Posts

Showing posts with the label HAYA BINT

DUBAI PRINCESS ESCAPED FROM HUSBAND , TAKE SHELTER IN ENGLAND AND FILE DIVORCE SUIT

Image
DUBAI PRINCESS ESCAPED FROM HUSBAND , TAKE SHELTER IN ENGLAND  AND FILE DIVORCE SUIT பிரிட்டனில் தப்பி வாழும் துபாய் இளவரசி - கட்டாயத் திருமண உறவிலிருந்து பாதுகாக்க கோரிக்கை .மத்திய கிழக்கு நாடுகளில் அதிகாரம் மிக்க தலைவர்களில் ஒருவரான துபாயை ஆளும் ஷேக் முகமது அல் மேக்டூமை விட்டு சென்றுவிட்ட அவரது ஆறாவது மனைவி, முழு சம்மதமில்லாமல் கட்டாயப்படுத்தி தாம் ஈடுபடுத்தப்படுத்தப்பட்ட திருமண உறவில் இருந்து தன்னை பாதுகாக்க வேண்டுமென்றும் பிரிட்டன் நீதிமன்றத்தில் கோரியுள்ளார். ஷேக் முகமது அல் மேக்டூமின் மனைவியான இளவரசி ஹயா பின்ட் அல்-ஹூசைன், கணவரை விட்டு சென்று நீதிமன்றத்தை நாடும் மூன்றாவது பெண்ணாவார்.  இளவரசி ஹயா அவரது உயிருக்கு பயந்து லண்டனில் தலைமறைவாக வாழ்ந்து கொண்டிருப்பதாக இந்த மாதம் தகவல் வெளியானது. செவ்வாய்க்கிழமை லண்டனில் இந்த வழக்கு தொடங்கியுள்ளது. நீதிமன்றத்தில் நடந்தது என்ன? ஐக்கிய அரபு எமிரேட்டில் இருந்து தப்பி வந்தபோது, தாம் அழைத்து வந்த அவரது குழந்தைகளுக்கு தன்னையே பாதுகாவலராக நியமிக்க வேண்டுமென்றும், கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைக்கப்பட்ட உறவி...