Posts

Showing posts with the label SRI KUMARA

SRI KUMARA GURUPARAR HISTORY

Image
SRI KUMARA GURUPARAR HISTORY ஸ்ரீகுமரகுருபரர் சரித்திரச் சுருக்கம்: உ.வே.சா September 1, 2008 By ஆசிரியர் குழு ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் சரித்திரச் சுருக்கம் மகாமகோபாத்தியாய டாக்டர். உ.வே. சாமிநாதையரவர்கள் எழுதியது ஒன்பது கைலாசங்களும் ஒன்பது திருப்பதிகளும் தன் கரையில் அமையப்பெற்ற தாமிரபர்ணி நதியின் வடகரையில் ஸ்ரீ வைகுண்டமென்று வழங்கும் திருப்பதியின் வடபாலில் ஸ்ரீ கைலாசமென ஒருபகுதி உண்டு. அங்கே பரம்பரையாகத் தமிழ்ப் புலமையும் முருகக்கடவுளது பக்தியும் வாய்ந்த சைவவேளாள குலத்தில் சண்முக சிகாமணிக் கவிராயரென்ற ஒருவர் தம் மனைவியரான சிவகாமசுந்தரியம்மையாரோடு வாழ்ந்து வந்தார். அவ்விருவருக்கும் ஓர் ஆண் குழந்தை உதித்தது. அதற்குக் குமரகுருபரன் என்னும் பெயர் சூட்டி அவர்கள் வளர்த்து வருவாராயினர். குமரகுருபரர் ஐந்தாண்டு வரையிற் பேச்சின்றி ஊமைபோல இருந்து வந்தனர். அதுகண்டு நடுங்கிய பெற்றோர்கள் அவரைத் திருச்செந்தூருக்கு எடுத்துச் சென்று செந்திலாண்டவர் சந்நிதியிலே வளர்த்திவிட்டுத் தாமும் பாடுகிடந்தனர். முருகவேள் திருவருளால் குமரகுருபரர் பேசும் ஆற்றல்பெற்றுக் கல்வியிலும் சிறப்புற்றனர். செந...