ILAIYA NILA S.P.BALASUBRAMANIAM THOUGHT WAVES
ILAIYA NILA S.P.BALASUBRAMANIAM THOUGHT WAVES இளைய நிலா நினைவலைகள்! ஆர்.சரவணன் எஸ். பி. பாலசுப்பிரமணியம் எஸ். பி. பாலசுப்பிரமணியம் ஓவியம்: தமிழ் பிரீமியம் ஸ்டோரி கே.வி.மகாதேவன் இசையில் தமிழில் அறிமுகமாகி, நேற்றுவந்த புது இசையமைப்பாளர் வரை பாடியவர், 40 ஆயிரம் பாடல்கள், 55 ஆண்டுக்கால இசைப்பயணத்தில் பாடி ஒரு இசை சகாப்தமாகவே வாழ்ந்து மறைந்திருக்கிறார் எஸ்.பி. பாலசுப்பிரமணியம். 74 வயதில் தன் குரலை நம்மிடையே விட்டுவிட்டுப் பறந்துபோன பாட்டுக்குயில் குறித்த சுவாரஸ்ய தகவல்கள் இவை. 1 படிப்பில் சுட்டி. பொறியியல் கல்லூரியில் சேர்ந்தவர், அதைப் பாதியில் விட்டு சென்னைக்கு நிரந்தரமாக வந்துவிட்டார். ‘உனக்கு என்ன விருப்பமோ செய். ஆனா, செய்யும் தொழிலை நேசிச்சு செய்.இரட்டைக்குதிரை சவாரி செய்யாதே!’ என்ற தந்தையின் அறிவுரை வழிகாட்ட, சென்னை வந்தவரை வாரி அணைத்துக்கொண்டது தமிழ்நாடு! 2 பாட்டுப்போட்டிக்காக 1966-ல் சென்னை வந்த பாலு இசையமைப்பாளர் எஸ்.பி.கோதண்டபாணியிடம் முதல் பரிசை வாங்கியதோடு அவர் இசையில் தெலுங்குப் படமான ‘ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மர்யாத ராமண்ணா’ படத்தில் ‘ஏமி ஈவிந்த மோகம்’ என்ற பாடலைப் பாடி...