BAHADUR SHAH BORN 1775 OCTOBER 24-1862 NOVEMBER 7
BAHADUR SHAH BORN 1775 OCTOBER 24-1862 NOVEMBER 7 அபுல் முஸப்பர் சிராஜூதின் முஹம்மது பஹதூர்ஷா என்பது இவரது இயற்பெயர். 1775 ஆம் ஆண்டு அக்டோபர் 24 செவ்வாய்க்கிழமை அக்பர்ஷாவுக்கும்-லால்பாய்க்கும் இரண்டாவது மகனாகப் பிறந்தார். 1837 ஆம்ஆண்டு பகதூர் ஷா டில்லி அரியணையில் ஏறினார். "இருளுக்கு மத்தியில் மருள் உற்ற நெஞ்சுடன் எங்கும் குவிந்திடும் இங்கிலீஷ் சேனையை வெருள் உற்று முற்றிலும் வீறுற்றுத் தாக்கிட வெருள் உற்று முற்றிலும் வீறுற்றத் தாக்கிட வேங்கை போல் கொடியினைத்தாங்கிட்ட தோளோடு திரண்ட நீர் வருக இன்றே" என்ற உறங்கிக் கிடந்த தேச விடுதலைப்போரில் பங்குகொள்ள அழைத்தவர் பஹதூர் ஷா. ஆங்கிலேயர்களை விரட்டுவதற்கு சுதேசி மன்னர்கள் யாவரும் முன்வருவாயிர்களாயின் என் ராஜ்ஜியத்தின் அதிகாரம் முழுவதையும் அந்த மன்னர்கள் அடங்கிய சபையிடம் தரத்தயாராக உள்ளேன் என வீர வேண்டுகோள் விடுத்தார். ஆனால் சுதேசி மன்னர்கள் பெரும்பாலும் ஆங்கிலேயருக்கு விசுவாசிகளாகவே இருந்தனர். அப்போது வெகுண்ட பஹதூர்ஷா தேசமக்களின் மனதில் நம்பிக்கை துளியளவாவது இருக்கும்வரை இந்தியாவின் வாள் லண்டனின் இருதயத்தைப்...