Posts

Showing posts with the label samesex

உலக ஓரினச்சேர்க்கை,மற்றும் Transphobia Biphobia -நாள் ,MAY 17

Image
உலக ஓரினச்சேர்க்கை,மற்றும் Transphobia Biphobia -நாள் ,MAY 17 ஓரினச்சேர்க்கை விஜய். நான் ஓர் ஓரினச் சேர்க்கையாளன். இந்த அஞ்சலை நிறையத் தடவை எழுதி அழித்திருக்கிறேன். இந்த முறை அனுப்பி விட வேண்டும் என்ற உத்தேசத்தில் ஆரம்பிக்கின்றேன்.எவ்வளவோ முன்னேற்றங்கள் அடைந்தாலும் இன்னும் இந்தியா ஓரினசேர்க்கை என்ற கருத்தில் பின் தங்கியுள்ளதாகவே நினைக்கின்றேன். இந்தியாவில் ஓரினச் சேர்க்கையாளர்கள் (ஒரு சதவிகிதம் ?) முகமூடி அணிந்து கொண்டே வாழ்கின்றார்கள், அல்லது அப்படித்தான் வாழ வேண்டியுள்ளது. நான் ஒன்றும் விதிவிலக்கல்ல. இந்தக் கடிதத்தை ஏன் எழுதுகின்றேன் என்று இன்னும் புலப்பட வில்லை. ஒருவேளை என் மனதின் பாரம் குறைந்தாலும் குறையலாம் (இதன் நிகழ்தகவு குறைவு தான் என்றாலும்). இப்பொழுது நான் ஓர் ஓரின சேர்க்கையாளன் என்று அறிவித்து விட்டேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். என்ன நேரும்? ௧. என் நண்பர்களை இழக்க வேண்டி இருக்கும். ௨. பெற்றோருக்கு புரிய வைப்பதே பெரும் பாடாக இருக்கும். நிறையக் கண்ணீர் காண நேரிடும். நீங்களே சொல்லுங்கள், எப்படி ஐம்பது வயதை தாண்டிய நபருக்கு, பெற்றோருக்கு, இதை புரிய வைப்பது !...