிந்தாமணியைப் படித்து, அதிலிருக்கும் கருத்துகளை பெரியபுராணத்தில் எடுத்தாண்டுள்ளார் என்றும் கூறுகிறார்.[2]


சேக்கிழார் பெரிய புராணம் எனும் திருத்தொண்டர் புராணத்தினை இரண்டாம் இராசராசன் காலத்தில் பங்குனி உத்திரத் திருவிழாவில் திருவொற்றியூர்க் கோயிலில் இயற்றியுள்ளார்.[2] இக்காலம் கிபி. 1174 ஆக இருக்கலாம் என்பது அவரது ஆய்வு.[2]


இயற்றியுள்ள நூல்கள்

பெரிய புராணம்

திருத்தொண்டர் புராணச் சாரம்

திருப்பதிகக்கோவை என்னும் மூன்று நூல்களும் சேக்கிழாரால் பாடப்பட்ட நூல்கள்.[3]

தனி சன்னதி

உலகிலேயே சேக்கிழாருக்கு இரண்டு கோயில்களில் மட்டுமே தனி சன்னதி உண்டு, முதலாவது சேக்கிழார் பிறந்த ஊரான திருக்குன்றத்தூர் சிவன் கோயில், இரண்டாவது தேவகோட்டை நகரச் சிவன் கோயில்.


தெண்ணீர் வயல் தொண்டை நாடு நன்னாடு சான்றோர் உடைத்து என்னும் வாக்கிற்கிணங்க செல்வம்மலி குன்றத்தூரில் அவதரித்தார் சேக்கிழார். சேக்கிழாருக்கு பெற்றோர் இட்ட பெயர் அருண்மொழித்தேவர் என்பதாகும். பிறந்த குடிக்குப் பெருமை சேர்த்த காரணத்தால் கோவூர்கிழார் என வழங்கி அதுவே பின்னர் சேக்கிழார் ஆனது.

 சேக்கிழாரின் தந்தை பெயர் வெள்ளியங்கிரி என்பதும் தாயார் அழகாம்பிகை என்பதும் கர்ண பரம்பரைச் செய்தியாக உள்ளன. அவரது தம்பியின் பெயர் திருஞான சம்பந்தரின் திருப்பெயராகிய "பாலறாவாயர்' என்பதாகும். இளம் வயதிலேயே கல்வி, ஒழுக்கம், பக்தி ஞானம் ஆகியவற்றில் தலைசிறந்து காணப் பெற்றமையினால் இவரது புலமையும் புகழும் சோழ மன்னனின் செவிகள் வரை பாய்ந்தது. தக்கோரை அனுப்பி, வரவழைத்து கெüரவம் தந்து தலைமை அமைச்சராக்கி "உத்தம சோழப்பல்லவன்' என்னும் பட்டம் தந்து அதிகார உரிமைகளை வழங்கினான்.

 அமைச்சுரிமை பெற்ற சேக்கிழார் பெருமான் கும்பகோணத்துக்கு அருகில் தங்கினார். இமைப்பொழுதும் நெஞ்சில் நீங்காத ஈசன் திருவடிகளை தினந்தோறும் காலையும், மாலையும் போற்றும் வண்ணம் திருநாகேசுரத்து ஈசன் ஆலயத்திற்குச் சென்று வழிபட்டார். சேக்கிழார் சோழநாட்டுத் திருநாகேச்சுரம் போலவே தமது ஊராகிய குன்றத்தூரில் திருநாகேச்சுரம் என்ற பெயரால் ஆலயம் அமைத்து தினசரி ஆறுகால பூஜைகள் செய்திட வேண்டுவன செய்தார்.

 மன்னன் சைவத்திலிருந்து மாற விரும்பியபோது சைவத்தின் பெருமையையும், சிவபெருமானின் பேரருளையும், அடியார்களின் சேவை மற்றும் தியாக வரலாறுகளையும் மன்னர் சற்று சிந்தித்தால் நலம் என்று எடுத்துரைத்தார் சேக்கிழார். மன்னனும் சேக்கிழாரின் அன்பில், எடுத்துச் சொல்லும் தாயன்பில் பெரிதும் உளம் வைத்து, அப்படியானால் இதனை விடச் சுவையான வரலாறும் உளதோ? எனக் கேட்டான். சேக்கிழாரும் மனிதன் தெய்வ நிலைக்கு உயர்ந்த அற்புத நாயன்மார் பெருமக்களின் வரலாற்றினை சிறிது எடுத்துரைத்தார். தேசமும் மக்களும் நல்வழி செல்ல வேண்டின் தாங்கள் எனக்கு எடுத்துரைத்த இச்சிறப்பான தகவல்களை ஏன் ஒரு முழு நூலாக ஆக்கித் தரக்கூடாது என வினவினார்.

 தேசம் உய்வு பெற, சைவம் தழைத்திட ஈசனின் கட்டளையாகவே சேக்கிழார் அதனைக் கருதினார். அடியார்கள் வரலாற்றினை ஈசனருளால் பாடித்தருகிறேன் என உரைத்தார்.

 மன்னனும் மிக மகிழ்ந்து அதற்கான அத்தனை ஏற்பாடுகளையும் செய்து தந்தார். சேக்கிழார் பெருமானும் தில்லையம்பதி சென்று ஆடல் வல்லானையும், அன்னை சிவகாமியையும் வணங்கி நூல் எழுத அருள் கேட்ட போது அம்பல வாணனே "உலகெலாம்' என அடியெடுத்துக் கொடுத்து அருளினார். சேக்கிழார் பெருமானும் "உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன்' எனத் தொடங்கி, "அடியார் புகழ் நின்றது உலகெலாம்' என நிறைவு செய்தார்.

 மன்னனும் மனம் மகிழ்ந்து அரங்கேற்றம் செய்திட தில்லைக்கு வந்தான். சைவ அடியார் பெருமக்கள் முன்னிலையில் அரங்கேற்றம் செய்தார் சேக்கிழார் பெருமான். நடராஜப் பெருமானுக்கு உகந்த சித்திரைக் திருவாதிரையில் தொடங்கி, சித்திரைத் திருவாதிரையிலேயே நிறைவு செய்தார்.

 திருக்கயிலையில் தொடங்கி, திருக்கயிலேயே நிறைவெய்துமாறு திருத்தொண்டர் தொகை, திருத்தொண்டர் திருவந்தாதி ஆகியவற்றை வகை, தொகை நூல்களாகக் கொண்டு பதிமூன்று சருக்கங்களோடு 4286 பாடல்களாக அமைக்கப்பெற்று திருத்தொண்டர் புராணம் என்ற பெரியபுராணம் அரங்கேற்றப் பெற்றது.

 மாமன்னன் அநபாயச் சோழன் சேக்கிழாரை யானை மீது அமரச்செய்து தான் அவர் பின்னால் அமர்ந்து தானே தன்னிரு கைகளால் அவருக்கு கவரி வீசி நன்றியினைப் புலப்படுத்தினார்.

 மன்னன் பணி தவிர்த்து, மன்றிலாடும் ஈசன் பணியே பணியாய்க் கொண்டு தில்லையிலே வாழ்ந்து தவநிலையிலமர்ந்து வைகாசிப் பூசத்திருநாளில் தில்லை நாதனின் திருவடிகளில் கலந்தார். தமிழைப் போற்றும் ஒவ்வொருவருக்கும் பெரியப் புராணத்தைப் பரவச் செய்வோம் எனும் உறுதி மொழியை இந்த நன்னாளில் ஏற்போம்

 - இலக்கிய மேகம் ந. சீனிவாசன்


Thursday, 13 August 2020

SUJATHA RANGARAJAN WROTE ABOUT HOSPITAL / NURSES



SUJATHA RANGARAJAN WROTE ABOUT HOSPITAL / NURSES



சற்றுப் பெரிய கட்டுரைதான். சுஜாதா அவர்களின் சுவாரஸ்யமான நடையில், நாம் கண்டிப்பாகத் தெரிந்துகொள்ளவேண்டிய விஷயங்கள் நிறைய உண்டு.

எனக்கு எத்தனை நண்பர்கள் !! - சுஜாதா

(கற்றதும் பெற்றதும்) Thanks to...Ram Sridhar.,.who typed this text

என் மறு அவதாரத்துக்கு முக்கிய காரணம், அப்பல்லோ மருத்துவர்கள். 'யவனிகா' 13-ம் அத்தியாயம் எழுதிக்கொண்டிருந்த சமயம், நாகேஸ்வரராவ் பார்க்கில் வாக் போகும்போது நெஞ்சு வலித்தாற்போல் இருந்தது.

'அன்ஜைனா' வகை நெஞ்சுவலி என் சிநேகிதன்.எனக்கு 'பைபாஸ்' ஆபரேஷன் ஆகி எட்டு வருஷமாச்சு. எட்டிலிருந்து பத்து வருஷம்தான் அதற்கு உத்தரவாதம் என்பது தெரியும். [பைபாஸ் என்பது இதயத்துக்கு ரத்த சப்ளை செய்யும் கரானரி ஆர்ட்டரிகளில் (Coronary Artery) நேரும் அடைப்பை, உடலின் மற்ற பாகங்களிலிருந்து குழாய் எடுத்து மாற்றுப் பாதை அமைத்து தைப்பது). டாக்டர் விஜயஷங்கருக்கு போன் செய்தபோது 'வாங்களேன், ஒரு ஆன்ஜியோ எடுத்துப் பார்த்துவிடலாம்' என்றார்.

எட்டு வருஷமாகியும் தோற்றம் மாறாமல் இருந்தார் விஜயஷங்கர் (தினம் ஒரு பைபாஸ் செய்கிறார்). டாக்டர் ராபர்ட் மோ என்கிற கார்டியாலஜிஸ்டுக்கு அறிமுகம் செய்து வைத்தார். அவர் மணிப்பூர் மாநிலத்தவர். சீனர்.

ஆன்ஜியோ சமாச்சாரங்களில் திறமை மிக்கவர். அவர் எனக்கு ஆன்ஜியோ எடுத்துப் பார்த்து, இந்த நற்செய்தியை சொன்னார். “

உங்கள் இதயத்தில் முன்பு சரி செய்த நான்கு க்ராஃப்டுகளில் மூன்று அடைத்துக் கொண்டு இருக்கின்றன. ஒரே ஒரு க்ராஃப்டில்தான் ஓடிக்கொண்டிருக்கிறது. கூடிய விரைவில் ஆன்ஜியோபிளாஸ்ட்டி
செய்வது நல்லது” என்றார்.

டாக்டர் மோ ஒரு மாநாட்டுக்காக ஆஸ்திரேலியா போய் வந்த கையோடு எனக்கு அந்த சிகிச்சை செய்தார். உடன் டாக்டர் நஜீபும் இருந்தார்.
ஆப்பரேஷன் நல்ல வெற்றி என்று எனக்கு சிடி போட்டு காண்பித்தார்.

எல்லாம் நலம் வீட்டுக்குப் போகலாம் என்று படுக்கையடிப் புத்தகங்களை சேகரித்துக் கொண்டிருக்கும் போது திடீரென்று என் சிறுநீரகம்
(acute renal failure) பழுதடைந்து நின்று போய் விட்டது. விளைவு ராத்திரி
ஒரே மூச்சுத் திணறல். மேல் மூச்சு வாங்கும் போது ஏறக்குறைய சொர்க்கத்தில் கின்னர கிம்புருடர்கள் “திருக்கண்டேன்; பொன்மேனி
கண்டேன் திகழும் அருக்கன் அணிநிறமும் கண்டேன்“ என்று பாடும் ஆழ்வார்கள் சகிதம் தெரிந்தார்கள்.

இதில் இரண்டு வகை உண்டாம் - அக்யூட், க்ரானிக் என்று. எனக்கு கிடைத்தது அக்யூட். டயாலிசிஸ் செய்தால் சரியாகிவிடும். க்ரானிக் என்றால் மாற்று சிறுநீரகம் பொருத்தும் வரை டயாலிசிஸ் பண்ணிக்கொண்டே இருக்க
வேண்டுமாம். ( நல்ல வேளை, எனக்கு இதில் ஒரு சின்ன அதிர்ஷ்டம்). சூழ்ந்திருந்த டாக்டர்கள் முகத்தில் கவலை ரேகைகள் தெரிந்தன.
அடிக்கடி மானிட்டரையும் கை கடிகாரத்தையும் பார்த்தனர்.

நெஃப்ராலஜிஸ்ட் டாக்டர் கே சி பிரகாஷ் அழைக்கப்பட்டார். அவர் உடனே எனக்கு டயாலிசிஸ் செய்ய வேண்டும் என்றார். அப்போலோ காரர்கள் என் மனைவியிடம் கையெழுத்து வாங்கிக்கொண்டு ராத்திரியே அதற்கு
ஏற்பாடு செய்தார்கள். (டயாலிசிஸ் என்பது சிறுநீரகத்துக்குச் செல்லும் ரத்தத்தை வெளியே கொண்டு வந்தது கழுவி பிறகு மறுபடி
சிறுநீரகத்திற்கு அனுப்புவது).

இதற்காக, என் கழுத்தருகில் வெட்டு போட்ட டெக்னீஷியன் என் அருகே
வந்து ” உங்க ஸ்டோரிஸ் எல்லாமே படிப்பேங்க. உங்ககிட்ட ஒரு சந்தேகம் கேட்கணும்...”
"காலையில் பார்த்துக்கலாமே..."
"காலைல எனக்கு டூட்டி முடிஞ்சு போயிருவேனே"
"டயாலிஸிஸ் ஓடிட்டு இருக்கு இல்லையா....இப்பவேவா?"
"இது என்னங்க ஜுஜுபி. பத்து நாளைக்கு ஒரு முறை ட்ரெயின் பிடித்து வந்து பண்ணிக்கிறவங்க இருக்காங்க. அங்க பாருங்க.."
ஹால் முழுவதும் டயாலிசிஸ் மெஷின்கள் அமைத்து பலர் மாத நாவல் படித்துக்கொண்டு டயாலிசிஸ் பண்ணி கொண்டு இருந்தார்கள். அப்படி ஒன்றும் பயப்பட வேண்டிய விஷயம் அல்ல என்பது தெரிந்தது.

மறுதினம் சந்தேகத்துக்கு இன்னொரு முறை டயாலிஸிஸ் பண்ணிக்கொண்டதும் சிறுநீரகம் பழைய நிலைக்கு திரும்பி
பொன் வண்ணத்தில் சிறுநீர் கழிக்கத் துவங்கினேன். எனக்கு ஆன்ஜியோவுக்காக கொடுக்கப்பட்ட கறுப்பு திரவத்தினாலோ அல்லது கொலஸ்ட்ரால் எம்பாலிசத்தாலோ வந்திருக்கலாம் என்று என் சங்கடத்துக்குக் காரணம் சொன்னார்கள்.

ஒரு வாரம் ஐசியு-வில் இருந்துவிட்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டேன்.
அதன்பின் வீட்டுக்கு வந்ததும் மற்றொரு சிக்கல் ஏற்பட்டது. அதை
விவரித்து அதை ஏற்படுத்தியவர் பெயரைக் கெடுக்க விரும்பவில்லை.

ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆக விரும்புபவர்களுக்கு என் பரிந்துரைகள்
இவை - முடிந்தால் அட்மிட் ஆவதைத் தவிர்க்க வேண்டும். என் கேஸில் போல தவிர்க்க இயலவில்லை என்றால், எத்தனை சீக்கிரம் வெளிவர முடியுமோ வந்துவிடவும். ஓர் உபாதைக்காக அட்மிட் ஆகி உள்ளே
போனதும், அப்படியே மற்ற உபாதைகள் உள்ளனவா என்று பார்த்து
விடலாம் என்று யாராவது அல்லக்கை யோசனை சொன்னால் பெரிய எழுத்தில் வேண்டாம் என்று சொல்லிவிடுங்கள். முடிந்தால்
அலறவும். இல்லையேல் மாட்டினீர்கள்.

எல்லோரும் நல்லவர்கள், திறமைசாலிகள். சிக்கல் என்னவென்றால்
அவர்கள் திறமைசாலிகளாக இருக்கும் அவயங்கள் வேறுபடும். கிட்னி ஸ்பெஷலிஸ்ட் கிட்னியையே கவனிப்பார், ஹார்ட், ஹார்ட்டையே...
சுவாச நிபுணர் சுவாசத்தையே. யாரவது ஒருவர் பொதுவாகப் பொறுப்
பேற்றுச் செய்யாவிடில் அகப்படுவீர்கள். ஒவ்வொரு டாக்டரும் சிற்றசர்கள்போல

குட்டி டாக்டர் புடைசூழ வருவார்கள். மொத்தம் ஒரு நிமிஷம் நம் படுக்கையருகே நிற்பார்கள். அன்று அதிர்ஷ்ட தினம் என்றால் ஏறிட்டுப் பார்ப்பார்கள்.இல்லையேல், தலைமாட்டு சார்ட்தான். "ஹவ் ஆர் யு ரங்கராஜன்?" என்று மார்பில் தட்டுவார் சீனியர்.

குட்டி டாக்டர் தாழ்ந்த குரலில் கிசுகிசுப்பார்."ஸ்டாப் லாசிக்ஸ் ...இன்க்ரீஸ் ட்ரெண்டால்..." என்று கட்டளையிட்டுவிட்டு கவுன் பறக்க கடவுள் புறப்பட்டு விடுவார். அடுத்து, அடுத்த ஸ்பெஷலிஸ்ட் வந்து குய்யோ முறையோ -
"யார் லாசிக்ஸை நிறுத்தியது?" இவர்கள் இருவருக்கும் பொதுவாக வார்டு சிஸ்டர் என்னும் பெரும்பாலும் மலையாளம் பேசும் அப்பிராணி.

இதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது கட்டாயம் - ஒவ்வொரு மருந்துக்கும் ஒரு விளைவும், பக்க விளைவும் உண்டு.

ஒரு மாத்திரை கல்குடலாக்கி பாத்ரூம் எங்கிருக்கிறது என்பதே மறந்து போகும். மற்றொரு மாத்திரை இளக்கி குழாய் போலத் திறந்துவிடும். ஒரு மாத்திரை தூக்கத்தைக் கொடுக்கும். ஒன்று கெடுக்கும். ஒன்று, ஈறுகளை, பல்லை மறைக்க வைக்கும் அளவுக்குக் கொழுக்க வைக்கும், ஒன்று
பல்லை உதிர்க்கும்.

ஒரு காலத்தில் ஒரு வேளைக்குப் பதினான்கு மாத்திரைகள் சாப்பிட்ட எனக்கு என்ன ஆகியிருக்கும்? ரகளை !

ஆஸ்பத்திரி என்பது மிகுந்த மனச்சோர்வு அளிக்கும் இடம். சுற்றிலும் ஆரோக்கியர்கள் காபி, டிபன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது நாம்
மட்டும் கண்காட்சிப் பொருள் போல படுத்திருக்க, கண்ட நேரத்தில்,
கண்டவர் வந்து கண்டஇடத்தில் குத்தி ரத்தம் எடுத்து க்ளூகோஸ்
கொடுத்து, பாத்திரம் வைத்து மூத்திரம் எடுத்து, ஷகிலா ரேஞ்சுக்கு
உடம்பெல்லாம் தெரியும்படி நீல கவுன் அணிவித்து, ஆஸ்பத்திரியில் நிகழ்வது போல மரியாதை இழப்பு மந்திரியின் முன்னிலையில் கூட நிகழாது.

அப்பல்லோ போன்ற ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கான அத்தனை கருவிகளும் உள்ளன. எனக்கே எடுத்த டெஸ்டுகள்
ஆன்ஜியோகிராம், பல்மனரி ஃபங்க்ஷன் டெஸ்ட்,ஒருநாள் விட்டு
ஒரு நாள் எக்ஸ்ரே, ரீனல் ப்ரொஃபைல் டெஸ்ட், 1 அண்ட்
2 பிளட் டெஸ்ட், எட்டு மணி நேரம் மெல்லக் கொடுக்கப்படும் ஏதோ இன்ஜெக்ஷன், கால் வலிக்கு டாப்ளர் ஸ்கேன் ...ஒவ்வொன்றுக்கும்
மிகுந்த பொருள் செலவாகும். ஏழைகள் அணுக முடியாது.
நானே உள்ளாடை வரை உருவப்பட்டு பெஞ்சு, நாற்காலிகளை விற்கும் நிலைக்கு வந்துவிட்டேன்.

டிஸ்சார்ஜ் ஆகும்போது டாக்டர் கே சி பிரகாஷ் ஒரு சிற்றிடி கொடுத்தார். "எல்லாம் சரியாயிடுச்சு. ஆனா, ஒரு நாளைக்கு ஒரு கிராம்தான் உப்பு,
ஐந்நூறு மில்லிதான் தண்ணி."

உப்பில்லாமல், தண்ணீரில்லாமல் உயிர்வாழ்வதற்கு இன்னொரு பெயர் உண்டு...நரகம்....

தாகம் என்றால் இப்படி, அப்படித் தாகம் இல்லை....டாண்டலஸ்ஸின் (Tantalaus) தாகம். (புரியாதவர்கள் ஹாய் மதனைக் கேட்கவும்)

*********************************************
என் குறிப்பு: - இந்த டாண்டலஸ் பற்றி நான் படித்ததை (அதில் நினைவிருப்பதை) உங்களோடு பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

டாண்டலஸ் ஒரு கிரேக்க இதிகாச ஹீரோ. அவன் ஓர் சமயம் தன் வீட்டிற்கு விருந்துண்ண வரும் கடவுள்களுக்கு அவனுடைய மகனைச் சமைத்து பரிமாற விழையும்போது, உண்மை தெரிய வர, கோபத்தில் டாண்டலஸை சபிக்கின்றனர்.

அந்த சாபத்தின் விளைவாக டாண்டலஸ் முழங்காலளவு தண்ணீரில் எப்போதும் நிற்பான். அவன் தலைக்கு மேல் உள்ள மரத்தில் கைக்கெட்டும் தூரத்தில் உள்ள கிளையில் பழங்கள் இருக்கும். அவனால் அதைப் பறித்து சாப்பிட முடியாது.

சாப்பிட நினைக்கும்போது பழங்கள் உயரே போய்விடும். சரி தண்ணீராவது குடிக்கலாம் என்று குனிந்தால், காலுக்குக் கீழே இருக்கும் தண்ணீர் வற்றிவிடும். இதனால், டாண்டலஸ் எப்போது கடுமையான தாகத்துடனும், நிரந்தர பசியுடனும் இருப்பான். இவன் பெயரிலிருந்தே ஆங்கில வார்த்தையான tantalize / tantalise வந்தது. டிக்ஷனரியில் பொருள் பாருங்கள்,
விளங்கும்.)
******************************
மறுபடியும் சுஜாதா......

ஆஸ்பத்திரியிலிருந்து மூன்று வாரங்களுக்குப் பிறகு நான் வெளிவந்தபோது நான் இழந்தது பன்னிரண்டு கேஜி. பெற்றது,

"எனக்கு இத்தனை நண்பர்களா? இத்தனை நலம் விரும்பிகளா?" என்ற பிரமிப்பு. என் மனைவியும், மகன்களும், என் மச்சினரும் மாற்றி, மாற்றி ட்யூட்டி பார்க்க, சினிமா நண்பர்கள் அனைவரும் வந்து ஆறுதலும், பொருளுதவியும் தந்தார்கள். பக்கத்துக்கு வார்டுகளில் படித்திருந்தவர்கள் தங்கள் வியாதிகளை மறந்து என்னை விசாரிக்க வந்தார்கள்.

டாக்டர்கள், இலக்கியவாதிகள், கவிஞர்கள், லாப் டெக்னீஷியன்கள், பெரும்பாலும் செல்வி என்ற பெயர் கொண்ட அரிதான தமிழ் நர்ஸுகள், அஃறிணையில், இனிமையாக பேசும் மலையாள நர்ஸுகள்,...
எத்தனைப் பேர் !!

'நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவிலேன்' (திருவாய்மொழி) ஆன நான் இவர்களுக்கு என்ன செய்தேன் என யோசித்துப் பார்க்கிறேன். இவர்களுக்காக இந்தண்டை ஒரு துரும்பை எடுத்து அந்தண்டை போட்டதில்லை. ஒரு ஸ்டூலைக் கூட நகர்த்தியதில்லை. ஏதோ தமிழில் கிறுக்கினத்துக்கு
இத்தனை மதிப்பா? இத்தனை சக்தியா?

உற்றார்கள் எனக்கில்லை யாரும் என்னும்;
உற்றார்கள் எனக்கிங்கெல்லாரும் என்னும்

என்ற திருவாய்மொழி வரிகள்தான் நினைவுக்கு வருகிறது.
Image may contain: 1 person, sitting