Showing posts with label SALIM. Show all posts
Showing posts with label SALIM. Show all posts

Thursday, 1 October 2020

MINI STORY OF SALIM -ANARKALI

 


MINI STORY OF SALIM -ANARKALI



மொகலாயர்கள் எப்பவுமே உண்மையான விஷயங்களை மறைத்தும் ,வெளியில் தெரிந்த உண்மைகளை திரித்து கூறியே பழக்கப்பட்டவர்கள் .


சிலர் மட்டுமே வரலாறை எழுத அனுமதி உண்டு .எனவே முகலாய சாம்ராஜ்ய அட்டூழியங்கள் அவுரங்கசீப் இறந்த பிறகு வெளி வர துவங்கின .எனவே மழுப்பலான கதைகளையும் பரப்பினர் .அக்பர் பாதுஷா நடனமாதை கொன்றார் என்று படத்தை முடித்தால் வசூல் பாதிக்கப்படும் என்று உயிரோடு வருவதாய் கதை கட்டினார்கள்

-(மொகல் ஈ ஆஸம் ).

இது முஸ்லிம்களின் மனோபாவம் .இதை மாற்ற முடியாது .1598 ஆம் ஆண்டு நாதிராவை காதலித்தார் .அவர் கொல்லப்பட்ட ஆண்டும் அதுவே .

இதுவே தகப்பனை எதிர்க்க வலுவான காரணம் ஆனது .1599

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

அக்பரின் அந்தப்புரத்தில் எண்ணிக்கையற்ற நடனப் பெண்கள் இருந்தனர். அவர்களில் ஒருத்தி நாதிரா. அவள், இளவரசன் சலீம் மீது ஆசைகொண்டாள் என்பதற்காக அக்பர் அவளை சிரச்சேதம் செய்ய உத்தரவிட்டார் என்றும் ஒரு கதை இருக்கிறது. லாகூரில் உள்ள அனார்கலி நினைவு மண்டபத்தில் நாதிரா என்ற பெயர் காணப்படுகிறது. ஆகவே அது, நாதிராவின் நினைவாக சலீம் எழுப்பிய மண்டபம் என்றும் கூறப்படுகிறது.



அக்பரின் மூன்றாவது பிள்ளையும் பின்னாளில் ஜஹாங்கீர் என்ற பட்டத்துடன் ஆட்சி செய்தவருமான சலீம் குறித்து 'மொகல் இ ஆசாம்’ படத்தில் சொல்லப்படும் பல நிகழ்வுகள் கட்டுக்கதையே. அவை, வரலாற்றுக் குறிப்புகளைவைத்துப் பின்னப்பட்ட கதைகள் என்பதால், நிஜம்போலத் தோன்றுகின்றன. அக்பர் தனது ஆளுகைக்கு உட்பட்ட மன்னர்களுடன் இணக்கமான உறவைப் பேணுவதற்காக பல பெண்களைத் திருமணம் செய்துகொண்டார். அதில் ஒருவர் ராஜபுதனத்தைச் சேர்ந்த ஜோதாபாய். அவருக்குப் பிறந்த பிள்ளைதான் சலீம். ஒரு மான்சப்தராக தனித்து நிர்வாகம் செய்யும்படி இளவயதிலேயே சலீம் அனுமதிக்கப்பட்டு இருக்கிறான். 12 வயதில் காபூல் பகுதியின் தளபதியாக இருந்த அவனுக்குத் தனித்த அதிகாரம் வழங்கப்பட்டது. 16 வயதில் மன்பவாவதி என்ற ஆம்பர் இளவரசியைத் திருமணம் செய்து இருக்கிறான். அந்தப் பெண் சலீமின் தாய்வழி ராஜபுதனத்தைச் சேர்ந்தவள்.



மாமன்னர் ஜஹாங்கீராக சலீம் முடிசூட்டப்பட்ட பிறகு, அந்தப்புரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் இருந்தனர். ஜஹாங்கீர் 12 திருமணங்களைச் செய்து இருக்கிறார். அவற்றில், தனது 42-ம் வயதில் வங்காளத்தின் புர்த்வான் பகுதியின் கவர்னரான ஷேர்கானின் மனைவியான நூர்ஜஹானை வலுக்கட்டாயமாகக் கவர்ந்து தனது அந்தப்புர அழகியாக்கி, பிறகு திருமணம் செய்துகொண்டார். ஆகவே, எந்த வயதில் அவர் அனார்கலியைக் காதலித்தார் என்பது தெளிவாகத் தெரியவில்லை.


ஒருவேளை, அக்பரின் அந்தப்புர பெண்களில் ஒருத்தியாக அனார்கலி இருந்திருக்கலாம் என்கின்றனர். அப்படி என்றால், அவள் சலீமைக் காதலித்த சம்பவம் உண்மையா என்ற அடுத்த கேள்வியும் எழுகிறது. அரண்மனைப் பெண்களில் இருந்த நாதிராதான் அனார்கலி, மெஹர்னிசா என்ற பெண்தான் அனார்கலி, ஷர்புனிசா என்ற பெண்தான் அனார்கலியாக குறிப்பிடப்படுகிறாள் என்று மூன்று விதக் கருத்துக்கள் நிலவுகின்றன.



அக்பரின் விருப்பத்துக்குரிய ஆசைநாயகியான அனார்கலியை, சலீம் விரும்பி இருக்கிறான். அது பிடிக்காமல் அவளை உயிரோடு புதைக்கும்படி அக்பர் உத்தரவிட்டார். இது, அப்பாவுக்கும் மகனுக்குமான போட்டி. மற்றபடி, அக்பர் காதலுக்கு எதிரி அல்ல என்று முகமது பஷீர் என்ற உருது ஆசிரியர் குறிப்பிட்டு இருக்கிறார்.


அனார்கலி பல்வேறு ரூபங்கள் எடுத்ததற்கு முக்கியக் காரணம் 'வில்லியம் பின்ஞ்ச்’சின் குறிப்புகளே. பின்வந்தவர்கள், அந்தக் குறிப்புகளை அப்படியே நகலெடுத்த காரணத்தால் அது உண்மைச் சம்பவமாக உருப்பெறத் தொடங்கியது. மேலும் நாடகமாக, திரைப்படமாக, நீள்கவிதையாக மக்கள் மனதில் அனார்கலி பதிந்துவிட்டதால் அது வரலாற்றின் பகுதியாகவே மாறியது. ஓர் சாதாரண மனிதன் இன்று, மாமன்னர் அக்பரை நினைவுகொள்வதற்கு அனார்கலி கதை மட்டுமே காரணமாக இருக்கிறது. வரலாற்றில் புனைவு எவ்வளவு வலிமையானது என்பதற்கு இது ஒன்றே சரியான உதாரணம்

.



.

Tuesday, 5 June 2018

SALIM-ANARKALI LOVE STORY







SALIM-ANARKALI LOVE STORY




சலீம்-அனார்கலி காதற்கதை:

சலீம்-அனார்கலி காதல்கதையை 
இணையத்தில் தேடிப்படித்தபோது கிடைத்த 
சுவையான தகவல்களின் தொகுப்பு..

மொகலாய அரசவம்சம்
வீரத்துக்கு மட்டுமன்றி காதலுக்கும் பெயர்
பெற்றது. ஷாஜகான்-மும்தாஜ்
அக்பர்-ஜோதா என நீண்டு செல்லும் அரச காதல் காவியங்களில் பிரபலமானது
சலீம்-அனார்கலி காதல் கதையாகும்.

அக்பர் ஜோதா தம்பதியனரின் மூன்றாவது மகனான சலீம் (முன்னைய இருபிள்ளைகள்
சிறுவயதிலேயே இறந்து விட்டனர்)
தன் எட்டு வயது முதல் போர்களத்தில் நின்று போராடி 14 ஆண்டுகளின் பின் நாடு திரும்புகின்றான்.

அக்பரின் அவையில் நாட்டியத்தாரகைகளில் ஒருத்தியாக இருந்த அனார்கலி,
சலீமின் வெற்றியைக்கொண்டாடும் வகையில் அரண்மனையில் நடனமாடுகிறாள்..

நாடு திரும்பியவன் சிலையாக நின்ற உயிருள்ள
அனார்கலியை (இது அக்பரினால்
அப்பெண்ணுக்கு வழங்கப்பட்ட சிறப்புப்பெயராகும்)
காதலிக்க ஆரம்பிக்க இருவருக்குள்ளும் காதல் வளர்ந்து பெருவிருட்சமாகின்றது.

இக்காதலை தந்தை அக்பர் எதிர்க்க..
மகன் சலீம் அவருக்கெதிராக அனார்கலியை மீட்க போர் புரிகின்றான்.

போர் முடிவில் சலீம்
மரணதண்டனை கைதியாகின்றான்..

தண்டனை நிறைவேறும்
சமயத்தில் அனார்கலி
தானே முன்வந்து சரணடைய
சலீம் விடுதலையாகின்றான்.

அனார்கலிக்கு மரணம் நிச்சயிக்கப்படுகின்றது..

கடைசி ஆசையாக மொகலாயத்தின் ஒரு இரவு ராணியாகின்றாள் அனார்கலி.

மறுநாள்,உயிருடன்
கல்லறையாக்கப்படுகின்றாள்.

இந்த உருக்கமான காதல் கதை வெறும்
கட்டுக்கதை என்றும் கூறப்படுகின்றது.

அக்பர் வரலாற்றிலோ
சலீம் வரலாற்றிலோ அனார்கலி பற்றிய
குறிப்புகள் இல்லை என்றும்
இது சுவாரஸ்யத்துக்காக
உருவான கதை என்றும்
ஆய்வாளர்கள் சொல்கின்றனர்.

சலீம்,பல மனைவியரை கொண்டிருந்தான் என்றும்
அவனுக்கு முதல் திருமணம் 1585 பிப்ரவரி 13ம் நாள்
மன்பாவதி பாயுடன் நடந்ததாகவும்
பின், மொகலாயர்கள் பலதாரங்களை கொண்டிருக்கலாம் என்ற விதிப்படி
ஜகத் கோசின் மற்றும் இளவரசி மன்மதி
ஆகியோருடன் நூர்ஜஹான் என்ற
மெஹர்-உல்-நிசா

(மிக உயர்ரக வாசனைத்
திரவியமான
ரோஜாப்பூவில் இன்றும்
தயாரிக்கப்படும்
அத்தர் எனும்வாசனைத் திரவியத்தை
கண்டுபிடித்தவர்)
என்பவரையும் திருமணம்
செய்துகொண்டதாகவும்
வரலாற்று குறிப்புகள்
கூறுகின்றன..

எது எப்படியிருப்பினும்
சுவாரஸ்யமான - உருக்கமான இக்காதல் கதையை
மையப்படுத்தி இந்தியத்துணைக்கண்ட சினிமா 08 திரைப்படங்களை கண்டுள்ளது.

இந்திய சினிமாவில் 07 திரைப்படங்களும்
பாகிஸ்தான் சினிமாவில் 01 திரைப்படமும்
வெளியாகி உள்ளன.

இந்திய சினிமா ஒலி இன்றிருந்த
காலத்திலேயே முதல் திரைப்படம் வெளியானது..

1928ல் Loves of a Moghul Prince என்ற பெயரில்
Charu Roy, Seetha Devi, Sawan Singh நடிப்பில்
இக்கதை சத்தமில்லா திரைப்படமாக வெளியானது.

திரைப்படத்தை Charu Roy, Prafulla Roy ஆகியோர்
இணைந்து இயக்கியிருந்தனர்.

பின், பிரதீப் குமார், நூர்ஜஹான் ஆகியோர்
சலீம்-அனார்கலியாக நடிக்க 1953ல்
நந்திலால் ஜஸ்வந்லால்
இயக்கத்தில் அனார்கலி (अनारकली) என்ற பெயரில்
வெளியான இத்திரைப்படம் இந்தி மொழி திரைப்படமாக அமைந்தது.

175 நிமிடங்கள் கொண்ட இந்த பேசும்
திரைப்படம் Mono ஒலிநயத்துடன்
கறுப்பு வெள்ளை திரைப்படமாக
வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இத்திரைப்படத்தின் அனைத்து பாடல்களையும்
C.ராமச்சந்திராவின் இசையில் லதா மங்கேஸ்கர்
அவர்கள் பாடியிருந்தார்கள்.

இதில் Yeh Zindagi
Usiki Hai… என்ற பாடல்
பெயர்பெற்றதாகும்..

மீண்டும் Mughal-e-Azam ( मुग़ल- ए आज़म,)
என்ற பெயரில் K.Asif அவர்களின் 18 வருட கடின
உழைப்பினை தொடர்ந்து 09 வருடங்கள் தொடர்ச்சியாக படமாக்கப்பட்டு
வெளியாகியது இத்திரைப்படம்.

பிருத்விராஜ் கபுர்(அக்பர்),
திலீப் குமார்(சலீம்),
அழகு பதுமையாக
கண்களில் காதலை கொண்டுவந்த
மதுபாலா (அனார்கலி) ஆகியோர் நடித்த
இத்திரைப்படம் $11,500,000 பணத்தை வசூலித்தது.

இந்திய சினிமாவின் மாபெரும்
வெற்றித்திரைப்படங்களில்
இந்த கறுப்பு-வெள்ளை திரைப்படமும் ஒன்றாகும்.

02 ஆண்டுகள் கழித்து தெலுங்கு திரையுலகம்
இக்கதையை திரைப்படமாக்கியது.
Vedantam Raghavaiah அவர்களின் இயக்கத்தில்
A.நாகேஸ்வர ராவ், அஞ்சலிதேவி நடிப்பில்
அனார்கலி என்ற பெயரிலேயே வெளியானது.

பாடல்களை Samudrala Raghavacharya எழுத
ஆதிநாராயண ராவ் இசையமைக்க
கண்டசாலா, K.ஜிக்கி, P.சுசீலா, P.லீலா ஆகியோர் பாடினர்.

பின் 1958ல் பாகிஸ்தானுக்கு கதை சென்றது.
அங்கு Anwar Kamal Pasha இயக்கத்தில்
உமர் அஜ்நல்வியின்
திரைக்கதை அமைப்புடன்
முகமது அவ்ஷால், சுதி, நூர்ஜ ஹான் நடிப்பில்
அனார்கலி (ﯽﻠﻛﺭﺎﻧﺍ ) என்ற
பெயரில் வெளியாகி பெருவெற்றி பெற்றது.

அனார்கலி கொல்லப்படுவதாக இருந்த கதையில்
அவரின் தாயாருக்கு அக்பர் வழங்கியிருந்த
வாக்குறுதிக்கேற்ப ரகசிய சுரங்கம் ஊடாக
நாட்டைவிட்டு தாயாருடன் அனார்கலி
அனுப்பிவைக்கப்படுவதாக இத்திரைப்படத்தின்
திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது.

மேலும் இந்திய ராணுவத்தினரின் உதவியுடன்
இத்திரைப்படத்தின் சண்டைக்காட்சிகள்
படமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நௌசாத் அவர்களின் மனதை வருடும்
இந்துஸ்தானி இசையில் அமைந்த பாடல்களை முகமது ரஃபி, லதா மங்கேஸ்கர், ஷாம்ஷாட் பேகம் ஆகியோர் பாடினர். அத்தனை பாடல்களும் சூப்பர் ஹிட்.

இத்திரைப்படத்தின் வசனங்கள் இன்றும் பலராலும்
பேசப்படுகின்றன. Amanullah Khan, Kamal
Amrohi, Wajahat Mirza , Ehsan Rizvi ஆகியோர்
இணைந்து எழுதிய வசனங்களுக்காக 1961ல் சிறந்த
வசனங்களுக்கான Film fare விருதும் வழங்கப்பட்டது.

1960ல் உலகெங்கும் 150
தியேட்டர்களில் வெளியாகிய இத்திரைப்படம் சிறந்த
திரைப்படம், சிறந்த ஒளிப்பதிவாளர்(R.D.மித்துர்)
ஆகியவற்றுக்கான Film fare விருதுகளையும் 1961ல்
தட்டிச்சென்றது.

தந்தை பெரியார் அவர்கள் பார்த்த
நான்கு திரைப்படங்களுள் இதுவும் ஒன்றாகும்.
(ஏனையவை ஔவையார், சந்திரலேகா, சூரியகாந்தி)

அத்துடன் எகிப்தில் தொடர்ந்து 8 ஆண்டுகள் ஓடிய
ஒரே ஒரு இந்திய திரைப்படமும் இதுதான்.

பின்பு ஜெமினி பட அதிபர் S.S.வாசன் அவர்களினால்
தமிழில் மொழிமாற்றம் பெற்று அக்பர் என்ற பெயரில்
1961ல் வெளியானது. கம்பதாசன் பாடல்களுக்கு வரி எழுத நௌஷாத்தின் அதே மெட்டுகளுக்கு உருவான
பாடல்களை P.சுசீலா,ராதா ஜெயலக்ஸ்மி ஆகியோர்
பாடினார்கள்.தமிழைத் தொடர்ந்து மலையாள சினிமாவிலும் அனார்கலி மிளிர்ந்தாள்.

1966ல் Kunchacko
அவர்களின் தயாரிப்பு, இயக்கத்தில்
பிரேம் நஸீர், K.R.விஜயா நடிப்பில் பாபுராஜின் இசையுடன் அனார்கலி അനാർക്കലി திரைப்படம் வெளியாகியது.

இத்திரைப்படத்தின் வசனங்களை Vaikom
Chandrasekharan Nair எழுத
பாடல்களை வயலார்
(Vayalar) எழுதினார்.
பாடல்களை P.சுசீலா,
K.J.ஜேசுதாஸ், பாலமுரளி கிருஷ்ணா,
L.R.ஈஸ்வரி ஆகியோர் பாடினார்கள்.

நீண்ட நாட்களின் பின்னர்
2004ல் இவர்களின்
கதை திரைக்கு மீண்டும் வந்தது...
ஆனால் வித்தியாசமாக..

J.S Films நிறுவனத்தார் 185 நிமிட திரைப்படமாக
மாற்றி Mughal-e-Azam திரைப்படத்தை தந்தார்கள்.

இதில் சிறப்பு என்னவென்றால்
அப்போது கறுப்பு-வெள்ளை திரைப்படமாக
இருந்தது, இப்போது வண்ண திரைப்படமாக
மாறியுள்ளது.

ஒவ்வொரு ஃப்ரேமாக மிகவும்
உன்னிப்பாக செதுக்கியுள்ளனர்
கணனிவல்லுனர்கள்..
அவர்களுக்கு ஒரு சல்யுட்.

மறு ஆண்டே அத்திரைப்படதை தமிழிலும்
மொழிபெயர்த்து தந்தனர்.

மொழிமாற்றத்தின் பின் வசனங்களை விளங்கி கொள்ள முடிந்தது எனலாம்..

கவிதை நடையில் வரும் வசனங்கள்
நச்..

சலீம் போர்க்கள பாசறையில்
நின்று கவிதை எழுதிக்கொண்டிருப்பான்.

அப்போது
நண்பன் துர்ஜன் சிங் கேட்பான்.

வாள்களின் சத்தத்தின் நடுவில் கற்பனை சிதறாமல்
எப்படி..?

சலீம்:- போர்க்களத்திலும் கவிஞன் வாள்
கவிதை பேசும்..வேப்பமரங்களுக்கு மத்தியில்
மாமரம் நாட்டால் சுவை மாறுமா..?

துர்ஜன்:- இல்லை.

சலீம்:- அது போலத்தான் போர்க்களத்திலும் கவிஞன்
கற்பனை வற்றாது.

மற்றொரு சந்தர்பத்தில் அனார்கலி ஒரு இரவுக்கான
ராணியாக முடி சூடி கொண்டதும் அக்பரை பார்த்து

“இப்போது முடி சூடிக்கொண்ட இந்துஸ்தான்
ராணி அனார்கலி தங்களின் நாளைய கொலைக்குற்றத்தை இன்றே மன்னித்தருள்கின்றாள்.. என்பாள்..

இப்படி ஒரு வார்த்தை சவுக்கடியை எந்த மன்னனும்
வாங்கியிருப்பானா..?

ஒரு கவிதை போட்டியின் முடிவில் (காதலின் ஆரம்பத்தில்)
சலீம் பரிசளிக்கையில் அனார்கலிக்கு முள்ளும் எதிரான
போட்டியாளருக்கு பூவும் வழங்குவான்.

அனார்கலி கூறுவாள் 
“நான் மிகவும் அதிஸ்டசாலி..
முள் வாடாது..
பூ வாடி விடும்..
இது போதும் இளவரசே”

இத்திரைப்படத்தின் இனிமையான பாடல்கள்
ஏற்கனவே அக்பர் திரைப்படத்தில் தமிழில்
வந்திருந்தாலும் சில மாறுதல் வரிகளுடன்
(நேரடி மொழி பெயர்ப்பு) மறைந்த பாடகி ஸ்வர்ணலதாவின் இனிய குரலில் கேட்க
கிடைத்தது..

அனைத்தும் சூப்பர்...

அதிலும்,
உந்தன் சபையில் எந்தன்
விதியை.. என்று அப்போது P.சுசீலா,
ராதா ஜெயலக்ஸ்மி ஆகியோர் பாடிய இரட்டைக் குரல்
பாடலை ஸ்வர்ணலதா தனித்து குரல் மாற்றிப்பாடிய
விதம் அருமையான ரசனையை தந்தது..

அந்த ரசனையை நீங்களும் அனுபவியுங்கள்...
இங்கு எந்தன் விதியை உந்தன் சபையில்
சோதித்தே நானும் பார்ப்பேனே… என
மாறுகின்றது பாடல்..

சலீம்-அனார்கலி கதையை
பேசிநின்ற இத்திரைப்படங்கள்
மத்தியில் சலீமின் தந்தை தாயான அக்பர்-ஜோதா காதல் கதையை ஹிருத்திக் ரோஷன், ஐஸ்வர்யா ராய் பச்சன் நடிப்பில் 2008ல் A.R.ரகுமானின் இசையுடன் தந்தார் அஸ்தோஸ் கௌசிகர்..

இத்தொகுப்பின் பெரும்பகுதி
திரு. ஜனகன் என்பவரிமிருந்து பெறப்பட்டதாகும்..