MGR DOUBLE ROLE IN LIFE
MGR DOUBLE ROLE IN LIFE . MGR முதல்வர் ஆன பின் ஒரு நாள் கோட்டைக்கு புறப்படும் முன் மலை என குவிந்து இருந்த அவருக்கு வந்த கடிதங்களில் கிளி ஜோசியர் எடுப்பதை போல ஒரு கடிதத்தை எடுக்கிறார். காரில் கோட்டைக்கு போய் கொண்டே படிக்கிறார். அது ஒரு திருமண பத்திரிகை. அந்த திருமண பத்திரிகையில் எந்த ஒரு இடத்திலும் புரட்சிதலைவர் பேரோ அல்லது கட்சிக்காரர் பேரோ அல்லது தான் யார் என்ன விவரம் இல்லை உதவி கேட்க வில்லை கலந்து கொள்ள கோரிக்கை இல்லை. மனதில் ஏதோ தோன்றிய எம்ஜியார் பிறகு தன் ரகசிய காவல் நண்பர் மற்றும் ஒரு கட்சிக்காரரை வர சொல்லி இந்த பத்திரிகை அனுப்பியது யார் அவர் எங்கு இருக்கிறார் என்ற விவரம் சேகரிக்க சொல்கிறார். பத்திரிகையில் இருந்த முகவரி கொண்டு பார்த்ததில் அது சென்னை வடபழனி ராம் திரையரங்கம் அருகில் சென்று பார்க்கும் போது அந்த அரங்கத்தின் முன்னால் இருந்த பிளாட்பாரத்தில் ஒரு செருப்பு தெய்க்கும் தொழிலாளி உள்ள இடம் என்று தெரிகிறது. அவர் செருப்பு தெய்க்கும் உபகரணங்களுடன் சாமி படங்கள் கூட இல்லாமல் அந்த பெட்டியின் மேல நம் இதய தெய்வம் படம் மட்டும் ஒட்ட பட்டு இரு...