WILL AURANGAZEEB ,DEMOLISH KASI VISVANATHAR TEMPLE ?
WILL AURANGAZEEB ,DEMOLISH KASI VISVANATHAR TEMPLE ? ஒளரங்கசீப் காசி விஸ்வநாதர் கோயிலை இடித்தாரா? வெங்கட் நாகராஜ் தனது காசி பயண அனுபவத்தை பற்றி எழுதிய இடுகையை பார்த்தேன். மிக சாதுர்யமாக தனது பாசிச கருத்துக்களை மென்மையாக சொல்லி நஞ்சை எப்படி விதைக்கிறார் என்று பாருங்கள். //கி.பி. 490 ஆம் வருடம் காசி விஸ்வநாதர் ஆலயம் கட்டப்பட்டது. பதினோறாம் நூற்றாண்டில் மீண்டும் ஹரிச்சந்திர மஹாராஜா ஒரு கோவிலைக் கட்டியிருக்கிறார். 1194 ஆம் அண்டு முகம்மது கோரி நடத்திய படையெடுப்பின் போது இந்தக் கோவிலையும், வாரணாசியில் இருந்த மற்ற கோவில்களையும் இடித்துத் தரைமட்டமாக்கிவிடவே, இது மீண்டும் கட்டப்பட்டிருக்கிறது. பிறகு வந்த குத்புதின் ஐபக்கால் மீண்டும் இடிக்கப்பட்டு, அவரது மறைவிற்குப் பின் பல அரசர்களால் இக்கோவில் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. 1351-ம் ஆண்டு ஃபீருஸ் ஷா துக்ளக் என்பவரால் மீண்டும் இடிக்கப்பட மறுபடியும் நிர்மாணிப்பதில் நீண்ட இடைவெளி. அக்பரின் ஆட்சியில் வருமானத் துறை மந்திரியாக இருந்த தோடர் மால், 1585-ம் வருடம் மீண்டும் ஒரு கோவிலைக் கட்டியிருக்கிறார். 1669-ஆம் வருடம் அரசா...