Posts

Showing posts with the label எம்ஜியார் கோவில்

எம்ஜியார் கோவில் கேள்விப்பட்டு இருக்கீங்களா ?! ஜெயலலிதாவுக்கும் கோவில் வரலாம்

Image
எம்ஜியார் கோவில்  கேள்விப்பட்டு  இருக்கீங்களா ?! ஜெயலலிதாவுக்கும் கோவில் வரலாம் கட்சியிலும், ஆட்சியிலும் ஒரு பாசிஸ்ட்டாக நடந்து கொண்ட எம்ஜிஆர் எனும் அற்பங்களுக்கெல்லாம் தமிழகத்தில் ஒரு கோவிலும், பூஜையும் நடக்கிறது என்றால் இங்கே பார்ப்பனிய இந்து மதத்தின் அருகதையை விளங்கிக் கொள்ளலாம் பிள்ளைப் பேறு இல்லாதவர்களுக்கு அந்த ராமச்சந்திர மூர்த்தி பிள்ளை வரம் தருகிறாராம். வசூலாகாத கடனெல்லாம் வசூலாகிறதாம், தீராத நோய்கள் தீர்கிறதாம். இவ்வாறாக வெளிவந்த பத்திரிகை செய்தியைக் கண்டதும் பத்தோடு ஒன்று என்று கடந்து செல்ல முடியவில்லை. நேரில் சென்று ’அற்புதங்களைப்’ பார்த்து விடுவது என்று தீமானித்தோம் . எம்.ஜி.ஆர் கோயில் பாசிஸ்ட்டு எம்.ஜி.ராமச்சந்திர மூர்த்திக்கு பக்தர்கள் கட்டிய கோயில். திருநின்றவூரிலிருந்து பெரியபாளையம் செல்லும் சாலையில் இடது புறமாக 5 கிமீ தொலைவில் இருக்கும் கிராமம் நத்தமேடு. படு குக்கிராமமான இந்த ஊருக்கு ஒழுங்கான சாலை வசதி கூட கிடையாது. பகுதி அளவிற்கு விவசாயத்தைச் சார்ந்திருக்கும் மக்கள். நாங்கள் சென்ற போது கோவிலில் மந்திரங்கள் ஒலிக்க பூஜைகள் நடந்து கொண...