C.R.PARTEBAN , PLAY AND FILM ACTOR BORN 1929 - JANUARY 25 ,2021
C.R.PARTEBAN , PLAY AND FILM ACTOR BORN 1929 - JANUARY 25 ,2021 சி. ஆர். பார்த்திபன் ( C. R. Parthiban , 1929 – 25 சனவரி 2021) இந்தியத் தமிழ்த் திரைப்பட , மற்றும் நாடக நடிகர் ஆவார். [1] [2] இவர் வீரபாண்டிய கட்டபொம்மன் (1959) திரைப்படத்தில் ஜாக்சன் துரையாக நடித்துப் புகழ் பெற்றார். [3] [4] தமிழ், தெலுங்கு, இந்தி என நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். [2] வாழ்க்கைக் குறிப்பு [ தொகு ] வேலூரை சொந்த ஊராகக் கொண்ட பார்த்திபன், பள்ளிப் படிப்பின் பின், மேல்படிப்புக்காக 1946 இல் சென்னை வந்து [1] லயோலா கல்லூரியில் படித்து, பொருளியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். [1] பள்ளியிலும், கல்லூரியிலும் நாடகங்களில் நடித்தார். பட்டம் பெற்ற பின்னர் தலைமைச் செயலகத்தில் பணியாற்றினார். பின்னர் நாடகங்களில் பல வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார். ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ நாடகத்திலும் இவர் நடித்துள்ளார். [2] முதன் முதலில் ஜெமினி ஸ்டூடியோவில் 'இன்சனியாத்' என்ற இந்தித் திரைப்படம் ஒன்றில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது. அதன் ப...