Showing posts with label ESCAPED. Show all posts
Showing posts with label ESCAPED. Show all posts

Monday, 17 August 2020

INDIAN SOLDIERS ESCAPED FROM PAKISTAN JAIL




INDIAN SOLDIERS ESCAPED 
FROM PAKISTAN JAIL 



.பாகிஸ்தான் சிறையில் இருந்து தப்பிய இந்திய விமானிகளின் கதை
'ரெட் ஒன், யூ ஆர் ஆன் ஃபயர்...'… குழுவின் தலைவர் தீரேந்திர ஜாஃபாவின் ஹெட்போனில் சக விமானி ஃபர்டியின் குரல் கேட்டது.

மற்றொரு விமானி மோகனின் குரலும் ஒலித்தது, ' பெல் அவுட் ரெட் ஒன், பெல் அவுட்.' மூன்றாவது விமானி ஜக்கூ சக்லானியின் குரலிலும் பரபரப்பு காணப்பட்டது, 'சார்... யூ ஆர்.... ஆன் ஃபயர்... கெட் அவுட்... ஃபார் காட் சேக்... பெல் அவுட்...'

ஜாஃபாவின் சுகோய் விமானத்தில் ஏற்பட்ட தீ காக்பிட் வரை பரவியது. விமானம் கட்டுப்பாட்டில் இருந்து விலகியது. விமானியின் இருக்கையில் இருந்து வெளியேறும் பொத்தானை ஜாஃபா அழுத்தியதும், அவர் வெளியே தள்ளப்பட்டு, அவருடைய பாராசூட் விரிந்து அவரை தரைக்குக்கொண்டு சென்றது.

தரையில் இறங்கியதும், அல்லாஹு அக்பர், நார்-இ-தக்பீர் என்று முழங்கியவாறே ஓடி வந்த கிராம மக்களின் கூட்டம் அவரை சூழ்ந்தது என்று ஜாஃபா கூறுகிறார். அவரது ஆடைகளை பிடித்து இழுத்து கிழித்தவர்கள், கையிலிருந்த கடிகாரத்தையும் அவரிடம் இருந்த சிகரெட் லைட்டரையும் பிடுங்கிக் கொண்டனர்.

அவரது கையுறைகள், காலணிகள், 200 பாகிஸ்தானிய ரூபாய், கழுத்தில் அணிந்திருந்த மஃப்லெர் அனைத்தும் நொடியில் காணமல் போயின. பாகிஸ்தான் வீரர்கள் சிலர் கூட்டத்தில் இருந்து அவரைக் காப்பாற்ற முயற்சிப்பதையும் ஜாஃபா கண்டார்

உன்னிடம் ஆயுதங்கள் ஏதாவது இருக்கிறதா?' என்று ஒரு வாட்ட சாட்டமான அதிகாரி ஜாஃபாவிடம் கேட்டார். அவருக்கு பதிலளித்த ஜாஃபா, 'என்னிடம் துப்பாக்கி இருந்தது, கூட்டத்தினர் அதை எடுத்துக்கொண்டார்கள் என நினைக்கிறேன்.'

'என்னுடைய உடல் பாகங்கள் அனைத்தும் துவண்டுபோய் விட்டதாக தோன்றியது, நிற்பதற்கு முதுகெலும்பு கூட இல்லை என்று தோன்றியது. உடலை ஓரடி கூட நகர்த்த முடியும் என்று தோன்றவில்லை' என்று வேதனையுடன் கூறினார் அவர்.

ஜாஃபாவை அழைத்துச் செல்லுமாறு அந்த அதிகாரி உத்தரவிட்டதை அடுத்து, இரண்டு சிப்பாய்கள் அவரை ஒரு கூடாரத்திற்குள் அழைத்துச் சென்றார்கள். அவருக்கு தேநீர் வழங்குமாறு உத்தரவிடப்பட்டது.

கொடுக்கப்பட்ட தேநீர் கிளாசை கையில் எடுக்கும் பலம்கூட தன் கைகளுக்கு இல்லை என்று ஜாஃபாவுக்கு தோன்றியது. அவரது நிலையைப் பார்த்த ஒரு சிப்பாய், ஸ்பூனால் கொஞ்சம் கொஞ்சமாக ஜாஃபாவின் வாயில் தேநீரை ஊட்டினார்..

பாகிஸ்தான் சிறையில் இந்திய தேசிய கீதம்

ஜாஃபாவின் இடுப்பு காயங்களுக்கு கட்டு போடப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். தினமும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

அவர் கழிவறைக்கு செல்லும்போது, அவரது முகத்தில் கடிவாளம் போன்று தலையணை ஒன்று பொருத்தப்படும். இது அவர் பக்கவாட்டில் பார்ப்பதை தடுக்கும்.

அவர் அந்த அறைக்கு செல்லும்போது சிலர் பேசிக் கொண்டிருக்கும் ஓசை கேட்கும். அவர் சென்றதும் நிசப்தமாகிவிடும். திடீரென்று ஒரு நாள் சார்... என்று கூவியவாறே விமானி லெஃப்டினெண்ட் திலீப் பாரூல்கர் ஓடிவந்தார்.

ஜாஃபாவின் தளர்வான சட்டைக்குள் அவருக்கு பிளாஸ்டர் போட்டிருப்பதை திலீப் கவனிக்கவில்லை. அங்கு பத்து இந்திய விமானிகள் போர்க் கைதிகளாக இருந்தனர்.

சக இந்தியர்களை நீண்ட நாட்களுக்கு பிறகு பார்த்த ஜாஃபாவின் கண்களில் நீர் பெருகியது. அப்போது போர்க் கைதிகள் முகாமின் கண்காணிப்பாளர் உஸ்மான் ஹனீஃப் அங்கு சிரித்துக் கொண்டே வந்தார்.

அவரைத் தொடர்ந்து இரண்டு ஆர்டர்லிகள் தேநீர் கோப்பைகளை எடுத்துக்கொண்டு வந்தனர். உங்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை சொல்ல வந்தேன் என்று உஸ்மான் சொன்னார்.

அன்றைய தினம் மறக்கமுடியாத நாளாக இருந்தது. உயிரிழந்த நமது சக வீரர்களுக்கு இரண்டு நிமிட மெளன அஞ்சலி செலுத்துவோம், பிறகு தேசிய கீதம் பாடுவோம் என்று சொன்னார், அங்கிருந்தவர்களில் மூத்த இந்திய விமானி கோயெல்ஹோ.

1971, டிசம்பர் 25ஆம் தேதியன்று மாலை, பாகிஸ்தான் சிறைச்சாலையில் இந்திய தேசிய கீதத்தை பாடியபோது தாங்கள் மட்டற்ற மகிழ்ச்சியடைந்ததாகவும், தங்கள் நெஞ்சம் பெருமிதத்தில் விம்மியதாகவும் ஜாஃபா கூறுகிறார்.

சுவரில் துளை

இதற்கிடையில், இந்தியாவின் கொள்கைத் திட்டக் குழுவின் தலைவர் டி.பி தர், பாகிஸ்தானுக்கு வந்து பேச்சுவார்த்தைகளை நடத்தி விட்டு திரும்பிச் சென்றார். ஆனால் போர்க் கைதிகளின் நிலைமை பற்றிய முடிவு எதுவும் ஏற்படவில்லை.

அனைவரும் ஏமாற்றமடைந்தாலும், விமானப்படை தளபதி திலீப் பாரூல்கர் மற்றும் மல்விந்தர் சிங் கரேவால் இருவரும் அதிக வேதனையடைந்தார்கள்.

1971 யுத்தத்திற்கு முன்னர், ஒருமுறை தனது சகாக்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது, எப்போதாவது அவரது விமானம் பிடிபட்டால், எதிரியின் சிறையில் இருக்க மாட்டேன், அங்கிருந்து தப்பிக்க முயற்சிப்பேன் என்று பாரூல்கர் கூறியிருந்தார். அந்த வார்த்தைகளை தற்போது உண்மையிலுமே நடத்திக் காட்டினார் பாரூல்கர்.

சிறையில் இருந்து தப்பிக்கும் முயற்சியில் பாரூல்கருடன் இணைந்து, கரேவாலும், ஹரீஷ் சிங்கும் செயல்பட்டனர்.

பச்சை நிற ஆடை

சிறையின் அறை எண் ஐந்தின் சுவரில், 21 X 15 அங்குல ஓட்டை போடவேண்டும். அது பாகிஸ்தானிய விமானப்படை வேலைவாய்ப்பு அலுவலகத்தின் வளாகத்திற்குள் செல்ல உதவும், அங்கிருந்து ஆறடி சுவரை தாண்டிக் குதித்தால், மால் ரோடு என்ற சாலைக்கு சென்றுவிடலாம்.

56 செங்கற்களை அதன் இடத்தில் இருந்து அகற்றி விட்டு, பிறகு அதை சுவர் இருப்பது போலவே அடுக்கி வைத்து விடவேண்டும். சுவரில் இருந்து செங்கற்களை பிரித்து எடுக்கும்போது விழும் காய்ந்த சிமெண்ட் கலவை கொண்ட குப்பைகளை எங்காவது மறைத்து வைக்க வேண்டும். அதாவது சுவரை பார்த்தால் அப்படியே இருக்கும், ஆனால் தேவைப்படும்போது செங்கற்களை உடனடியாக அகற்றிவிடலாம்.

எலக்ட்ரீஷியன் ஒருவரின் திருப்புளியை ஒருவர் திருடி வைத்துக் கொண்டார். கோகா கோலா பாட்டிலில் சுவரை துளையிடும் கருவிகளை ஒருவர் ஏற்பாடு செய்து வைத்தார்.

இரவு பத்து மணிக்கு பிறகு சுவரில் இருந்து செங்கற்களை பிரித்தெடுக்கும் பணியில் திலீப் பாரூல்கரும், கரேவாலும் தொடங்குவார்கள். ஹைரியும், சாடியும் ரோந்துக்கு யாராவது வருகிறார்களா என்பதை கண்காணிப்பார்கள்.

ஜெனீவா ஒப்பந்தத்தின் விதிகளின் படி, இந்தியக் கைதிகளுக்கு ஒவ்வொரு மாதமும் சம்பளமாக 50 பிராங்கிற்கு சமமான பாகிஸ்தான் ரூபாய் வழங்கப்பட்டது. அதில் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவார்கள், எஞ்சிய பணத்தை சேமித்து வைப்பார்கள்.

இதற்கிடையில், சிறையில் பாகிஸ்தானிய பாதுகாவலராக பணியாற்றிய ஒளரங்கசீப் என்பவர் தையல் வேலையும் செய்பவர் என்பதை பேச்சுவாக்கில் பாரூல்கர் அறிந்துகொண்டார்.

இதை பயன்படுத்திக் கொண்ட அவர், ஒளரங்கசிப்பிடம் பேச்சுக் கொடுக்கும்போது, இந்தியாவில் பட்டான் சூட் கிடைப்பதில்லை. எங்களுக்கு அதை அணிந்து பார்க்க ஆசையாக இருக்கிறது. எங்களுக்காக தைத்துக் கொடுப்பீர்களா என்று கேட்டார்.

பாரூல்கர் கேட்டுக்கொண்டபடி பச்சை நிறத்தில் பட்டான் சூட் என்ற ஆடையை தைத்துக் கொடுத்தார் ஒளரங்கசீப். கம்பி மற்றும் பேட்டரியின் உதவியுடன் ஊசியியை காந்த ஊசியாக மாற்றி பார்ப்பதற்கு ஃபவுண்டர் பேனா போல் தோற்றமளிக்கும் திசைகாட்டி ஒன்றை உருவாக்கினார் காமத்.

புயலும், பெருங்காற்றும் வீசும்போது சிறையில் இருந்து தப்பித்தனர் பாகிஸ்தான் சுதந்திர தினமான ஆகஸ்ட் 14ஆம் தேதியன்று காவலாளிகள் விடுமுறை மனநிலையில் சற்று எச்சரிக்கை குறைவாக இருப்பார்கள் என்று கணித்தார் பாரூல்கர்.

ஆகஸ்ட் 12ஆம் தேதியன்று இரவு, இடி மின்னல் ஓசை கேட்டது. அன்று அவர்களின் செங்கற்களைப் பெயர்த்து எடுக்கும் பணியும் முடிவடைந்தது.

சிறிய துவாரத்தின் வழியாக மூன்று பேர் வெளியே வந்து சுவரின் அருகே காத்திருந்தார்கள். அவர்கள் வெளியே சுவாசித்தது சுதந்திரக் காற்றை மட்டுமல்ல, புயல் காற்றையும்தான்.

அவர்கள் வெளியேறிய இடத்திற்கு அருகில் கட்டில் ஒன்றில் சிறைக் காவலர் ஒருவர் அமர்ந்திருந்தார். சற்றே அச்சத்துடன் அவரைக் கவனித்தபோது, புயல் காற்று தூசியில் இருந்து பாதுகாப்பாக தலையில் கம்பளியை போட்டுக் கொண்டு அமர்ந்திருந்தார்

வெளிப்புற சுவரை ஒட்டியிருந்த மால் ரோட்டை உற்று கவனித்தார்கள். புயலும் மழையும் வீசிய அந்த இரவு நேரத்தில் சாலையில் ஆள் அரவமே இல்லை. இரவுகாட்சி திரைப்படம் பார்த்து முடித்தவர்கள் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

கட்டிலில் அமர்ந்திருந்த காவல்காரர், ஒருமுறை தலையை வெளியே தூக்கிய போது மழை வேகமாக பெய்ததை பார்த்து மீண்டும் தலையை மூடியபடியே, கட்டிலை தூக்கிக்கொண்டு விமானப்படை வேலைவாய்ப்பு அலுவலகத்தை நோக்கி ஓடினார்.

சரியான சந்தர்ப்பம் கிடைத்ததை பயன்படுத்திக் கொண்ட மூவரும் சுவரேறி குதித்தனர். வெளியேறிய அனைவரும் அந்த பட்டான் சூட்டை அணிந்திருந்தனர், மால் ரோட்டில் சென்று இரவு நேர சினிமா பார்த்துவிட்டு நடந்து கொண்டிருந்த மக்களுடன் கலந்துவிட்டனர்.

தாங்கள் அனைவரும் அதி உயர் பாதுகாப்புக் கொண்ட பாக்கிஸ்தானில் சிறைச்சாலையில் இருந்து வெளியேறிவிட்டது சற்று நேரத்திற்கு பிறகு தான் அவர்களுக்கு உறைந்தது. லெப்டினன்ட் ஹரிஷ் சிங் 'விடுதலை!' என்று உரக்கக் கத்தினார்.

அதற்கு பதிலளித்த லெப்டினென்ட் மல்விந்தர் சிங் கரேவால் 'இன்னும் இல்லை' என்று அழுத்தமாக சொன்னார்.

கிறித்துவ பெயர்

உயரமாக வாட்டசாட்டமாக இருந்த கரேவால் தாடி வைத்திருந்தார். அவருடைய தலையில் முடியும் அதிகமாக இருந்ததால் பார்ப்பதற்கு அவர் பட்டானியரைப் போலவே தோற்றமளித்தார்.

அவரது அருகில் நடந்துக் கொண்டிருந்த லெப்டினெண்ட் திலீப் பாரூல்கரும் தாடி வைத்திருந்தார். அவரும் பட்டான் சூட் அணிந்திருந்தார்.

தங்களுடைய பெயர் கேட்கப்பட்டால் உண்மையான பெயரைச் சொல்லாமல் கிறித்துவ பெயர்களை சொல்லவேண்டும் என்று முடிவு செய்து கொண்டார்கள். முஸ்லிம் என்று சொல்லமுடியாது. ஏனெனில் யாருக்கும் நமாஸ் படிக்க வராது. இந்திய விமானப்படையில் கிறித்துவர்களுடன் வேலை செய்திருப்பதால் அவர்களின் நடவடிக்கைகள் ஓரளவுக்கு தெரியும் என்பதால் இந்த முடிவு. பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்ல வேண்டுமல்லவா?

திலீப்பின் பெயர் ஃபிலிப் என்று மாறியது. கரேவாலின் பெயர் அல் அமீர் என்று மாறியது.

இவர்கள் இருவரும் லாகூரில் பி.ஏ.எஃப் நிலையத்தில் பணியாற்றுபவர்கள் என்று சொல்வதாக முடிவானது. சிங்கின் பெயர் ஹாரோல்ட் ஜேகப், அவர் ஹைதராபாத் சிந்த் பாகிஸ்தான் விமானப்படையில் பணிபுரிபவராக அவதாரம் எடுத்தார்.

இதெல்லாம் யாராவது இவர்களிடம் விசாரித்தால் சொல்வதற்காக இவர்கள் வசனம் எழுதி உருவாக்கிய கதையும் கதாபாத்திரங்களும் என்பது கேட்பதற்கே சுவையாக இருக்கிறது.

பெஷாவருக்கு பேருந்து பயணம்

மழையில் நனைந்து கொண்டே வேகமாக நடைபோட்ட அவர்கள், பேருந்து நிலையத்திற்கு வந்தார்கள். பெஷாவர் செல்லும் பயணிகள் வாருங்கள் என்று கூவும் ஓசை, இவர்களின் காதில் தேனாக வந்து விழுந்தது. மூவரும் பேருந்தில் ஏறி அமர்ந்தார்கள்.

காலை ஆறு மணிக்கு பெஷாவர் சென்றடைந்த அவர்கள், ஜம்ரூத் சாலைக்கு செல்வதற்காக தாங்கே என்ற இடத்தில் இறங்கி நடந்தார்கள்.

பிறகு, அங்கிருந்து ஏறிய பேருந்தில் இடமில்லை. பேருந்து நடத்துனர் அவர்களை பேருந்தின் கூரையில் ஏறி அமரச்சொன்னார். பேருந்தின் கூரையில் அமர்ந்தவாறே பாகிஸ்தானை பார்த்தவாறே ஜம்ரூத் சென்றாடைந்தனர். அங்கு ஒரு சாலையில் 'பழங்குடியின பகுதிக்கு செல்லும் பாதை. எனவெ இந்த பாதையில் செல்பவர்கள் கவனமாக இருக்கவேண்டும், சாலையைவிட்டு விலகிச் செல்லவேண்டாம், பெண்களை ஒருபோதும் புகைப்படம் எடுக்கவேண்டாம்' என்று எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டிருந்தது.

அங்கிருந்து மற்றொரு பேருந்து மூலமாக காலை ஒன்பதரை மணி அளவில் லண்டி கோதல் சென்றடைந்தார்கள். அங்கிருந்து ஆப்கானிஸ்தான் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. அருகில் இருந்த தேநீர் கடைக்கு சென்று தேநீர் அருந்தினார்கள். அருகில் அமர்ந்திருந்தவரிடம் இங்கிருந்து லண்டிகானா எவ்வளவு தூரம் என்று விசாரித்தற்கு அங்கு இருந்தவர்களுக்கு விவரம் தெரியவில்லை.

உள்ளூர்வாசிகளின் தலையில் எதாவது ஒருவித தலைப்பாகை அணிந்திருப்பதை பார்த்த திலீப், அவர்களில் இருந்து மாறுபட்டு தெரியக்கூடாது என்று உடனடியாக தலைப்பாகைகளை வாங்கிவிட்டார்.

கரேவாலுக்கு தலைப்பாகை சிறியதாக இருந்ததால் அதனை மாற்றுவதற்காக, அந்த கடைக்கு சென்றபோது, லண்டிவானாவுக்கு செல்வதற்கு 25 ரூபாய் என்று அழைக்கும் குரல் கேட்டது.

தாசில்தார் அர்ஜுன்பீஸ்க்கு சந்தேகம் ஏற்பட்டது

அப்போது அங்கிருந்த ஒருவர் நீங்கள் லண்டிகானாவுக்கு போகவேண்டுமா? எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேட்டார்.

திலீப்பும் கேரியும் புனையப்பட்ட கதையை சொல்லிவிட்டார்கள். உடனே கேள்வி கேட்டவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இங்கு லாண்டிவானா என்ற பெயரில் இப்போது இடமே இல்லையே? அது ஆங்கிலேய ஆட்சிக்கு பிறகு பெயர் மாற்றம் செய்தாயிற்றே என்று கேள்வி எழுப்பினார்.

அவருக்கு ஏற்பட்ட சந்தேகம் என்னவென்றால், இவர்கள் வங்காளிகள், ஆப்கானிஸ்தான் வழியாக வங்கதேசத்திற்கு செல்ல திட்டமிட்டிருக்கிறார்கள் என்பதே. நாங்கள் பார்ப்பதற்கு வங்காளிகள் போலவா இருக்கிறோம் என்று சிரித்துக் கொண்டே கேட்டார். நீங்கள் எப்போதாவது வங்காளிகளை பார்த்திருக்கிறீர்களா என்று கேட்டார்.

அவர்கள் சொன்னதை தாசில்தார் கே.அர்ஜுன்பீஸ் நம்பவில்லை. தனது அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கும் இவர்கள் சொன்னதை நம்பாமல் சிறைக்கு அனுப்பப்போவதாக சொல்லிவிட்டார்கள்.

எஸ்.டி உஸ்மானின் தொலைபேசி அழைப்பு

வேறு வழியில்லாமல், பாகிஸ்தான் விமானப்படையில் பணிபுரியும் எஸ்.சி உஸ்மானிடம் தொலைபேசியில் பேசவேண்டும் என்று திலீப் சொன்னார். உஸ்மான் ராவல்பிண்டி சிறையின் கண்காணிப்பாளராக இருந்தார். அவர்தான் போர்க்கைதிகளுக்கு கிறிஸ்துமஸ் தினத்தன்று கேக் கொண்டு வந்து கொடுத்தவர்.

திலீப் அவரிடம் தொலைபேசியில் பேசியது என்ன தெரியுமா?, 'சார் உங்களுக்கு இதற்குள் விஷயம் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். நாங்கள் மூவரும் லண்டிகோதலில் இருக்கிறோம். தாசில்தார் எங்களை தடுத்து வைத்திருக்கிறார். உங்கள் ஆட்களை அனுப்ப முடியுமா?'

தாசில்தாரின் தொலைபேசியை கொடுக்கச் சொன்ன உஸ்மான், அவர்களை சிறையில் வையுங்கள், ஆனால் அடிக்கவேண்டாம் என்று உத்தரவிட்டார்.

பிபிசியிடம் பேசிய திலீப் பாரூல்கர், அந்த இக்கட்டான பரபரபான தருணங்கள் இன்றும் மனதில் பசுமையாக இருப்பதாக நினைவுகூர்ந்தார்.

அங்கு ராவல்பிண்டி சிறையில் 11 மணிக்கு பரபரப்பு ஏற்பட்டது. கைதிகள் தப்பித்த செய்தி காட்டுத்தீ போல் பரவியது, மீதமிருந்த போர்க் கைதிகள் வெளிச்சமே இல்லாத இருட்டறைக்குள் தள்ளப்பட்டனர்.

அதில் ஒரு பாதுகாவலர் இவ்வாறு சொன்னார், 'இவர்கள் அனைவரையும் சுட்டுத் தள்ளவேண்டும். அவர்கள் தப்பிப்பதற்காக சுவரில் துளையிடுவதை இவர்களும் பார்த்துக் கொண்டு தானே இருந்தார்கள்? இவர்களும் தப்பிக்க முயன்றார்கள், தடுக்க முயன்றபோது சுடப்பட்டார்கள் என்று சொல்வோம்'.

'எதிரி எப்போதுமே எதிரிதான். அவர்களை எவ்வளவு நன்றாக நடத்தினாலும், எத்தனை நம்பினாலும் பதிலுக்கு துரோகம் தான் செய்வார்கள்' என்று சிறையின் துணை கண்காணிப்பாளர் ரிஜ்வி கடிந்து கொண்டார்.

விடுதலை பெற்று தாயகம் திரும்புதல்

பிறகு போர்க் கைதிகள் அனைவரும் லாயல்புர் சிறைக்கு மாற்றப்பட்டனர். அங்கு இந்திய ராணுவத்தின் போர்க் கைதிகளும் வைக்கப்பட்டிருந்தனர். அங்கு ஒருநாள் திடீரென்று வந்தார் பாகிஸ்தான் அதிபர் ஜுல்ஃபிகர் அலி புட்டோ.

உங்களை பற்றி இந்திய அரசுக்கு எந்தவிதக் கவலையும் இல்லை. ஆனால், உங்களை விடுவிக்கலாம் என்று நானே சுயமாக முடிவெடுத்திருக்கிறேன்' என்று அவர் கூறினார்.

1972 டிசம்பர் மாதம் முதல் நாளன்று போர்க் கைதிகள் வாகா எல்லையை தாண்டி தாயகத்திற்குள் திரும்பினார்கள். தங்களை விடுவிக்க இந்திய அரசு எந்த முயற்சியும் செய்யவில்லை, புட்டோவின் விருப்பதாலேயே தாங்கள் விடுவிக்கப்பட்டோம் என்ற மனத்தாங்கலுடன் இந்திய எல்லைக்குள் அவர்கள் நுழைந்தனர்.

ஆனால் இந்திய எல்லைக்குள் வரவேற்க காத்திருந்த ஆயிரக்கணக்கான மக்களும், அவர்கள் எழுப்பிய முழக்கங்களும், அவர்களின் மன வருத்தத்திற்கு மருந்திட்டன. மாலை மரியாதையுடன் அவர்கள் நாட்டிற்குள் வந்தனர்.

அப்போதைய பஞ்சாப் முதலமைச்சர் கியானி ஜெயில் சிங் போர்க் கைதிகளை வரவேற்க நேரில் வந்திருந்தார். வாகா எல்லைப் பகுதியில் இருந்து அமிர்தசரஸ் வரையில் 22 கிலோமீட்டர் தொலைவிற்கு அவர்களுக்கு நூற்றுக்கணக்கான வரவேற்பு பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன.

கரேவால் பரேலிக்கு சென்றார். தனது ஓராண்டு ஊதியமான 2400 ரூபாயில் பியட் கார் ஒன்றை வாங்கினார். திலீப் விமானப்படை தலைவர் பி.சி. லாலுக்கு ஒரு பவுண்டன் போனாவை பரிசாக வழங்கினார். அது அவர்கள் தப்பிப்பதற்காக உருவாக்கப்பட்ட திசைகாட்டி பேனா.

திலீப் பாரூல்கரின் பெற்றோர் அவருக்கு உடனடியாக திருமணம் செய்து வைத்தார்கள். இந்தியா திரும்பிய ஐந்து மாதங்களுக்கு பிறகு நடைபெற்ற தன்னுடைய திருமணத்திற்கு, பாகிஸ்தானி சிறையில் தன்னுடன் இருந்த ஸ்க்வாட்ரன் தலைவர் ஏ.வி காமத்துக்கு திருமண அழைப்பு அனுப்பினார்.

'எனக்கு விருப்பமான சிறையில் கைதாகப்போகிறேன்'என்ற வாசகம் கொண்ட டெலிகிராம் அழைப்பிதழ் அது
.

Friday, 8 May 2020

DUBAI PRINCESS ESCAPED FROM HUSBAND , TAKE SHELTER IN ENGLAND AND FILE DIVORCE SUIT





DUBAI PRINCESS ESCAPED FROM HUSBAND ,
TAKE SHELTER IN ENGLAND 
AND FILE DIVORCE SUIT

பிரிட்டனில் தப்பி வாழும் துபாய் இளவரசி - கட்டாயத் திருமண உறவிலிருந்து பாதுகாக்க கோரிக்கை

.மத்திய கிழக்கு நாடுகளில் அதிகாரம் மிக்க தலைவர்களில் ஒருவரான துபாயை ஆளும் ஷேக் முகமது அல் மேக்டூமை விட்டு சென்றுவிட்ட அவரது ஆறாவது மனைவி, முழு சம்மதமில்லாமல் கட்டாயப்படுத்தி தாம் ஈடுபடுத்தப்படுத்தப்பட்ட திருமண உறவில் இருந்து தன்னை பாதுகாக்க வேண்டுமென்றும் பிரிட்டன் நீதிமன்றத்தில் கோரியுள்ளார்.

ஷேக் முகமது அல் மேக்டூமின் மனைவியான இளவரசி ஹயா பின்ட் அல்-ஹூசைன், கணவரை விட்டு சென்று நீதிமன்றத்தை நாடும் மூன்றாவது பெண்ணாவார். இளவரசி ஹயா அவரது உயிருக்கு பயந்து லண்டனில் தலைமறைவாக வாழ்ந்து கொண்டிருப்பதாக இந்த மாதம் தகவல் வெளியானது. செவ்வாய்க்கிழமை லண்டனில் இந்த வழக்கு தொடங்கியுள்ளது.

நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

ஐக்கிய அரபு எமிரேட்டில் இருந்து தப்பி வந்தபோது, தாம் அழைத்து வந்த அவரது குழந்தைகளுக்கு தன்னையே பாதுகாவலராக நியமிக்க வேண்டுமென்றும், கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைக்கப்பட்ட உறவில் இருந்து தன்னை பாதுகாக்க வேண்டுமென்றும் இளவரசி ஹயா கோரியுள்ளார். இந்த மனுவில் இளவரசி கோரியுள்ள விவரங்கள் தெரியவில்லை. இதே வேளையில், குழந்தைகளை துபாய்க்கு திருப்பி அனுப்ப வேண்டுமென ஷேக் முகமது விண்ணப்பித்துள்ளார். மேலும், இந்த ஆணையின் விவரங்களை வெளியிட கட்டப்பாடுகளை நீதிமன்றம்விதிக்க வேண்டுமெனவும் அவர் விண்ணப்பித்துள்ளார். இந்த இரண்டாவது வேண்டுகோளை நீதிபதி மறுத்துள்ளார்.

இளவரசி ஹயா யார்?
ஜோர்டானில் பிறந்து, பிரிட்டனில் கல்வி பயின்ற 45 வயதான இளவரசி ஹயா, கோடால்பின் குதிரை பந்தய திடலின் உரிமையாளரான ஷேக் முகமதை 2004ம் ஆண்டு திருமணம் செய்து, அவரது ஆறாவதும், இளைய மனைவியுமாக மாறினார்.

வெவ்வேறு மனைவிகளிடம் இருந்து ஷேக் முகமது 23 குழந்தைகளை கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

துபாய் நகரம் அமைந்துள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை அதிபராகவும், பிரதமராகவும் ஷேக் முகமது அல் மேக்டூம் செயல்படுகிறார். இந்த ஆண்டு தொடக்கத்தில் இளவரசி ஹயா ஜெர்மனியில் தஞ்சம் கோரி கணவரை விட்டு பிரிந்து சென்றார்.
லண்டனின் மத்திய பகுதியிலுள்ள கென்சிங்டன் பேலஸ் கார்டன்ஸிலுள்ள 85 மில்லியன் யூரோ மதிப்புள்ள வீட்டில் இளவரசி ஹயா இப்போது வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.

இளவரசி ஹயா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, சட்ட போராட்டத்திற்கு இப்போது தயாராகி வருகிறார்.

இளவரசி ஹயா உயிருக்கு பயந்து வாழ்வது ஏன்?
துபாயை ஆளுகின்ற ஒருவருடைய மகள்களில் ஷேய்கா லத்தீஃபா என்ற பெயருடையவர், கடந்த ஆண்டு மர்மமான முறையில் துபாய் திரும்பி வந்தது தொடர்பாக கவலை அளிக்கக்கூடிய உண்மைகளை இளவரசி ஹயா சமீபத்தில் கண்டறிந்துள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிரான்ஸை சேர்ந்த ஒருவரின் உதவியோடு கடல் வழியாக ஐக்கிய அரபு எமிரேட்டை விட்டு தப்பி சென்ற ஷேய்கா லத்தீஃபாவை, இந்திய கடலோர காவல் படை தடுத்து மீண்டும் துபாய்க்கு அனுப்பி வைத்தது.

அப்போது அயர்லாந்து அதிபர் மேரி ராபின்சனோடு சேர்ந்து இளவரசி ஹயாவும் இந்த சம்பவம் தொடர்பாக துபாய்க்கு ஆதரவாக பேசினார்.ஷேய்கா லத்தீஃபா தப்பிச்செல்வதால் "பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது" என்றும், தற்போது "துபாயில் பாதுகாப்பாக இருப்பதாகவும்" துபாய் அதிகாரிகள் கூறினர். ஆனால், அவரது விரும்பத்திற்கு மாறாக ஷேய்கா லத்தீஃபா கடத்தப்பட்டு துபாய்க்கு திருப்பி அனுப்பப்பட்டார் என்று மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இளவரசி இளவரசி லத்தீஃபாவுடன் உணவு
 உண்டதாக ஐநா மனித உரிமை அமைப்பின்
தலைவர் மேரி பிபிசியின் ரேடியோ 4
 நிகழ்ச்சியில் தெரிவித்தார்,


அப்போது முதல் இந்த சம்பவம் தொடர்பாக இளவரசி ஹயா புதிய உண்மைகளை அறிய வந்துள்ளதாக கூறப்பட்டது. இதன் விளைவாக, கணவரின் குடும்பத்தினரிடம் இருந்து வெறுப்புணர்வையும், அழுத்தங்களையும் எதிர்கொண்ட இளவரசி ஹயா, அங்கு தான் பாதுகாப்பாக இல்லை என்பதை உணர்ந்தார்.

நாடுகளுக்கு இடை ராஜீய சர்ச்சை
படத்தின் காப்புரிமைUNITED ARAB EMIRATES FOREIGN MINISTR
Image caption
இளவரசி இளவரசி லத்தீஃபாவுடன் உணவு உண்டதாக ஐநா மனித உரிமை அமைப்பின் தலைவர் மேரி பிபிசியின் ரேடியோ 4 நிகழ்ச்சியில் தெரிவித்தார்,
இந்த விவகாரம் இரு தனிப்பட்ட நபர்களுக்கு இடையிலானது என்று கூறி, லண்டனிலுள்ள ஐக்கிய அரபு எமிரேட்டின் தூதரகம் இது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது. ஆனால், இந்த சம்பவத்தில் விரிவான சர்வதேச அம்சமும் உள்ளது. டோர்செட்டிலுள்ள பிர்யான்ஸ்டன் பள்ளியிலும், ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்திலும் கல்வி பயின்ற இளவரசி ஹயா, பிரிட்டனில் வாழ விரும்புவதாக நம்பப்படுகிறது.

ஆனால், அவர் கைவிட்டு சென்ற கணவர், இளவரசி ஹயா திரும்பி வர வேண்டுமென கோரினால், ஐக்கிய அரபு எமிரேட்டோடு நெருங்கிய உறவு வைத்திருக்கும் பிரிட்டனுக்கு இது பெரிய ராஜீய தலைவலியாகிவிடும். ஜோர்டன் அரசர் அப்துல்லாவின் உறவினராக இளவரசி கஹயா இருப்பதால் ஜோர்டனுக்கும் இது நல்லதாக தோன்றவில்லை. சுமார் பத்து லட்சம் ஜோர்டன் மக்கள் ஐக்கிய அரபு எமிரேட்டில் வேலை செய்து, ஜோர்டனுக்கு பணம் அனுப்பி வருகிறார்கள். எனவே, துபாயோடு இருக்கும் உறவில் சிக்கல் தோன்றுவதை ஜோர்டனும் விரும்பவில்லை.

Tuesday, 10 April 2018

ALOIS BRUNNER , THE ESCAPED CRIMINAL OF NAZI BORN APRIL 8,1912 - DIED 2001 UNKNOWN DATE






ALOIS BRUNNER , 

THE ESCAPED CRIMINAL OF NAZI 
BORN APRIL 8,1912 - DIED 2001 

UNKNOWN DATE



இரண்டாம் உலகப்போரில் பல்லாயிரம் யூத படுகொலைக்கு காரணமான ALOIS BRUNNER கடைசி வரை பிடிபடாமல் சிரியாவில் 2001 இல் இறந்தார்


SS Colonel (Standartenführer) Hans Landa - a Nazi "Jew Hunter" who speaks four languages and takes his work seriously in occupied France - is played by Christoph Waltz. Is Hans Landa based on a real-life person?

Even if Quentin Tarantino was not influenced by historical events, a Nazi "Jew Hunter" named Alois Brunner comes to mind as a real-life "Hans Landa." Who was he?

Adolf Eichmann personally chose Brunner to implement Hitler's "Final Solution" in France. Operating on "orders directly from Berlin," the ruthless SS officer was brutally efficient.

What were his methods? In Vichy France and the Jews, by Michael Marrus and Robert Paxton, we learn that:

Brunner organized squads that prowled about the country [of France] making arrests. His forces included Gestapo, Feldgendarmeries, and miscellaneous French forces under German control...but never the French police...

...In the fall [of 1942], Brunner's squads...spread a "veritable panic" according to the prefect [of Savoie]. In September they were at work in the Alpes-Maritimes in "a real climate of terror." (Vichy France and the Jews, pages 330-31.)
We learn more about Brunner's methods (and what he thought of himself, as reflected in his SS application) from a Brunner-researcher, Mary Felstiner:

Brunner's SS colleagues remarked on his slight build, "hooked nose" and "kinky hair." They nicknamed him "Jew Suss," the foul protagonist of an anti-Semitic film...Brunner set out to eliminate from Europe everything he considered sub-male and counter-Aryan. (Felstiner, quoted in Reading Charlotte Salomon, ed. by Michael Steinberg and Monica Bohn-Duchen, pages 206-7.)
Where, in France, did Brunner conduct his operations?

He was a master deceiver. As commandant of Drancy, a huge transit camp outside Paris...he derived his power from disinformation. In Brunner's camp deportees guessed nothing of their fate. (Felstiner, in Reading Charlotte Salomon, pg 206)
Although many high-ranking Nazis were captured after the war, such was not the lot of Alois Brunner:

This murderer escaped. After 1945, a secret postwar network...obscured SS men, including Brunner. He [allegedly] worked for Syria from the 1950s on ... hiding his identity ... he'd personally dispatched 130,000 Jews. "All of them deserved to die," said Brunner in Damascus to a journalist [Günther Deschner, who published his article in Bunte, a West German magazine], as late as 1987; "I have no regrets and would do it again." (Felstiner, in Reading Charlotte Salomon, pg 207)
Brunner was never captured. An American documentary, from 2003, sheds some light on his criminal activities:

In March 2003, an American documentary film entitled Alois Brunner: The Last Nazi was released, reflecting widespread interest in the fate of a key war criminal who was never caught. His crimes had been brought before courts [including in France, during 2001, where he was convicted in absentia], but he had never personally appeared there. His entire postwar career was shrouded by fog and deception.

Born in 1912 in the Austrian Burgenland, Brunner joined the Nazi Party illegally in 1931 and joined the SS on October 10, 1939. From 1939 he served as Eichmann's secretary ... whose task it was to force Jews from the Reich. In this capacity he organized forced deportations of 47,000 Austrian Jews to ghettos and death camps.


Transferred to Salonika in March 1943, Brunner oversaw the deportation of 43,000 Jews from Greece in two months.

In June 1943 he took over the Drancy camp, the assembly point for Jews to be deported from France. In fourteen months he sent roughly 24,000 Jews to the East.

He also directed a special commando unit to arrest Jews in Nice and bring them to Drancy, and he paid French collaborators for each Jew arrested.

As late as July 1944, he organized a sweep for hidden Jewish children in France, which located and deported 250 minors as well as the last Jewish convoy from Paris on August 17, 1944.
Where did he spend his time after the war?

The best evidence suggested that Brunner was in Damascus. He was said to have suffered disfiguring wounds from a package bomb attack in September 1961, possibly sent by an Israeli intelligence agent. (Above series of quotes from U.S. intelligence and the Nazis, by Richard Breitman, excerpts from pages 159 - 162.)
In Sword of the Golem, a novel by Jeff Minde and Ken Tucker, Alois Brunner (using his alias Georg Fischer, as he allegedly had, in real life, during his sojourn in Syria) meets a young woman named Shoshona:

"Let us not waste time on irrelevancies," Brunner waved her off. "I must introduce myself. I am Herr Georg Fischer."

"You are Alois Brunner," Shoshona said flatly.

Brunner looked surprised for a moment... (Sword of the Golem, pages 80-81.)
As it happens, therefore, we have compelling evidence for a real Hans Landa, the SS "Jew Hunter" of "Inglourious Basterds." (This link takes you to the film's screenplay.)


In December of 2014, Dr. Efraim Zuroff (director of the Simon Wiesenthal Center in Jerusalem) announced his belief that Brunner died in Syria during 2010. Nazi hunters have therefore stopped searching-for the world's most-wanted war criminal.

In reporting the news of Brunner's death, the BBC also summarizes some of his key activities:

"The Austrian-born SS chief was once described by Adolf Eichmann - the architect of the 'Final Solution' - as one of his best men."
"Eichmann dispatched Brunner wherever he felt round-ups of Jews were proceeding too slowly."
"From June 1943 until the liberation of France, he sent thousands of Jews to their almost certain deaths."
"He waged a reign of terror on the French Riviera, hunting down Jews who had sought refuge in the relative safety of the Italian occupied zone."
"It is widely believed that he fled to Syria in the 1950s - living under the false name of Georg Fischer - and that successive regimes offered him protection."
"Syria has repeatedly denied harbouring him."
Brunner's final resting place is apparently in a Damascus grave.





One of the world's most wanted Nazi war criminals died in 2001 aged 89 after spending more than a decade incarcerated in a dilapidated Damascus basement, a French magazine has said.

The Revue XXI magazine reported that Austrian-born SS commander Alois Brunner spent his last years living in squalid conditions.

It said he remained a fervent anti-Semite right up to his death.

Brunner is accused of deporting more than 128,000 Jews to death camps.

He was in charge of the Drancy internment camp outside Paris where Jews rounded up in France were held before being sent to the death camps. An estimated 345 children were among his victims.

For many years there has been uncertainty as to whether Brunner - born in 1912 - is still alive, although the chief investigator pursuing him told the BBC in 2014 that he believed Brunner died in 2010 in Damascus.

Brunner is believed to have fled to Syria in the 1950s from West Germany, reportedly serving later as an adviser to the Syrian government on torture tactics before being shunned by the authorities.

'A monster'
The latest investigation by the Revue XXI magazine (in French) quotes one of Brunner's guards as saying that he "suffered and cried a lot in his final years, [and] everyone heard him".


Alois Brunner sent thousands of Jews to their deaths in Nazi camps

French lawyer Serge Klarsfeld - seen here during a press conference about Alois Brunner in 1985 - has welcomed news of the Nazi's death
The guard, identified only as Omar, said Brunner survived on meagre army rations in the last years of his life.

The magazine's findings have been welcomed by renowned Nazi-hunter Serge Klarsfeld.

"We are satisfied to learn that he lived badly rather than well," Mr Klarsfeld told the AFP news agency.

Brunner was removed in April 2014 from the Simon Wiesenthal Center's most wanted list, in a move signifying that it too considered him to be dead.

The SS commander played a key role in the implementation of Hitler's "Final Solution" to murder Jews and has been described by Nazi hunters as "a monster", responsible for sending 47,000 Jews in Austria, 44,000 in Greece, 23,500 in France and 14,000 in Slovakia to camps where most were murdered.

Alois Brunner
Was once described by Adolf Eichmann - the architect of the "Final Solution" - as one of his best men
Eichmann dispatched Brunner wherever he felt round-ups of Jews were proceeding too slowly
From June 1943 until the liberation of France, he sent thousands of Jews to their almost certain deaths
He waged a reign of terror on the French Riviera, hunting down Jews who had sought refuge in the relative safety of the Italian-occupied zone
It is widely believed that he lived under the false name of Georg Fischer while in Syria - and that successive regimes offered him protection
Syria has repeatedly denied harbouring him

In 2001 he was sentenced in absentia to life imprisonment by a court in France and is reported to have survived at least two Israeli intelligence assassination attempts while in Syria in 1961 and 1980.