M.K.THIAGARAJA BHAGAVATHAR BIOGRAPHY
M.K.THIAGARAJA BHAGAVATHAR BIOGRAPHY கோபுரத்தில் வாழ்ந்து,குப்பை மேட்டில் வீசபட்ட தியாகராஜ பாகவதர்… அனாதையாக செத்துகிடந்த கொடுமை உங்களுக்கு தெரியுமா.? சுமார் 20 ஆண்டு காலம் தமிழகத்தை கட்டிவைத்தவர் எம்.கே. தியாகராஜ பாகவதர், தமிழ் சினிமாவின் கதல் வசூல் மன்னன். நாடக மேடையில் அவர் பாடிக் கொண்டே தோன்றும்போது, ரசிகர்கள் எழுப்பிய ஆரவார வரவேற்பு வேறெந்த நடிகருக்கும் கிடைத்ததில்லை. பாமரர்களும் கர்நாடக சங்கீதத்தை ரசிக்க முடியும் என்ற நிலையை உருவாக்கியவர். ஒரே சமயத்தில் நாடகம், சினிமா, இசை என்று மூன்று குதிரைகளில் ராஜ பவனி வந்த பெருமை பாகவதருக்கு உண்டு.எம்.கே தியாகராஜ பாகவதர் பற்றி அவரது ரசிகர்களிடம் கேட்டால் அப்படி உருகி சொல்வார்கள் “எனக்கு பாகவதர் மாதிரி முடிவெட்டணும்” அக்கால கொண்டயிடும் (குடுமி) ஆண்களில், இவரைப்போல் கிராப் வெட்டி கிட்டதட்ட விகார அலங்கோலமாகி பின் மொட்டையிட்டவர்களும் உண்டு. அக்கால எம்.ஜி.ஆர், கமலஹாசன்,இம்ரான்கான் போல இவருக்கும் எண்ணெற்ற பெண்கள் கடிதம் எழுதுவார்களாம், அவருக்காக காத்திருந்த பெண்கள் ஏராளம்.ஒரு கலெக்டர் மகள் இவரிடம் பாடல் கற்றுகொள்ள ஏற்பாடு, முதல...